அத்தியாயம் 2
ஐஸ்வர்யா மயக்கத்தில் இருப்பது கூட தெரியாமல் அவள் தன்னிடம் நடிக்கிறாள் என்று நினைத்து தொடர்ந்து அவள் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து பார்த்த அஸ்வின் அப்போதும் அவள் அசைவின்றி கிடந்ததால், “ஓஹோ.. நெஜமாவே நீ மயக்கம் போட்டு விழுந்துட்டியா? நான் கூட நீ நடிக்கிறியோன்னு உன்னை தப்பா நினைச்சிட்டேன். இப்படியே கிடந்து சாவு டி.
உன்ன கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் பண்ணி கொல்லனும்னு நான் நெனச்சேன். பட் அந்த God-க்கு உன் மேல ஏதோ soft corner இருக்கும் போல. அதான் நானா உன்ன எதுவும் பண்றதுக்குள்ள, நீயே இப்படி கான்சியஸ்னஸ் இல்லாம கிடைக்கிற..!! எப்படியோ போய் தொல! எனக்கு உன் மூஞ்சிய பார்க்கவே இரிடேட் ஆகுது.” என்று போதையில் அவளைப் பார்த்து சொல்லிவிட்டு அவளை விட்டு விலகினான்.
நன்றாக குடித்து இருந்ததால் தலை முதல் கால் வரை மது போதையில் ஏறிப் போயிருந்த அஸ்வின் தள்ளாடியபடி அவளுடன் அந்த ரூமில் இருக்க பிடிக்காமல் வெளியில் வந்தான். அப்போது அவனது நண்பர்கள் விவேக், வித்யா இருவரும் அவனை காண வந்திருந்தார்கள். பதட்டமான முகத்துடன் அவன் அருகில் சென்ற வித்யா “டேய் ஐஷு எங்க டா? நாங்க சொல்ல சொல்ல கேட்காம அவ கழுத்துல தாலி கட்டி இங்க தூக்கிட்டு வந்தியே.. அவளை என்ன பண்ண?” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியபடி கேட்டாள்.
அவள் கையை தன் மீது இருந்து வேகமாக அஸ்வின் எடுத்துவிட, அதில் நிலை தடுமாறி கீழே சென்று விழபபோனாள் வித்யா. அதை கவனித்த விவேக் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டு அஸ்வினை கோபமாக பார்த்து, “டேய் அஸ்வின் உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா? இப்படி பாக்குறவங்க எல்லார் மேலயும் வெறுப்பை கொட்டிக்கிட்டு இருக்க! இப்ப வித்யா உன்னை என்ன பண்ணிட்டான்னு அவளை எதுக்கு புடிச்சு தள்ளிவிடுற?
எங்களுக்கு நீ எப்படி முக்கியமோ அதே மாதிரி ஐசுவும் முக்கியம் தான். சின்ன வயசுல இருந்தே நம்ம எல்லாரும் ஃபிரண்ட்ஸா இருக்கோம். அவளுக்கு என்ன ஆச்சுன்னு நாங்க கேட்க கூடாதா? உனக்கு நடந்தது எல்லாமே தப்பு தான். அதுக்கு தான் நீ ஐசு ஃபேமிலில இருக்குறவங்க எல்லாரையும் பழிவாங்கிட்டியே! இன்னமும் உனக்கு என்ன டா பிரச்சனை? அந்த பொண்ணு பாவம் டா அவளை விட்டுடு.” என்றான்.
அருகிலுள்ள டேபிள் மீது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஃபிளவர் வேஷை கையில் எடுத்து அதை தரையில் அடித்து உடைத்த அஸ்வின் “யாரு பாவம்? அவ பாவமா? முட்டாள் மாதிரி நீ சொன்னத நம்பி அவள் என்னை லவ் பண்றான்னு இத்தனை நாளா நானும் தானே டா நம்பிட்டு இருந்தேன்! ஆனா அவ என்ன பண்ணா?
ஒரு பக்கம் அவ ஃபேமிலி கூட சேர்ந்து மொத்தமா என் குடும்பமே இருக்கிற இடம் தெரியாமல் போயிடும்னு எல்லா பிளானையும் பண்ணிட்டு, இன்னொரு பக்கம் அந்த கௌதமை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஜாலியா ரெடி ஆகிட்டா..!! இத்தனை வருஷமா நம்ம கூட பிளான் போட்டு பழகி கொஞ்சம் கொஞ்சமா இந்த வீட்டுக்குள்ள வந்து எல்லார் மனசுலயும் இடம் புடிச்சு எங்கள நம்ப வச்சு அவ குடும்பமே கடைசியில எங்களை கழுத்தறுத்திருக்கு.
அவளால எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் செத்துட்டாங்க. என் தங்கச்சி ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கா. இந்த சுச்சுவேஷன்ல உனக்கு அவளை பார்த்தா தான் பாவமா இருக்கா? அப்ப எங்கள பாத்தா எப்படி டா உனக்கு தெரியுது? நேத்து வரைக்கும் என் கூட சிரிச்சு பேசிட்டு இருந்த என் பேரன்ட்ஸ் ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்ல. அக்ஷயா உயிர் பிழைப்பாளா இல்லையான்னு தெரியாத இப்ப எந்த கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல கிடக்கிறா!
இதுவரைக்கும் ஆல்கஹால்னா என்னனு கூட தெரியாம இருந்த நான் இப்படி எல்லாத்தையும் இழந்து குடிகாரன் மாதிரி குடிச்சுக்கிட்டே பைத்தியம் புடிச்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன். என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா டா மச்சான்? நீ எனக்கும் ஃபிரண்டு தானே? என்ன வித்யா நீயே சொல்லு! நம்ம எல்லாருமே ஒன்னா தானே வளர்ந்தோம்! உங்களுக்கு கூட அந்த ஐஸ்வர்யா தான் முக்கியமா இருக்கா.. நான் யாரோ ஆய்ட்டனா இப்போ? நீங்களும் என்னை விட்டுட்டு போக போறீங்களா? மொத்தத்துல நான் தனியா நிக்க போறேன்.. அப்படித் தானே?” என்று உச்ச ஸ்தூதியில் கத்தி கேட்டுவிட்டு குழந்தை போல அப்படியே தரையில் தனது முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதான்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது அஸ்வின், ஐஸ்வர்யா இருவரும் ஒரே மன நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரின் பக்கமும் இழப்பு அதிகம். அதனால் அவர்களுடைய வலி விவரிக்க முடியாதவை தான். அஸ்வின் தனது ஜென்ம விரோதியாக இப்போது ஐஸ்வர்யாவை பார்த்தாலும், அவளைப் பற்றி நன்றாக அறிந்திருந்த விவேக் மற்றும் வித்யாவால் அவளை தவறாக நினைக்க முடியாமல் போய்விட்டது.
அஸ்வின், ஐஸ்வர்யா அவர்களை பொறுத்தவரை முக்கியமானவர்கள் தான். விவேக் அஸ்வின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு “டேய் மச்சான் ஏன் டா இப்படி எல்லாம் பேசுற? உனக்கு துரோகம் பண்றது நம்ம ஐஸ்வர்யா ஃபேமிலில இருக்கிறவங்களாவே இருந்தாலும் உன் கூட சேர்ந்து அவங்கள நானும் தானடா பழி வாங்கினேன்!
என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் நான் உன் கூட இருப்பேன் மச்சான். நீ எப்பயும் தனியா இருக்க மாட்ட. இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்காத டா. நீ ரெடியாகிட்டு வா. ஹாஸ்பிடல்ல போய் அக்ஷயா எப்படி இருக்கான்னு நம்ம பாத்துட்டு வந்துரலாம். உன் தலையிலையும் அடிபட்டிருக்கு தானே! அந்த ஆக்சிடென்ட் நடந்து முடிந்து முழுசா ரெண்டு நாள் கூட ஆகல.
உனக்குமே இன்னும் நம்ம ப்ராப்பரா டிரீட்மென்ட் பண்ணல. முதல்ல உன் ஹெல்த்தை பார்க்கணும். நீ நல்லா இருந்தா தான் உன்னால அக்ஷயாவ நல்லா பாத்துக்க முடியும்.” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்.
நடக்கும் அனைத்தையும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த வித்யா “விவேக் அஸ்வின் கூட இருக்கட்டும். அவன் அஸ்வினை பாத்துக்குவான். முதல்ல நான் போய் ஐஷுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும்.” என்று நினைத்து அவசரமாக அஸ்வினின் ரூமை நோக்கி நடந்து சென்றாள்.
அங்கே இன்னும் திருமண கோலத்தில் இருந்த ஐஸ்வர்யா கட்டிலில் மயங்கிய நிலையில் படுத்திருப்பதை கண்டு அதிர்ந்த வித்யா “ஏய் ஐசு! என்ன டி ஆச்சு?” என்று கேட்டபடி அவள் கன்னத்தில் தட்டி அவளை சுயநினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்தாள். அஸ்வின் ஐந்து விரல்களும் அவளுடைய பஞ்சு போன்ற வெண்ணிற கன்னத்தில் சிவப்பு நிறத்தில் பதிந்திருப்பதை பார்த்த வித்யாவிற்கு இவளுடைய இந்த நிலைக்கு அவனைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது என்று நினைத்த வித்யா,
“அச்சோ கடவுளே.. அஸ்வின் மாதிரி நல்ல பையன் யாருமே இருக்க முடியாதுன்னு இத்தன நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஒரே ஒரு இன்சிடென்ட் அவனை இப்படி டோட்டலா மாத்திருச்சு. அவன சொல்லியும் தப்பில்ல. எல்லாம் நேரம்.” என்று நினைத்து வருத்தப்பட்டு ஓடிச் சென்று ஒரு கிளாஸில் தண்ணீர் கொண்டு வந்து அதை ஐஸ்வர்யாவின் முகத்தில் அடித்தாள்.
அப்படி அவள் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை செய்த பிறகு சுயநினைவிற்கு வந்த ஐஸ்வர்யா “அஸ்வின்!” என்று கத்திக் கொண்டு மூச்சு வாங்க பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தாள். “ஹே ஐசு.. பயப்படாத. அஸ்வின் விவேக் கூட அக்ஷயாவுக்கு எப்படி இருக்குன்னு பாக்க ஹாஸ்பிடலுக்கு போய் இருக்கான். இங்க நான் மட்டும் தான் இருக்கேன். Don’t worry, relax.” என்ற வித்யா அவளது தோள்களில் தட்டி அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, பதட்டம் கலந்த சோகத்தில் மூழ்கி கிடந்த ஐஸ்வர்யா ஏதோ தனக்கான ஒரு நம்பிக்கை ஒளியை பார்த்ததாக நினைத்து நிம்மதி அடைந்து அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதாள்.
அவள் மனதில் இருக்கும் பாரம் குறையும் வரை அழுது தீர்க்கட்டும் என்று நினைத்த வித்யா அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஒருவழியாக அரை மணி நேரத்திற்கு பிறகு அழுது ஓய்ந்த ஐஸ்வர்யா “என் ஃபேமிலில இருக்கிறவங்க அஸ்வினுக்கும், அவனோட ஃபேமிலிக்கும் பண்ணது பெரிய துரோகம் தான். ஆனா அது எனக்கே தெரியாம நடந்தது வித்யா.
நான் அஸ்வினை எவ்வளவு
லவ் பண்ணினேன்னு மத்த எல்லாரையும் விட உனக்கு நல்லா தெரியும் தானே! அவன் நானும் சேர்ந்து அவனுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நினைச்சுட்டு இருக்கான். எனக்கு என்ன சொல்லி அப்படி இல்லைன்னு ப்ரூவ் பண்றதுன்னே தெரியல. நான் என்ன சொன்னாலும் அதை கேட்கிற மைண்ட் செட்டிலயே அஸ்வின் இல்ல.
அவன் இப்போ உண்மைய சொல்லுனா நம்ம அஸ்வினாவே இல்ல. டோட்டலா மாறிட்டான். எனக்கு ஒரு பக்கம் அவன பாக்க நம்ம குடும்பத்தினால தான் அவனுக்கு இப்படி எல்லாம் ஆயிடுச்சுன்னு நினைச்சு பாவமா இருக்கு. கில்டி ஃபீலிங்ல கஷ்டமா இருக்கு. ஆனா அவன் பண்றது எல்லாத்தையும் பாக்கும்போது பயமா இருக்கு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல டி.” என்றாள்.
“எனக்கு உன் மேலையும், நீ அவன் மேல வச்சிருந்த லவ் மேலயும் நிறைய நம்பிக்கை இருக்கு ஐசு. இப்ப கூட நானும் விவேக்கும் அவன் கிட்ட உன்ன பத்தி பேச ட்ரை பண்ணோம். அவன் என் மேலேயே கோபப்பட்டு என்ன தள்ளி விட்டுட்டான். அவன் மெண்டலி disturbed-ஆ இருக்கான். அக்ஷயாவுக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. By god’s grace, அவளுக்கு எது வாங்க கூடாது.
ஏற்கனவே அஸ்வினோட அப்பா, அம்மா இறந்துட்டாங்க. இதுல அக்ஷயாவையும் அவனால காப்பாத்த முடியாமல் போச்சுன்னா அதை அவனால தாங்கவே முடியாது. முதல்ல அக்ஷயாவுக்கு சரியாகி அவ இங்க வரணும். அதுக்கப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா அஸ்வின் நார்மலாவான். நம்ம வெயிட் பண்ணி தான் ஆகணும் ஐசு. வேற வழியில்ல. அவன் கோபப்பட்டு உன்னை பழிவாங்கறதுக்காக கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்திருந்தாலும், இப்ப அவனுக்குன்னு இங்க இருக்க ஒரே ஆள் நீ மட்டும் தான்.
சோ அவனை விட நீ இப்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். உன்னோட லவ்வால மட்டும் தான் அவனை பழையபடி நம்மளோட அஸ்வினா மாத்த முடியும். அவனுக்கு உன் மேல இருக்கிற கோபம் போயிடுச்சுன்னாலே அவன் பாதி சரியாயிடுவான். நீ என் கூட வா முதல்ல ஏதாவது சாப்பிடு. நீயே இப்படி மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு வீக்கா இருந்தா, அஸ்வினை யார் பார்த்துக்கறது?” என்று கேட்ட வித்யா ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி சாப்பிடுவதற்காக அழைத்து சென்றாள்.
கடந்த இரண்டு நாட்களாக அவர்களது வாழ்வில் எக்கச்சக்கமான விஷயங்கள் நடந்து விட்டதால் அவர்கள் யாருமே சரியான சாப்பாடு மற்றும் தூக்கம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டு இருந்ததில் அனைவருமே சோர்வுடன் தான் இருந்தார்கள்.
– முத்தங்கள் தொடரும் 💋
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)