அத்தியாயம் 4
“என்னை வெளிய போக விடாம இப்படி வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிருக்கிறதுக்கு பேர் ஹவுஸ் அரெஸ்ட் இல்லாம வேற என்ன?” என்று ஐஸ்வர்யா கோபமாக கேட்க, “இனிமே இவளை எதுவும் சொல்லி சமாளிக்க முடியாது.” என்று நினைத்த ஆனந்த், “நீ அப்படி நினைச்சா, அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது. நாங்க சொல்ற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும். சும்மா அதையும் இதையும் கேட்டு என்னையும் டாடியையும் நீ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்காத. நம்ம எல்லாருக்கும் எது நல்லதோ அதை மட்டும் தான் நாங்கள் செய்வோம். உனக்கு ஏதாவது வேணும்னா வசு ஆன்ட்டி கிட்ட கேளு. அவங்க உனக்கு அரேஞ்ச் பண்ணி குடுப்பாங்க.” என்ற நேரடியாகவே சொல்லிவிட்டு அவளை அங்கே விட்டுவிட்டு சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகு புட்டுப்பட்ட இருந்த அறையில் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த ஐஸ்வர்யா “oh God! எப்படி யோசித்து பார்த்தாலும் இங்கு என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல. பட் என்ன வச்சு இவங்க எல்லாரும் சேர்ந்து என்னமோ பிளான் பண்றாங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. ஆனந்த் மேரேஜுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை அடச்சு வச்சு எனக்கு தெரியாம அப்படி என்ன பண்றாங்கன்னு தான் புரிய மாட்டேங்குது. என்ன சுத்தி எல்லாமே தப்பா நடக்குது.
அஸ்வின் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகுது. அவன் எப்படி இருக்கான்னே தெரியல. அவன் கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு. இப்ப நான் எப்படி அவனை காண்டாக்ட் பண்றது? என்னை இந்த ரூமை விட்டு வெளியவே போக விட மாட்டேங்குறாங்களே!” என்று தனியாக புலம்பி கொண்டு இருந்தாள். அப்போது வசுமதியின் மகள் கௌசல்யா ஐஸ்வர்யாவிற்கான உணவுகளை அவளிடம் கொடுப்பதற்காக கையில் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்தவுடன் தன் கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்து நின்ற ஐஸ்வர்யா வேகமாக சென்று டோரை லாக் செய்துவிட்டு “ஹே கௌசி ப்ளீஸ்! இங்க என்ன நடக்குதுன்னு நீயாவது சொல்லு. ஏன் என்னை டாடியும், ஆனந்தும் யார் கிட்டயும் பேச விட மாட்டேங்கிறாங்க? உனக்கும், வசு ஆன்ட்டிக்கும் கண்டிப்பா ஏதாவது தெரிஞ்சிருக்கும்.
நான் உங்க அம்மா கிட்ட கேட்டா கண்டிப்பா அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. ப்ளீஸ் நீயாவது என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு சொல்லு. அவங்க சொன்ன மாதிரி நெஜமாவே இப்ப ஆனந்துக்கு தான் மேரேஜ் நடக்க போகுதா? இல்ல எனக்கு தெரியாம வேற ஏதாவது பிளான் பண்றாங்களா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள்.
அவளை அந்த நிலையில் பார்க்க கௌசல்யாவிற்கு பாவமாகத் தான் இருந்தது. இருப்பினும் தனது தினகரன் அங்கிளை பற்றி அம்மா வசுமதி சொன்னதை எல்லாம் ஒருமுறை நினைத்து பார்த்து பயந்த கௌசல்யா “ப்ளீஸ் சிஸ்.. நீங்க என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. நானே நினைச்சாலும் என்னால இப்ப எதையும் சொல்ல முடியாது. நான் உங்க கிட்ட ஏதாவது சொல்லிட்டா தினகரன் அங்கிள் எங்களை சும்மா விட மாட்டாரு.” என்று பயந்த குரலில் சொன்னாள்.
அவளை நம்ப முடியாமல் பார்த்த ஐஸ்வர்யா “டாடியா? அவர் உன்னை என்ன பண்ண போறாரு? நம்ம எல்லாரும் ரிலேடிவ்ஸ் கௌசி. அவர பாத்து நீ எதுக்கு பயப்படுற? அவர் உன்னை எதுவும் பண்ண மாட்டாரு ஓகேவா? Trust me! உன்ன தவிர வேற யார் கிட்டயும் போய் என்னால கேட்க முடியாது கௌசி சொன்னா புரிஞ்சுக்கோ. இங்க என்ன நடக்குதுன்னு என் கிட்ட சொல்லு.” என்று தொடர்ந்து எதை எதையோ சொல்லி கௌசல்யாவிடம் கெஞ்சி பார்த்தாள்.
ஐஸ்வர்யாவின் மீது அவளுக்கு பதிவு ஏற்பட்டாலும், தினகரனின் மீது அதைவிட அதிகமாக அவளுக்கு பயம் இருந்ததால் அவள் என்ன கேட்டும் “சாரி சிஸ்! ப்ளீஸ் என்ன force பண்ணாதீங்க. எங்க மம்மி என்னை தேடுவாங்க. நான் கிளம்புறேன். உங்களுக்கு ஏதாவது வேணும்னா கதவை தட்டுங்க. நான் வந்து கொடுக்கிறேன். நான் பக்கத்திலயே தான் இருப்பேன். என்ன ஆனாலும் உங்களை இந்த ரூம விட்டு வெளியே வராம பாத்துக்கணும்னு மம்மி சொல்லி இருக்காங்க. என்னால அவங்க பேச்சை மீறி எதுவும் பண்ண முடியாது.” என்ற கௌசல்யா அவள் கொண்டு வந்த சாப்பாட்டு தட்டை டேபிளில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்றாள்.
வேகமாக சென்று அவள் வெளியேறுவதற்குள் அவளுடைய கையை பிடித்துக் கொண்ட ஐஸ்வர்யா, “ஓகே, நீ டைரக்டா என் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். உன் சுச்சுவேஷன் எனக்கு புரியுது. அதே மாதிரி என் சுச்சுவேஷனையும் நீ புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்னோட மொபைல் ஃபோனை கூட வாங்கி வச்சுக்கிட்டாங்க உங்க மம்மி.
உன் கிட்ட ஃபோன் இருக்குல்ல.. ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் அத கொண்டு வந்து என் கிட்ட குடு. நான் ஒரே ஒரு கால் மட்டும் பண்ணிட்டு குடுத்துடறேன். அப்ப கூட இங்க நடக்குற எதையும் நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். எனக்கு வேண்டப்பட்டவங்க எல்லாரும் இப்ப எப்படி இருக்காங்கன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும். ப்ளீஸ் கௌசி! எனக்கு இந்த ஒரு ஹெல்பை மட்டும் பண்ணு. நான் உன் கிட்ட வேற எதுவும் கேக்க மாட்டேன், ப்ராமிஸ்!” என்று தன்னை விட அவள் சிறிய பெண் என்று கூட பார்க்காமல் காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.
அவள் தன்னிடம் தொடர்ந்து கெஞ்சி கொண்டே இருந்ததை பார்த்து மனம் இறங்கிய கௌசல்யா “ஓகே சிஸ், நான் உங்களுக்கு இந்த ஒரு ஹெல்ப்பை மட்டும் பண்றேன். பட் ப்ளீஸ் இங்க இருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சு வேற யாருக்காவது கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிடாதீங்க. அவங்க வந்து உங்கள இங்க இருந்து கூட்டிட்டு போய்ட்டாங்கன்னா, தினகரன் அங்கிள் எங்க ஃபேமிலியை சும்மா விட மாட்டாரு.” என்று ரெக்வெஸ்ட் செய்தாள்.
அவள் தனக்காக ரிஸ்க் எடுக்கும்போது அவள் குடும்பத்திற்கு பிரச்சினை வரும்படி எதுவும் செய்யக் கூடாது என்று நினைத்த ஐஸ்வர்யா “பிராமிசா என்ன பத்தி நான் அவங்க கிட்ட எதுவுமே பேச மாட்டேன். அவங்க எப்படி இருக்காங்க, வெளிய சுச்சுவேஷன் என்ன மாதிரி இருக்குனு மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும்.” என்று சொல்ல, “ஓகே சிஸ், நான் உங்களை நம்புறேன். முதல்ல நீங்க சாப்பிடுங்க. எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமா நான் உங்களுக்கு ஃபோன் கொண்டு வந்து கொடுக்கிறேன். நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் கௌசல்யா.
சாப்பிடக் கூட மனம் வராமல் எப்படியாவது இன்று அஸ்வினின் குரலை கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்த ஐஸ்வர்யா கௌசல்யா வருவதற்காக காத்திருக்க தொடங்கினாள்.
ஐஸ்வர்யாவிடம் சொன்னதைப் போலவே அனைவரும் தூங்கிய பிறகு தனது மொபைல் ஃபோனை கொண்டு வந்து அவளிடம் கொடுத்த கௌசல்யா “நீங்க யார் கிட்ட பேசணுமோ சீக்கிரம் பேசிட்டு குடுங்க. நீங்க என் முன்னாடியே பேசுங்க.” என்றாள். மனப்பாடமாக இருந்த அஸ்வினின் என்னை அவசரமாக அவளது ஃபோனில் என்டர் செய்த கௌசல்யா அவனுக்கு கால் செய்தாள்.
இவ்வளவு நேரமாக தனது தங்கை அக்ஷயா உடன் கேமிங் ரூமில் விளையாடிக் கொண்ட இருந்த அஸ்வின் இப்போது தான் தனக்கு தூக்கம் வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு தனது ரூமிற்கு வந்து படுத்தான். அப்போது சரியாக அந்த அழைப்பு வர, “இந்த டைம்ல என்ன unknown number-ல இருந்து கால் வருது?” என்று நினைத்த அஸ்வின் குழப்பமான முகத்துடன் அதை அட்டென்ட் செய்தான்.
அவன் தனது ஆண்மை பொருந்திய இனிமையான குரலில் “ஹலோ!” என்று சொல்ல, பல நாட்களுக்கு பிறகு அவனுடைய அந்த காந்தக் குரலை கேட்டதால் தனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்த ஐஸ்வர்யா பேச மறந்து அப்படியே சிலை போல நின்றாள். எதிர்முனையில் இருந்து எந்த சத்தமும் வராததால் யாரோ தெரியாமல் தன் நம்பருக்கு கால் செய்திருப்பார்கள் என்று நினைத்த அஸ்வின் அந்த அழைப்பை துண்டிக்கப் போக, உடைந்த குரலில் “அஸ்வின்!” என்றாள் ஐஸ்வர்யா.
“ஹே ஐசு.. நீயா?” என்று அவள் குரலை அடையாளம் கண்டுபிடித்து ஷாக் ஆகி கேட்ட அஸ்வின் “நம்பர் வேற யாருக்கு! உன் ஃபோனுக்கு என்ன ஆச்சு? நான் கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்னு வருது! நம்ம ஃபிரண்ட்ஸ் யாருமே உன்னை காண்டாக்ட் பண்ண முடியலன்னு குரூப்ல கூட சொல்லிட்டு இருந்தாங்க. திடீர்னு எங்க மாயமா மறைஞ்சு போன?” என்று அக்கறையுடன் விசாரித்தான்.
“ப்ளீஸ் சிஸ்.. அஸ்வின் அண்ணா கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க.” என்று கௌசல்யா ஐஸ்வர்யாவின் அருகில் நின்று கொண்டு மெல்லிய குரலில் சொல்ல, சரி என்று தலையாட்டிய ஐஸ்வர்யா “என் ஃபோன் உடைஞ்சு போச்சு அஸ்வின். எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் கொஞ்ச நாள் ஃபோன் யூஸ் பண்ண வேண்டாம்னு நான் வேற கூட வாங்கல. நீ எப்படி இருக்க? எனக்கு என்னமோ உன் ஞாபகமாவே இருந்துச்சு. உன் கிட்ட பேசணும்னு தோனுச்சு. அதான் இங்க என் ஃபிரண்டு கிட்ட ஃபோன் வாங்கி உனக்கு கால் பண்றேன்.” என்று சொல்லி சமாளித்தாள்.
“எனக்கென்ன நான் எப்பயும் போல தான் இருக்கேன். உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம தான் மண்டைய பிச்சிட்டு இருந்தேன். திடீர்னு இப்படி abscond ஆனா நாங்க என்ன நினைக்கிறது? உனக்கு என்ன ஆச்சுன்னு எங்களுக்கு கவலையா இருக்காதா?
நான் உங்க வீட்டுக்கு கூட ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தேன். நீ வீட்ல இல்லைன்னு சாரதா ஆன்ட்டி சொன்னாங்க. உங்க அண்ணாவுக்கு இந்த வீக் மேரேஜ். உங்க டாடி எங்களுக்கு கூட இன்விடேஷன் கொடுத்திருக்காரு. நாங்க எல்லாரும் உங்க அண்ணா மேரேஜ் ரெடி ஆகிட்டு இருக்கும்போது கூட, நீ ஏன் இந்தியா வரல?
நான் தினகரன் அங்கிள் கிட்ட கேட்கும்போது கூட உனக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னாரு. அப்படி என்ன ஆச்சு உனக்கு? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் டைரக்டா அமெரிக்காவுக்கே வந்து உன்னை பார்த்திருப்பேன்ல! இப்போ நீ எப்படி இருக்க ஐசு?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அன்பு பொங்க கேட்டான் அஸ்வின்.
அவன் கேட்கும் தொடர் கேள்விகளுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்று கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.
– முத்தங்கள் தொடரும் 💋
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)