Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 28

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 28

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 28 

அஸ்வினிற்க்கு கால் செய்து இருந்த மாணிக் அவன் எதுவும் பேசாததால் ”ஹலோ அஸ்வின்.. லைன்ல இருக்கியா? நான் பேசுறது உனக்கு கேக்குதா இல்லையா டா?” என்று அஸ்வினின் காதுகள் கிளியும் அளவிற்கு சத்தமாக கத்திக் கேட்டான்.   

ஐஸ்வர்யா இருந்த கோலத்தைப் பார்த்த பிறகு அஸ்வினுக்கு பேச வாய் வரவில்லை. அவனா இப்படி எல்லாம் செய்தான்? என அவனாலையே நம்ப முடியவில்லை. இதில் மாணிக் வேற அவன் நிலைமை தெரியாமல் ஃபோனில் ஹலோ ஹலோ என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால் “டேய்.. கொஞ்ச நேரம் சும்மா இரு டா. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் ஒர்க் இருக்கு. நான் உன் கிட்ட அப்புறமா பேசறேன். நானா கால் பண்ற வரைக்கும் நீ எனக்கு கால் பண்ணாத.” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்தான் அஸ்வின். 

அஸ்வின் எழுந்து கொள்ளும் போது அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இருந்த போர்வையை தூக்கி கிடாசி விட்டு சென்றிருந்ததால் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா அவளது வெற்றுடலை குறுக்கிக் கொண்டு படுத்து கிடந்தாள். அவள் கைகள் அணிச்சையாக அருகில் இருந்த போர்வையை தேடி இழுத்து அவள் மீது போட்டுக் கொண்டது. 

அவள் இன்னும் தூக்கம் கலையாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருக்க, எதற்கு இந்த பொழுது விடிந்தது! தன் வாழ்க்கை முழுவதும் விடியாமல் இருள் சூழ்ந்ததாகவே இருந்திருந்தால் இதை எல்லாம் தான் பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே என்று ரீதியில் ஐஸ்வர்யாவையே கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தான் அஸ்வின். 

அவளது கழுத்து வளைவு முதல் ‌ கணுக்கால் வரை அவன் பதித்த காதல் சின்னங்கள் ஆங்காங்கே தெரிய, அவளை அப்படி பார்க்கவே அவனுக்கு ஏதோ போல் இருந்தது.

“ஐயோ அஸ்வின் குடிச்சா உனக்கு மூளை வேலை செய்யாம போயிடுமா? கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லையா? என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க! அன்னைக்கு விவேக் கேட்கும்போது இவளை துரத்தி விட்டுட்டு மனிஷாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வாய்க்கலையே பேசுனியே..

நேத்து நடந்தது மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சா, உன்னை எவ்வளவு கேவலமா பேசுவாங்கன்னு தெரியுமா? போயும் போயும் இந்த ஐஸ்வர்யா கூட எப்படி டா உன்னால அப்படி எல்லாம் ச்சை… நினைக்கவே அசிங்கமா இருக்கே! ஆனா நிஜமாவே எல்லாம் நடந்துருச்சே.. அதுவும் போயும் போயும் இவ கூட..!! இப்ப என்ன பண்ணி தொலையுறதோ தெரியல!” என தனக்குத் தானே புலம்பிய அஸ்வின் குட்டி போட்ட பூனை போல அவனது ரூமிற்குள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்தான். 

குறுக்கிக் கொண்டு வெகு நேரமாக உறங்கியதால் கை கால்கள் வலிப்பதை போல உணர்ந்த ஐஸ்வர்யா வேறு புறமாக திரும்பி படுக்க, அவள் மீது கிடந்த போர்வை மீண்டும் லேசாக விலகியது. அதில் அவள் மறைக்க வேண்டியது எல்லாம் பளிச்சென்று தெரிய, அதை பார்க்க அஸ்வினிற்க்கு அவன் மீதே கோபம் பற்றி கொண்டு வந்தது. 

உடனே வேகமாக அவள் அருகில் சென்று அவளுக்கு ஒழுங்காக போர்வையை போற்றி விட்ட அஸ்வின் மீண்டும் அது நகரக் கூடாது என நினைத்து அவள் கொண்டு வந்த பேக்கில் இருந்த அவளது புடவையை எடுத்து நன்றாக அவள் மீது போட்டு கிட்டத்தட்ட அவளை ஒரு டெட் பாடி போல சுற்றினான். 

அதன் பிறகு தான் அவனும் ஆடைகள் இன்றி இருப்பதை உணர்ந்து தன்னுடைய ஆடைகளை தேடி எடுத்து அணிந்து கொண்டு அந்த அறையில் கலைந்து கிடந்த பொருட்களை எல்லாம் அதற்கான இடத்தில் எடுத்து வைத்தான். அங்கே நேற்று இரவு நடந்த சம்பவம் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்ததால் தன்னால் முடிந்த அனைத்தையும் அவன் சரி செய்தான். 

அதற்கு மேலும் அந்த அறையில் இருப்பது அவனுக்கு ஏதோ மூச்சு முட்டுவதைப் போல ஒரு உணர்வை கொடுத்ததால் “ஆள விடுங்க டா சாமி!” என்று வெளியில் ஓடி விட்டான். மற்றவர்களின் பார்வையில் படுவதை கூட அவன் விரும்பவில்லை. அதனால் வெளியில் நின்ற லோகேஷின் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி மனம் போன போக்கில் எங்கேயோ சென்று விட்டான் அஸ்வின். 

“என்ன ஆச்சு இவனுக்கு? இப்ப தான் பொழுதே விடிஞ்சிருக்கு! இந்த டைம்ல அவனுக்கு என்ன இம்பார்ட்டண்ட் வொர்க் இருக்கு? இப்ப அவங்க கிளம்பி இங்க வராங்களா.. இல்ல நான் இந்துவை கூட்டிக்கிட்டு அங்க அவங்க ஊருக்கு போறதான்னு தெரியலையே!” என்று யோசித்து குழம்பிய மானிக் விவேக் அஸ்வின் உடன் தான் இருக்கிறான் என்பதால் அவனுக்கு கால் செய்து பார்த்தான். 

எத்தனை முறை அவன் கால் செய்து பார்த்தும், விவேக் ஃபோனை எடுக்கவில்லை. “என்ன இவனும் காலை அட்டென்ட் பண்ண மாட்டேங்குறான்?” என்று யோசித்தபடி மாணிக் வித்யாவிற்கு கால் செய்து பார்த்தான். அவளும் அவன் அழைப்பை ஏற்காததால், “அங்க என்ன தான் நடக்குதுன்னு தெரியலையே..  யாருக்கு கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறாங்க! பேசாம நம்மளே செக்யூரிட்டி கிட்ட அஸ்வின் இப்ப இருக்க வீட்டோட அட்ரஸ்ஸ கேட்டு வாங்கி ஸ்ட்ரைட்டா அங்க கிளம்பி போயிடலாமா?” என்று யோசிக்க தொடங்கினான் மானிக். 

சில நிமிடங்களுக்கு பிறகு தான் இருக்கும் அறை மிகவும் வெளிச்சமாக இருந்ததால் தூக்கம் கலைந்து கண் விழித்தாள் ஐஸ்வர்யா. தன் மீது போர்வையைத் தாண்டி ஏதேதோ சுற்றிக் கொண்டு இருந்ததால் அவளுக்கு அசோகர்யமாக இருக்க, அதை எல்லாம் அவசரமாக தன் மீது இருந்து தூக்கி வீசிய ஐஸ்வர்யா “இது என்னோட சேரி தானே.. நான் என் பேக்ல தானே வெச்சிருந்தேன்! இதை யாரு கொண்டு வந்து என் மேல போட்டது?” என்று யோசித்து குழம்பியவள், அப்போது தான் அவள் ஒட்டு துணி இல்லாமல் தான் கட்டிலில் மல்லாந்து படுத்து கிடப்பதை கவனித்தாள். 

அதனால் திடுக்கிட்டு பயந்து போய் எழுந்து அமர்ந்தவள், போர்வையை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு முதல் வேலையாக தன் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று தன் பதற்றத்துடன் சுற்றிப் பார்த்தாள். அந்த அறையில் அவளைத் தவிர வேறு யாருமில்லை. உடனே சென்று வேகமாக கதவை தாளிட்ட ஐஸ்வர்யா அதன் மீது சாய்ந்து நின்று கொண்டு மூச்சு வாங்க தன் தலையில் கை வைத்துக் கொண்டு நடந்த அனைத்தையும் நினைவு கூற முயற்சி செய்தாள். 

நேற்று அஸ்வினுடன் நடந்ததை எல்லாம் அவளுக்கு இப்போது கூட கனவு போல தான் தோன்றியது. அப்போதும் அவள் ஒருவித மோன நிலையில்  இருந்து இருந்ததால் எது உண்மை என்று இப்போது கூட அவளால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் அவள் இருந்த கோலம், அவள் உடல் முழுவதும் பரவி கிடக்கும் கூர்மையான வலி, அஸ்வினால் அவள் உடலில் வந்திருக்கும் அடையாளங்கள் என அனைத்தும் அவளிடம் சத்தம் போட்டு மீண்டும் மீண்டும் நேற்று நடந்த அனைத்து உண்மை தான் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்ததால் “அப்ப நிஜமாவே அது எல்லாம் நடந்துருச்சா! என் அஸ்வின் என் கூட..!!” என்று நினைக்கவே அவளுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை போல இருந்தது. 

அவன் அனைத்தையும் மறந்து விட்டு தன்னை முழுமனதாக அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டானா? என நினைக்கும் போது அவளுக்குள் ஒருவித சந்தோஷமும் நிம்மதியும் பரவ, இறக்கைகள் இன்றி காற்றில் உற்சாகமான பறவையாய் கனவில் அவனுடன் சிறகடித்து சந்தோஷமாக பறக்க தொடங்கி விட்டாள் ஐஸ்வர்யா. 

அவள் சிந்தனைகளில் அவனைத் தவிர வேறு எதுவும் இல்லை.‌ இந்த சந்தோஷமான விஷயத்தை முதலில் வித்யாவிடம் சொல்ல வேண்டும் இது தெரிந்தால் கண்டிப்பாக அவளும் தனக்காக சந்தோஷப்படுவாள் என நினைத்த ஐஸ்வர்யா உடனே தனது மொபைல் ஃபோனை தேடி எடுத்து அவளுக்கு கால் செய்தாள். 

ரிங் பல முறை சென்றும், வித்யா அவள் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் டிசப்பாய்ண்ட் ஆன ஐஸ்வர்யா “மணி எட்டாகுது. இன்னுமா அவ தூங்கிட்டு இருக்கா? அஸ்வினும் இங்க இல்ல. இந்த ரூம்ல பாத்ரூமும் இல்ல. நான் இப்ப வெளிய போய் எப்படி குளிக்கிறது? அவ வந்தாலாவது எனக்கு கொஞ்சம் சப்போர்ட்டிவா இருக்கும்.” என்று நினைத்து புலம்பியவள், “முதல்ல ஏதாவது ஒரு டிரஸ்சை எடுத்துப் போடுவோம். அஸ்வின் வரானான்னு பாக்கலாம். இல்லைனா ஒரு பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் வித்யாவுக்கு கால் பண்ணி பார்க்கலாம்.” என்று நினைத்து கைக்கு கிடைத்த ஏதோ ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொண்டு அமர்ந்தாள். 

அந்தக் கட்டிலில் அமர்ந்தவுடன் அவளுக்கு நேற்று அவளுடையவனுடன் அதே கட்டிலில் சரசமாடியது எல்லாம் நினைவலைகளாக வந்து செல்ல, அதில் வெட்கத்தில் குங்குமமாய் அவள் முகம் சிவந்தது. உடனே தன் முகத்தை தனது இரு கைகளாலும் மறைத்துக் கொண்ட ஐஸ்வர்யாவிற்கு நேற்று அவன் தனது முரட்டு இதழ்களில் அவளது கழுத்து ஓரம் சின்னங்கள் பதித்ததெல்லாம் நினைவிற்கு வந்தது. 

உடனே அந்த இடத்தை தொட்டுப் பார்த்த ஐஸ்வர்யா ஏதோ பைத்தியம் பிடித்தவளை போல தனியாக அவள் பாட்டிற்கு சிரித்துக் கொண்டே இருந்தாள்‌. அவள் வாழ்க்கையில் மிகச்சிறந்த மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக கண்டிப்பாக நேற்று இரவு தான் இருந்திருக்கும்  என நினைத்த ஐஸ்வர்யா “இதுக்கு அப்புறமாவது என்னை புரிஞ்சுகிட்டு நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு அஸ்வின் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்தா நல்லா இருக்கும். 

எனக்கு தெரிஞ்ச அஸ்வின் எல்லார பத்தியும் யோசிச்சு கவலைப்படறவன். முக்கியமா எனக்காகன்னா, அவன் எதையும் செய்றதுக்கு தயங்கினதே இல்லை.  அப்படி என் மேல பாசமா இருந்து, என் கூடவே எப்பயும் இருந்த என் அஸ்வினை தான் எனக்கு தெரியும். நான் என் மைண்ட்ல அவனை மட்டும் நான் ஞாபகம் வச்சுக்கணும்னு நினைக்கிறேன். 

இப்ப என் மேல கோபமா இருக்கிற அஸ்வின் டோட்டலா மாறனும். வித்யா சொன்ன மாதிரி இதுக்கு அப்புறம் என்னால அவனை மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. அவனோட அப்பா, அம்மா என் மேல எவ்ளோ பாசமா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்.  

அவங்க சாவுக்கு எப்படி என்னால காரணமாக முடியும்? அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் அவங்க மேல ரொம்ப பாசம் வச்சிருந்தேன்‌. அவங்க இப்ப இல்லாம போனதுக்கு என் குடும்பம் தான் காரணம்னு நினைக்கும் போது, எனக்கே கஷ்டமா தான் இருக்கு. ஆனா என் மனசு உனக்கு புரியுமா அஸ்வின்?” என நினைத்து திடீரென அழத் தொடங்கி விட்டாள். 

முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured