Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 98

மூர்கனின் காதலி CH 98

by Thenaruvi Tamil Novels
97 views

அத்தியாயம் 98

விஷ்வா பாதியில் விட்டுச் சென்றதால் அவனுக்கு தன்மீது இருப்பது காதலா காமமா..?? இல்லை என்றால் எதுவுமே இல்லையா..?? என்றெல்லாம் யோசித்து குழம்பிக் கொண்டிருந்த மேகா “என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல.” என்று நினைத்து கதறி அழுதுக்கொண்டு இருக்க, உள்ளே வந்த விஷ்வா அவள் அழுவதை பார்த்தான். அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

“பாரு விஷ்வா நல்லா பாரு… நீ பண்ண வேலையால அவ எப்படி feel பண்ணி அழுதுட்டு இருக்கான்னு பாரு..!! அன்னைக்கு நீ அவளை தெரியாம பார்த்ததுக்கே அவ கோபப்பட்டா. அத அதுக்குள்ள மறந்துட்டியா..?? அவ விருப்பம் இல்லாம நீ அவளை force பண்ணி கல்யாணம் பண்ணதே தப்பு. இதுல உன் இஷ்டத்துக்கு அப்படியே அவ மேல போய் மாடு மாதிரி பாயிற..!! நீ எல்லாம் மனுசனே இல்லடா. அவ உன்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருந்தா இப்படி உக்காந்து அழுதுட்டு இருப்பா..!! இனிமே நீ அவ மூஞ்சில எப்படி போய் முழிப்ப..??” என்று அவன் மனசாட்சி அவனைக் காரித்துப்ப, அவமானத்தில் தலைகுனிந்த விஷ்வா அவளைப் பார்க்க முடியாமல் “Sorry..!!” என்று சொல்லிவிட்டு சென்று sofaவில் படுத்துக் கொண்டான்.

அவன் தன் முகத்தை கை வைத்து மூடிக் கொண்டு படுத்திருக்க அவனை திரும்பி பார்த்து முறைத்த மேகா, “இப்போ எதுக்கு நீங்க Sorry சொல்றீங்க..?? நீங்க என்கிட்ட closeஆ வந்ததுக்கா..?? இல்ல பாதியில‌ நீங்க அப்படியே போனதுக்கா..?? பாட்டி நமக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும்ன்னு சொல்லும்போதே நீங்க வேண்டா வெறுப்பா என்ன பாத்தீங்கல்ல விஷ்வா..!! அப்ப எனக்கு ஒன்னும் புரியல. இப்பதான் தெரியுது. உங்க குழந்தைக்கு நான் அம்மா ஆகுறதுல உங்களுக்கு விருப்பமில்லை. அதான் நீங்களே ஏதோ ஒரு ஆசையில என்கிட்ட வந்திருந்தாலும், இது வேண்டாம்னு பாதியில போயிட்டீங்க.
நீங்க simpleளா sorry சொல்லிட்டா அத வச்சு நான் என் வாழ்க்கைய சரி பண்ண முடியுமா..?? எனக்கு எதுக்கு உங்க sorry..!! அதான் நீங்க யாரோ நான் யாரோன்னு இப்படி அடிக்கடி prove பண்ணிட்டே இருக்கீங்களே..!! இதுவே போதும். இனிமே நான் என் limitல இருந்துக்கறேன்.” என்று தன் மனதிற்குள் அவனிடம் சொன்னவள், இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அப்படியே நேரம் கடந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. “என்ன இது.. அதுக்குள்ள நான் இவளுக்கு addict ஆகிட்டேனா..?? இவ இல்லாம தூக்கம் வரமாட்டேங்குதே.. ச்சே.. again sleeping pillsதான் போடணுமா..??” என்று நினைத்து எழுந்து அமர்ந்த விஷ்வா அவனது trolleyல் உள்ள சிறிய pouch ஒன்றிலிருந்து தூக்க மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டு வந்து படுத்தான்.

“ஓஹோ நான் பக்கத்துல இல்லைனா தூக்கம் வரலைன்னாலும் தூக்க மாத்திரை வேணும்னாலும் போட்டுட்டு தூங்குவீங்க.. பட் என் பக்கத்துல வந்து படுக்க மாட்டீங்க..!! அந்த அளவுக்கு நமக்குள்ள distance ஆயிடுச்சா விஷ்வா..?? இருக்கட்டும் இருக்கட்டும்.” என்று நினைத்த மேகா அவன்மீது இருந்த கோபத்தில் அவளும் வேகமாக எழுந்து சென்று அவன் வைத்திருக்கும் தூக்க மாத்திரைகளை எடுத்து ஒன்றுக்கு இரண்டாக போட்டுக்கொண்டு படுத்தாள்.

அதை கவனித்த விஷ்வா “திமிருபுடிச்சவ.. எதுக்கு sorry சொன்னீங்க..?? உங்க மேல தப்பு இல்ல. நம்ம ரெண்டு பேரும் husband and wife. நமக்குள்ள இப்படி நடக்கிறது எல்லாம் usual தானேனு ஒரு வார்த்தை சொல்றாளா..?? இவ இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்கிறத பார்த்தா நான் என்னமோ கட்டின பொண்டாட்டிய rape பண்ண try பண்ண மாதிரி எனக்கு guiltyஆ இருக்கு.‌ நான் எல்லாமே பண்ணும்போது, இவளும் அதையெல்லாம் enjoy பண்ற மாதிரி தானே reaction குடுத்தா..?? அப்புறம் எதுக்கு அப்படி உட்கார்ந்து தேம்பி தேம்பி அழனும்..?? இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கறதுக்குன்னு தனியா course படிக்கணும் போல.” என்று நினைத்தவன் அவளைப் பார்த்தபடி தூக்க மாத்திரையின் விளைவால் உறங்கி விட்டான்.

இதற்கு முன் தூக்க மாத்திரை போட்டு பழகி இருக்காத மேகா அதன் பவரோடு அவளுக்கு இருந்த சோர்வும் சேர்ந்து கொண்டதால் படுத்த ஐந்து நிமிடத்தில் உறக்கத்தை தழுவியிருந்தாள். காலை விடிந்தவுடன் விஷ்வாவை காண அவர்களது அறைக்கு சென்ற காளீஸ்வரன் மேகா இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “விடிஞ்சு எவ்ளோ நேரமாகுது..!! நீங்களே தூங்கி எந்திரிச்சிட்டிங்க.. இவ என்ன இன்னும் தூங்கிட்டு இருக்கா..?? எழுப்ப வேண்டியதானே மாப்பிள்ளை..!!” என்று கேட்க, “அவ tiredஆ இருக்கா. விடுங்க தூங்கட்டும்.” என்றான் விஷ்வா.

“சரிங்க மாப்ள.. இவ்வளவு தூரம் வந்தோம். ஊர் சுத்தி பார்த்தோம். இப்ப விசேஷம் முடிஞ்சிடுச்சு. அவ்ளோதானே.. இன்னைக்கே எல்லாரும் ஊருக்கு கிளம்பிடலாம். அப்பதான் அங்க போய் பொழப்ப பாக்க சரியா இருக்கும்.” என்று சொல்ல, “ம்ம்ம்.. இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல கிளம்பிடலாம். நானே எல்லார்கிட்டயும் கிளம்ப சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன். கரெக்டா ‌நீங்களே வந்து கேட்டுட்டீங்க… மத்தவங்களையும் ரெடியா இருக்க சொல்லுங்க. நம்ம சீக்கிரம் கிளம்பனும்.” என்றான் விஷ்வா.

“சரிங்க மாப்ள.. முதல்ல இவளை எழுப்பி கிளம்ப சொல்லுங்க. எல்லாரும் தயாராகி இருந்தாலும் கடைசி நேரத்துல இவதான் எப்பயும் லேட் பண்ணுவா.” என்ற காளீஸ்வரன் வெளியில் சென்றார்.‌

மேகாவின் அருகே சென்று அவள் மூக்கு துவாரத்தின் அருகே தன் விரல்களை வைத்து பார்த்துவிட்டு “சப்பா நல்ல வேலை மூச்சு வருது. இவ எத்தனை tablet தின்னு தொலைஞ்சான்னு தெரியலையே..!!” என்று நினைத்த விஷ்வா வேக வேகமாக தூக்க மாத்திரைகள் இருந்த டப்பாவைத் திறந்து அதில் உள்ள மாத்திரைகளை எண்ணிப் பார்த்தான்.

நேற்று இரவு அவன் சாப்பிட்டது போக அதில் மூன்று மாத்திரைகள் கம்மியாக இருந்தது. அதனால் ஷாக்கானாவன் “அடிப்பாவி.. கோவத்துல இருந்தாலும் அதுக்குன்னு இத்தனை tabletஆ தின்னுவ? இது என்ன chocolateஆ உனக்கு..?? நீ இன்னும் ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா போட்டுருந்தா மொத்தமா மேல போயிருப்படி..!! அப்புறம் உங்க அண்ணனுங்க எல்லாரும் சேர்ந்து உன்னோட எனக்கும் சேர்த்து ‌பால் ஊத்திருப்பாங்க.” என்று நினைத்த விஷ்வா சென்று refresh ஆகிவிட்டு வந்து தயாரானான்.

அவன் கிளம்பி முடிக்கும் வரையிலும் மேகா தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். அதனால் அப்படியே அவளுக்கு dress change செய்த விஷ்வா மற்ற அனைவரையும் வேறு கார்களில் ஏற்றி முன்னே அனுப்பிவிட்டு அவளை தூக்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒரு காரில் ஏரி கிளம்பினான்.‌

மாலை 4 மணியளவில் கண் விழித்த மேகா அவளது தலைக்கு மேலே இருந்த சீலிங் வித்தியாசமாக இருந்ததை கண்டு அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள். அவள் இருக்கும் இடம் லேசாக அசைவதைப் போல இருக்க, பயந்து போய் ‌“இப்ப நான் எங்க இருக்கேன்..?? இது என்ன இடம்..??” என்று யோசித்தவள் அவள் இருந்த அறையின் சைடில் இருந்த ஜன்னலை திறந்து பார்த்தாள். அவள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை வெளியில் நீலக்கடல் மாலை நேர சூரிய ஒளியில் அழகாக தெரிந்தது.

அதை கண்டு மகிழ்ந்த மேகா, “நான் இப்ப கடல்ல இருக்கனா..?? நான் சொன்னதுனால எனக்காக அவர் return trip cruiseல plan பண்ணிருக்காரா..?? Wow..!!” என்று நினைத்து வேகமாக அந்த அறை கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

அவள் இருந்த இடத்தில் அடுத்தடுத்து அறைகளாகவே இருக்க, அதைக் கடந்து சென்ற மேகாவின் கண்களில் தென்பட்டான் விஷ்வா. அவனைப் பார்த்த மேகா சந்தோஷத்தில் வேகமாக அவன் அருகில் செல்ல, “வாமா. என் விஷ்வமனின் ராணியே… மேடம் எவ்ளோ நேரம் தூங்கிட்டே இருப்பீங்க..?? எப்ப கேட்டாலும் நீ தூங்கிட்டு இருக்கேன்னே இவன் சொல்லிட்டு இருக்கான்..!!” கிண்டலாக கேட்டாள் சௌபர்ணிகா.‌

அப்போதுதான் மேகாவிற்கு அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டதே ஞாபகம் வர, விஷ்வாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “சாரி நேத்து நைட்டு தூக்கம் வரலன்னு sleeping pills கொஞ்சம் extra சாப்பிட்டுட்டேன்.” என்றவள் காலியாக இருந்த sofaல் அமர்ந்தவாறு தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு “எனக்கு பசிக்குது. நீங்க எல்லாரும் சாப்டீங்களா..??” என்று பாவமாக கேட்டாள்.

“எங்க பாஸ தவிர எல்லாரும் சாப்டாச்சு. நாங்க எல்லாரும் எவ்ளோ சொல்லியும் உனக்காக அவர் சாப்பிடவே இல்ல.” என்று மகேஷ் சொல்ல, “பண்றத எல்லாம் பண்ணிட்டு இப்போ என்னை convince பண்றதுக்காகவே scene create பண்றாரா இவரு..?? இருக்கட்டும் இதெல்லாம் எத்தனை நாளைக்கு..!!” என்று நினைத்த மேகா “எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வர சொல்லுங்க..!!” என்றாள்.

அதனால் intercomல் அவர்களுக்கான உணவுகளை ஆர்டர் செய்த மகேஷ் “உங்களுக்கு ஏதாவது வேணுமா..??” என்று மற்றவர்களிடம் கேட்க, “எனக்கு ஐஸ்கிரீம் வேணும் ப்ரோ.” என்றாள் நிலா. உடனே அரவிந்த் “எனக்கும் வேணும் வெண்ணிலா.” என்றான்.

அதனால் அனைவரும் அவனையே பார்க்க, “எனக்கு Vanilla flavour வேணும்.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் அரவிந்த். அவனை கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா “இவங்க குடும்பத்துக்கிட்ட மாட்டிகிட்டு நான் முழிக்கிறதை பார்த்தும் இதே குடும்பத்துல வாக்கப்படனும்னு எப்படிடா உனக்கு தோணுது..?? நீ தியாகி டா அரவிந்த்.” என்று நினைத்தான். அனைவரும் தங்களுக்கு பிடித்தமானதை ஆர்டர் செய்து வாங்கி உண்டு மகிழ, விஷ்வாவும் மேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் “வந்ததுல இருந்து இப்படியேதான் சும்மாவே உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். எனக்கு ரொம்ப bore அடிக்குது. வாங்க எல்லாரும் சேர்ந்து விளையாடலாம்.” என்று வெண்ணிலா சொல்ல, “இந்த இடத்தில போய் என்னடி விளையாட முடியும்..??” என்று கேட்டாள் கலைச் செல்வி.

“anthakshari விளையாடலாம்.” என்று அவள் உற்சாகமான குரலில் சொல்ல, “அப்படனா.. அது என்ன விளையாட்டு..??” என்று கலை கேட்க, “சும்மா பாட்டு போட்டி‌ டி. சின்ன வயசுல நம்ம எல்லாம் விளையாடுவோம்ல அதான்.” என்றான் வெற்றி.

“முதல்ல யாரு பாடி ஸ்டார்ட் பண்றது..??” நிலா கேட்க, “நானே பாடுறேன்.” என்ற மேகா,
“சேராமல் போனால்
வாழாமல் போவேன்.
உன்னை காணமால் போனால், காணாமல் போவேன்.

நீ பார்க்காமல் போனால்,
பாழாகி போவேனே..
நான், என் அன்பே..!!” என்ற பாடலை விஷ்வாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி பாடினாள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured