Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 17

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 17

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 17 

அஸ்வினின் குடும்பத்தினர்கள் அவனை சூழ்ந்து நின்று கொண்டு ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கம் போல அஸ்வின் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாமல் செல்ல, “இதுக்கு மேல உன்னை உன் இஷ்டத்துக்கு விடக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் அஸ்வின். நானும் இந்த விஷயத்தை உன் கிட்ட கடைசி வரைக்கும் சொல்லாம மறைச்சிடலாம். ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிற உன்னை இன்னும் கஷ்டப்படுத்த  வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். 

ஆனா நீ  எல்லை மீறி போயிட்டு இருக்க. இனிமே வேற வழி இல்ல. எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லி தான் ஆகணும்.  இதுக்கு மேலயும் நான் மறச்சு வச்சா எல்லாம் தப்பா போயிரும்.” என்று பீடிகை போட்டார் வாசுதேவன். 

“ வாசு அண்ணா அஸ்வின் கிட்ட மறைச்சாரா?  அப்படி என்ன விஷயமா இருக்கும்?”  என யோசித்து பார்த்த திலகா அவளுக்கு எதுவும் பிடிப்படாததால் “அப்படி எனக்கு கூட தெரியாம எந்த விஷயத்தை அண்ணா நீங்க அஸ்வின் கிட்ட மறைச்சீங்க?” என்று கேட்டாள். 

அஸ்வினும் “ எவ்வளவோ பாத்தாச்சு. இன்னும் புதுசா பாக்க என்ன இருக்கு?”  என்ற ரீதியில் வாசுதேவனை பார்த்துக் கொண்டிருக்க, “சொல்றேன், இன்னைக்கு எல்லார் கிட்டயும் எல்லாத்தையும் சொல்றேன்.” என்ற வாசுதேவன் தன் மகனை அழைத்து “என் bagல ஒரு file வச்சிருக்கேன், போய் அதை எடுத்துட்டு வா.”  என்றார். 

அவன் அதை எடுப்பதற்காக சென்று விட, “என்னம்மா ஏதோ  ஃபைல்ன்னு பேசிக்கிறாங்க..  ஒருவேளை ஏதாவது சொத்து டாக்குமென்ட்டா இருக்குமா?  நமக்கு நிறைய சொத்து இருக்கு.  எல்லாத்தையும் எதுக்கு நம்மளே வச்சுக்கணும்னு நினைச்சு  பெரிய மாமா  யாருக்கும் தெரியாம பாதி சொத்தை சின்ன மாமாவுக்கு எழுதி வச்சுட்டாரா?  

வாசு மாமா இப்ப அந்த டாகுமெண்ட்டை தான் கொண்டு வந்து நம்ம கிட்ட காட்ட போறாரோ?  ஏற்கனவே கருணாகரன் மாமாவ ஏமாத்தி அந்த நாசமா போன ஐஸ்வர்யா குடும்பத்தில இருக்கிறவங்க நிறைய சொத்தை எழுதி வாங்கிட்டாங்க. அவரோட கம்பெனியையும் loss-ல தள்ளிட்டாங்க.

அஸ்வின் மாமா கஷ்டப்பட்டு இப்ப தான் அதை  திரும்பவும் மீட்டு இருக்கான்.  இதுல கர்ணா மாமா பாத்துட்டு போன வேலையில இருக்கிற சொத்து இரண்டா, மூனா பிரிஞ்சுதுனா நமக்கு ஒண்ணுமே  தேராதே…!!”  என்று மனிஷா தன் அம்மாவிடம் புலம்பினாள். 

“ என் கிட்ட கேட்டா எனக்கு மட்டும் என்ன டி தெரியும்? இத பத்தி நான் என்ன கனவா கண்டேன்?  எதையோ தெரிஞ்சிக்கிட்டு இத்தன நாளா என் கிட்ட கூட வாய திறந்து சொல்லாம எங்க சின்ன அண்ணா  கமுக்கமா  இருந்திருக்கிறார்  பாரேன்… 

முதல்ல அவர் வந்து என்னன்னு சொல்லட்டும்.  நீ சொன்ன மாதிரி இது ஏதாவது சொத்து விஷயமா மட்டும் இருக்கட்டும்.  அப்புறம் உங்க அம்மா யாருன்னு நீ இன்னைக்கு  பாப்ப. 

எனக்கு  நீ பொறந்த உடனே உன்னை நான் அஸ்வினுக்கு கட்டி வைக்கணும்னு முடிவு பண்ண மாதிரி, எங்க அண்ணனுக்கு பொண்ணு பொறந்த உடனே  அவளை என் பையன் பாலாவுக்கு கட்டி வைக்கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.  என்னை பொறுத்த வரைக்கும், என் அண்ணன் குடும்பத்தோட மொத்த  சொத்தும் என் பிள்ளைங்க மூலமா எனக்கு தான் வரணும்.

என் திட்டத்தை கெடுக்க நடுவுல எங்க சின்ன அண்ணா மட்டும் இல்ல அந்த ஐஸ்வர்யா மாதிரி  வேற எவ வந்தாலும் நான் சும்மா விட மாட்டேன்.  நீ அவசரப்பட்டு எதுவும் பேசிடாத. முதல்ல என்ன நடக்குதுன்னு நம்ம பார்க்கலாம்.” என்றாள் திலகா. 

தன் மகன் கொண்டு வந்த file-லை அஸ்வினின் முன்னே நீட்டிய  வாசுதேவன் “ இதுல உங்க அப்பாவோட மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கு அஸ்வின்.  அவரோட body கண்டிஷனை பத்தி கடைசி வரைக்கும் உங்க யாருக்கும் தெரியாம பாத்துக்கணும்னு எங்க அண்ணன் நினைச்சாரு. 

இருந்தாலும்,  திடீர்னு தனக்கு ஏதாவது ஆகிட்டா தன்னோட குடும்பத்துல இருக்கிறவங்க அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம கஷ்டப்படக் கூடாதுன்னு  நெனச்சு என்னை கூப்பிட்டு  அவர் மனசுல இருந்ததை எல்லாம் என் கிட்ட சொன்னாரு. அதைத் தான் இன்னைக்கு நான் உன் கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன்.”  என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, 

அவர் கொடுத்த file-லை திறந்து படித்துப் பார்த்த அஸ்வின்  ஷாக் ஆகி “ இந்த ரிப்போர்ட்  உண்மையா சித்தப்பா?  எங்க அப்பாவுக்கு கேன்சர் இருந்துச்சா?  அதுவும்  லாஸ்ட் ஸ்டேஜ்.. அவர்

இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோட இருப்பாருன்னு இந்த ரிப்போர்ட்ல போட்டு இருக்கு.. என்னால இதை நம்பவே முடியல. 

எங்க அப்பா உயிரோட இருந்த வரைக்கும் ரொம்ப ஆக்டிவா, நார்மலா தான் இருந்தாரு..  அப்புறம் எப்படி அவருக்கு கேன்சர் இருந்திருக்க முடியும்?  சும்மா என்ன சமாளிக்கிறதுக்காக இப்படி எல்லாம் பொய் சொல்லாதீங்க சித்தப்பா.  எனக்கு உங்க மேல நல்ல மரியாதை இருக்கு.  நீங்களே அதை கெடுத்துக்காதீங்க.”  என்று அதை நம்ப முடியாமல் சொன்னான். 

“ நீ நம்புனாலும், இல்லையினாலும் இது தான் அஸ்வின் உண்மை. உங்க அப்பாவுக்கு டாக்டர்ஸ் கொடுத்த டைம் இன்னும் ஒரு ரெண்டு மாசமோ மூணு  மாசமோ தான்.  ஆனா விதி அவரை முன்னாடியே கூட்டிட்டு போயிடுச்சு. எங்க அண்ணன் அவர் போறதுக்குள்ள உன்னையும்,  அக்ஷயாவையும் செட்டில் பண்ணிடனும்னு நினைச்சாரு. 

அதான் உன்னை பிசினஸ் பொறுப்பை எல்லாம் பார்த்துக்க சொன்னாரு. அக்ஷயாவுக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு கூட யோசிச்சாரு. எப்பயோ ஒரு தடவை மனிஷா உன்னை புடிக்கும்னு அண்ணா கிட்ட சொல்லி இருக்கா. அதனால உனக்கும் அவளுக்கும் சாகறதுக்குள்ள கல்யாணம் பண்ணி பாக்கணும்னு   ஆசைப்பட்டாரு. 

ஒருவேளை அவருக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுனா,  அப்பா ஸ்தானத்தில இருந்து  உன்னையும்,  அக்ஷயாவையும் நான் தான் பார்த்துக்கணும்னு என் கிட்ட சத்தியம்  வாங்கினாரு. அந்த சத்தியத்தை காப்பாத்துறதுக்காக தான் இப்ப உன் கிட்ட நான் எல்லா உண்மையையும் சொல்லிட்டு இருக்கேன்.  உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா பரவாயில்லை.. கருணா அண்ணாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் யாரு, ஹாஸ்பிடல் என்னன்னு எல்லா டீடெயிலும் அதுல இருக்கு. நீயே போய் என்ன  நடந்துச்சுன்னு விசாரிச்சுக்கோ.

அவருக்கு அப்புறமா எங்க அண்ணன் அவரோட பிசினஸை நல்லவிதமா நீ எடுத்து நடத்தணும்னு  ஆசைப்பட்டாரு.  நீ அதை நிறைவேத்திட்ட.  அவரோட இன்னொரு கடைசி ஆசை உனக்கும் நம்ம மனிஷாவுக்கும் கல்யாணம் பண்ணி பாக்கணும்ன்றது தான். நீ அவளை விட்டுட்டு உனக்கு புடிச்ச வேற ஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தா கூட சரி உன் விருப்பத்துக்கு நம்ம குறுக்க நிக்க கூடாதுன்னு நான் எதுவும் சொல்லாம இருந்திருப்பேன்.

  ஆனா நீ போயும் போயும் அந்த தனசேகரன் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற!  என்னால இதை நீ என்ன காரணம் சொன்னாலும்  ஏத்துக்கவே முடியாது அஸ்வின்.  எங்க அண்ணனும் அண்ணியும் கூட இந்த கல்யாணத்தை எப்பயும் மனசார ஏத்துக்க மாட்டாங்க.  நான் சொல்லணும்னு நினைச்ச எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டேன்.  இனிமே உன் இஷ்டம். 

எங்க அண்ணன் உனக்கு அப்பா ஸ்தானத்தில என்னை இருக்க சொல்லிட்டு போனாலும்,  நீ என்ன அப்பாவா நினைப்பியான்னு எனக்கு தெரியல அஸ்வின். ஆனா நான் உன்னை என் பையனா தான் பாக்கிறேன்.  அந்த  உரிமையில சொல்றேன். நம்ம குடும்பத்துக்கு அந்த பொண்ணு வேண்டாம்.  அவளை  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம்  டிவர்ஸ் பண்ணிரு.  அதான் நமக்கு நல்லது.”  என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அஸ்வினை திரும்பி கூட பார்க்காமல் தனது ரூமிற்கு சென்று விட்டார் வாசுதேவன்.

“ இப்ப நான் என்ன பண்ணனும்?  என் அப்பாவுக்காக,  அவரோட ஆசைக்காக நான் ஐஸ்வர்யாவை டிவர்ஸ் பண்ணிட்டு மனிஷாவை மேரேஜ் பண்ணனுமா?  இல்ல, நான் ஆல்ரெடி பிளான் பண்ண மாதிரி, என் ஃபேமிலிய இப்படி டோட்டலாஉடைச்சதுக்காக  ஐஸ்வர்யாவுக்கு பனிஷ்மென்ட் குடுக்குறதுக்காகவே அவளை என் பொண்டாட்டியா நான் கடைசி வரைக்கும் என் கூட வச்சுக்கணுமா?” என்று யோசித்து குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த அஸ்வின் அமைதியாக சிலை போல நின்றான்.

இந்த விஷயத்தில் அவனாக ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும் என நினைத்து விவேக்கும் எதுவும் பேசாமல் நிற்க, வேகமாக அஸ்வினின் அருகில் ஓடிச் சென்ற மனிஷா அவனை கட்டி அணைத்து, “ஐயோ எனக்கு இப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அஸ்வின் மாமா.  நான் 12th படிச்சு முடிச்சுட்டு காலேஜ் ஜாயின் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது அடுத்து என்ன படிக்கப் போற, லைஃப்ல நீ என்ன செய்யலாம்னு  இருக்கேன்னு கருணாகரன் மாமா என் கிட்ட கேட்கும் போது, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாக போறேன் அதுதான் என் ஆசைனு என் மனசுல இருந்ததை அப்படியே அவர் கிட்ட சொன்னேன். 

அதை ஞாபகம் வச்சுக்கிட்டு பெரிய மாமா நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு எடுத்திருப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல  அஸ்வின் மாமா.  எனக்கு இப்ப தான் ரொம்ப  நிம்மதியா இருக்கு.  எனக்கு தெரியும் மாமாவுக்கு என் மேல தனி பாசம் இருக்கு.  கூடிய சீக்கிரம் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகணும் மாமா.  அது மட்டும் நடந்தால் போதும்.  எனக்கு வேற எதுவுமே வேண்டாம்.  I Love You so much.”  என்று உற்சாகமான குரலில்  சொன்னாள். 

தன் மகளையும் அஸ்வினையும் ஜோடியாக பார்த்து சந்தோஷத்தில்  திலகா ஒரு பக்கம் திக்கு மூக்கு ஆடிக் கொண்டிருக்க, “ இது எல்லாம் எங்க போய் முடியுமோ!” என்ற ரீதியில் மனோகரன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  அடுத்தடுத்து என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைத்து குழம்பி தவித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனிஷாவை தன்னை விட்டு விளக்கவும் முடியாமல், அவளை ஏற்றுக்கொண்டு வாழவும் மனம் வராததால் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தான். 

“ விட்டா இவ அஸ்வின் மேலையே gum போட்டு ஓட்டுன மாதிரி அவன் கூடயே  திரியுவா போல இருக்கு..  முதல்ல இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்.  என் மச்சான் அஸ்வினுக்கு ஐஸ்வர்யா தான் கரெக்ட்டா இருப்பா.”  என்று நினைத்த விவேக், “hey அஸ்வின்.. ஏதோ இம்போர்ட்டண்ட் ஆபீஸ் வொர்க் இருக்கு  வீட்டுக்கு போன உடனே அதை முதல்ல பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தியேடா.. மறந்துட்டியா?  நீ வா,  நம்ம உன் ஸ்டடி ரூமுக்கு போலாம். நம்மளை சுத்தி நடந்து இருக்கிற பிரச்சனைக்கு முதல்ல நம்ம வேலைக்கு தான் ப்ரையாரிட்டி கொடுக்கணும்.”  என்று சொல்லி அஸ்வின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இரண்டாவது மாடியில் உள்ள ஸ்டடி ரூமிற்கு சென்று விட்டான். 

இப்போது அஸ்வின் என்ன செய்வான்?

முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured