Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 99

மூர்கனின் காதலி CH 99

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 99

அனைவரும் பாட்டு பாடி விளையாடலாம் என்று முடிவு செய்திருக்க, தன் மனதில் இருப்பவற்றை விஷ்வாவிடம் தெரிவிக்கும் விதமாக ஒரு பாடலை பாடினாள் மேகா. “ஆஆஆ‌… இதெல்லாம் செல்லாது செல்லாது. First lineல‌ இருந்து தானே அக்கா பாடணும்… நீங்க என்ன நடுவுல இருந்து பாடுறிங்க..??” என்று வேகமாக நிலா கேட்டதால், “ஏதோ ஒரு flowல பாடிட்டேன் விடுடி. இப்போ கரெக்டா பாட்கிறேன் பாரு.” என்ற மேகா அதே பாடலை முதல் வரியில் இருந்து மீண்டும் பாட தொடங்கினாள்.

பின் அனைவரும் தொடர்ந்து பாடி விளையாட, “மாமா அடுத்து கா வரிசையில வர்ற பாட்ட நீங்க பாடணும்.” என்றாள் நிலா. “இல்லமா எனக்கு பாட்டு எல்லாம் பாட வராது. நீங்க பாடுங்க. எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு important video conference இருக்கு. நான் அதுக்கு கொஞ்சம் notes prepare பண்ண வேண்டியது இருக்கு. நான் கிளம்புறேன். அப்புறமா வரேன். Bye..!!” என்ற விஷ்வா அங்கே இருந்து எழுந்து செல்லும்போது மேகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான்.

“ம்ம்.. அதென்ன கிளம்பும்போது அவளை பார்த்து மட்டும் bye சொல்லிட்டு போறான்.. ஏன் என்னையும் பார்த்து டாட்டா காட்டிட்டு ஏதாவது சொல்லிட்டு போனா என்னவாம் இவனுக்கு..?? போயா போ.. metal மண்ட..!!” என்று நினைத்த மேகா கொஞ்ச நேரம் அவர்களுடன் சேர்ந்து விளையாடினாள்.

பின் அவன் அங்கே இல்லாததாலோ என்னவோ தெரியவில்லை. அவள் மனம் வெறுமையை உணர, “நீங்க விளையாடுங்க. எனக்கு தலை வலிக்குது. நான் ரூமுக்கு போறேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து இதற்கு முன் அவள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றாள்.

அவள் கண்கள் விஷ்வாவைத் தேட, அங்கே அவன் இல்லை. “அவர்தான் video conference இருக்குன்னு சொன்னாரே..!! சோ அத அட்டென்ட் பண்றதுக்கு வேற ரூமுக்கு போய்ட்டாரு போல.” என்று நினைத்தவள், சோர்வாக கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த நீலக்கடலை வெறித்தாள். அவள் மனம் விஷ்வாவை அதிகமாக miss செய்தது. அதனால் என்ன செய்வது என்று யோசித்தவள், உடனே எழுந்து சென்று அந்த அறைக்குள் தனது பொருட்கள் அடங்கிய trolley bag இருக்கிறதா என்று தேடினாள்.

அவள் எதிர்பார்த்ததை போலவே அது அங்கிருந்த பெரிய Wooden cupboardக்குள் வைக்கப்பட்டு இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்த மேகா அதில் இருந்த பொருட்களுக்குள் வேகமாக தேடி தனது குட்டி diaryஐ கண்டு பிடித்தாள்.

சுகம், துக்கம், சோகம், பரிதவிப்பு, ஏக்கம், சந்தோஷம் என்று எது அவளை தாக்கினாலும் அதை diaryல் எழுதும் பழக்கம் மேகாவிற்கு உண்டு. அதனால் அதையும் ஒரு பேனாவையும் எடுத்துக்கொண்டு வெளியில் யாரும் இல்லா ஒரு இடத்திற்கு சென்று கடலைப் பார்த்தவாறு ஒரு couchல் அமர்ந்த மேகா தனது டைரியை திறந்து அதில் அன்றைய நாளின் தேதியை எழுதிவிட்டு தொடர்ந்து..
“My Dear metal Mandayaa…
நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமா..?? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க..?? உனக்கு என் மேல என்ன feelings இருக்குனே என்னால புரிஞ்சுக்க முடியலடா. Sometimes என்ன impress பண்ற மாதிரி ஏதாவது நீ பண்ணும்போது, உனக்கு என் மேல லவ் இருக்குன்னு தோணுது. நேத்து பண்ண மாதிரி அப்பப்போ ஏதாவது பண்ணி நீ என்ன hurt பண்ணும்போது, உனக்கு என் மேல லவ் இல்லைன்னு தோணுது. இந்த மாதிரி assumptionsக்கு நடுவுல எனக்கு உன்க்கூட சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு விஷ்வா. ஆனா நீயும் இந்த விதியும் சேர்ந்து என்ன எப்படி surprise பண்ண போறீங்கன்னு தெரியல. I’m waiting..!!” என்று எழுதியவள், அதற்கு மேல் என்ன எழுதுவது என்று பேனாவை தன் கன்னத்தில் தட்டி யோசித்து கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட இப்படியே அவர்கள் 4,5 நாட்களுக்கு மேலாக Maldivesல் இருந்து சென்னையை நோக்கி cruiseல் பயணித்தார்கள். அந்த பயணம் முழுவதிலும் விஷ்வாவும் மேகாவும் ஒருவரோடு ஒருவர் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருந்ததால், இருவருக்கும் நடுவில் இருந்த கண்ணுக்கு தெரியாத சுவர் மறையாமல் அப்படியே இருந்தது. தன் familyஉடன் இந்த travel timeஐ சந்தோஷமாக enjoy செய்ய வேண்டும் என்று நினைத்த மேகா ஒரு கட்டத்திற்கு மேல் விஷ்வாவையும் அவனுடனான தனது relationshipஐ பற்றியும் யோசிப்பதை விடுத்து அவர்களுடன் தன் நேரத்தை செலவிட்டாள்.

அதனால் விஷ்வாவும் தன்னை தனே அவனது வேலைகளுக்குள் மூழ்கடித்துக் கொண்டான்.
இப்படியே அவர்கள் பயணம் முடிந்து அனைவரும் சென்னை வந்து சேர்ந்தார்கள். வெகு நாட்களாக அங்கேயும் இங்கேயும் சுற்றிக் கொண்டிருந்ததால் மேகாவின் சொந்த பந்தங்கள் உடனே கிளம்பி மதுரைக்கு சென்று விட்டார்கள். அவர்களைப் போல சௌபர்ணிகாவும் தன் வீட்டிற்கு செல்ல போக, “அக்கா ப்ளீஸ் நீங்களும் எங்கக் கூட இங்கயே இருங்க. நம்ம வீடு இருக்கும்போது, நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க..?? சீக்கிரமா பாட்டிக்கு சரியாகி அவங்களும் வீட்டுக்கு வந்துருவாங்க. நம்ம எல்லாரும் இங்க ஒண்ணா இருக்கணும். எனக்கு இங்க ஆளுங்க கம்மியா இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு அக்கா. ப்ளீஸ் எனக்காகவாவது இங்க இருங்க..!!” என்று அவளிடம் கெஞ்சினாள் மேகா.
உண்மையில் சௌபர்ணிகாவிற்கும் குடும்பமாக தன் தம்பியுடன் சேர்ந்து தனது பிறந்த வீட்டில் வாழ வேண்டும் என்றுதான் ஆசை. இருப்பினும் விஷ்வாவின் மனநிலையை கருத்தில் கொண்டு அவள் விலகியே இருந்திருக்க, மேகாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விஷ்வாவை பார்த்தாள். “ஏன் இப்படி permission கேட்கிற மாதிரி என்னை பாக்குறீங்க..?? இது உங்க வீடு. நீங்க இங்கதான் இருக்கணும். நானே இதை பத்தி உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இந்த குட்டச்சி முந்திக்கிட்டா.” என்று சௌபர்ணிகாவிடம் சொன்ன விஷ்வா சேரனை பார்த்து, “நீங்களும் இங்கயே இருங்க. நெக்ஸ்ட் உங்க ரெண்டு பேருக்கும் தான் மேரேஜ். உங்ககிட்ட கேட்டுட்டு dates final பண்ணிக்களாம்ன்னு தான் wait பண்ணிட்டு இருக்கேன்.” என்றான்.

“என்ன சொல்றீங்க விஷ்வா.. அதுக்குள்ள எங்களுக்கு மேரேஜ்-ஆ..?? இப்பதானே உங்க reception முடிஞ்சு எல்லாரும் இந்தியா வந்திருக்கோம்..!! அதுக்குள்ள எப்படி அடுத்த function plan பண்றது..?? விடுங்க கொஞ்ச நாள் ஆகட்டும்.” என்று சேரன் சொல்ல, “ஆமா விஷ்வா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். முதல்ல பாட்டிக்கு சரியாகட்டும். மேகா சொன்ன மாதிரி அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்டார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததுக்கப்புறம், நானும் சேரனும் ஹாப்பியா கல்யாணம் பண்ணிக்கிறோம்.” என்றாள் சௌபர்ணிகா.‌

“நீங்க ஏன் அதை பத்தி எல்லாம் யோசிக்கிறீங்க..?? ஆல்ரெடி நீங்க ரெண்டு பேரும் எனக்காக ரொம்ப வருஷம் wait பண்ணிட்டீங்க. இப்போ பாட்டிய reasonஆ சொல்லி மறுபடியும் உங்க marriageஐ delay பண்ண வேணாம். மேகா வீட்ல ஏதோ ஜாதகம் பார்த்து ஐய்யர வர வச்சு நாள் குறிச்சாங்கன்னு சொல்லிட்டு இருந்தா… அந்த மாதிரி உங்களுக்கு தெரிஞ்ச ஜோதிகாருங்க யாராவது இருந்தா வர சொல்லுங்க. இன்னைக்கே உங்க engagement and marriage dateஐ final பண்ணிடலாம்.” என்று விஷ்வா உறுதியாக சொல்ல, “ஆமா ரொம்ப தள்ளி போட வேண்டாம். உங்களுக்கு மறுபடியும் functions வந்தா office work smoothஆ போகாது எல்லாம் late ஆகும்னு தோணுச்சுன்னா, கிட்ட கிட்ட இருக்கிற மாதிரி dates choose பண்ணிக்கலாம்.” என்றாள் மேகா.

சௌபர்ணிகாவிற்குள்ளும் சேரனை சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அத்தோடு இப்போது தன் தம்பியும் அவர்களது திருமணத்தைப் பற்றி பேசி விட்டதால், “எனக்கு ஓகே. எங்க கல்யாண வேலைய எல்லாம் பாக்குறதுக்கு என் தம்பியும், தம்பி பொண்டாட்டியும் இருக்கும்போது எனக்கு என்ன கவலை..??” என்றவள் சேரனை பார்த்து, “உனக்கு ஓகே தானே Chey..!! நீ யார்கிட்டயாவது permission கேட்கணும்னா பேசிட்டு கூட சொல்லு.” என்றாள்.
“permission கேட்கிற அளவுக்கு எல்லாம் சீன் இல்ல. அப்படியே நான் கேட்கணும்னாலும் எனக்கு யார் இருக்கா சொல்லு..?? நானே அனாதை ஆசிரமத்தில வளர்ந்து meritல college seat சீட் கிடைச்சு நானா படிச்சு இந்த வேலைக்கு வந்துருக்கேன். நான் சின்ன வயசுல ஹோம்ல இருந்தப்போ எனக்கு ஒரு அங்கிள் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணாரு. நம்ம மேரேஜ்க்கு அவர மட்டும் invite பண்ணா போதும்.” என்று சேரன் சொல்ல, “Okay Then, tomorrow‌ ஜோசியக்காரர் யாரையாவது வரச் சொல்லி dates fix பண்ணிடலாம்.” என்ற விஷ்வா மகேஷை பார்த்தான்.

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு பாஸ். எங்க அம்மா அவர்கிட்ட தான் ஜாதகம் பாப்பாங்க. நான் அவரை நாளைக்கு இங்க வர சொல்றேன்.” என்றான் மகேஷ். பின் அனைவரும் கிளம்பி அவரவர் அறைக்கு சென்றார்கள்.

ஆதித்யாவின் வீட்டில் அவனும், மீராவும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். “நீ எப்ப பாத்தாலும் எவ கூடையாவது கடல போட்டுட்டே இருப்ப.‌.. நான் உன்னை எதுவும் கேட்க கூடாதா..?? உனக்குதான் மேரேஜ் ஆயிடுச்சில்ல..‌ அப்ப கூட உன்னால சும்மா இருக்க முடியலையா ஆதி…??” என்று மீரா கோபமாக கேட்க, “என்னடி என்னையே எதிர்த்து திமிரா பேசுறியா நீ..?? நான் அப்படி தாண்டி பண்ணுவேன். உன்னால அடங்கி இருக்க முடிஞ்சா இரு. இல்லனா இப்பவே என் வீட்டைவிட்டு வெளியே போ.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கோபமாக சொன்னான் ஆதித்யா.

“நான் எதுக்குடா வெளிய போகணும்..?? நீ உன் இஷ்டத்துக்கு ஆடுவ.. உன்ன பாத்து பயந்து நான் இந்த வீட்டைவிட்டு வெளிய போகணுமா..?? நீ இப்படியே பண்ணிட்டு இருந்தனா, உனக்கு நிறைய பொண்ணுங்க கூட illegal affairs இருக்குன்னு போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். ஒழுங்கா இருக்கிற வழிய பாரு..!!” என்று மீரா தன் ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரிக்க, “எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்ல இருந்துகிட்டு என் மேலேயே கம்ப்ளைன்ட் கொடுப்பேன்னு சொல்லுவ..??” என்ற ஆதித்யா அவளை அடிக்க கை ஓங்கினான்.

அதுவரை அவர்கள் சண்டை போடுவதை “வயசு பையன்னா இப்படித் தான் இருப்பான். அதுக்குன்னு என்ன பண்றது..?? இவதான் அவன் வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்.” என்று நினைத்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவின் அப்பா மரகதமணி, “டேய் என்னடா பண்ற..??” என்று தன் குரலை உயர்த்தி கேட்டதால் அப்படியே மீராவை அடிக்க ஓங்கிய கையை பாதியில் நிறுத்தினான் ஆதித்யா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured