Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 3

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 3

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 3

வித்யா ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி சாப்பிடுவதற்காக கீழே உள்ள டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றாள். அவளுடைய குடும்பம் அஸ்வினின் குடும்பத்திற்கு என்னென்ன செய்தது என்று அங்கே வேலை பார்ப்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதனால் அனைவரும் வெறுப்புடனே ஐஸ்வர்யாவை பார்க்க, அதை கவனித்து கூனி குறுகிப் போய் வித்யாவின் அருகில் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த ஐஸ்வர்யா “இதுக்கு தான் நான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன்.

இப்ப பாரு எல்லாரும் என்ன ஏதோ கொலைகாரியை பாக்குற மாதிரி பாக்குறாங்க. எனக்க தெரியாம என் ஃபேமிலில இருக்கிறவங்க என்னென்னமோ பண்ணிட்டாங்க. இந்த அஸ்வின் அவங்கள கொன்ன மாதிரி என்னையும் கொண்டு இருந்தா நான் நிம்மதியா செத்து போயிருப்பேன்.  இப்ப குற்ற உணர்ச்சியில வாழவும் முடியாம, அஸ்வினை விட்டுட்டு சாகவும் முடியாம என்னால முடியல வித்யா.” என்று சொல்லிவிட்டு அழுதாள். 

“come on ஐசு ரிலாக்ஸ்.. ஏதோ நடந்தது நடந்திருச்சு. இதுக்கு அப்புறம் நம்மளால எதையும் மாத்த முடியாது. இந்த வீட்ல நீ அஸ்வின் கூட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகணும். உனக்கு வேற ஏதாவது ஆப்ஷன் இருக்கா? இல்லைல்ல! அப்புறம் தேவை இல்லாம ஃபீல் பண்றத விட்டுட்டு அஸ்வினுக்கும் சரி, இங்க இருக்கிற மத்தவங்களுக்கும் சரி உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூவ் பண்ண வேண்டியது உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. சோ அதுக்காகவாவது மெண்டலி அண்ட் பிசிக்கலி நீ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். இதுவெல்லாம் கண்டுக்காம சாப்பிடற வேலையை மட்டும் பாரு.” என்று சொல்லி சமாதானப்படுத்திய வித்யா அவளை சாப்பிட வைத்தாள். 

தன்னை நம்பி இவ்வளவு தூரம் தனக்கு சப்போர்ட் செய்யும் வித்யாவிற்காக என நினைத்து அரைகுறையாக சாப்பிட்டு முடித்த ஐஸ்வர்யா “எனக்கு போதும் வித்யா. நீ சாப்பிடு. விவேக்குக்கு கால் பண்ணி அஸ்வினையும் எப்படியாவது சாப்பிட வக்க சொல்லு. எனக்கு என் நிலைமையை விட அவனை பத்தி யோசிச்சா தான் இன்னும் கஷ்டமா இருக்கு. அவனோட ரூம்குள்ள போனாலே, அதே ரூம்ல நம்ம எல்லாரும் சேர்ந்து ஜாலியா பேசி சிரிச்சு விளையாடினது தான் எனக்கு ஞாபகம் வருது. 

இப்ப அஸ்வின் கூட அங்க மோசமான மெமரிஸ் எதையும் நான் கிரியேட் பண்ண ரெடியா இல்ல. சோ இனிமே நான் கெஸ்ட் ரூம்ல தங்கிக்கலாம்னு இருக்கேன். நான் கேட்டா அக்ஷயா இப்ப எப்படி இருக்காங்க அஸ்வின் சொல்ல மாட்டான். நீ சாப்பிட்டு முடிச்சிட்டு மேல ஜஸ்ட் ரூமுக்கு வா. நம்ம விவேக்குக்கு கால் பண்ணி பேசலாம்.” என்று சொல்லிவிட்டு படிகளில் ஏறி மேலே சென்றாள். 

அஸ்வின் மாஸ்டர் பெட்ரூம் திரும்பிப் பார்த்தபடி அதற்கு எதிரில் இருந்த கெஸ்ட் ரூமிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா அவள் அணிந்திருந்த தங்க வைர ஆபரணங்கள் அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு, அவளுடைய திருமண புடவையை தனது மேனியில் இருந்து உருவ தொடங்கினாள். அவளுடைய ஆடைகள் என்று இப்போது அந்த வீட்டில் எதுவுமே இல்லை. 

அதனால் வேறு வழியில்லாமல் பாத்ரூம் இருக்கு சென்று அப்படியே குளித்துவிட்டு அங்கே இருந்த பாத்ரோபை அணிந்து கொண்டு வெளியில் வந்த ஐஸ்வர்யா கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்தாள். அஸ்வின் அவளை பளார் பளார் என்று அடைந்திருந்ததால் பஞ்சு போல் பால் நிறத்தில் மென்மையாக இருக்கும் அவளுடைய கன்னங்கள் இரண்டும் இப்போது லேசாக வீங்கி சிவந்து போய் காணப்பட்டது. அவனுடைய ஐந்து விரல்கள் கூட இன்னும் அவள் கன்னத்தில் அப்படியே பதிந்திருந்தது. 

அதனால் அந்த இடத்தில் அவளுக்கு ஒரு கூர்மையான வலி ஏற்பட, அதை பொருட்படுத்தாமல் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புதிய மஞ்சள் தாலியை கையில் எடுத்துப் பார்த்த ஐஸ்வர்யாவிற்க்கு அவளது கழுத்தில் இந்த தாலி எப்படி ஏறியது என்று அனைத்தும் ஞாபகம் வந்தது. அவள் மூளை பின்னோக்கி பயணித்தது. 

அஸ்வின் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்கப் போகிறான் என்று கேள்விப்பட்டவுடன் தானும் எப்போதும் அவனுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதே காலேஜில் அதே குரூப்பில் சேர்ந்த ஐஸ்வர்யா மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தன் படிப்பை முடித்து இருந்தாள். அஸ்வின் அவனுடைய குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் அவனது அப்பா கருணாகரன் அவனிடம் பிசினஸ் பருப்புகளை இப்போதிலிருந்தே கவனித்து அனைத்தையும் கற்றுக்கொள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

அதனால் முதலில் மேல்படிப்பிற்கு எப்படியாவது தனது குடும்பத்தினரையும் அவனது குடும்பத்தினரையும் கன்வின்ஸ் செய்து அஸ்வினுடன் சேர்ந்து ஜாலியாக அமெரிக்கா செல்லலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்த ஐஸ்வர்யா அஸ்வின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக காத்திருந்தாள். வேறு ஒரு திட்டத்தில் இருந்த அவளுடைய குடும்பத்தினர்கள் அவளுடைய லாஸ்ட் செமஸ்டர் ரிசல்ட் வருவதற்கு உள்ளாகவே அவர்களாக ஒரு கோர்ஸை தேர்ந்தெடுத்து அவள் வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் கூட கேட்காமல் அவளை வலுக்கட்டாயமாக ஃப்பிளைட்டில் ஏற்றிவிட்டு அமெரிக்கா அனுப்பி வைத்து விட்டார்கள். 

அஸ்வினுடன் அங்கே சென்று தனது வாழ்நாளின் இனிமையான தருணங்களை அங்கே உருவாக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு அவன் இல்லாமல் அங்கே இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் ஒரு பக்கம் தன் அப்பா தினகரனிடம் “இப்ப எதுக்கு டாடி திடீர்னு என்னை அமெரிக்கா போக சொல்லி அனுப்பி விட்டீங்க? எனக்கு இங்க தனியா இருக்கவே சுத்தமா பிடிக்கல.  நீங்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இருந்தா கூட நான் அஸ்வின் கிட்ட ஒரு வார்த்தை அவனும் இந்த கோர்ஸ் படிக்கிறதுல இன்ட்ரஸ்டா இருக்கான்னு கேட்டிருப்பேன்.

நீங்க அதுக்கு கூட டைம் கொடுக்காம என்ன இங்க அனுப்பி விட்டுட்டீங்க. இப்ப அவங்க அப்பாவோட பிசினஸை கவனிச்சுக்கறதுல அஸ்வின் பிஸியா ஆயிட்டான். நானே கால் பண்ணா கூட எப்பயாவது தான் பேசுறான். ச்ச்.. நீங்க எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கவே இல்ல டாடி. நான் நெக்ஸ்ட் பிளைட் புடிச்சு இந்தியா வரலாம்னு இருக்கேன்.” என்றாள் ஐஸ்வர்யா. 

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? இங்க சுச்சுவேஷன் சரியில்ல ஐஷு. சும்மா சும்மா உன்னை கன்வின்ஸ் பண்ணி என்னால டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது.. எனக்கு தெரியாம நீ மட்டும் இந்தியா பக்கம் வந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோ! டாடி பேச்சை நீ மீற மாட்டேன்னு நான் நம்புறேன்.” என்று தினகரன் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதால், தனது அம்மா சாரதா, அண்ணன் ஆனந்த் என அனைவருக்கும் மாறி மாறி கால் செய்து அழுது கதறி கூட தான் இந்தியா வர வேண்டும் என்று கெஞ்சி பார்த்தாள் ஐஸ்வர்யா. 

அவள் எத்தனை விதமாக கேட்டாலும், மனம் இறங்காமல் தங்களது திட்டத்தில் தெளிவாக இருந்த அவளுடைய குடும்பத்தினர்கள் அவளை கடந்த மூன்று மாதங்களாக இந்தியா பக்கம் பரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். அதனால் அமெரிக்காவில் இருந்த ஐஸ்வர்யா வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக யூனிவர்சிட்டிக்கு சென்று தினந்தோறும் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள். 

சரியாக ஒரு வாரத்திற்கு முன் ஐஸ்வர்யாவிற்கு கால் செய்த தினகரன் “நான் உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். நாளைக்கு ஏர்லி மார்னிங் ஃப்ளைட். நீ அதை மிஸ் பண்ணாம கிளம்பி இந்தியா வந்துரு.” என்று சொல்ல, அதைக் கேட்டு அதிர்ந்த ஐஸ்வர்யா, “என்ன dad சொல்றீங்க? நான் சொன்னதையும் கேக்காம நீங்க தானே என்னை இந்த கோர்ஸ்ல ஜாயின் பண்ணி விட்டீங்க! இன்னும் ஒரு மாசத்துல கோர்ஸே முடிய போகுது. 

