Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 9

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 9

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 9 

அஸ்வின் வீட்டிற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரை காணவில்லை அது தொடர்பாக அவளுக்கு ஏதேனும் தெரியுமா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். தங்களது குடும்பத்தினால் அஸ்வினும் அவனது குடும்பத்தினரும் அனுபவித்தது போதும். அவனது மனைவியாக அவனை எந்த பிரச்சனையிலும் சிக்க விடாமல் தடுப்பது தனது கடமை என்று நினைத்த ஐஸ்வர்யா எனக்கு எதுவும் தெரியாது என்றாள். 

“ஓகே மேடம், உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் பத்தி உங்களுக்கும் ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சதுனா, நீங்களும் மறக்காம எங்களுக்கு inform பண்ணுங்க. இந்த கேஸ் சம்பந்தமா நீங்களும் மிஸ்டர் அஸ்வினும் விசாரணைக்கு எப்ப வேணாலும் போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியதற்கும். ஒருவேளை எங்களால எதுவும் கண்டுபிடிக்க முடியலைனா, கண்டிப்பா இந்த கேஸ் சிபிஐக்கு கூட மாறுறதுக்கு சான்ஸ் இருக்கு.” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, கண்களில் கண்ணீருடன் அவரைப் பார்த்த ஐஸ்வர்யா “அப்படி நடந்தா கூட எனக்கு சந்தோசம் தான் சார். என் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் இப்ப எப்படி இருக்காங்க அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரிஞ்சா போதும். நான் கோபப்பட்டு அவங்க கூட பேசாம இருந்தது தப்பா போயிடுச்சான்னு எனக்கு இப்ப நெனச்சா கஷ்டமா இருக்கு.” என்று உடைந்த குரலில் சொன்னாள். 

“Wow.. what a performance! இவ கண்ணு முன்னாடி தான் அவங்க எல்லாரையும் நான் போட்டு தள்ளினேன். ஆனா என் முன்னாடியே இவ இவ்ளோ அழகா நடிச்சு கொட்டுறாளே! இந்த ஆக்டிங் skills இவ ஃபேமிலில இருக்கிற எல்லாருக்கும் நேச்சுரலாவே இருக்கும் போல இருக்கு.

என்ன ஒரு வித்தியாசம்னா, அவங்க எல்லாரும் எங்களை டோட்டலா அழிக்கிறதுக்காக எங்க கிட்ட நடிச்சு கொட்டுனாங்க. பட் இவ உண்மையை மறைச்சு எல்லாத்தையும் மாத்தி சொல்லி என்னை காப்பாற்றுவதற்காக இப்படி நடிக்கிறா. ஆனா இதுவும் உண்மையா, எனக்காக தான் இவ இதையெல்லாம் பண்றாளா? இல்ல நான் இவள நம்பனும்னு புதுசா ஒரு டிராமா போடுறாளான்னு தான் தெரியல.” என்று நினைத்த அஸ்வின் எதுவும் பேசாமல் அமைதியாக நடப்பதை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஐஸ்வர்யாவிடம் கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டு முடித்த இன்ஸ்பெக்டர் பின் அஸ்வினை மரியாதையுடன் பார்த்து “ஓகே மிஸ்டர் அஸ்வின், நாங்க இப்ப கிளம்பறோம். பட் கூடிய சீக்கிரம் மறுபடியும் மீட் பண்ணி இந்த கேஸ் சம்பந்தமாக பேச வேண்டியது இருக்கும். நீங்க ரெடியா இருங்க. போலீஸ் ஸ்டேஷனுக்கு வர மாதிரி இருந்தாலும் நீங்க கோஆபரேட் பண்ணுவீங்கன்னு நான் நம்புறேன்.” என்று சொல்ல, 

உடனே எழுந்து நின்ற அஸ்வின் “Sure Sir, தினகரன் அங்கிளோட ஃபேமிலி எனக்கு ரொம்ப இம்பார்டன்ட். ரொம்ப வருஷமா நாங்க எல்லாரும் ஃபேமிலி ஃபிரண்ட்ஸா இருக்கோம். ஐசு மேரேஜ் மேட்டர்ல தான் அவங்க என்ன கொஞ்சம் டிசப்பாய்ண்ட் பண்ணிட்டாங்க. 

But still, எனக்கு அவங்க செஞ்சது எதையும் நான் மறக்கல. அவங்க எங்க இருந்தாலும் கண்டிப்பா நல்லா இருப்பாங்கன்னு நானும் நம்புறேன். ஒருவேளை லாஸ்ட் மினிட்ல ஐஸ்வர்யாவுக்கு மேரேஜ் ஸ்டாப் ஆயிடுச்சுன்னு நெனச்சு அவங்க டிசப்பாய்ன்மென்ட்ல கூட வெளிய தலை காட்டாம இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நீங்க தான் அதை கண்டுபிடிச்சு எங்களுக்கு சொல்லணும். இப்ப நாங்க எல்லாரும் ரிலேட்டிவ்ஸ் ஆகிட்டோம். அந்த ஃபேமிலியை பார்த்துக்கிறதுல எனக்கும் ஈக்குவல் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு.” என்று சொல்ல, 

“எப்ப இருந்து இப்படி எல்லாம் மாத்தி மாத்தி பேச கத்துக்கிட்ட அஸ்வின்? என்னோட பழைய அஸ்வின் கொஞ்சம் கொஞ்சமா காணாம போய்கிட்டு இருக்கான். அவனை எப்படி திரும்ப கொண்டு வந்து அவன் மனசுல இடம் பிடிச்சு, என் லவ்வை அவனுக்கு ப்ரூவ் பண்ண போறேன்னே எனக்கு தெரியல.” என்று நினைத்து அவனையே பாவமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா. 

அவர்களிடம் விடைபெற்று கொண்டு இன்ஸ்பெக்டர் தனது ஆட்களுடன் வெளியில் சென்று விட்டார். தனது கம்பெனியின் மேனேஜரையும் “நீங்க ஆபீஸ்க்கு போங்க. ஹாஸ்பிடலுக்கு போய் என் சிஸ்டரை பாத்துட்டு ஆபீஸ்க்கு வரேன். ஆல்ரெடி நான் சொன்ன மாதிரி போர்ட் மெம்பர்ஸ் கூட ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணுங்க. இனிமே எல்லாத்தையும் நான் தான் ஹேண்டில் பண்ண போறேன்னு எல்லாருக்கும் நான் சொல்லணும். எங்களை யார் அழிக்க பார்த்தாலும்  KM Groups- ஐ யாராலையும் எதுவும் பண்ண முடியாதுன்னு நான் ப்ரூவ் பண்ணி காட்டுறேன்.” என்று ஓர கண்ணால் ஐஸ்வர்யாவை பார்த்தபடி சொன்னான். 

“நீங்க ஐஸ்வர்யா மேடமை கல்யாணம் பண்ண நியூஸ் தெரிஞ்ச உடனேயே நம்ம ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் ஆஃப் ஆயிட்டாங்க. ஆல்ரெடி அவங்களுக்கு நம்ம கம்பெனியை லாஸ்ல இருந்து மீட்டு கொண்டு வர முடியும்னு நம்பிக்கை வந்துருச்சு சார். நீங்க சொன்ன பிளான் எல்லாத்தையும் நான் அடுத்தடுத்து எக்ஸிக்யூட் பண்றேன். எல்லாமே இப்போதைக்கு under control தான். Nothing to worry!” என்ற ஜெனரல் மேனேஜர் அஸ்வினிடம் சொல்லிவிட்டு தனது அசிஸ்டெண்ட்களுடன் அங்கே இருந்து கிளம்பி சென்றார். 

உடனே அஸ்வினும் தனது ரூமை நோக்கி செல்ல போக, “ஒரு நிமிஷம்!” என்ற ஐஸ்வர்யா அவனை பின் தொடர்ந்தவாறு படிகளில் ஏறி சென்றாள். அஸ்வின் என்ன என்பதைப் போல அவளை திரும்பி பார்க்க, “இந்த சிபிஐக்கு மாறப்போகுதுன்னு இன்ஸ்பெக்டர் சொல்லிட்டு போறாரு. இப்ப என்ன பண்ண போற? அவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சுன்னு தெரியாம இந்த கேசை முடிக்க மாட்டாங்க இல்ல! எனக்கு பயமா இருக்கு அஸ்வின். மறுபடியும் வந்து யாராவது கேட்டா என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல.” என்றாள் ஐஸ்வரியா. 

“உனக்கு நிஜமாவே இந்த இஸ்யூல நான் மாட்டக் கூடாதுன்னு என் மேல அக்கறையா? இல்ல, நெக்ஸ்ட் நான் என்ன பண்ண போறேன்னு என் பிளானை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதை சைலண்டா போலீஸ்க்கு போட்டு குடுத்து என்னை மாட்டி விடலாம்ன்னு பார்க்கிறாயா?” என்று சந்தேகமாக கேட்ட அஸ்வின் தன் புருவங்களை உயர்த்தி அவளை பார்க்க, கண் கலங்க அவனைப் பார்த்த ஐஸ்வர்யா, 

“இங்க நடந்தது எல்லாத்தையும் பார்த்தும் உனக்கு கொஞ்சம் கூட என் மேல நம்பிக்கை வரலையா அஸ்வின்? என் ஃபேமிலில இருக்கிறவங்க உனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணது தப்புதான். அதை நினைச்சா எனக்கு அவங்க மேல வெறுப்பா இருக்கு. இருந்தாலும் என் விஷயத்துல அவங்க இத்தனை வருஷமா என்ன பாசமா வாழ்ந்துக்கிட்டாங்க. 

நான் அந்த ஃபேமிலில பிறந்து வளர்ந்து இருக்கேன் அஸ்வின். அப்படி இருந்தும் நீ அவங்க எல்லாரையும் என் கண்ணு முன்னாடி கொன்னத கூட நான் தப்பா நினைக்கல. அவங்க பண்ண தப்புக்கு அது தண்டனைன்னு நினைச்சு இப்ப போலீஸ் வந்து கேட்கும் போது கூட நான் உனக்கு ஏத்த மாதிரி தானே பேசினேன்.. இன்னும் நான் என்ன பண்ணா தான் உனக்கு என் மேல நம்பிக்கை வரும்?” என்று உடைந்த குரலில் கேட்டாள். 

அவள் அருகில் சென்று அவளை இடிப்பதை போல நின்ற அஸ்வின் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து “நீ என்ன பண்ணாலும் எனக்கு உன் மேல நம்பிக்கை வராது. அதான் இப்ப கண் கூடவே உன்னோட ஆக்டிங் ஸ்கில்ஸ் எப்படி இருக்கும்னு பாத்துட்டேனே! இன்ஸ்பெக்டர் கிட்ட பொய் சொல்லி நடிச்ச மாதிரி என் கிட்டயும் நீ நல்லா தான் நடிக்கிற. ரொம்ப வருஷமா எங்க எல்லாரும் முன்னாடியும் நடிச்சு நடிச்சு உனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். பேசாம இந்த சாப்ட்வேர் இன்ஜினியரிங் எல்லாத்தையும் விட்டுட்டு நீ ஆக்ட்ரஸ் ஆகிருக்கலாம். கண்டிப்பா உன் ஆக்டிங்க்கு நல்ல ஸ்கோப் இருந்திருக்கும்.” என்று கிண்டலாக சொல்லிவிட்டு அவளை ஏளனமாக பார்த்து சிரித்தான். 

அவன் பேசியதை கேட்டு மனமுடைந்த ஐஸ்வர்யா பாவமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அப்படி தன்னை பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திரும்பி நடக்க முயற்சி செய்யும்போது அவள் மீது இடுத்தப்படி படிகளில் ஏறினான் அஸ்வின். அவன் மோதியதில் தடுமாறி ஐஸ்வர்யா கீழே விழப்போக, அதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அஸ்வின் “ஐசு!” என்று தன்னையும் அறியாமல் கத்தியபடி அவள் பக்கம் திரும்பி அவள் இடுப்பில் கை வைத்து அவளை கீழே விழாமல் தன் பக்கம் இழுத்து பிடித்துக் கொண்டான். 

அதில் ஐஸ்வர்யா அவன் மீது மோத, அப்போது அவர்கள் இதழ்கள் நான்கும் தங்களை மீறி சந்தித்துக் கொண்டன. அதனால் விழிகள் விரிய அவள் அவனைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். சிறு வயதில் இருந்தே அஸ்வினை காதலித்து இருந்தாலும், அதை அவள் அவனிடம் நேரடியாக ஒருபோதும் சொல்லியது இல்லை. 

அவள் சொல்லலாம் என்று நினைக்கும் போது காலதாமதம் ஆகிவிட்டது. இப்போது இத்தனை வருடங்கள் கடந்து முதல் முறையாக அவர்கள் முத்தமிட்டு கொண்டு இருக்கிறார்கள். எதிர்பாராததாக இருந்தாலும் இதுதான் அவர்களது முதல் முத்தம். அதுவும் திருமணத்திற்கு பிறகு நடந்திருக்கிறது. அதை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட ஐஸ்வர்யா தன்னை மறந்து அவனை அணைத்துக் கொள்ள, அவனும் நடந்தது அனைத்தையும் மறந்துவிட்டு அவள் விழிகளில் தன்னை தொலைத்து அவள் இதழ்களில் சுவையை உணர்ந்ததால் அவனையும் மீறி அவளை முத்தமிட தொடங்கினான். 

அப்படியே சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆற தழுவி ஆழமாக முத்தமிட்டு கொண்டிருக்க, கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் ஐஸ்வர்யா சில நொடிகளுக்கு முன் “ஆஆஆஆ!” என்று சத்தமாக கத்தி இருந்ததால் என்ன பிரச்சனை என்று நினைத்து பதட்டத்தில் அங்கே ஓடி வந்த கீதா “ஐஸ்வர்யா அம்மா!” என்று கத்திக் கொண்டு அங்கே வந்தாள். ஒருவேளை அவர்கள் இருக்கும் கோலத்தை கவனித்திருந்தால், கீதா அங்கே கரடியாக மாறாமல் இருந்திருக்கலாம். 

ஆனால் இப்போது தாமதம் ஆகிவிட்டது. அவள் சத்தம் கேட்டு அஸ்வின், ஐஸ்வர்யா இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு அவசரமாக பிரிய, அதில் படிக்கட்டில் தடுமாறி மீண்டும் கீழே விழப்போனாள் ஐஸ்வர்யா. அதைக் கண்டு இம்முறை மீண்டும் கீதா “ஐஸ்வர்யா அம்மா!” என்று குரல் கொடுக்க, அவள் கையைப் பிடித்து அவளை கீழே விழ விடாமல் தடுத்த அஸ்வின் முன்பு நடந்ததைபோல இப்போதும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவளது தோள்களில் கை வைத்து  அவளை தன் மீது விழாமல் தடுத்து நிறுத்தினான்.  ‌ 

அதனால் ஐஸ்வர்யா நேராக நின்றுக்கொள்ள, இப்படி தன் முன்னே விழுந்து சீன் போடுவது கூட அவளுடைய திட்டமாகத் தான் இருக்கும் என்று நினைத்த அஸ்வின் அவளை முறைத்து பார்த்துவிட்டு தனது ஷூ அணிந்த கால்கள் டொக் டொக் என்று பலத்த சத்தம் எழுப்ப வேகமாக படிகளில் ஏறி தனது ரூமிற்கு சென்றான். அவன் கொடுத்த அந்த ஒற்றை முத்தத்தில் இன்னும் தன்னை மறந்து அங்கேயே நின்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா. 

– முத்தங்கள் தொடரும்

You may also like

Leave a Comment

About Me

Featured