அத்தியாயம் 20
ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஆக்சிடென்டில் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் கருகிய நிலையில் ஒரு காரில் இருந்து மீட்கப்பட்டதாகவும் நியூஸில் வந்ததை பார்த்துவிட்டு அவசரமாக ஐஸ்வர்யாவிடம் சென்று அதை காட்டினாள் வித்யா.
முதலில் அதைப் பார்த்து ஷாக்கான ஐஸ்வர்யா “என் ஃபேமிலில என்னைத் தவிர வேறு யாரும் உயிரோட இல்லைன்னு எனக்கு தான் ஆல்ரெடி தெரியுமே!” என்று சொல்லிவிட்டு விரத்தியுடன் வித்யாவை பார்த்து சிரித்தாள்.
ஐஸ்வர்யாவின் குடும்பத்தை அஸ்வின் என்ன செய்தான் என்பது பற்றி எல்லாம் வித்யாவிற்கு இப்போது வரையிலும் தெரியாது என்பதால் அவள் குழப்பமாக ஐஸ்வர்யாவை பார்த்து “என்ன டி சொல்ற? அவங்க இறந்து போனது உனக்கு ஆல்ரெடி தெரியுமா?
அப்புறம் ஏன் நீ யார் கிட்டயும் சொல்லல? ஏதோ அவங்க எல்லாரும் காணாம போயிட்டாங்கன்னு தானே போலீஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க..
அதுக்காக உன் கிட்ட வந்து கூட என்கொயரி பண்ணாங்களே.. பாடிய அவங்களை இப்ப தான் கண்டுபிடிச்சுருக்காங்க. அப்புறம் உனக்கு எப்படி இத பத்தி முன்னாடியே தெரியும்?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“அஸ்வின் என் கண் முன்னாடியே தானே அவங்க எல்லாரையும் கொன்னான்.. என்னால தான் இப்ப அவன் கைல ரத்தக்கரை படிஞ்சிருக்கு.
அவன் கொலைகாரன் ஆயிட்டான் வித்யா. இத எப்படி என்னால உன் கிட்ட சொல்ல முடியும்?” என்று நினைத்து சோகமான ஐஸ்வர்யா, “எப்படியோ தெரியும், ப்ளீஸ் அதை விடு வித்யா. எங்க லைஃப்ல உனக்கு தெரியாம நிறைய நடந்திருக்கு.
நீயே கேட்டாலும் என்னால அதை உன் கிட்ட சொல்ல முடியாது. உனக்கு எல்லாமே தெரியணும்னா நீயே போய் டைரக்டா அஸ்வின் கிட்ட கேட்டுக்கோ.” என்று விட்டாள்.
இதற்கிடையில் அஸ்வினிடமும், ஐஸ்வர்யாவிடமும் அவளது குடும்பத்தினரின் இறப்பு பற்றி விசாரிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது ஆட்களுடன் அஸ்வினின் பங்களாவிற்கு சென்றிருந்தார். அவர்கள் அஸ்வினின் பெற்றோர்களின் உடலை தகனம் செய்ய சென்றிருப்பதாக வேலை பார்ப்பவர்கள் சொன்னதை கேட்டுவிட்டு, ஐஸ்வர்யா ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருப்பதை தெரிந்து கொண்டு அங்கே வந்தார்கள்.
ஏற்கனவே திடீரென்று நடந்த அஸ்வின் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்ஸ்பெக்டருக்கு சந்தேகத்தை வரவழைத்து இருந்ததால் இப்போது இவள் ஹாஸ்பிடலில் வேறு அட்மிட் ஆகி இருப்பதை வைத்து “என்ன ஆச்சு மேடம் உங்களுக்கு? நான் லாஸ்ட்டா உங்களை வந்து பார்க்கும்போது நல்லா தானே இருந்தீங்க.. அதுக்குள்ள ஹாஸ்பிடல்ல வந்து அட்மிட் ஆகுற அளவுக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி சீரியல் ஆச்சு?” என்று சந்தேகத்துடன் கேட்க,
“நான் நேத்து மாடில துணி காய போட்டுட்டு இருக்கும்போது திடீர்னு மழை வந்துருச்சு சார். அதனால அவசரமா நான் கீழ போகணும்னு ஓடிப்போகும் போது, துவைக்கிற கல்ல மோதி கீழ விழுந்துட்டேன்.
நல்லா அடிபட்டுருச்சு. மழையில நனைச்சதனால காய்ச்சல் வந்திருச்சு. என் ஹஸ்பண்ட் அஸ்வின் தான் என்னை தூக்கிட்டு வந்தது ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணாரு.” அப்போதும் அஸ்வினை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் ஐஸ்வர்யா.
“உங்க ஃபேமிலில இருக்கிறவங்களோட டெட் பாடி எங்களுக்கு கிடைச்சிருக்கு. எங்க சைடுல நாங்க வெரிஃபை பண்ண வரைக்கும் அது அவங்க தான்னு நாங்க வெரிஃபை பண்ணி இருக்கோம்.
இருந்தாலும் நீங்க ஒரு தடவை வந்து அந்த டெட் பாடிசை நேர்ல பார்த்து கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும் மேடம்.” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, என்னவோ இப்போது தான் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்து போனது பற்றி அவளுக்கு தெரியும் என்பதைப்போல உடனே அந்த செய்தியை கேட்டு தான் ஷாக் ஆனதை போல நடித்த ஐஸ்வர்யா கதறி அழுதாள்.
அவளை வித்யா சமாதானப்படுத்த “நீங்க இப்ப என் கூட வந்து தான் ஆகணும் மேடம்.” என்றார் இன்ஸ்பெக்டர். “என்ன சார் சொல்றீங்க? இவ என்ன கண்டிஷன்ல இருக்கான்னு நீங்க பாக்கறீங்களா இல்லையா?
டாக்டர்ஸ் அவள அப்சர்வேஷன்ல வைக்கணும்னு சொன்னதுனால தான் அஸ்வின் இவளை இங்க என் கூட விட்டுட்டு அவனோட பேரண்ட்ஸ்க்கு இறுதி மரியாதை செலுத்த போயிருக்கான்.
அவ இன்னும் அவங்க பேரன்ட்ஸ் இறந்து போன அதிர்ச்சியில இருந்தே வெளியே வரல. மார்ச்சுரிக்கு வந்து அந்த நிலைமையில இருக்கிற டெட் பாடிய பார்த்து அடையாளம் காட்டணும்னா எப்படி அவளால முடியும்? தினகரன் அங்கிளுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க.
உங்களுக்கு உடனே அவங்க பாடியை ஐடென்டிபை பண்ணி ஆகணும்னா அவங்கள்ல யாரையாவது கூப்பிட்டு பண்ணுங்க. ஐஸ்வர்யாவை நாங்க இப்ப அனுப்ப மாட்டோம்.
அவளுக்கு சரியானதுக்கு அப்புறமா நீங்க அவ கிட்ட என்ன வேணாலும் கேட்டு இன்வெஸ்டிகேஷன் பண்ணிக்கோங்க.” என்ற வித்யா அவரிடம் சண்டை போட தொடங்கி விட்டாள்.
என்ன தான் அஸ்வின் விஷயத்தில் தனது குடும்பத்தினர்கள் செய்த தவறால் அவர்களுக்கு கிடைத்த முடிவு சரியானது தான் என நினைத்து ஐஸ்வர்யா தன் மனதை தேற்றிக் கொண்டாலும், இறுதியாக தன்னைப் பெற்று வளத்தவர்களையும், தன்னுடன் பிறந்தவனையும் ஒரு முறை பார்த்து அவர்களுக்கான இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.
அதனால் “ஒரு நிமிஷம் இரு வித்யா!” என்று சொல்லிவிட்டு சிரமப்பட்டு எழுந்து அமர்ந்த ஐஸ்வர்யா தன் கண்ணீரை துடைத்து விட்டு “நான் உங்க கூட வரேன் சார். என் ஃபிரண்டும் என் கூட வரட்டும். பட் என்னால நடக்க முடியுமான்னு தெரியல. நம்ம ஆம்புலன்ஸ்ல போகலாம்.
கடைசியா ஒரு தடவ என் ஃபேமிலில இருக்கிறவங்கள நான் பாக்கணும். அவங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாத்தையும் நான் செய்யனும்னு நினைக்கிறேன்.” என்று தட்டு தடுமாறி சொன்னாள்.
“ஐயோ ஐஸ்வர்யா உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஆல்ரெடி அஸ்வின் உன்ன நம்பாம உன் மேல செம கோவத்துல இருக்கான். இதுல நீ அவங்களுக்கு போய் இறுதி மரியாதை செய்யறேனு பேசிகிட்டு இருக்கியே!
இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சா, இன்னும் அவன் உன்ன கண்டிப்பா டார்ச்சர் பண்ணுவான். செத்துப்போன அவங்களுக்காக தினம் தினம் அஸ்வின் கிட்ட மாட்டிகிட்டு நீ சாகப் போறியா?” என்று நினைத்து தன் தோழிக்காக வருத்தப்பட்ட வித்யா,
“அதெல்லாம் முடியாது. நீ லூசு தனமா பேசிட்டு இருக்க ஐசு! வெளிய தொடர்ந்து மழை பெஞ்சுகிட்டே இருக்கு. உனக்கு 102° ஃபீவர் இருக்கு.
ஹாஸ்பிடல்ல முதல்ல உன்ன டிஸ்டாச் பண்ணுவாங்களா? எப்படி உன்னால அவ்வளவு தூரம் போக முடியும்? நான் சொன்னா கேளு, ரிஸ்க் எடுக்காத.
மார்ச்சுரில அவங்க பாடிய பிரிசர்வ் பண்ணி வச்சிருப்பாங்க. நம்ப ஒரு ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா போய் பார்க்கலாம்.” என்று சொல்லி எவ்வளவோ போராடி அவள் மனதை மாற்ற முயற்சி செய்தாள்.
இறுதிவரையிலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஐஸ்வர்யா இன்ஸ்பெக்டருடன் செல்ல முடிவெடுக்க, வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸை அரேஞ்ச் செய்து தானும் அஸ்வினுக்கு விஷயத்தை மெசேஜ் ஆக அனுப்பிவிட்டு அவர்களுடன் புறப்பட்டாள் வித்யா.
நல்ல முறையில் தனது பெற்றோர்களை அடக்கம் செய்த அஸ்வின் அக்ஷயாவுடன் அங்கே இருக்கும் தங்களது தோட்டத்தில் பண்ணை வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தங்கினான். அவன் குளித்துவிட்டு வெளியில் மரத்தடியில் நின்று தன் தலை முடியை துண்டை வைத்து உலர்த்திக் கொண்டிருக்க, சரியாக அந்த நேரம் வித்யா அனுப்பிய மெசேஜ் அவனுக்கு வந்தது.
அதை பார்த்தவுடன் அஸ்வினின் முகம் கோபத்தில் சிவக்க, அவனுக்கு எதிரில் அவன் மனதில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அக்ஷயாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மனிஷா அவளை வீல் சாரில் வைத்து தள்ளிக் கொண்டு அவள் குளிக்க உதவுவதற்காக சென்று கொண்டிருந்தாள்.
ஏற்கனவே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த அஸ்வின் தன் பெற்றோர்கள் இறப்பிற்கு மட்டுமல்லாமல் தன் தங்கையின் இந்த அவலை நிலைக்கும் ஐஸ்வர்யாவின் குடும்பம் தானே காரணம். ஆனால் அவள் தன் வீட்டில் தனக்கு மனைவியாக இருந்து கொண்டு, என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள்? என நினைக்கவே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
இப்போது போலீஸ் டிபார்ட்மெண்ட் இந்த விஷயத்தில் இன்வாழ்வு ஆகி இருப்பதால் நடுவில் தான் எந்த சீனையும் கிரியேட் செய்வது தனக்கு நல்லது இல்லை என நினைத்து சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட அஸ்வின் அந்த ஊரில் மதுபானங்கள் எல்லாம் கிடைக்காது என்பதால் தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ஒருவரை அழைத்து “எனக்கு இப்பவே கல்லு வேணும். போய் எவ்ளோ கிடைக்குதோ கொண்டு வாங்க.” என்று உத்தரவிட்டான்.
அவர்கள் பேசுவதை கள்ளத்தனமாக கவனித்துக் கொண்டிருந்த திலகா “இது தான் ஆடு தானா வந்து தலையை குடுக்கிறதா?” என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, அஸ்வினுக்காக பனை மரத்து கல்லை வாங்க சென்றவனை பிடித்த நிறுத்தி அவனிடம் சில விஷயங்களை சொல்லி அனுப்பினாள்.
அவனும் வீட்டின் எஜமானி அம்மா பேச்சை மீற முடியாது என்பதால் பயமாக இருந்தாலும் அவள் சொல்வதை செய்வதாக ஒப்புக் கொண்டான். அதனால் திருப்தியாக புன்னகைத்த திலகா உடனே இந்த நல்ல செய்தியை தனது மகளிடம் சொல்ல வேண்டும் என நினைத்து அக்ஷயா இருக்கும் ரூமிற்கு சென்றாள்.
அங்கே சென்னையின் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் உள்ள மார்ச்சுறியில் இருந்த தனது குடும்பத்தினரின் இறந்த உடலை பார்த்து அவர்கள் தனது குடும்பத்தினர்கள் தான் என்று கன்ஃபார்ம் செய்த ஐஸ்வர்யா கிட்டத்தட்ட அவர்கள் இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு இப்போது தான் தன் மனதில் இருக்கும் அந்த பாரம் இறங்கும் வரையிலும் அவர்களது உடலை பார்த்து கதறி அழுதாள்.
“நான் ஒரு நல்ல ஃபேமிலில பொறந்திருக்கேன்னு நம்பிட்டு இருந்தேன். இது கடவுள் கொடுத்த பிளெஸ்ஸிங்னு நினைச்சு ஹேப்பியா ஃபீல் பண்ணி இருக்கேன். ஆனா நீங்க.. நான் நினைச்சதுக்கு அப்படியே ஆப்போசிட்டா இருந்துருக்கீங்க.
எனக்கு தெரிஞ்சு அஸ்வின் குடும்பத்துக்கு நீங்க அவ்ளோ பெரிய துரோகம் பண்ணிருக்கீங்க. அது இல்லாம இன்னும் எத்தனை குடும்பத்தை அழிச்சிருக்கீங்களோ தெரியல.. அதனால தான் உங்க முடிவு இவ்ளோ கொடூரமாக இருந்திருக்கு.
உங்கள கொன்ன அஸ்வின் மேல என்னால தப்பு சொல்ல முடியல. ஏன்னா நீங்க உயிரோட அவனை கொன்னுட்டீங்க. இருந்தாலும் உங்கள இந்த நிலைமையில
பாக்குறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு.” என நினைத்து தொடர்ந்து கண்ணீர் சிந்திய ஐஸ்வர்யா ஏற்கனவே அவளுக்கு கடும் காய்ச்சல் இருந்ததால் சோர்வாகி அப்படியே மயங்கி விழுந்தாள்.
இன்ஸ்பெக்டரின் உதவியோடு மீண்டும் அவளை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டாள் வித்யா.
– முத்தங்கள் தொடரும்