சரி வந்ததும் வந்தாச்சு உருப்படியா படிக்கலாமேனு நானே இப்ப தான் நல்லா படிக்க ஆரம்பிச்சு இருக்கிறேன். இப்ப ஏன் திடீர்னு திரும்ப வர சொல்றீங்க? நான் வரட்டுமான்னு கேட்கும்போது எல்லாம் இந்தியால சுச்சுவேஷன் சரியில்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்க. அப்படி என்ன பிராப்ளம்ன்னு கேட்டாலும் சொல்லவே மாட்டேங்கிறீங்க. எனக்கு அங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல டாடி. நீங்க என் கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறீங்களா?” என்று சந்தேகமாக கேட்டாள். 

“நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு மறந்துட்டியா? என் கிட்ட இது மாதிரி எல்லாம் நீ கேட்கலாமா ஐசு! அப்பா உன் கிட்ட போய் என்ன மறைக்க போறேன்?  உங்க அண்ணன் ஆனந்தும், லேக்காவும் லவ் பண்ணிட்டு இருந்தது உனக்கே தெரியும் இல்ல.. இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்கலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன். 

லேகா வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம். அவங்க நம்ம குடும்பத்துல சம்பந்தம் பண்ணுவதற்கு ரெடியா இல்ல. சோ யாருக்கும் தெரியாம சீக்ரட்டா ஆனந்துக்கும், லேகாவுக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருக்கோம். அதுக்கு தான் உடனே கிளம்பி வர சொல்றேன். இப்படி எல்லாத்தையும் விளக்கி சொன்னா தான் உன்ன பெத்த அப்பனையே நீ நம்புவியா? இன்னும் வேற ஏதாவது டீடைல்ஸ் வேணும்னா கேளு அதையும் சொல்றேன்.” என்று சொல்லி சலித்துக் கொண்டார் தினகரன். 

தன் அப்பாவை மீறி எதுவும் பேச முடியாது என்பதால் அதற்கு மேல் இந்த கேள்வியும் கேட்காமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பி இந்தியா வந்து சேர்ந்தாள் ஐஸ்வர்யா. அவள் இந்தியா வந்து சேர்ந்த பிறகும் கூட மற்றவர்களுடன் அவளை பழக விடாமல், குறிப்பாக அஸ்வினிடம் பேசவே விடாமல் அவளை தங்களுடைய சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து அங்கே இருந்து வெளியில் வராமல் அவளுடைய குடும்பத்தினர்கள் பார்த்துக் கொண்டார்கள். அவளுடைய மொபைல் ஃபோனை கூட வாங்கி வைத்து விட்டார்கள். 

என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி தவித்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா அவளது அண்ணன் ஆனந்த் அவளைக் காண வரும் போது அவனை பிடித்து வைத்துக் கொண்டு “இங்க என்ன தான் நடக்குது ஆனந்த்? டாடி உனக்கும் லேக்காகவுக்கும் மேரேஜ்ன்னு சொல்லி தானே என்னை இந்தியா வர சொன்னாரு! இப்ப நம்ம வீட்டுக்கு கூட வர விடாம எதுக்காக இங்க என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க?”  என்று கேட்டு விசாரிக்க, “ஹவுஸ் அரஸ்டா? நீ ஏன் அப்படி எல்லாம் நினைக்கிற ஐஷு? லேகா வீட்ல பிராப்ளம் பண்ணிட்டு இருக்காங்கன்னு டாடி தான் உன் கிட்ட ஆல்ரெடி சொன்னாரு இல்ல! அதான் உன்னோட சேப்டிக்காக நீ இங்க இருக்கட்டும்னு நாங்க உன்ன இங்க தங்க வச்சு இருக்கோம். நீ ஓவரா இமாஜின் பண்ணி உன்னை கன்பியூஸ் பண்ணிக்காத.” என்றான் ஆனந்த். 

அவன் பேச்சில் நம்பிக்கை வராமல் “சும்மா அதையே சொல்லி என்ன சமாளிக்க பார்க்காத ஆனந்த். லேகா வீட்ல பிராப்ளம் பண்றதுக்கும் நான் இங்க இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. ஒருவேளை அப்படி இருந்தா, எனக்கு மத்தவங்க கூட கம்யூனிகேஷனே இருக்க கூடாதுன்னு ஏன் நினைக்கிறீங்க? என் ஃபோனை கூட புடுங்கி வச்சுக்கிட்டு இந்த ரூம விட்டு என்னை வெளியே போக விடாம இங்கயே வச்சு இருக்கிறதுக்கு பேரு  ஹவுஸ் அரெஸ்ட் இல்லாம வேற என்ன?” என்று கோபமாக கேட்டாள்

– முத்தங்கள் தொடரும் 💋 

(என்னை மறக்காமல்  பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured