அத்தியாயம் 97
குளித்துவிட்டு freshஆக bathrobeல் ஈரம் சொட்ட சொட்ட வந்த மேகாவை அப்போதுதான் அவளது பொருட்களை எல்லாம் தன் ஆட்களிடம் கொடுத்து அனுப்பியிருந்த விஷ்வா கேஷுவலாக பார்த்தான்.
அவள் காலில் இருந்த மெல்லிய தங்க கொலுசை மட்டும் அவன் கழட்டாமல் விட்டிருந்ததால் ஈரமாக வளவளவென வாழைத்தண்டு போல இருந்த அவள் கால்கள் இரண்டிலும் ஈரமாக இருந்த தங்க கொலுசுகள் தகதகவென மின்னியது.
அதை பார்த்துவிட்டு அப்படியே தன் கண்களை விஷ்வா மேலே உயர்த்த அவள் கழுத்தில் வடிந்து வந்த நீர்த்துளி அப்படியே கீழே இறங்கி உள்ளே சென்று மறைய, அதைக்கண்டு எச்சில் விழுங்கியவனின் உடல் சூடானது.
அதனால் சட்டென வேறு புறமாக திரும்பி “என்ன இப்ப எல்லாம் இவள சும்மா பார்த்தாக்கூட tempt ஆகுது.. இந்த மாயக்காரி ஏதோ பண்ணி உன்ன மயக்க try பண்றா. என்ன ஆனாலும் நீ இவகிட்ட விழுந்துறாத விஷ்வா.” என்று நினைத்து வேகமாக சென்று பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான். செல்லும் அவசரத்தில் அவனும் பாவம் டிரஸ் எடுத்துச் செல்லாமல் சென்று இருந்தான்.
அவன் ரூமில் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்ட மேகா வேகமாக தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு hair dryerல் அவள் தலை முடியை உலர்த்திக்கொண்டு இருந்தாள். அவள் கழுத்தில் இரண்டு தாலிகள் தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்தவள் தனக்குள் சிரித்துவிட்டு “தாலி பிரிச்சி கோக்கும் போது இது இரண்டையும் ஒரே chainல போடணும்.” என்று நினைத்தாள். குளித்து முடித்துவிட்டு hangerல் dressஐ தேடிய விஷ்வா அங்கே அது இல்லாததால் “இருந்த ஒரு bathrobeஐயும் அவ போட்டுட்டு போய்ட்டா போல..!!” என்று நினைத்து கதவை திறந்து தன் தலையை மட்டும் வெளியே நீட்டி, “ஓஓய்ய்..!!” என்று அவளை அழைத்தான்.
மும்மரமாக hair dryerல் தன் கூந்தலை உலர்த்தி கொண்டு இருந்த மேகாவிற்கு அவன் கூப்பிட்டது கேட்கவில்லை. அதனால் மீண்டும் “ஏய் இந்தாடி…!!” என்று அவன் கொஞ்சம் சத்தமாக கூப்பிட, திரும்பிப் பார்த்து “ஏன் இப்படி உள்ள இருந்து எட்டி பாத்துட்டு இருக்கீங்க..?? குளிச்சிட்டா வர வேண்டியது தானே..!! என்னமோ பாத்ரூம்குள்ள எவலையோ set up பண்ணி வச்சிருக்க மாதிரி எப்ப பாத்தாலும் உள்ள போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சுதான் வெளிய வரீங்க.” என்று ஆரம்பித்தாள் மேகா.
“இவ ஒருத்தி வாய தொறந்தா non stopஆ பேசிட்டே இருப்பா..!!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட விஷ்வா, “அடியேய்.. நான் எதுவும் எடுக்காம வந்துட்டேன். என்னோட டவளும், shortsம் மட்டும் எடுத்துட்டு வா.” என்றான்.
