அத்தியாயம் 27
தான் சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்கும்போது இந்து தன்னை அடித்ததால் அதிர்ந்த மாணிக் அவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு “ஏய் பைத்தியக்காரி! இப்ப எதுக்கு டி என்னை அடிச்ச?” என்று கேட்க, “ம்ம்.. என் மேரேஜை பத்தி பேசுறதுக்கு எல்லாம் உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. நீ அதை பத்தி பேசினாலே எனக்கு கடுப்பாகுது அதனால தான் டா அடிச்சேன். நீ மறுபடியும் அந்த பேச்சை எடுத்தா, எனக்கு கோபம் வந்து மறுபடியும் உன்னை அடிப்பேன். என்ன பண்ணுவ நீ? சொல்லு உன்னால என்ன பண்ண முடியும்? பதிலுக்கு நீயும் என்னை அடிப்பியா? எங்க அடி பார்க்கலாம்!” என்ற இந்து தனது கூர்மையான பார்வையால் அவனை துலைத்தவாறு மீண்டும் அவன் அருகில் சென்றாள்.
அவள் தன் அருகில் வரும்போது எல்லாம் தன் ஆண்மை கட்டுப்பாடு இன்றி துடிப்பதை தடுக்கும் பொருட்டு இரண்டடி அவசரமாக பின்னே சென்ற மாணிக் “ஏய் இரு டி, இப்ப எதுக்கு நீ முன்னாடி வர? Social distensing தெரியாதா உனக்கு? எதுவா இருந்தாலும் 2 arm distance-ல நின்னு பேசு. நீ திடீர் திடீர்னு பக்கத்துல வந்தா எனக்கு பக்கு பக்குன்னு ஆகுது இல்ல..!!” என்று கேட்டான்.
“ஆகும் டா ஆகும்! இத்தனை நாளா நான் இருக்கேனா செத்தேனான்னு பாத்தியா நீ? நான் ஊருக்கு கிளம்பி போனதுக்கு அப்புறமா, நீயும் என்ன பத்தி யோசிக்காம உங்க ஊருக்கு உடனே கிளம்பி போயிட்ட தானே! அதுக்கு அப்புறமா நீங்க என்ன நடந்துச்சுன்னு கூட நீ தெரிஞ்சுக்க ட்ரை பண்ணல…
என்னை மாதிரி நியூஸ்ல அஸ்வின், ஐஸ்வர்யா ஃபேமிலில நடந்தது எல்லாத்தையும் பார்த்ததுக்கு அப்புறமா தானே நீயும் இங்க கிளம்பி வந்துருக்க! இப்ப கூட இங்க நீ வந்ததுக்கு அது மட்டும் தான் ரீசன். மத்தபடி உனக்கு என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காத.” என்று இந்து கோபம் குறையாமல் சொல்ல,
“என்ன இவ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சண்டை போடறதுக்காகவே பொறந்த மாதிரி நம்ம என்ன சொன்னாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றா! அதுவும் மேரேஜை பத்தி பேசினாலே டென்ஷன் ஆகுதுன்னு சொல்றா..
இவ கழுத்துலையும் தாலியைக் காணோம். அப்படின்னா, ஒருவேளை ஏதாவது பிராப்ளம் ஆகி இல மேரேஜ் நின்னு போய் இருக்குமா? அது தெரியாம இத்தனை நாளா தேவதாஸ் மாதிரி நான் நார்த் இந்தியாவே கதின்னு இருந்துட்டேன்னு தான் இவ கோவமா பேசுறாளோ!” என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷத்தில் துள்ளி குதித்த மாணிக் “ஏய் இந்து.. உண்மையசொல்லு.. உன் மேரேஜ் ஸ்டாப் ஆயிடுச்சா? என்ன பிரச்சனை? உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல தானே! அதனால தானே உன் கழுத்துல தாலி இல்ல!” என்று பொறுமையின்றி படபடவென்று கேட்டான்.
உடனே தன் கையில் இருந்த பேக்கை அவன் மீது தூக்கி அடித்த இந்து “ஆமா சாத்தானே! என் மேரேஜ் நின்னு போச்சு. உனக்கு இப்ப சந்தோஷமா? ஆளும் மூஞ்சியும் மொகரையும்! எனக்கு உன்னை பார்த்தாலே எதையாவது எடுத்து அடிக்கலாம் போல தான் தோணுது. ஒழுங்கா எங்கையாவது ஓடிப் போயிரு.
காலையில நான் இங்க இருந்து கிளம்பற வரைக்கும் நீ என் கண்ணுல படவே கூடாது. இல்லைனா, நீ என்னை டிஸ்டர்ப் பண்றேன்னு வாட்ச்மேன் அண்ணா கிட்ட கூப்பிட்டு சொல்லி உன்னை இந்த வீட்டை விட்டு வெளிய துரத்த சொல்லிடுவேன் பாத்துக்கோ!” என்று சொல்லிவிட்டு வேக எட்டுக்கள் வைத்து தனக்கென்று வாட்ச்மேன் ஒதுக்கி கொடுத்த ரூமை நோக்கி நடக்க தொடங்கினாள்.
அவள் தன்னை அடித்ததை எல்லாம் கண்டு கொள்ளாமல் இன்னும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்து ஒரே குதூகலத்தில் குதித்து கொண்டு இருந்த மாணிக் வாயெல்லாம் பல்லாக “அட பைத்தியம்.. உன் பேக்கை எதுக்கு இங்கயே விட்டுட்டு போற?” என்று கத்தி கேட்க,
“ம்ம்.. நீ இங்க தண்டமா தானே இருக்க.. நீயே அதை கொண்டு வந்து கொடுக்கட்டும்னு தான்.” என்று அவனை திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு தன் உதட்டை சுளித்த இந்து அவளது ரூமிற்க்குள் சென்று விட்டாள்.
கையில் அவளது பேக்கை தூக்கிக் கொண்டு அவளது ரூம் வரை சென்ற மாணிக் எங்கே தான் உள்ளே சென்றால் அதற்கும் அவள் இதுதான் சாக்கு என நினைத்து கோபப்பட்டு அடிப்பாளோ என நினைத்து பயந்து வாசலிலேயே அவளது பேக்கை வைத்துவிட்டு “எம்மா மகாராணி.. உன் பேக்கை.. இல்ல இல்ல உங்க பேக்கை உங்க ரூம் வாசல்ல டெலிவரி பண்ணிட்டேன். எடுத்துக்கோங்க! இனிமே நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். இதுக்கப்புறம் நான் குடிக்க வேண்டிய அவசியமே இருக்காதுன்னு நினைக்கிறேன். நான் போய் தூங்குறேன் குட் நைட்! நீங்களும் நல்லா தூங்குங்க. Sweet dreams!” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு நடந்து சென்றான்.
மறுநாள் காலை..
பிறந்த மேனியாக போர்வைக்குள் தஞ்சம் புகுந்து குளிருக்கு இதமாக தலையணையை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி உறங்கிக் கொண்டு இருந்தாள் மனிஷா. ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்கள் அவள் உறக்கத்தை கெடுக்க போதுமானதாக இருந்ததால் தன் கண்களை தேய்த்தவாறு எழுந்து அமர்ந்த மனிஷாவிற்கு அவளது ஆடைகளற்ற மேனியை பார்த்த பிறகு இரவு நடந்தது அனைத்தும் ஒவ்வொன்றாக ஞாபகம் வரத் தொடங்கியது.
அது அவள் முகத்தில் ஒரு கூச்சத்தையும், வெட்கத்தையும் சந்தோஷத்தையும் ஒரே நேரத்தில் வரவழைக்க, “அஸ்வின் மாமா எங்க!” என்று நினைத்து அவள் சுற்றி முற்றி குழப்பத்துடன் பார்த்தாள். இரவு முழுவதும் யாரோ ஒரு மர்ம நபருடன் அவள் ஆடிய காம களியாட்டத்தில் அந்த அறை இப்போது கொஞ்சம் அலங்கோலமாக மாறி இருந்தது.
அதைப் பார்க்கும்போது எல்லாம் அவள் மனதிற்குள் தான் தனது அஸ்வின் மாமாவுடன் என்னவெல்லாம் செய்தோம் என நினைத்து ஒரு குறுகுறுப்பு பரவ, இந்த அதிகாலையில் அஸ்வின் இந்த அறையில் இருந்து எங்கே சென்றான்? என்ற கேள்வியை அவளுக்குள் எழுப்பியதால், “அஸ்வின் மாமா எப்ப இங்க இருந்து கிளம்பி போனான்னு தெரியலையே! ஒருவேளை விடிஞ்ச உடனே யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இங்க இருந்து போயிடனும்னு பயந்து போய் கிளம்பி போயிட்டானா?
இல்ல இங்க நடந்ததை யாருக்கும் தெரியாம மறைக்கணும்னு நினைக்கிறானா? அவன் அப்படி நினைச்சா நம்ம என்ன பண்றது? இப்ப நான் பண்ணுது தப்பா இல்ல சரியான்னு எனக்கே டவுட்டா இருக்கே! இந்த அம்மா பேச்சை கேட்டு தானே நான் எல்லாத்தையும் பண்ணேன்.. அப்ப இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாத்தையும் அம்மா தான் பாத்துக்கணும்.” என்று நினைத்து தன் மனதை தேற்றிக்கொண்டாள்.
அந்நேரம் சரியாக அவளது அறை கதவை திறந்து கொண்டு திலகா உள்ளே வர, அவசரமாக தன் உடலின் மீது போர்வையை சுற்றிக் கொண்ட மனிஷா “ஏன் மா கதவு திறந்திருந்தா நீங்க பாட்டுக்கு உள்ள வந்துருவீங்களா? எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணிட்டு நீங்களே என்னை மத்தவங்க கிட்ட போட்டு கொடுத்துருவீங்க போல!” என்று கோபமாக சொல்ல,
“ஏய் பைத்தியக்காரி வாய மூடு டி. இப்படி நீயே கத்தி எல்லாருக்கும் காட்டி கொடுத்திடுவ போல இருக்கு! அவ்ளோ அக்கறை இருக்கிறவ கதவை சாத்திட்டு தூங்கணும் டி. ஆமா அஸ்வின் எங்க? இங்க அவன் இருக்கிற மாதிரியே தெரியல!
அவன் யார் கண்ணிலையும் படக் கூடாதுன்னு கட்டலுக்கு அடியில் கீது ஒழிச்சு வச்சிருக்கியா?” என்று கேட்ட திலகா கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தாள்.
“அட இல்லமா! அஸ்வின் மாமா என்ன பொம்மையா ஈசியா அவன தூக்கி கட்டிலுக்கு அடியில ஒளிச்சு வைக்கிறதுக்கு? நானே இப்பதான் தூங்கி எந்திரிச்சேன். அஸ்வின் மாமா இங்க இல்ல. நான் தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள பயந்து அவனோட ரூமுக்கு ஓடி போய்ட்டானு நினைக்கிறேன்.” என்று மனிஷா சொல்ல, “ஓஹோ அப்படியா? இருந்தாலும் இருக்கும். திடீர்னு உன் கூட இப்படி எல்லாம் நடக்கும்னு அவன் என்ன கனவா கண்டிருப்பான்! அதனால பயம் இருக்கத் தான் செய்யும்.
நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியா நடந்துச்சா? நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாத்தையும் கரெக்டா பண்ணியா? இவ்ளோ கஷ்டப்பட்டு கடைசியில எதுவும் நடக்காம போயிருந்தா எல்லாம் வீணா போயிடும் டி.” என்றாள் திலகா.
அவள் பேச பேச மனிஷாவின் முகத்தில் வெட்கம் பொங்கி சிவக்க, “ஐயோ அம்மா என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க.. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாமே தெரியும். இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ.. என்ன நடக்குதுன்னு நீங்களே வெயிட் பண்ணி பாருங்க. அஸ்வின் மாமா இனிமே எனக்கு மட்டும் தான். அந்த ஐஸ்வர்யா நீ என்ன விட்டுட்டு போனா செத்து போயிருவேன் அஸ்வின்னு மாமா கால்ல விழுந்து கெஞ்சுனா கூட இனிமே அவன் அவளை கண்டுக்கவே மாட்டான். அந்த அளவுக்கு இந்த ஒரே நாள்ல நான் அவனை மாத்தி வச்சிருக்கேன்.” என்று பெருமையாக சொன்னாள். அதைக் கேட்டு தன் மகள் தான் சொன்னதைப் போல செய்து காட்டி விட்டாள் என நினைத்து சந்தோஷப்பட்டாள் திலகா.
அஸ்வினின் ரூமில் அவன் போர்வைக்குள் ஐஸ்வர்யாவை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி அவள் மார்பில் முகம் புதைத்து சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தான். இனி எப்போதும் தங்கள் வாழ்வில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே கூடாது என்பதைப் போல அவர்கள் இறுக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி படித்திருக்க, அஸ்வினின் மொபைலுக்கு ஒரு கால் வந்து அவனை எழுப்பி விட்டது.
தனக்கு பழக்கப்பட்ட ரிங்டோனை கேட்டவுடன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த அஸ்வின் அருகில் இருந்த ஃபோனை எடுத்து அவனுக்கு வந்த காலை அட்டென்ட் செய்து காதில் வைத்த பிறகு தான் அவன் இருந்த கோலத்தையே கவனித்தான். அடுத்த நொடி அவன் கண்கள் பிறந்த மேனியாக தனது உடலை குறுக்கிக் கொண்டு அயந்து உறங்கிக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாவின் மீது தான் சென்றது.
அவளை அப்படி பார்த்தவுடன் இரவு அவன் அவளை வைத்து எப்படி எல்லாம் விளையாடினான் என்று ஒன்றாக அவனுக்கு ஞாபகம் வர, அனைத்தையும் நினைத்து பார்த்து ஆடிப் போய் விட்டான் அஸ்வின்.
முத்தங்கள் தொடரும்