Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 18

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 18

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 18 

பசை போல அஸ்வினை ஒட்டிக் கொண்டு இருந்த மனிஷா தன் காதல் மழையில் அவனை நினைய வைத்துக் கொண்டு இருந்ததை பார்க்க சகிக்காமல் வேலை இருப்பதாக சொல்லி விவேக் அவனை தன்னுடன் இழுத்துக் கொண்டு ஸ்டடி ரூமிற்க்கு சென்றான். 

“ம்க்கும்.. பொறாமை புடிச்சவன்.. நானும் அஸ்வினும் கொஞ்ச நேரம் சிரிச்சு பேசிட்டா இவனுக்கு பொறுக்காது. எங்க இருந்தாவது வந்து எங்களை பிரிச்சு விடுறதையே இவன் வேலையா வச்சிருக்கான்.”  என நினைத்து உதட்டை சுளித்த மனிஷா “அம்மா!” என்று சிணுங்கியபடி திலகாவின் அருகில் சென்றாள். 

“நானும் நடக்கிறது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் டி இருக்கேன். இவனும் அந்த வித்யா புள்ளையும், அந்த ஐஸ்வர்யாவும் எல்லாரும் ஒன்னா திரிஞ்சுக்கிட்டு இருந்தவங்க தானே! அதான் அவளுக்காக அஸ்வினை உன் கிட்ட இருந்து பிரிக்கனும்னு இவன் நினைக்கிறான். 

யார் என்ன வேணாலும் பண்ணட்டும். எத்தனையோ பாத்தாச்சு. இவன் எல்லாம் நமக்கு ஒரு ஆளா? எங்க அண்ணனே உனக்கும், நம்ம அஸ்வினுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சிருக்காரு. அது ஒன்னு போதும். திரும்பத் திரும்ப அதைப்பத்தியே அஸ்வின் கிட்ட பேசி உங்க அப்பாவோட கடைசி ஆசையை நீ நிறைவத்தி தான் ஆகணும்னு அப்படியே பேசி அவனை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்க வச்சுருவேன். அது நடக்கிறதுக்கு முன்னாடி முதல்ல நம்ம அந்த ஐஸ்வர்யா பீடையை இங்க இருந்து துரத்தனும்.‌ 

அவளுக்கு ஒன்னுன்ன உடனே.. அஸ்வின் அவளை தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் போக எப்படி ஓடுனான்னு பாத்தில.. என்னதான் அவங்க குடும்பம் நமக்கு துரோகம் செஞ்சு இருந்தாலும், இவனுக்கு அவ மேல உள்ளுக்குள்ள பாசம் இருக்க தாண்டி செய்யுது. அதை நம்ம போகணும்னா, உன் மேல அஸ்வினுக்கு காதல் வரணும். அது தானா வரலைனாலும் நம்ம வரவைக்கணும். இனிமே அதான் நம்ம வேலை.” என்று சொல்லி தன் மகளை தேற்றிய திலகா அவளை அழைத்துக் கொண்டு தங்களது ரூமிற்கு சென்று விட்டாள். 

அஸ்வினுடன் ஸ்டடி ரூமில் இருந்த விவேக் “டேய் என்ன டா இதெல்லாம்! அப்ப நெஜமாவே இவங்க எல்லாம் சொல்றாங்கன்னு நீ நம்ம ஐஸ்வர்யாவை டிவர்ஸ் பண்ணிட்டு போயும் போயும் அந்த ஓவர் ஆக்டிங் மனிஷாவ கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று கேட்க, 

என்னவோ தன் வாழ்க்கை மொத்தமாக இடிந்து சரிந்ததை போல உடைந்த இதயத்துடன் சென்று அங்கே ஓரமாக இருந்த சோஃபாவில் பொத்தென்று அமர்ந்த அஸ்வின் “தெரியல டா, அப்பா இந்த அளவுக்கு கேன்சர் வந்து கஷ்டப்பட்டு இருக்காரு. அதை கடைசி வரைக்கும் எங்களுக்கு தெரியாம பார்த்துட்டு இருந்திருக்காரு. நாங்க கஷ்டப்படக் கூடாதுன்னு தானே அவர் அதை என்கிட்ட இருந்து மறைச்சிருக்காரு.. இப்ப நான் அவருக்கு எதிரா ஒரு விஷயத்தை பண்ணி அவளை கஷ்டப்படுத்திட்டு இருக்கனோன்னு தோணுது.” என்று சோகமாக சொன்னான். 

“எல்லாம் கரெக்டு தான் டா. அதுக்காக நீ ஐஸ்வர்யாவை அப்படியே விட்டுவிடுவியா? இப்ப அவளுக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல டா. நீயும் இப்படி பண்ணா அவ எங்க போவா சொல்லு?” என்று விவேக் வருத்தத்துடன் கேட்க, உடனே கோபப்பட்டு சட்டென்று எழுந்து நின்ற அஸ்வின் “நீ எனக்கு friend-ஆ இல்ல அவளுக்கு friend-ஆ? நீ இப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணி என் கிட்ட பேசுறத கேட்கும்போதெல்லாம் எனக்கு இரிடேட் ஆகுது விக்கி. 

முதல்ல நான் அவளை எதுக்கு மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு உனக்கு தெரியுமா? எனக்கு அவளை டார்ச்சர் பண்ணனும். என் ஃபேமிலிக்கு அவ, அப்பா, அம்மா, அண்ணன்னு அவங்க எல்லாரும் பண்ண தப்புக்கு அவள் தான் அனுபவிக்கணும். அதுக்காக மட்டும் தான் நான் அவளை என் பக்கத்துல வச்சிருக்கேன். இப்ப திடீர்னு என்னமோ என்ன லவ் பண்றேன்னு அவ சொல்லிட்டு இருக்கா. 

சோ நான் அவளை கூட வச்சிக்கிறது எப்படி அவளுக்கு பனிஷ்மென்ட் ஆகும்? அப்படி பார்த்தா நான் அவளை விட்டுட்டு மனிஷாவை கல்யாணம் பண்ணனும். அப்ப தான் அதை பார்க்கும்போது அவளுக்கு எரியும். மனிஷா என் அத்தை பொண்ணு. அவள நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எங்க அப்பா ஆசைப்பட்டிருக்காரு. அதை நான் நிறைவேத்தி தான் ஆகணும். இதுக்கு அப்புறம் இதை பத்தி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல.” என்ற அஸ்வின் வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான். 

“இவனை எல்லாம் என்ன சொல்லியும் திருத்த முடியாது. இவனா ஐஸ்வர்யாவை புரிஞ்சுகிட்டு அவளை மன்னிச்சு அவ கூட சேர்ந்து வாழ்ந்தா தான் உண்டு.” என நினைத்து பெருமூச்சு விட்ட விவேக் அவனது ரூமிற்கு சென்று விட்டான்.

கோபமே உருவாக தனது ரூமிற்கு வந்த அஸ்வின் நேராக சென்று பாத்ரூமில் உள்ள சகரை திறந்து கொட்டும் நீருக்கு அடியில் நின்றான். அவனது கண்கள் மூடி இருக்க, அவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. ஒருபோதும் அவனது பெற்றோர்களின் இழப்பை அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு ஐஸ்வர்யாவும் அவளது குடும்பமும் காரணம் என்று நினைக்கும் போது தனக்குள் வரும் கட்டுக்கடங்காத கோபத்தை எல்லாம் ஐஸ்வர்யாவின் மீது கொஞ்சம் கூட இரக்கம் பார்க்காமல் இறக்கி வைக்க வேண்டும் என்று அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. 

இப்படியே அவன் கண்களை மூடி அத்தனையையும் யோசித்துக் கொண்டிருக்க, அப்போது பாவமாக மயங்கி கொட்டும் மழையில் மாடியில் விழுந்து கிடந்த ஐஸ்வர்யாவை பார்த்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவள் அப்படி தனது கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக காட்டுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஆட்டுக்குட்டியை போல ஆதரவின்றி இருப்பதை நினைத்து அவளுக்காக ஒரு நொடி அவன் இதயம் வருந்தத் தான் செய்தது. 

பின் வாசுதேவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுக்கு ஞாபகம் வர, “இந்த மாதிரி சிச்சுவேஷன்ல என்னோட எமோஷன்ஸ்க்கு நான் இடம் கொடுக்கக் கூடாது. இப்படி நான் emotional idiot-ஆ இருந்ததுனால தான் நான் என் அப்பா, அம்மாவை இழந்துட்டேன்.‌ எனக்குன்னு இருக்கிற மத்தவங்களையும் நான் இழக்காம இருக்கணும்னா, இனிமே நான் எப்பவும் எமோஷனல் ஆகவே கூடாது.”  என்று உறுதியாக ஒரு முடிவிற்கு வந்த அஸ்வின் குளித்துவிட்டு தனது ரூமிற்கு வந்து அமர்ந்தான். 

இதுவரை அவன் தனது பெற்றோர்களுக்கு முறைப்படி இறுதி சடங்கு நடத்தாமல் அவர்களது உடலை ஐஸ் பாக்ஸில் வைத்து அவர்களது வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு இடத்தில் தான் பதப்படுத்தி வைத்திருந்தான். வாசுதேவனை அழைத்து அதைப்பற்றி சொன்ன அஸ்வின் “அப்பாவையும், அம்மாவையும் வழி அனுப்பி வைக்கிறதுக்கு முறைப்படி என்னென்ன பண்ணனும்னு சொல்லுங்க சித்தப்பா. அது எல்லாத்தையும் நான் நாளைக்கு மார்னிங் கரெக்ட்டா பண்ணிடறேன்.” என்று சொல்ல,

“இறந்தவர்களோட உடம்ப இத்தனை நாளா வீட்டுக்குள்ள வெச்சிருக்கறதே தப்பு அஸ்வின். சரி விடு, நான் சொன்னதை ஒரு வழியா நீ புரிஞ்சுகிட்டே அதுவே போதும். நாளைக்கு விடிய காலையில நம்மளோட தோட்டத்தில அண்ணனையும், அண்ணியையும் முறைப்படி நம்ம அடக்கம் பண்ணிடலாம். நம்ம சொந்தக்காரங்க எல்லாருக்கும் நான் ராத்திரிக்குள்ள ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்.” என்றார் வாசுதேவன். 

அவர் சென்ற பிறகு தனது ரூமில் உள்ள கட்டிலில் மல்லாக்கப் படுத்திக் கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அந்த ரூபில் இப்போது அவனுடன் ஐஸ்வர்யாவும் தங்கி இருப்பதால் அவள் இல்லாத அந்த காலி அரையிலும் கூட எங்கும் அவள் வாசம் வீசி அவளை அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. 

அதை தன் நுரையீரல் வரை இழுத்து பிடித்துக் கொண்ட அஸ்வின் அப்படியே தன் கண்களை மூடினான். அவனது ஞாபகங்கள் பின்னோக்கி சென்றது. சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவை வசுமதியின் வீட்டில் அவள் அப்பா தினகரன் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கும் போது அவளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் துடித்து போய் அந்த வீட்டு வாசலில் நின்று பிச்சைக்காரன் போல அவள் பெயரை சொல்லி கத்தி அவன் ஐஸ்வர்யாவிற்காக வாட்ச்மேனிடம் சண்டை போட்ட காட்சிகள் எல்லாம் அவன் கண்‌ முன்னே வந்து சென்றது. 

அவன் அப்படி கத்தி கதறுவது அந்த வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஐஸ்வர்யாவிற்கு இறுதி வரையிலும் கேட்கவே இல்லை. இதற்கிடையில் வாட்ச்மேன் போலீசுக்கு கால் செய்ததால் “டேய் வா டா கிளம்பலாம். எப்படி இருந்தாலும் இது ஐஸ்வர்யாவோட ரிலேட்டிவ் வீடு தானே.. அதுவும் அவங்க அப்பா தான் அவள கொண்டு வந்து இங்க விட்டுட்டு போயிருக்காரு. இங்க இருக்கும் போது அவளுக்கு என்ன ஆய போகுது? 

இன்னும் கொஞ்ச நேரம் நம்ம இங்கயே இருந்தா நமக்கு தான் ஏதாவது ஆகும். போலீஸ் கேஸ்னு போனா உங்க அப்பா பேரு கெட்டுப் போகும். அவர் உன்ன சேர்மன் ஆக்கணும்னு பேசிட்டு இருக்குற இந்த சமயத்துல, தேவை இல்லாம ஏதாவது ஒரு இஸ்யூல சிக்கி உன் நேமை நீ டேமேஜ் பண்ணிக்காத.” என்று சொல்லி விவேக் அஸ்வினை கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்து சென்று விட்டான். 

இருப்பினும் அஸ்வின் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து ஐஸ்வர்யாவை அங்கே இருந்து மீட்க போராடினான். அப்படியே அன்றைய நாள் முடிந்து இருக்க, அதற்கு அடுத்து வந்த நாட்கள் அஸ்வின் வாழ்க்கையில் நரகமாக இருந்தது.  ஒரு பிசினஸ் டீலிங் புதிதாக கிடைத்திருக்கிறது என்று சொல்லி அஸ்வினின் அப்பா கருணாகரனிடம் பல ஆசை வார்த்தைகள் பேசி இந்த ப்ராஜெக்ட்டை அவர்கள் கம்பெனி எடுத்து செய்தால் அடுத்த ஒரு வருடத்தில் அவர்கள் இந்தியாவிலேயே பெரிய பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்றெல்லாம் சொல்லி அவரை கோடிக்கணக்கில் கடன் வாங்க தூண்டினான். 

தனது உயிர் நண்பனின் பேச்சை நம்பிய கருணாகரனும் ஏராளமானவர்களிடம் கடனை வாங்கி அந்த ப்ராஜெக்ட் தொடங்கும் முயற்சியில் இறங்கினார். அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கும்போது, அதற்கு இதற்கு என்று சொல்லி அவ்வப்போது கருணாகரனிடம் சில முக்கியமான டாக்குமெண்ட்களில் சைன் வாங்கி வைத்துக் கொண்டார் தினகரன். 

இதில் தினகரன் மட்டும் அல்லாமல் அவர்களுடன் பிசினஸ் செய்து கொண்டிருந்த மற்ற ஒரு சிலரும் கூட்டாக செயல்பட்டார்கள். கடன் வாங்கி கருணாகரன் பிசினஸை தொடங்கும் போது, அந்த ப்ராஜெக்ட்டை அவர்களுக்கு கொடுத்த நிறுவனம் அதை இறுதி நொடியில் withdraw செய்துவிட்டது. 

கருணாகரனின் கம்பெனி கோட் அமௌண்டை விட கொஞ்சம் கம்மியாக கோட் செய்து தினகரனின் கம்பெனி அந்த ப்ராஜெக்டை வாங்கிவிட்டது. அதனால் பெரும் கடன்காரராக மாறி இருந்த அஸ்வினின் அப்பா கருணாகரன் பிசினஸ் தன் கையை விட்டு சென்ற அதே நேரத்தில் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விற்றாவது கடனை அடைக்கலாம் என பார்த்தால் அதற்கும் இடையூறாக வந்த தினகரன் அவர்களுக்கே தெரியாமல் தான் அவர்களிடம் இருந்து அவர்களது சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட டாக்குமெண்ட்களை காட்டி பிரச்சனை செய்தான். 

இந்த பிரச்சனைகளை எல்லாம் தனது அப்பாவுடன் சேர்ந்து சமாளிக்க தெரியாமல் திணறிக் கொண்டிருந்த அஸ்வினுக்கு அப்போது ஐஸ்வர்யாவின் ஞாபகம் ஒரு நொடி கூட வராமல் போய்விட்டது. இப்படியான விஷயங்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் நடக்கும் என்று அஸ்வினோ அவன் குடும்பத்தில் உள்ளவர்களோ துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. 

ஆனால் தினகரனும், அவனுடன் சேர்ந்து திட்டமிட்ட மற்றவர்களும் அனைத்தையும் பக்காவாக தயார் செய்து வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் அஸ்வின் மற்றும் அவனது குடும்பத்தை ஆக்சிடென்ட் செய்து கொலை செய்ய பிளான், நடப்பது அனைத்தையும் ஐஸ்வர்யாவிடம் இருந்து மறைத்துவிட்டு அவளை தனது கூட்டாளி மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க பிளான் என்று அனைத்தும் அவர்களது திட்டத்தில் சரியாக நடந்து கொண்டிருந்தது. 

-முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured