Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் ‌CH 1

மூர்கனின் முரட்டு முத்தங்கள் ‌CH 1

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 1

இரவு 9:00 மணி. சென்னையின் மத்திய பகுதியில் பணக்காரர்கள் மட்டுமே விமர்சிக்கும் பரபரப்பான பகுதியில் உள்ள பிரம்மாண்ட பங்களா வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள அறையில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்து இருந்தாள் 22 வயது மதிக்கத்தக்க அழகிய இளம்பெண். மையிட்டு இருந்த அவளுடைய சிறிய கயல்விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டிக் கொண்டிருந்தது. பயத்தில் நெருங்கிய உடல்னுடன் அவள் அமர்ந்திருக்க, அவளது வாழ்க்கையை போல இப்போது அவள் இருக்கும் அந்த அறையும் இருளில் மூழ்கி இருந்தது.

இதற்கு முன்பெல்லாம் இப்படி இருட்டாக இருக்கும் இடத்தை பார்த்து பயந்து நடுங்கும் சுபாவத்தைக் கொண்டிருந்த அந்தப் பெண் இப்போது அவள் உருகி உருகி சிறு வயதில் இருந்து காதலித்த ஒருவனே நினைத்து அங்கே பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறாள். சில மணி நேரங்களுக்கு முன்பு அவள் கண்களுக்கு முன்னே நடந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவளது மன கண்களுக்கு வந்து வந்து செல்ல, நடந்ததை எல்லாம் கனவு நிஜமா என்று நம்ப முடியாது நிலையில் பைத்தியம் பிடித்தவர்களைப் போல அமர்ந்திருந்தாள் அவள். அப்போது அந்த அறையின் கதவு திறக்கப்பட, அவளது இதயம் பந்தயத்தில் ஓடும் குதிரையை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக துடித்தது. அது அனைத்து வசதிகளையும் கொண்ட அறையாக இருந்தாலும், அவள் அசைவின்றி பல மணி நேரமாக அங்கே கிடந்த பஞ்ச மெத்தையில் மதியத்தில் இருந்து இப்போது இருட்டாகும் வரையிலும் ஃபேன் கூட போடாமல் அப்படியே அமர்ந்திருந்ததாள் அவள் உடல் வியர்வையில் நனைந்து இருந்தது.

அந்த கதவை திறந்து கொண்டு வேக எட்டுக்கள் வைத்து ஆஜானுபாகுவாக இருபதுகளின் தொடக்சிறந்தகத்தில் இருந்த இளைஞன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனுக்கு பழக்கப்பட்ட அறை என்பதால் அந்த இருட்டிலும் லைட் ஸ்விட்ச்சை   தேடி கண்டுப் பிடித்து ஆன் செய்த அந்த இளைஞன் போதையாலும், அவனது தலை முதல் கால் வரை எரிந்து கொண்டு இருந்த கோபத் தீயின் அனலாலும்  சிவந்த கண்களுடன் அங்கே தன் உடலை குறுக்கிக் கொண்டு பயத்துடன் அவனைப் பார்த்தபடி கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த அவளை கண்டான். “நான் உன்ன எந்த அளவுக்கு லவ் பண்ணனோ, அதைவிட அதிகமா இப்ப நீ என்னை வெறுக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியும் அஸ்வின்.

அப்புறம் எதுக்காக இந்த கல்யாணம்? சுத்தமா பிடிக்காத என்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி எதுக்கு இங்க தூக்கிட்டு வந்த? சின்ன வயசுல இருந்தே உனக்கும் எனக்கும் இப்படி ஒரு நாள் மேரேஜ் ஆகும். உன் கூட இந்த ரூம்ல நான் சேர்ந்து வாழ்வேன்னு நான் நினைச்சு பார்த்து சந்தோஷப்பட்டு அந்த லைஃபை நிறைய தருவேன் இமாஜின் பண்ணி பார்த்து இருக்கேன். பட் இப்ப எல்லாமே மாறிப்போச்சு. நமக்கு மேரேஜ் ஆயிடுச்சு. நான் இப்போ மிஸ்ஸஸ் அஸ்வின் கர்ணா. நான் ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு கிடைச்சிருச்சு. ஆனா என்னால இதை நினைச்சு இன்னும் செகண்ட் கூட சந்தோஷமா இருக்க முடியல.

என் கூட இருந்தா கண்டிப்பா உன்னாலையும் சந்தோஷமா இருக்க முடியாது. அப்புறம் ஏன்.. எதுக்காக இந்த மேரேஜ்?”   என்று நினைத்த ஐஸ்வர்யா தனது கலங்கிய கண்களில் பல கேள்விகளை தேக்கி வைத்து அவனைப் பாவமாக பார்த்தாள். அவளது அந்த சிறிய அப்பாவியான அழுது அழுது வீங்கிப் போன முகத்தை பார்க்க பார்க்க அஸ்வினின் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஆத்திரத்தில் கொதித்து இப்போதே அவளை அவளை ஏதாவது செய்து காயப்படுத்த வேண்டும் என்று கொலைவெறியில் துடித்தது.  அவன் தன் பார்வையாலேயே அவளை பஸ்மாக்கிக் கொண்டு இருக்க, அந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமலும், குற்ற உணர்ச்சியாலும் தலைகுனிந்தாள் ஐஸ்வர்யா. திறந்திருந்த அந்த ரூமின் கதவை தனது காலால் உதைத்து லாக் செய்த அஸ்வின் மெல்ல நடந்து அவள் அருகில் செல்ல, இத்தனை நாட்களாக அவனை காதலுடன் ஆசையாக அவன் அருகாமைக்கு ஏங்கி பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, அவன் தன்னை நெருங்கி வர வர பயத்தில் நகர்ந்து பின்னே சென்று கொண்டிருந்தாள்.

அஸ்வின் அவள் அருகில் சென்று கட்டிலில் அமர, நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா கட்டிலின் முனைக்கு சென்றிருந்தாள்‌. இதற்கு மேல் அவளால் நகர முடியாது என்ற நிலையில், தன் குடும்பத்தை அவன் என்ன செய்தான்? என்று ஒரு நொடி அவள் நினைத்து பார்க்க, கண்டிப்பாக அவளுக்கும் அதே நிலை தான் என்று சொல்லி அவள் மூளை அவளை எச்சரித்ததால் ‌ பயத்தின் உச்சத்திற்கே சென்றிருந்த ஐஸ்வர்யா நடுங்கிய உடலுடன் “அ.. அஸ்வின்! நான் சொல்ல வர்றத முதல்ல கேளு.” என்று பேச முடியாமல் திக்கி திணறு சொன்னாள்.

ஏதோ பைத்தியம் பிடித்தவனை போல அவளைப் பார்த்து ‌ ஹிஹிஹிஹி என்று நக்கலாக கலகலவென்று அஸ்வின் அவள் இடுப்பில் கைவைத்து அவளை தன் பக்கம் இழுத்து “நீ சொல்றத நான் கேட்கணுமா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டிருக்கிறான். பணிபோல மென்மையாக பால் நிறத்தில் இருந்த   அவளுடைய சிற்றிடையில் அவனது  இரும்பு பிடி அதன் இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல, இவன் இப்படியே நசுக்கி தனது இடுப்பு எலும்பை உடைத்து விடுவான் போல என்று நினைத்து பயந்த ஐஸ்வர்யா தனது கைகளை அவனது தோள்களில் வைத்து தள்ளியபடி “வலிக்குது  அஸ்வின்! விடு.. ப்ளீஸ்!” என்றாள் உடைந்த குரலில். உடனே தனது ‌ தோள்களில் இருந்த அவளுடைய கைகள் இரண்டையும் தட்டிவிட்டு அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது விழுந்த அஸ்வின் அவளுடைய குரல்வலையை தனது கையால் பிடித்து நெறித்து  “என்ன சொன்ன..?? உனக்கு வலிக்குதா? வலிக்கும் டி. உனக்கு நல்லா வலிக்கணும். நீ இப்படி வலியில துடிக்கிறத பார்த்து ஒவ்வொரு செகண்டும் நான் சந்தோஷப்படணும். அதுக்கு தான் உன்ன கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன். இந்த செகண்ட்ல இருந்து நீ என்னோட அடிமை.

நான் உன்னை என்ன வேணாலும் பண்ணுவேன். உன் குடும்பத்தில இருக்கிறவங்க எனக்கு பண்ண பாவம் எல்லாத்தையும் நீ இப்படி தினம் தினம் அழுது கரைச்சு தான் ஆகணும். நீ சந்தோஷமா வாழவும் முடியாது. இந்த கொடுமையை அனுபவிக்கிறதுக்கு பதிலா செத்து போயிடலாம்னு நினைச்சா சாகவும் முடியாது.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.

அவன் அவளது கழுத்தை பிடித்து அழுத்தியதில் மூச்சுவிட சிரமப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா “நீ.. நீ என்னை கொல்லனும்னு ஆசைப்பட்ட தாராளமாக தாராளமா கொல்லு அஸ்வின். உனக்கு அதுக்கு என்ன உரிமையும் இருக்கு. இவ்ளோ நடந்ததுக்கப்புறமா நான் சாகுறத பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு உன்னை  பார்த்தா பயமா இருந்துச்சு. ஆனா இப்போ நீ இருக்கிற நிலைமையை பார்த்தா பாவமா இருக்கு. இதுக்கு எல்லாம் என் குடும்பம் தான் காரணம்னு நினைக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு. என்னை கொல்றதுல உனக்கு நிம்மதி கிடைக்கும்ன்னா, ப்ளீஸ் என்னை இப்பவே கொன்னுடு. உன் கையால சாகிறதுல எனக்கு சந்தோஷம் தான். நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உன் கிட்ட சொல்லி, உன் கூட  சேர்ந்து வாழணும்னு நான் ஆசைப்பட்டேன். அது முடியலன்னா பரவாயில்ல. உன் கையால சாகுற அது எனக்கு கிடைக்கட்டும்.  என்னை கொன்னுட்டு அதோட நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு இதுக்கு அப்புறமாவது நீ சந்தோஷமா வாழ ட்ரை பண்ணு. இது நீ இல்ல அஸ்வின். என் அஸ்வினுக்கு யாரையும் கஷ்டப்படுத்த தெரியாது. என் ஃபேமிலில இருக்கிறவங்க உனக்கு பண்ண துரோகத்துக்காக உன் வாழ்க்கைய இந்த கோவத்தால, பழிவாங்கணும்ன்ற எண்ணத்துக்காக கெடுத்துக்காத.” என்று திக்கி தினறி சொன்னாள்.

அவன் இதுவரை என்ன செய்திருந்தாலும், அது எல்லாம் நியாயம் தான் என்று இப்போது அவள் மனதிற்கு தோன்றியதால், அவன் கையால் சாகக் கூட அவள் துணிந்து விட்டாள். தான் அவனை காதலித்தது இறுதிவரை அவனுக்கு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக தான் அந்த கடுமையான வலியை கூட பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு அவனிடம் இவ்வளவு நேரம் பேசினாள். ஆனால் அவனோ இன்னும் இறுக்கமாக அவளுடைய குரல் வலையை பிடித்து  நெறித்து “என்ன டி நல்லவ வேஷம் போட்டு நடிக்கிறியா? இப்படி நடிச்சு நடிச்சு தான டி நீயும், உன் ஃபேமிலில இருக்கிறவங்களும் எங்களை ஏமாத்தினீங்க! இப்ப கூட நீ அடங்க மாட்டில! இந்த நிலைமையிலும் இன்னொரு லவ் ட்ராமா போடுறதுக்கு எப்படி டி உனக்கு தைரியம் வருது? நீ எவ்ளோ அழுது கதர்னாலும், என்னை லவ் பண்றேன்னு என் பின்னாடி சுத்தினாலும், நீ என் காலிலேயே விழுந்து கிடந்தாலும் கூட, உன்ன நான் நம்பவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்.

இப்படி எல்லாம் ஈஸியா உன்ன சாக விட மாட்டேன் கவலைப்படாத. என் கூட இருந்து இன்னும் நீ போக்க வேண்டியது நிறைய இருக்கு.” என்று ஆத்திரம் பொங்க தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்ன அஸ்வின் அவளை தன் பிடியில் இருந்து விடுவித்தான். தனது நெஞ்சை பிடித்துக் கொண்டு லொக் லொக் என்று சத்தமாக இரும்பிய ஐஸ்வர்யா   கடந்த இரண்டு நாட்களாகவே அவள் சரியாக சாப்பிடாமல் இருந்ததாலும், இப்போது அவன் செய்த வேலையில் அவள் உடல் பலவீனம் அடைந்திருந்தாலும் அப்படியே மயங்கினாள்.  

திடீரென்று அவளிடம் எந்த அசைவம் தெரியாததால் அவள் கன்னங்களை தன் ஒற்றை கையால் இறுக்கி பிடித்த அஸ்வின் “ஏய்.. இந்தாடி.. மறுபடியும் உன் டிராமாவை ஆரம்பிச்சிட்டியா? இதையெல்லாம் பார்த்து இந்த அஸ்வின் உன்ன விட்டுருவான்னு நம்பிட்டு இருக்கியா? நீ இப்படி எல்லாம் பண்றதை பார்த்தா தாண்டி எனக்கு இன்னும் உன் மேல ஆத்திர ஆத்திரமா வருது. ஒழுங்கா எந்திரி! கண்ணை தொறந்து பாரு டி. நான் இவ்வளவு சொல்றேன் கேக்க மாட்டியா நீ? அவ்ளோ அழுத்தத்தமா உனக்கு? ஏய்.. ### கண்ணை தொர டி.  சொல்றேன்ல.. கண்ணைத் திறந்து என்னை பாரு.” என்று அவள் மயக்கத்தில் இருப்பது கூட தெரியாமல் போதையில் உளறியபடி தான் சொல்வதை அவள் கேட்காமல் இருக்கிறாள் என்று நினைத்து அதற்கும் கோபப்பட்டு அவளை எழுந்க்து கொள்ள சொல்லி பளார் பளார் என்று அவளது கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

– முத்தங்கள் தொடரும் 💋

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured