Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 29

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 29

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 29

ஐஸ்வர்யா நடந்த அனைத்தையும் நினைத்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அஸ்வினின் புறக்கணிப்பால் சோகமாக உணர்ந்து அழுது கொண்டு இருந்த நேரம் அவளுக்கு வித்யாவிடம் இருந்து கால் வந்தது. 

உடனே அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட ஐஸ்வர்யா அவளது அழைப்பை ஏற்று “என்ன டி பண்ணிட்டு இருக்க? உனக்கு எவ்ளோ நேரமா நான் கால் பண்றேன் தெரியுமா? நான் வெளியவும் போக முடியாம ரொம்ப நேரமா அஸ்வின் ரூமுக்குள்ளயே இருக்கேன்.” என்று சொல்ல, 

“ஆமால நீ அஸ்வின் ரூம்ல தானே இருந்த.. அஸ்வின் எங்க? அவன் உன் கூடத் தான் இருக்கானா?” என்று ஒருவித தயக்கத்துடன் கேட்டாள் வித்யா. 

“அவனா.. நான் தூங்கி எந்திரிக்கும்போதே அஸ்வின் இங்க இல்ல. சரியான கிறுக்கு புடிச்சவன்.‌ நான் பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கேன்.. என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அவன் பாட்டுக்கு டோரை கூட லாக் பண்ணாம எங்கயோ கிளம்பி போயிட்டான். இன்னும் ஆளைக்காணோம். நான் இங்க என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே தூங்கி எந்திரிச்சு உட்கார்ந்து இருக்கேன்.” என்று ஐஸ்வர்யா புலம்ப,

“நானே இங்க என்ன பண்றதுன்னு தெரியாம தாண்டி முழிச்சுட்டு இருக்கேன்.” என்று மைண்ட் வாய்ஸுல் தனக்குத் தானே பேசிய வித்யா “ஓகே ஓகே.. அஸ்வின் தான் அங்க இல்லையே அப்புறம் என்ன? ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ரெப்ரெஷ் ஆகிட்டு அங்க வரேன். 

நம்ம ரெண்டு பேரும் அவன் வர்றத்துக்குள்ளையே கிளம்பி எங்காவது வெளிய போயிடலாம். அவன் வந்து உன்னை எங்கேன்னு கேட்டா நம்ம ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம். அப்படியே கிளம்பி அவனையும் கூட்டிகிட்டு எப்படியாவது சென்னை போயிடலாம். 

அஸ்வின் ஃபேமில இருக்கறவங்க எல்லாருமே உன் மேல கொலவெறில  இருக்காங்க. நீ அவங்க கண்லயே படாம இங்க இருந்து ஓடி போயிடுறது தான் நல்லது.” என்றாள். 

“அது எப்படி வித்யா உடனே நம்ம கிளம்ப முடியும்? அஸ்வின் போகக் கூடாதுன்னு சொன்னா என்ன பண்றது?” என்று ஐஸ்வர்யா குழப்பமாக கேட்க, “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ முதல்ல நான் சொல்றத செய். ரெடி ஆகிட்டு வெயிட் பண்ணு.‌ நான் வரேன்.” என்று சொல்லிவிட்டு அவளது அழைப்பை துண்டித்து விட்டாள் வித்யா.‌

அஸ்வினின் வீட்டில் இருந்த இந்து காலையில் தூங்கி எழுந்து கீழே வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த மானிக் எழுந்து சென்று காபி போட்டு வந்து அவளுக்கு கொடுத்தான். அதை வாங்கி குடித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்த இந்து “இங்க சர்வன்ட்ஸ் இருப்பாங்களே.. நீ எதுக்கு காபி போட்டுட்டு வர? நேத்து நான் உன்னை அடிச்சதுக்கு பழி வாங்குறேன்னு இதுல எதையாவது கலந்து கொண்டு வந்துட்டியா? உன்ன நம்பி எப்படி நான் இதை குடிக்கிறது?” என்று கேட்க, 

“என்ன இந்து என்ன போய் சந்தேகப்படுற? நான் போய் அப்படியெல்லாம் பண்ணுவேனா? இப்ப நான் எதுவும் பண்ணலைன்னு ப்ரூவ் பண்றதுக்கு இதை என்ன குடிச்சு காட்டவா முடியும்?” என்று மாணிக் கேட்க, அவனை தொடர்ந்து முறைத்து பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் இந்து. 

“அம்மா பத்ரகாளி முறைக்காத! இப்ப என்ன உனக்கு டவுட்… இதுல ஏதாவது இருக்குமான்னு தானே.. கொண்டா அத நானே குடித்து காமிக்கிறேன். அப்பையாவது நீ என்னை நம்புறியான்னு பார்க்கலாம்.” என்ற மாணிக் அவள் கையில் இருந்த காபி கப்பை வெடுக்கெண பிடுங்கி அதில் இருந்து ஒரு சிப் குடித்தான். 

பின் மீண்டும் காப்பியை டேபிளில் வைத்து விட்டு அவளைப் பார்த்தவன் “நான் போட்ட காஃபியை நானே ‌குடிச்சுட்டேன் போதுமா?” என்று கேட்க, அவன் எதிர்பார்க்காத ஒரு அரிய நிகழ்வு நடந்தது. வழக்கம்போல அவன் மீது கோபப்பட்டு எரிந்து விழாமல் அவன் முதல் முறை தனக்காக போட்ட காபியை வீணாக்க கூடாது என நினைத்த இந்து அதை கையில் எடுத்து சாதாரணமாக குடிக்க தொடங்கி விட்டாள். 

அதை நம்ப முடியாமல் ஆச்சரியமாக அவளைப் பார்த்த மாணிக் “ஏய் என்ன டி பண்ற? அது நான் குடிச்சிட்டு வச்சது.” என்று கேட்க, “எல்லாம் எங்களுக்கு தெரியும்.” என்று திமிராக சொன்ன இந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து தொடர்ந்து அவன் போட்ட காபி கொஞ்சம் மாக இருந்தாலும் எந்த குறையும் சொல்லாமல் அதை குடித்து முடித்தாள். 

“என்ன ஆச்சு இவளுக்கு? இப்ப எல்லாம் ஒரு டைப்பா பிஹேவ் பண்றா.. சம் டைம்ஸ் கோபப்பட்டு என்னை ஏதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருக்கா.. சான்ஸ் கிடைச்சா என்ன அடிக்கிறதுக்கு கூட ரெடியா இருக்கா. 

ஆனா சில சமயத்துல எல்லாத்தையும் மறந்துட்டு என்னமோ ரொம்ப நாளா என் கூட க்ளோசா பழகிட்டு இருந்த மாதிரி இப்படி எல்லாம் பண்றா.. இதுல எது உண்மைன்னு தெரியலையே! இவளை முழுசா புரிஞ்சுக்கறதுக்கு ட்ரை பண்ணதுக்கே ஏற்கனவே மண்டையில சொட்டை விழுக ஆரம்பிச்சிருச்சு.  ‌ 

இதுல இவளை நான் அண்டர்ஸ்டாண்ட் பண்ணி, இவளை என்ன அண்டர்ஸ்டாண்ட் பண்ண வச்சு நாங்க ரெண்டு பேரும் ஒரு ஃப்ளோல செட் ஆகி எப்ப தான் செட்டில் ஆகிறதுன்னு தெரியலையே! நடக்கிறத பாத்தா எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் போல இருக்கு!” என்று மாணிக் ஒரு பக்கம் மைண்ட் வாய்ஸுல் பேசிக் கொண்டிருக்க, காபி குடித்துக் கொண்டு இருந்த இந்து அஸ்வினுக்கு கால் செய்தாள். 

அதை கவனித்த மானிக் “மார்னிங்ல இருந்து நான் அவனுக்கு எத்தனை தடவை கால் பண்றேன் தெரியுமா? அவன் எடுக்கவே இல்ல. அப்புறம் ஒரு தடவை அட்டென்ட் பண்ணி எனக்கு வேலை இருக்கு அப்புறமா கூப்பிடுறேன்னு சொல்லிட்டு வெச்சவன் தான். இப்ப வரைக்கும் கூப்பிடல. இப்ப நீ கால் பண்ணா மட்டும் அவன் எடுத்துடுவானா?” என்று கேட்க, அவனை ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்துவின் அழைப்பை ஏற்றான் அஸ்வின். 

உடனே ஃபோனை காதில் வைத்த இந்து “ஹலோ அஸ்வின்! எப்படி டா இருக்க? நான் உன்ன பாக்குறதுக்கு தான் வந்தேன். நீ வீட்ல இல்ல ஊருக்கு போயிருக்கேனு செக்யூரிட்டி அண்ணா சொன்னாரு. 

அங்கிளுக்கும், ஆன்ட்டிக்கும் நடந்ததை என்னால இப்போ வரைக்கும் கூட நம்பவே முடியல அஸ்வின். டிவி நியூஸை பார்த்ததுக்கு அப்புறம் தான் இவ்வளவு நடந்திருக்குன்னு எனக்கு தெரிஞ்சது. அதை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு மனசே கேட்கல. அதான் நான் உடனே கிளம்பி வந்துட்டேன்.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள்‌. 

அஸ்வினின் பெற்றோர்கள் அவனது அனைத்து நண்பர்களிடமும் நல்ல முறையில் பழகி பாசமுடன் நடந்து கொள்வார்கள். அதுவும் இந்து கிராம பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து ஹாஸ்டலில் தங்கி படிப்பவள் என்பதால் வார இறுதி நாட்களில் அஸ்வின் வீட்டிற்கு அவள் உட்பட அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். 

அதனால் அனைவரையும் தங்கள் பிள்ளைகள் போலவே அஸ்வினின் பெற்றோர்கள் அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். வாரவாரம் அந்த இரண்டு நாட்கள் அஸ்வின் வீட்டில் திருவிழா போல ஒரே விருந்தாகத் தான் இருக்கும். அதனால் தனது பெற்றோர்களின் மீது இருக்கும் பாசம் அஸ்வின் நண்பர்கள் அனைவருக்கும் அவனது பெற்றோர்களின் மீதும் இருந்தது. 

இந்து பேசப்பேச அவள் ஒரு பக்கம் அழ, அவளைப் பார்த்து மாணிக்கும் அழுது கொண்டிருந்தான். அவன் குஜராத் அருகில் உள்ள குக் கிராமத்தைச் சேர்ந்தவன். எப்படியாவது நன்றாக படித்து  தனது குடும்பத்தை முன்னேற்றி விட வேண்டும் என்பதற்காகவே அரும்பாடு பட்டு நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்து மெரிட்டில் அஸ்வின் படிக்கும் அதே கல்லூரியில் சீட் கிடைத்ததால் அங்கே வந்து பார்ட் டைம் வேலை பார்த்து படித்துக் கொண்டிருந்தான் மாணிக். 

அவன் அஸ்வினுடன் நண்பனான பிறகு அவனையும் தங்களது மகனைப் போலவே பார்த்துக் கொண்ட அஸ்வினின் பெற்றோர்கள் அவனுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொண்டார்கள். அதை எல்லாம் நினைத்துப் பார்த்த மாணிக் தனது சொந்த பெற்றோர்களை இழந்த துக்கத்துடன் அவனும் கண்ணீர் சிந்த தொடங்கினான். 

அவர்கள் அழுவதை ஃபோனில் கேட்டுக் கொண்டு இருந்த அஸ்வின் ஏற்கனவே அவன் எமோஷனலாக இருந்ததால் அவனும் அழத் தொடங்கி விட, நன்றாக இருந்தவனை தாங்கள் அளவைத்து விட்டோம் என நினைத்து வருந்திய இந்து “விடு விடு அழுகாத அஸ்வின். நாங்க எல்லாரும் எப்பயுமே உன் கூடயே இருப்போம்.. எனக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே வந்து இருப்பேன். யார் கூடயும் பேச வேண்டாம்னு நான் என் ஃபோனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்டேன். 

யார் கூடையுமே நான் காண்டாக்ட் இல்ல. டிவில நியூஸ் பார்க்கலைன்னா எனக்கு இது தெரியாமயே போயிருக்கும். அங்கிளும், ஆண்டியும் உன்னை விட்டு போயிட்டாங்கன்னு மட்டும் நினைக்காத. அவங்களால உன்னையும் அக்ஷயாவையும் விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. 

இப்பயும் நம்ம கூட அவங்க இதை வீட்டுல இருக்குற மாதிரி தான் இருக்கு எனக்கு. அவங்க இல்லைன்னு நினைச்சு வருத்தப்படறதுக்கு பதிலா, அவங்க தெய்வமா நம்ம கூட இருக்காங்கன்னு நினைச்சு வாழப் பழகிக்கணும் அஸ்வின்.” என்று சொல்ல, 

“ம்ம்.. அவங்க எங்களை விட்டுட்டு எங்க போக போறாங்க? நீ சொன்ன மாதிரி நெனச்சுக்கிட்டு தான் நான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன் இந்து. சரி நீ அங்க இருந்துட்டு என்ன பண்ற? பேசாம நீ கிளம்பி இங்க வந்துரு‌. மாணிக் அங்க தானே இருக்கான்.. 

நான் அவனுக்கு கால் பண்ணி அட்ரஸ் சொல்றேன். நீ அவன் கூட வந்துரு.. ம்ம்.. அது சரி உன் ஹஸ்பன்ட் உன் கூட வந்திருக்காரா? நடந்த பிரச்சனையில உனக்கு மேரேஜ் ஆனதையே நான் மறந்துட்டேன். சாரி இந்து! அவர் இருந்தாருன்னா நீ அவரையும் கூட்டிட்டு வந்துரு.” என்றான் அஸ்வின். 

“எனக்கு இன்னும் மேரேஜ் ஆகல அஸ்வின்.” என்று சொல்லிவிட்டு இந்து தன் கண்ணீரை துடைத்துக் கொள்ள, அதைக் கேட்டு ஷாக்கான அஸ்வின் “என்ன சொல்ற இந்து? உனக்கு மேரேஜ் சொல்லிட்டு தானே ஊருக்கு போன.. அப்புறம் என்ன ஆச்சு? ஏதாச்சும் ப்ராப்ளமா?” என்று கேட்டான். 

“ம்ம்.. ப்ராப்ளம் தான். அதான் என் மேரேஜ் நடக்கல.” என்று உடைந்த குரலில் சொன்னாள் இந்து.

முத்தங்கள் தொடரும்

You may also like

Leave a Comment

About Me

Featured