அத்தியாயம் 23
ஐஸ்வர்யா செல்லும் வழியெல்லாம் அஸ்வினை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் அமைதியாகவே இருப்பதை கவனித்த வித்யா “என்ன அஸ்வினை நினைச்சா பயமா இருக்கா? அவன் உனக்கு டிவர்ஸ் கொடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கிறியா?” என்று கேட்க, சோகமே உருவாக ஆமாம் என்று தலை ஆட்டினாள் ஐஸ்வர்யா.
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீ இந்த விஷயத்துல அஸ்வினை நம்பலாம். அவன் உன் மேல எவ்வளவு கோபமா இருந்தாலும் உன்னை அவன் பக்கத்திலேயே வச்சு டார்ச்சர் பண்ணிட்டு இருப்பானே தவிர, உனக்கு டிவர்ஸ் கொடுத்து உன்ன ஃப்ரீயா அந்த வீட்ல இருந்து அனுப்பி விட மாட்டான்..” என்று வித்யா சொல்ல, “எப்படி இவ்ளோ கான்ஃபிடண்டா சொல்ற? அவனுக்கு என் மேல முன்னாடி இருந்த அளவுக்கு ஒரு ஃப்ரண்டா கூட பாசம் இல்லாம போயிடுச்சு வித்யா.
அதான் எனக்கு உடம்பு சரி இல்லாம இருந்தா கூட பரவாயில்லைன்னு அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வர சொல்றான். அவனுக்கு என் மேல கோபத்தை தவிர வேற எதுவும் இல்ல.” என்றாள் ஐஸ்வர்யா.
“நீ ஏன் அதை பத்தி மட்டும் யோசிக்கிற? உன் ஃபேமிலி மெம்பர்ஸ் டெத்ல அஸ்வின் சம்பந்தப்பட்டு இருப்பாருன்னு எனக்கு தோணுது. நான் அதைப் பத்தி உன் கிட்ட கேட்டா, நீ எதுவும் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும்.
பட் நடந்தது எல்லாமே உனக்கு தெரியும்ல.. நீ அதை நல்லா யோசிச்சு பாரு. அவங்க எல்லாரையும் பழிவாங்கணும்னு நினைச்ச அஸ்வின் உன்னை மட்டும் எதுக்காக விட்டு வைக்கணும்? அவங்க எல்லாரையும் விட என்னமோ அவன் உன் மேல தான் கொலை வெறியில இருக்கிற மாதிரி சொல்றான்.
அப்ப அவனுக்கு அவ்வளவு பிடிக்காத உன்னை சிம்பிளா யாருக்கும் தெரியாம கொன்னு போட்டுட்டு போய் இருக்கலாமே.. எதுக்கு லீகலா கல்யாணம் பண்ணி உன்ன பொண்டாட்டியா கூட வச்சிருக்கான்? எனக்கு என்ன தோணுதுன்னா, அவனால உன்னை விடவும் முடியல. உன் கூட சேர்ந்து வாழவும் முடியல. சோ அவன் கன்ஃபியூஷன்ல இருக்கான் அவ்வளவு தான். அதுக்காக எல்லாம் உன்ன விட்டுட்டு போக மாட்டான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” என்று வித்யா உறுதியாக சொல்ல,
“எனக்கு இப்ப அவனை விட்டா வேற யாரும் இல்ல வித்யா. நீ சொல்ற மாதிரி அஸ்வின் என்னை ஏத்துக்கலைனா கூட பரவால்ல. கடைசி வரைக்கும் அவன் என்னை அவன் கூட வச்சிருந்தா எனக்கு அதுவே போதும்.” என்ற ஐஸ்வர்யா அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் அப்படியே வித்யாவின் மடியில் படுத்துக் கொண்டாள்.
அவர்களது கார் அஸ்வினின் குடும்பம் இப்போது தங்கியிருக்கும் கிராமத்தை நோக்கி சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவு 9 மணி அளவில் லோகேஷ், அஸ்வின், விவேக் மூவரும் தோட்டத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் துணிக் கடையில் இருந்து காரில் அங்கே வந்து இறங்கிய பாலா வேலை ஆட்களிடம் அவன் அக்ஷயாவிற்காக வாங்கி வந்த பொருட்களை எல்லாம் காரில் இருந்து எடுத்துச் சென்று அவளிடம் கொண்டு போய் கொடுக்க சொல்லிக் கொண்டிருந்தான்.
அதை கவனித்தபடி உள்ளே சென்ற அஸ்வின் “எனக்கும் மனிஷாவுக்கும் மேரேஜ் நடக்குதோ இல்லையோ.. எனக்கு என்னமோ பாலாவுக்கும், அக்ஷயாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும் தோணுது.
ஒரு சில விஷயத்துல எனக்கு பாலாவை பிடிக்காது. மத்தபடி அவன் ரொம்ப நல்லவன். அவன மாதிரி பையன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அக்ஷயா சரியானதுக்கு அகப்புறம் அவ கிட்ட இந்த கல்யாணத்தை பத்தி பேசி பாக்கணும்.
அவ கூட நான் சொன்னா சரின்னு தான் சொல்லுவா. ஆனா பாலா என்ன சொல்லுவான்னு தெரியலையே! இவனுக்கு ஐஸ்வர்யா மேல ஒரு கண்ணு இருக்குன்னு நினைக்கிறேன். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.” என்று யோசித்தபடி தனது ரூமிற்குள் நுழைந்தான்.
அங்கே வேலை ஆட்கள் கொண்டு வந்து வைத்த கல் அவன் குடிப்பதற்காக காத்திருக்க, அதைப் பார்த்தவுடன் “இதை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மட்டையானாளாவது மனசுல இருக்கிற பாரம் இறங்குதான்னு பார்க்கலாம்.” என்று நினைத்த அஸ்வின் “சீக்கிரம் சாப்பிட்டு மொட்டை மாடிக்கு வா. இன்னைக்கு நம்ம ஒண்ணா கள்ளு குடிக்கலாம்.” என்று லோகேஷ் மற்றும் விவேக்கிற்கு மெசேஜ் அனுப்பினான்.
அதை பார்த்துவிட்டு அவர்களும் உடனே வருவதாக ரிப்ளை அனுப்பினார்கள். இப்படி அனைத்தும் அதன் போக்கில் சரியாக சென்று கொண்டிருக்க, தன் மகளை தனியாக அழைத்துச் சென்று “நான் அப்ப உன் கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு? எப்படியும் இன்னைக்கு நைட் அஸ்வின் அந்த கல்லை குடிப்பான்.
அதுக்கப்புறம் நீ என்ன பண்ணனும்னு உனக்கு தெரியும் தானே! இல்ல நான் முதல்ல இருந்து எல்லாத்தையும் உனக்கு சோப்பு போட்டு விளக்கணுமா?” என்று திலகா கேட்க, “அது எல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அம்மா. நானும் அஸ்வின் மாமா எப்ப குடிப்பான்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
இருந்தாலும் ரொம்ப எக்சைட் ஆகுற மாதிரி ஏதாச்சும் பண்ணி நானே என் மேல சந்தேகம் வர மாதிரி நடந்துக்க கூடாதுன்னு தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். என்ன தான் அஸ்வின் மாமா என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லி இருந்தாலும், அவ்ளோ சீக்கிரம் அவன் அந்த ஐஸ்வர்யா சனியனை விட்டுட்டு வருவான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை.
சோ இந்த பிளான் நமக்கு முக்கியம் தான். இன்னைக்கு நடக்க வேண்டியது மட்டும் கரெக்டா நடந்துட்டா போதும். அஸ்வின் மாமா எனக்கு தான் சொந்தம். அதை இனிமே அவனே நினைச்சாலும் மாத்த முடியாது.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள் மனிஷா.
அரை மணி நேரத்திற்கு பிறகு சாப்பிட்டு முடித்த அஸ்வினும் மற்றவர்களும் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் பேசியபடி ஒன்றாக குடிக்க தொடங்கினார்கள். “டேய் சரக்கடிக்கும் போது சைட் டிஷ் இல்லனா எப்படிடா? இந்த கள்ளு குடிக்கிறதுக்கும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் சைட் டிஷ் இருக்கும்ல.. யார் கிட்டயாவது சொல்லி அதை கொண்டு வர சொல்லு.” என்று போதை ஏறிய குரலில் விவேக் சொல்ல,
“அஸ்வினே முதல் தடவை இப்ப தான் இதையெல்லாம் குடிக்கிறான். அவன் கிட்ட போய் சைட் டிஷ்க்கு என்ன பண்றதுன்னு கேட்டா அவன் என்ன சொல்லுவான்? இப்ப நான் ஆர்டர் பண்றேன் பாரு அது தான் தரமான சைட் டிஷ்!” என்று பதிலுக்கு தானும் போதையில் உளறிய லோகேஷ் “ராமசாமி அண்ணா.. ராமசாமி அண்ணா எங்க இருக்கீங்க? எங்களுக்கு கள்ளு குடிக்க சைட் டிஷ் வேணும். சீக்கிரம் கொண்டு வாங்க.” என்று கத்தினான்.
அவன் குரல் கேட்டு அங்கே வந்த வேலை ஆள் ராமசாமி அவன் கேட்டு அனைத்தையும் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு கீழே சென்றார். அவர் அதை தயாரித்து மேலே எடுத்துச் செல்வதற்குள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அங்கே காரில் வந்து இறங்கினாள் வித்யா.
அஸ்வினே இந்த அளவிற்கு தன் மீது கொலை வெறியில் இருக்கும்போது அவனது உறவுக்காரர்கள் எல்லாம் தன்னை நேரில் கண்டால் என்ன செய்வார்களோ என்று நினைத்து பதட்டத்துடன் ஐஸ்வர்யா காரில் இருந்து கீழே இறங்க, ஆதரவாக அவள் கையை பிடித்துக் கொண்ட வித்யா “நீ பயப்படாத ஐஷு. இப்ப தான் எனக்கு விவேக் அஸ்வின் கூட சேர்ந்து கல்லு குடிச்சிட்டு இருக்கிறதா மெசேஜ் பண்ணான். நம்ம தான் வர வழியிலேயே சாப்பிட்டு வந்துட்டோமே..
சோ நீ யார் கண்ணிலையும் படாம அஸ்வின் ரூம் எங்க இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சைலண்டா அங்க போய் செட்டில் ஆய்டு. எல்லாரும் தூங்குற நேரத்துல உன்ன பாத்து யாராவது பிரச்சினை பண்ணினாங்கனா, இங்க தேவை இல்லாம ஒரு சீன் கிரியேட் ஆகும்.” என்று சொல்ல, சரி என்று தலையாட்டினாள் ஐஸ்வர்யா.
அங்கே இருந்த அனைவரும் அவரவர் வேளையில் பிஸியாக இருக்கும் போது அவர்கள் இருவரும் உள்ளே சென்றதால் பெரிதாக யாரும் அவர்களை கவனிக்கவில்லை. விவேக்கிற்கு கால் செய்த வித்யா அவனிடம் அஸ்வினின் அறை எங்கே இருக்கிறது என்று கேட்டு ஐஸ்வர்யாவை அங்கே விட்டுவிட்டு தான் விவேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று தங்கி கொண்டாள்.
“பேபி.. இப்ப நீ என் ரூம்லயா தூங்க போற?” என்று ஆர்வமாக விவேக் கேட்க, ஏற்கனவே அவன் இந்த அளவிற்கு குடித்ததால் அவன் மீது கோபத்தில் இருந்த வித்யா “ஆமா இப்ப அதுக்கு என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டாள். “அதுக்கு என்னவா? இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் அங்க தான் வருவேன். அப்புறம் நீயும் நானும் ஒரே ரூம்ல.. ஒரே ஜாலியோ ஜிம்க்கனாவா இருக்கும்.
ஆஆஆஆ.. விடிய விடிய என்ன வேணாலும் பண்ணலாம். எதனை நாள் தான் நானும் வீடியோ கால்லயே பாத்துட்டு இருக்கிறது.. கடவுளா பார்த்து இன்னைக்கு ஒரு சூப்பர் ஆப்பர்சுனிட்டி கிரியேட் பண்ணி கொடுத்திருக்கான். அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். நீ வெயிட் பண்ணு. நான் வர்றதுக்குள்ள தூங்கிறாத. I am coming!” என்று விவேக் சொல்ல,
“அப்படியே அடிச்சு வாய ஒடச்சிடுவேன். ஒழுங்கா பேசு மொதல்ல. குடிச்சா உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைக்கிறியா?
இந்த ரூமுக்குள்ள நீ காலை எடுத்து வச்ச, கடைசி வரைக்கும் உனக்கு கால் இல்லைன்னு கூட பரவாயில்லைன்னு கையில ஏதாவது அருவாள் கிடைத்ததுனா அப்படியே அதை எடுத்து உன் ரெண்டு காலையும் வெட்டிடுவேன் பாத்துக்கோ!
யார் வீட்ல இருக்கோம்னு தெரியாம என்ன பேசிட்டு இருக்க நீ? இன்னைக்கு நைட்டு ஃபுல்லா நீ மொட்டை மாடியில தான் தூங்கணும். நீ மட்டும் இல்ல, அஸ்வினும் விடிற வரைக்கும் அங்க தான் இருக்கணும்.
பாவம் ஐஷுக்கு ஆல்ரெடி உடம்பு சரியில்ல. அவன் கீழ வந்து அவ கிட்ட எதுவும் பிராப்ளம் பண்ணாம இருக்கணும். அதுக்கு நீதான் ஏதாவது பண்ணி அவனை அங்க மாடிலயே தங்க வைக்கணும். என்ன புரியுதா?” என்று கோபமாக கேட்டாள் வித்யா.
வட போச்சே என்ற ரீதியில் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்த விவேக் “ச்சீ போ.. டி ஃபோன வை. என் ஆசையில மண்ணை அள்ளி போடுறதே உனக்கு வேலையாக போச்சு.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.
– முத்தங்கள் தொடரும்