“ஓஓ.. இதுக்கு தான் கூப்பிட்டீங்களா.. இருங்க எடுத்துட்டு வரேன்.” என்ற மேகா அவனது பொருட்கள் இருந்த trolleyஐ திறந்து அதற்குள் அவன் கேட்டதை தேடினாள். “ஏய் எவ்ளோ நேரம்டி தேடுவ… சீக்கிரம் எடுத்துட்டு வா.” என்ற விஷ்வா, “சப்பா இவள வச்சுக்கிட்டு ஒன்னும் முடியல.” என்று புலம்பிவிட்டு கதவை சாற்றி விட்டான்.
Towelஐயும், shortsஐயும் எடுத்துக்கொண்டு சென்று மேகா பாத்ரூம் கதவைத் தட்ட, “வரேன் இரு.” என்ற விஷ்வா வேகமாக கதவை திறக்கச் சென்று அப்படியே கதவை திறந்தபடி வழுக்கி ஆஆஆ..!! என்று கத்திக்கொண்டு தரையில் விழுந்தான்.
பதறிய மேகா கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று “என்னாச்சு..?? கீழ விழுந்துட்டீங்களா..??” என்று கேட்க, அவள் உள்ளே வந்ததால் திடுக்கிட்டு எழுந்துக்கொள்ள முயற்சி செய்த விஷ்வா மீண்டும் கால் வழுக்கி கீழே விழுந்தான்.
பிறந்த மேனியாக இருந்த விஷ்வாவை அவள் முழுவதாக பார்த்து விட்டாள்.
ஆனால் அவன் கீழே விழுந்து விட்டான் என்ற பதட்டத்தில் இருந்த மேகா அதற்காக react செய்யாமல் வேகமாக சென்று அவனைத் தூக்க முயற்சிக்க, கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்த விஷ்வா அவள் கையில் இருந்த துண்டை புடுங்கி தன் மீது சுற்றிக்கொண்டு கதவை பிடித்து எழுந்து நின்று “நீ போ நான் வரேன்.” என்றவன் doorஐ வேகமாக தள்ளி லாக் செய்து விட்டான். அப்போதும் மீண்டும் அவள் உள்ளே வந்து விடுவாளோ என்ற பயத்தில் கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டு தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
அவனது இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்க, “ச்சே.. பாத்துட்டாளே..!! முழுசா பாத்துட்டாளே..!! டிரஸ் எடுக்காம வந்ததுக்கு இப்படி ஒரு பனிஷ்மென்டா..??” என்ற நினைத்தான் விஷ்வா.
அவனுக்கு ஒரே வெக்க வெக்கமாக வந்தது.
தன் கையில் இருந்த அவனது shortsஐ அருகிலுள்ள couchல் தூக்கி போட்ட மேகா, “Oh My God..!!” என்று வாய்விட்டு சொன்னவள், அப்படியே அதே couchல் அமர்ந்துவிட்டாள். அவளுக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.
இருப்பினும் விஷ்வாவின் facial expressionsகளை நினைவு கூர்ந்து தொடர்ந்து ஏதோ பைத்தியம் பிடித்தவளை போல ஹிஹிஹி என்று சத்தமாக சிரித்தவள், “It’s Okay. நாங்க Husband and wife. சோ இதுல என்ன தப்பு இருக்கு..?? அவரும் என்னை பார்த்துட்டாரு. நானும் அவரை பார்த்துட்டேன். சோ கணக்கு tally ஆயிடுச்சு.” என்று நினைத்து எழுந்து நின்றாள்.
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதால் மேகா திரும்பி பார்த்தாள். அங்கே விஷ்வா ஏதோ தன்னை பெண் பார்க்க வந்தவர்களுக்கு நடுவில் இளம்பெண் கையில் டீயுடன் வருவதைப்போல வெட்கத்தில் தலை குனிந்தவாறு தரையைப் பார்த்துக்கொண்டு நடந்து வந்தான். அவனைப் பார்த்தவுடன் இன்னும் மேகாவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. இருப்பினும் “மேகா control, control yourself.” என்று தனக்குள் சொல்லிவிட்டு “இந்தாங்க… நான் இத குடுக்குறதுக்குள்ள நீங்க கதவை சாத்திட்டீங்க..!!” என்ற மேகா couchல் கிடந்த அவனது shortsஐ எடுத்து அவன் முன்னே நீட்டினாள்.
அவளிடம் இருந்து விடுக்கென அதை பிடுங்கிய விஷ்வா அங்கே dress change செய்ய private space இல்லாததால் மீண்டும் பாத்ரூமிற்க்கு சென்றான்.
“ஐயோடா ரொம்பத்தான்..!!” என்று நினைத்த மேகா சென்று bedல் அமர்ந்தாள். Shortsஐ அணிந்து கொண்டு மெதுவாக சென்று கட்டிலில் வேறு புறமாக திரும்பி படுத்துக் கொண்டான் விஷ்வா. “என்ன இவர் ரொம்ப வெட்கப்படுறாரு..!! இவர இப்படி பாக்கவே ரொம்ப cuteஆ இருக்கே..!! மிஸ்டர் விஷ்வா இன்னிக்கி நீங்க என்கிட்ட வசமா மாட்டிருக்கீங்க. இன்னைக்கு நான் உங்கள என்னென்ன பண்ண போறேன் பாருங்க..!!” என்று நினைத்து குறும்பாக சிரித்த மேகா “ஏசி ஓடிட்டு இருக்கு. என்ன நீங்க blanketஐ போடாம அப்படியே போய் வெறும் shortsஐ மட்டும் போட்டுட்டு படுத்து இருக்கீங்க..!! இதுல hair wash பண்ணிட்டு தலையை வேற காய வைக்கல.” என்றவள் போய் ஒரு துண்டை எடுத்துக்கொணடு வந்து அவன் அருகில் சென்று அமர்ந்து அவனுக்கு அப்படியே தலை துவட்டி விட தொடங்கினாள்.
அதனால் திரும்பி அவன் அவளை பார்க்க, அவள் குனிந்து அவனுக்கு தலை துவட்டியதால் அவன் கண்களுக்கு விருந்தான காட்சி அவனை போட்டு வாட்ட “ஐயோ கொல்லுறியேடி..!!” என்று நினைத்தவன், வெட்கத்தில் சிவந்து போன தன் முகத்தை அவளுக்கு காட்ட விரும்பாமல் அவள் வயிற்றில் தன் முகத்தை மறைத்து அப்படியே அவளை அணைத்துக் கொண்டான். அந்த உணர்வு மேகாவிற்குள்ளும் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த, வெட்கத்துடன் அவன் தலையை துவட்டினாள். பின் அப்படியே எக்கி போர்வையை எடுத்து அவள் அவர்கள் இருவரின் மீதும் போர்த்திக்கொள்ள, அப்போதும் விஷ்வா அவளை விடுவதைப் போல தெரியவில்லை. அதனால் அப்படியே அவன் அருகில் படுத்துக் கொண்டாள் மேகா.
அவள் அசைவுகளை கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா தன் முகத்தை உயர்த்தி அவளை பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளது அருகாமை அவன் ஆண்மையை போட்டு வாட்டிக் கொண்டிருக்க, “உங்களுக்கு எப்பதான் விஷ்வா நீங்க என்ன லவ் பண்றிங்கன்னு புரிய போகுது..?? உங்களைத் தவிர மத்த எல்லாருக்கும் இது ஆல்ரெடி தெரிஞ்சிருக்கு. நீங்க மட்டும் ஏன் இப்படி இதுல மட்டும் ரொம்ப மக்கா இருக்கீங்க..??” என்று நினைத்த மேகா காதல் ஏக்கங்களை கண்களில் தேக்கி வைத்து சோகமாக அவனைப் பார்த்தாள்.
அவள் கண்களில் அவன் என்ன கண்டானோ தெரியவில்லை. “இதுக்கு மேல எதுக்கு Wait பண்ணனும்..??” என்று நினைத்து அவளை கீழே தள்ளி அவள் மீது படர்ந்தவன், அவள் இதழ்களை சிறை செய்தான்.
அந்த இதழ் முத்தம் நீண்டு கொண்டே செல்ல, முதலில் அதிர்ந்து அவனைப் பார்த்த மேகா பின் அதில் கரைந்து தானும் அவனுக்கு ஈடு கொடுக்க தொடங்கினாள். அவளது இதழ்களில் தொடங்கிய முத்த யுத்தத்தை அப்படியே கீழ் இறங்கி அவள் மேனி எங்கும் நடத்த தொடங்கினான் அவன்.
இந்த இதயங்களுக்கு நடுவிலான கட்டில் யுத்தத்தில் குறுக்கே எதற்கு தேவையில்லாமல் ஆடைகள்..?? என்று நினைத்து அவர்கள் இருவருமே அதை வீசி எரிந்திருக்க, அதெல்லாம் கட்டிலில் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
முத்தத்தில் திளைத்து அவர்கள் இருவரும் மோகத்தில் தங்களை மறந்து ஈருடல் ஒரு உயிராகவிருந்த தருணம் விஷ்வாவிற்கு திடீரென மேகா முதன் முதலில் அவனை முத்தமிட்ட காட்சி ஞாபகம் வந்தது.
அதனுடன் சேர்த்து அவர்கள் திருமணம் எப்படி நடந்தது என்றும் அவனுக்கு ஞாபகம் வர; lastஆக பாட்டி குழந்தையை பற்றி பேசியது என அனைத்தையும் அப்படியே ஒரே நொடியில் யோசித்துப் பார்த்தவன் “இல்ல நான் இந்த தப்ப பண்ண கூடாது. நான் இப்போ இப்படி பண்ணா, பாட்டி குழந்தை வேணும்னு கேட்டதுக்காக பண்ணதாயிடும். என்னோட personal problemsகாக நான் இவள யூஸ் பண்ணிக்கிறது தப்பு.” என்று நினைத்து சட்டென அவளைவிட்டு பிரிந்த விஷ்வா அவனது shortsஐ எடுத்து அணிந்து கொண்டு அந்த அறைக்குள் இருந்த பால்கனிக்கு செல்லும் கதவை திறந்து வெளியில் சென்று விட்டான்.
அவன் செய்த வேலைகளால் சில நொடி ஒருவித மோன நிலையில் இருந்த மேகா விஷ்வா தன்னைப் பாதியில் விட்டுவிட்டு சென்று விட்டான் என்று நினைத்து சட்டென எழுந்து அமர்ந்தாள். அனைத்தும் சரியாக சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென்று ஏன் அவன் அப்படி பாதியில் சென்றான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் வேகமாக தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அமர்ந்தவள் கலங்கிய கண்களுடன், “நீங்க என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க விஷ்வா..?? நீங்க ஏதோ ஒரு momentல temptஆன என்கிட்ட closeஆ move பண்ணுவீங்க. அப்புறம் நமக்குள்ள எதுவும் இல்ல. நம்ம ஜஸ்ட் friendsன்னு சொல்றீங்க..!! நீங்க என்னை லவ் பண்றிங்கன்னு நான்தான் லூசு தனமா நம்பிட்டு இருக்கேனா..?? உங்களுக்கு சொல்ல தயக்கமா இருந்தாலும் உங்களுக்குள்ள என் மேல love இருந்தா இப்படி நீங்க பாதியில போவீங்களா..??
உங்களுக்கு என் மேல எந்த feelingsம் இல்லைன்னு இப்படி பண்ணி நீங்க எனக்கு நல்லா புரிய வச்சிட்டீங்க. உங்களுக்கே அது எப்படி இவள லவ் பண்ணாம sexually approach பண்ண முடியும்னு guiltyஆ இருந்திருக்கு. அதானே நீங்க போய்ட்டீங்க..!! உங்களுக்கு என் மேல லவ் இல்லனா அப்ப இது என்ன விஷ்வா…?? Lustஆ..?? நம்மதான் friendsஆ இருக்கலாம்னு decide பண்ணி இருந்தோம்ல.. அப்புறம் ஏன் அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம என்ன போட்டு torture பண்றீங்க..?? என்னால முடியல விஷ்வா. இந்த ரிலேஷன்ஷிப்ப எப்படி handle பண்றதுன்னு எனக்கு தெரியல.” என்று நினைத்து மேகா தன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)