அத்தியாயம் 10
தானும், அஸ்வினும் முத்தமிட்டுக் கொண்ட காட்சியை நினைத்து பார்த்து வெட்கத்தில் அப்படியே தன்னை மறந்து படிகளில் நின்று கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவள் இன்னும் தன்னை மறந்து நின்று கொண்டிருப்பதை கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த கீதா “ஐஸ்வர்யா அம்மா!” என்று சத்தமாக அவளை அழைத்தாள். அவள் குரலில் நிதானம் பெற்ற ஐஸ்வர்யா “கூப்பிட்டீங்களா அக்கா?” என்று கேட்டபடி திரும்பி அவளை பார்க்க, “இல்ல நீங்க எதையோ யோசிச்சிட்டு நின்னுட்டு இருந்தீங்க. அதான் தெரியாம கீழே விழுந்துட்டா, என்ன பண்றதுன்னு கூப்பிட்டேன்.” என்றாள் கீதா.
அவள் சொன்னதை வைத்து தானும், அஸ்வினும் முத்தமிட்டு கொண்டதை அவள் பார்த்திருக்கிறாள் என நினைத்து மேலும் வெட்கப்பட்ட ஐஸ்வர்யா “இல்ல அக்கா, இனிமே விழ மாட்டேன்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அஸ்வினை பின் தொடர்ந்து தங்களது ரூமிற்கு சென்றாள்.
Formal wear-ல் இருந்த அஸ்வின் ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு இருக்க, அப்போது சரியாக உள்ளே வந்த ஐஸ்வர்யா அவன் ஏற்கனவே தனது சட்டையை கழட்டி பெட்டில் போட்டிருந்த நிலையில், இப்போது பேன்டை கழட்டிக் கொண்டு இருந்ததை பார்த்துவிட்டு “ஐயோ அஸ்வின்!” என்று கத்தியபடி திரும்பி நின்று கொண்டாள்.
அவளை முறைத்துப் பார்த்தபடி தனது பேண்டை கழட்டி கீழே போட்ட அஸ்வின் “நீ அவ்ளோ சீன் போட ஒன்னும் தேவையில்லை. எனக்கு இன்னர்ஸ் போடற ஹாபிட் இருக்கு.” என்று கடுகடுவென தன் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
அதனால் மெல்ல அவன் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா “இருந்தாலும்.. எனக்கு உன்னை இப்படி பார்க்க ஒரு மாதிரி தான் இருக்கு.” என்று கொஞ்சம் வெட்கத்துடன் சொல்ல, தான் அவள் குடும்பத்தை அளித்தவன் என்பதால் அவளுக்கு தன்னை பார்க்கவோ, தன்னுடன் நெருங்கி பழகவோ விருப்பமில்லை போலும்.. என்று அவள் சொன்னதை தவறாக புரிந்து கொண்ட அஸ்வின் ” இருக்கும் இருக்கும்.. என்னை பார்க்க உனக்கு ஒரு மாதிரி இருக்கத் தானே செய்யும்.. நீயும், உன் ஃபேமிலில இருக்கிறவங்களும் சேர்ந்து மொத்தமா எங்களை அழிக்க பார்த்தீங்க. ஆனா இப்போ நான் தப்பிச்சு வந்து உங்களை பழி வாங்கிட்டனே..
சோ உங்க பிளான் flop ஆயிடுச்சேன்னு நினைக்கும்போது உனக்கு என்னை பார்க்க ஒரு மாதிரி இருக்க தாண்டி செய்யும். ச்சீ.. நீ எல்லாம் என்ன ஜென்மமோ?” என்றபடி அவன் கழட்டிய பேண்டை அவள் மீது தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடைக்கு மாறினான்.
“கொஞ்சம் கூட நான் சந்தோஷமா இருந்துற கூடாதுன்னு இவன் தெளிவா இருக்கான். பேசிப் பேசியே ஒருத்தரை எப்படி கொல்றதுன்னு இவன் கிட்ட தான் கத்துக்கணும் போல.” என்று நினைத்த ஐஸ்வர்யா அவன் தன் மீது தூக்கி எறிந்த பேன்டை கீழே குனிந்து எடுத்து துவைக்கும் துணிகளை போடும் கூடையில் போட்டாள்.
அதை கவனித்த அஸ்வின் “என் வாட்ரோப்ல இருக்க எல்லா டிரஸையும் நான் ஹாஸ்பிடல் போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள நீ துவச்சு வைக்கிற.” என்று சொல்ல, “பட் அஸ்வின்.. ஆல்ரெடி துவச்சு மடிச்சு வெச்சிருக்கிறதை மறுபடியும் எதுக்கு துவைக்கணும்?” என்று கேட்டாள் ஐஸ்வர்யா.
“இது என் வீடு. இந்த வீட்ல நான் உன்ன தங்க விட்டு வச்சிருக்கறதே பெரிய விஷயம். இப்போ அவசர அவசரமா போய் சாப்பாடு வேணும்னு கொட்டிக்கிட்டியே.. அதெல்லாம் சும்மா வருமா! இந்த வீட்டை நீ வேலை செஞ்சா தான் உனக்கு சாப்பாடு போடுவேன். நான் என்ன சொன்னாலும் அத செய்றது தான் உன் வேலை.
அண்ட் துவைக்கிறதுக்கு வாஷிங் மெஷின் எல்லாம் யூஸ் பண்ண கூடாது. நீயே தான் கையில துவச்சு கொண்டு போய் டெரஸ்ல காய போட்டுட்டு.. எல்லாமே dry ஆகுற வரைக்கும் அங்கயே வெயிட் பண்ணி ரிட்டன் அதை ப்ராப்பரா மடிச்சு கொண்டு வந்து என் கப்போர்ட்ல அடுக்கி வைக்கிற.. இது எல்லாம் நான் ஈவினிங் ஹாஸ்பிடல்ல இருந்து ரிட்டன் வீட்டுக்கு வர்றதுக்குள்ள நடக்கணும். நான் சொன்னதை செய்யாம மட்டும் இரு உனக்கு இருக்கு. கீதா அக்கா நீ ஒழுங்கா ஒர்க் பண்றியான்னு உன்ன supervise பண்ணுவாங்க.” என்றாள் அஸ்வின்.
“ஓஹோ.. என்னை டார்ச்சர் பண்றதுக்கு நியூ டெக்னிக்கா! பரவால அஸ்வின், நீ என்ன சொன்னாலும் உனக்காக நான் கண்டிப்பா அதை செய்வேன்.” என்ற ஐஸ்வர்யா அவனது வாட்ரோபை திறந்து அதில் இருந்த அவனது ஆடைகளை எடுத்து ஒவ்வொன்றாக கட்டிலில் போட்டாள்.
தான் என்னவோ அவளுக்கு பெரிய தண்டனையை கொடுத்து விட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டு இருந்த அஸ்வின் இதை அவள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு செய்யத் தொடங்கிவிட்டதை பார்த்துவிட்டு, “ச்சே.. நமக்கு ப்ராப்பரா பனிஷ்மென்ட் கூட கொடுக்க தெரிய மாட்டேங்குது போல இருக்கு. அதான் இவ இத ஜாலியா பண்றா.. இவளை மாதிரி ஆளுங்க என்ன வேணாலும் செய்வாங்க. இவளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நெக்ஸ்ட் டைம் பெருச யோசிக்கணும்.” என்று நினைத்தான்.
அவன் குறுகுறுவென்று அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால், தானும் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தபடி “இவனுக்கு வர வர மனசாட்சியே இல்லாம போயிடுச்சு.. இவனோட வாட்ரோப்ல எவ்ளோ டிரஸ் இருக்கும்னு இவனுக்கு தெரியாதா? என்னால எப்படி எல்லாத்தையும் ஒரே நாள்ல துவைக்க முடியும்? அதுவும் கையில தான் துவைக்கணுமாம். பழிவாங்கிறேன் பழி வாங்குகிறேன்னு இவன் ஓவரா தான் போறான். அட்லீஸ்ட் நான் இப்படி எல்லாம் இவன் சொல்றதை கேட்டு செஞ்சாலாவது இவன் மனசு மாறுதான்னு பார்க்கலாம்.” என்று நினைத்த ஐஸ்வர்யா உள்ளுக்குள் இருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து எது என்ன என்று கூட பார்க்காமல் இஷ்டத்திற்கு அனைத்தையும் கட்டிலில் தூக்கி எரிந்து கொண்டிருந்தாள்.
அப்படி அவள் ப்ளூ நிறத்தில் இருந்த கோட் சூட் ஒன்றை ஹேங்கரில் இருந்து இருந்து வேகமாக கழட்டி தூக்கி எறிய போகும்போது, “ஏய் அது என் லாஸ்ட் பர்த்டேக்கு ஏன் டாடி ப்ரெசென்ட் பண்ணுது. அதை இதுல போடாத. அது காஸ்ட்லியான சூட். Dry clean தான் பண்ணனும்.” என்றபடி அஸ்வின் அவள் அருகில் சென்று அந்த கோட்டை பிடுங்க பார்த்தான்.
அப்போது ஐஸ்வர்யா துணிகளை கட்டிலில் போடுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலவற்றை தலையிலும் போட்டு வைத்திருந்ததால் அதில் தெரியாமல் கால் வைத்த அஸ்வின் அந்த கோட்டை பிடித்து இழுத்தபடி தரையில் விழப்போக, “அஸ்வின்!” என்று கத்திய ஐஸ்வர்யா அந்த கோட்டோடு சேர்த்து அவன் கையையும் பிடித்துக் கொண்டு அவனை கீழே விழாமல் தடுக்க முயற்சி செய்தாள்.
ஆனால் அவளது சிறிய இரண்டு கைகளால் அவனுடைய எடையை தாங்க முடியாமல் போய்விட, அவளும் அவனுடன் சேர்ந்து தரையில் விழுந்தாள். கட்டிலுக்கும், வாட்ரோப்பிற்கும் நடுவில் இருந்த சிரிய கேப்பில் அவர்கள் தரையில் படுத்து கிடந்தார்கள். விழுந்த வேகத்தில் ஐஸ்வர்யா அவன் கன்னத்தில் தெரியாமல் முத்தம் கொடுத்து விட, ஒரு நொடி அதில் மயங்கிய அஸ்வின் சில நிமிடங்களுக்கு முன்பு அவள் தன்னை ஆடுகள் இன்றி பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது என்று சொன்னதை நினைத்து பார்த்து அவளுக்கு தன்னுடன் நெருக்கமாக இருக்க பிடிக்கவில்லை.
ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் சூழ்நிலை தங்கள் இருவரையும் இணைக்க பார்க்கிறது என்று நினைத்தான். அதை அவனுக்கு உறுதி செய்யும் படி பதட்டத்தில் இருந்த ஐஸ்வர்யா எங்கே அவன் தன்னை தவறாக நினைத்துக் கொள்வானோ என நினைத்து “சாரி சாரி! நான் தெரியாம விழுந்துட்டேன். இந்த டிரஸ் வழுக்கி விட்டுருச்சு.” என்றபடி தரையில் தன் கையை ஊனி எழுந்து நிற்க முயற்சி செய்தாள்.
அவள் பயத்தில் அப்படி செய்து கொண்டிருக்க, “ஓஹோ.. உனக்கு என் பக்கத்துல வரவே பிடிக்கலையா! நான் உனக்கு க்ளோசா வந்தா அப்படியே ஓடுற!” என்ற நினைத்த அஸ்வின் அவளுக்கு எது பிடிக்கவில்லையோ அதைத்தான் தான் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் இடுப்பில் கை வைத்து அப்படியே அவளை தலையில் தள்ளி அவள் மீது பாய்ந்தான்.
“என்ன செய்றான் இவன்?” என்பதைப் போல படபடக்கும் இமைகளுடன் இதயம் வேகமாக துடிக்க ஐஸ்வர்யா அவனைப் பார்த்தாள். அவர்கள் இருவருக்கும் நடுவில் தடுப்பு சுவர் போல அஸ்வினின் அப்பா அவனுக்கு வாங்கி கொடுத்த காஸ்ட்லியான ப்ளூ நிற கோட் இருக்க, அதை கசங்க விடக் கூடாது என்று நினைத்த அஸ்வின் அவளிடம் இருந்து அதை வெடிக்கின்ற பிடுங்கி கட்டிலில் தூக்கி போட்டான்.
“நானும் அதை தானே டா செய்யப் போனேன்.. என்ன கட்டில்ல போடக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்ப நீ மட்டும் எதுக்கு போடுற?” என்று கேட்பதைப்போல ஐஸ்வர்யா அவனை பாவமாக பார்க்க, தன் கையால் அவளது இரு கன்னங்களையும் இறுக்கிப் பிடித்த அஸ்வின் “இப்ப உனக்கு எப்படி இருக்குன்னு சொல்லு.” என்றான்.
அவன் எதைப் பற்றி கேட்கிறான் என்று புரியாததால் குழப்பத்துடன் அவனைப் பார்த்த ஐஸ்வர்யா; “நீ.. நீ இப்ப எத பத்தி கேக்குற அஸ்வின்?” என்று கேட்க, “அப்படியே எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத டி. நான் உன் கிட்ட என்ன சொல்லி இருக்கேன்? என் கிட்ட பேசும்போது மரியாதைக்காக பேசணும். என்னை பேர் சொல்லி கூப்பிடுற உரிமை உனக்கு இல்ல மிஸ்டர் அஸ்வின்னு சொல்லணும் உன் கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல! என்ன அதுக்குள்ள மறந்திருச்சா? உனக்கு சும்மா சும்மா எல்லாத்தையும் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான் அஸ்வின்.
அவன் திடீர் திடீர் என்று என்ன என்னமோ பேசுகிறான். ஆனால் அதற்கெல்லாம் எப்படி ரியாக்ட் செய்வது என்று அவளுக்கு தான் புரியவில்லை. அதனால் அவள் கலக்கிய கண்களுடன் வழக்கம்போல் அவனை பாவமாக பார்க்க, தனது நெருக்கம் அவளுக்கு பிடிக்காததனால் தான் இப்படி அழுகிறாள் என்று நினைத்த அஸ்வின் “என்ன டி.. நான் பக்கத்துல வந்தாலே உனக்கு எரியுதோ!” என்று ஆத்திரம் பொங்க கேட்டான்.
எனக்கு மிகவும் பிடித்த அவனுடைய குட்டி பூனை கண்கள் இப்போது கோபத்தில் சிவந்திருப்பதை கண்டு தன் முகத்தை திருப்பிக் கொண்ட ஐஸ்வர்யா “நீ என்ன உன் வைஃப்னு நெனச்சு லவ்வோட ஆசையா பார்த்தா எனக்கு ஏன் பிடிக்காமல் போகப்போகுது அஸ்வின்? ஆனா நீ உன் குடும்பத்தில் இருக்கிறவங்கள கொன்ன கொலைகாரியா தானே என்ன பாக்குற! நீ வேண்டா வெறுப்பா என் பக்கத்துல வரும்போது எனக்கு அது எப்படி பிடிக்கும்னு நினைக்கிற?” என்று நினைத்தாள். ஆனால் பாவம் அவளுக்கு அதை அவனிடம் நேரடியாக கேட்க வாய் வரவில்லை.
– முத்தங்கள் தொடரும்