அத்தியாயம் 96
விஜயைப் பற்றிய சிந்தனைகளுள் தொலைந்து போன விஷ்வா, அவனது ரூமை விட்டு வெளியில் வராமல் அன்றைய நாள் முழுவதும் குடித்து தீர்த்தான். அவனிடம் பேசத் துடித்த தன் உதடுகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த மேகா, அவனுக்கு உடம்பு சரியில்லை என்று மற்றவர்களிடம் சொல்லி யாரும் அவனை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டாள். மறுநாள் காலை விஷ்வா மற்றும் மேகாவின் marriage reception Kuredu Island Resortல் நடக்க தொடங்கியது.
நேற்று முழுவதும் போதையில் இருந்ததால் விஷ்வா இன்று சற்று சோர்வுடனே காணப்பட்டான். Maldivesல் பிரமாண்டமாக நடந்த அந்த marriage receptionக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும், விஷ்வாவின் business வட்டாரத்தில் இருப்பவர்களும், ஏன் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட வந்திருந்தார்கள். “நான் இதுவரைக்கும் இவங்களை எல்லாம் டிவில மட்டும்தான் பார்த்திருக்கேன். இன்னைக்கு தான் first time நேர்ல பாக்குறேன். ஏன் இவங்க எல்லாம் First நடந்த நம்ம மேரேஜ்க்கு வரல..??” என்று மேகா தன் அருகில் நின்று photoவிற்க்கு pose கொடுத்து கொண்டிருந்த விஷ்வாவிடம் கேட்க, “நீயே முதல்ல உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம மயக்கத்தில இருந்த. இவங்க எல்லாம் வந்தாங்களா இல்லையான்னு மட்டும் உனக்கு தெரியுமா..??” என கேட்டான் அவன்.
“சும்மா உருட்டாதீங்க விஷ்வா. அதான் அன்னைக்கு எடுத்த photos and videos எல்லாம் வந்துருச்சே..!! நான் அதுல பார்த்தேன். அதுல ஆளுங்க கம்மியா தான் இருந்தாங்க.” என்று அவள் பாயிண்டாக கேட்க, “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல.. close circleல இருக்கிறவங்களை மட்டும்தான் கூப்பிடுவேன்னு..!!” என்றான் அவன்.
“அப்புறம் ஏன் இப்ப receptionக்கு மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க…??” என்று அவள் புரியாமல் கேட்க, “இன்னும் 1 monthல நம்ம கம்பெனியில இருந்து புதுசா MVT smart phones launch பண்ண போறோம். சோ அதுக்கு இதுவும் ஒரு promotion தான். Upcoming projectsக்கு investors வேணும்ல.. அதுக்கு தான் நம்ம bandwidth என்னன்னு எல்லாருக்கும் show up பண்ண சும்மா ஒரு build up. நம்ம Receptionகாக Maldivesக்கு இவங்க வந்தாங்க அவங்க வந்தாங்கன்னு எப்படியும் இருக்கிற எல்லா நியூஸ் channel-லும் 2,3 நாளைக்கு நியூஸ் போடுவான். அதுக்குள்ள நம்ம சைடுல இருந்து product launch updateஐ release பண்ணா எப்படியும் next two weeksக்கு MV Techம், நீயும் நானும் trending listல இருப்போம்.” என்று பொறுமையாக அவளுக்கு விளக்கி சொன்னான் விஷ்வா.
“WOW.. What a business strategy..!! Ads போட்டு promotion பண்றத விட இது நல்லா effectiveஆ இருக்கும். மக்கள் இதையெல்லாம் மறுக்கறதுக்குள்ள நம்ம mobile phone launch பண்ணிட்டா.. MVT smart phones எல்லாருக்கும் familiar brand ஆயிடும். Vishwa is right. இப்படி எல்லாம் யோசிச்சு பிளான் பண்றதுனால தான் இவர் நம்பர் 1 பிசினஸ் manஆ பண்ணிருக்காரு.” என்று நினைத்து சந்தோஷப்பட்ட மேகா, “New phones launch பண்ண இது கரெக்டான டைம் தான்.
இப்போ Service tax வேற government reduce பண்ணியிருக்காங்க. அடுத்து எப்போ ஏத்துவாங்கன்னு தெரியாது. But இந்த டைம்ல affordable priceல sale பண்ணலாம். நல்ல profit இருக்கும்.” என்றாள்.
“பரவாலையே... இந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்க.. உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு.” என்று கிண்டலாக சொல்லிவிட்டு லேசாக சிரித்தான் விஷ்வா.
இதுவரை சோகமாக இருந்தவன் இப்போது சற்று நார்மலாகி தன்னிடம் பேசியதால், அவன் தன்னை கிண்டல் செய்து சிரிப்பதற்கெல்லாம் மேகா react செய்யவில்லை. காலையில் தொடங்கிய reception வந்திருந்த ஏராளமான விருந்தாளிகளால் நீண்டு கொண்டே ஈவினிங் வரை செல்ல, “ஆஆஆ.. விஷ்வா எனக்கு செமையா கால் வலிக்குது. இதுல சிரிச்ச மாதிரியே போஸ் கொடுத்து கொடுத்து வாய் வேற வலிக்குது. இந்த நியூஸ்ல எல்லாம் சம்டைம்ஸ் வருமே.. அப்படியே ரொம்ப நேரமா சிரிச்ச மாதிரியே மூஞ்சிய வச்சுக்கிட்டே இருந்து அப்படியே couplesக்கு face paralyze ஆயிடுச்சுன்னு… அந்த மாதிரி நமக்கும் ஆகிறபோது..!!” என்று மேகா புலம்ப, அதுவரை தனித்தனியாக வந்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தவர்களை எல்லாம் மகேஷிடம் சொல்லி batch batchஆக அனுப்பிவிட சொல்லி முடிந்தவரை விரைவாக receptionஐ முடித்தான் விஷ்வா.
காலையிலிருந்து ஈவினிங் வரை விதவிதமாக பலநூறு வகையிலான உணவுகள் பரிமாறப்பட்டிருந்த நிலையில், விஷ்வாவும் மேகாவும் பிஸியாக இருந்ததால் இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து லாஸ்ட்ஆக dining areaவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, காலையிலிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு களைத்துப் போயிருந்த மகேஷும் மற்றவர்களும் கூட அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் “இன்னைக்கு நைட் நம்ம வில்லால ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு ஈவினிங் ஊருக்கு கிளம்பலாமா..??” என்று விஷ்வா கேட்க, “வேண்டாம் இவர் மறுபடியும் அங்க போனா விஜயை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாரு.” என்று நினைத்த மேகா “இங்கயே தங்கிடலாமே விஷ்வா.. இது ரெசார்ட் தானே..!! Bookings extend பண்ண முடியாதா..??” என்று கேட்டாள்.
“பண்ணலாம்.. பட் எதுக்கு இங்கயே தங்கனும்..??” என்று அவன் கேட்க, “ஆல்ரெடி நின்னு நின்னு நான் tired ஆகிட்டேன். இப்போ இங்க இருந்து அவ்ளோ தூரம் travel பண்ணி போயிட்டு நாளைக்கு ஊருக்கு வேற கிளம்பனும். இங்கயே இருக்கலாமே ப்ளீஸ்..!!” என்று மேகா கெஞ்சும் குரலில் கேட்டதால், சரி என்ற விஷ்வா மகேஷிடம் அதற்கான வேலையை செய்ய சொன்னான். last minuteல் bookingsஐ extend செய்ய வேண்டியது இருந்ததால் இரண்டு மடங்கு payment செய்து அவர்கள் அனைவரும் தங்குவதற்கு ரூம்ஸ் புக் செய்யப்பட்டது.
தனது weightஆன grand-டான நீண்ட லெகங்காவை சிரமப்பட்டு தூக்கிப் பிடித்துக்கொண்டு மேகா விஷ்வாவுடன் அவர்களுக்கான ரூமை நோக்கி hotel lobbyல் சென்று கொண்டிருக்க, “ரொம்ப heavyஆ இருக்கா..??” என்று விஷ்வா தரையில் விழுந்து கிடந்த அவளது லாங் skirtஐ சற்று தூக்கிப் பிடித்தமாறு கேட்க, “சப்பாபா… Finally கேட்டுட்டீங்களா நீங்க..?? காலையிலிருந்து இத எவ்ளோ கஷ்டப்பட்டு நான் போட்டுட்டு இருக்கேன் தெரியுமா..?? இதை நான் போடும்போது எனக்கு 3 பேர் ஹெல்ப் பண்ணாங்க. ஆனா நான் மட்டும்தானே தனியா போட்டுட்டு நின்னேன்…!! நீங்கதானே costume select பண்ணீங்க..!! உங்களுக்கு மட்டும் அழகா simpleளா coat suit. எனக்கு மட்டும் இப்படி 4,5 கிலோ weightல dress choose பண்ணி வச்சிருக்கீங்க..!!” என்று சலித்துக்கொண்டாள் அவள்.
“ஏய் புலம்பாம வாடி. அவ்வளவுதான் function-ஏ முடிஞ்சிருச்சு. அப்புறம் என்ன..??” என்ற விஷ்வா அவளை அழைத்துக்கொண்டு தங்களது ரூமிற்கு சென்றான். நேராக சென்று dressing table கண்ணாடியின் முன்னே நின்ற மேகா அவள் முதுகு பகுதியில் கட்டப்பட்டிருந்த knotஐ கழட்ட முடியாமல் வந்த கடுப்பில் தன் பல்கலைக் கடித்துக்கொண்டு கயிறை போட்டு இழுத்துக்கொண்டு இருந்தாள்.
“அட.. இருடி. போட்டு இழுத்து dressஐ damage பண்ணிடாத.” என்ற விஷ்வா அவள் அருகில் செல்ல, “இது என் dress தானே.. ஏன் ரிட்டன் பண்ணனுமா..??” என்று கேட்ட மேகா அவள் அணிந்திருந்த banglesகளை பொறுமையாக கழட்டி table drawerல் வைத்துக் கொண்டிருந்தாள்.
“இது அக்காவோட special collection. So function முடிஞ்ச உடனே உன் costumeஐ அவங்க showroomல showpieceஆ வைக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.” என்ற விஷ்வா அவளது முதுகு பகுதியில் கட்டப்பட்டிருந்த knotகளை ஒவ்வொன்றாக கழட்ட தொடங்கினான். அதுவரை சாதாரணமாக இருந்த மேகா அவன் விரல் நுனி அவ்வப்போது அவள் wide neck blouse அணிந்திருந்ததால் நேரடியாக அவள் முதுகில் உரச, வெட்கத்தில் நெளிந்து கண்ணாடியில் தெரிந்த விஷ்வாவின் உருவத்தைக் கண்டாள். அவன் கடமையே கண்ணாக பொறுமையாக அதில் இருந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக கழட்டிக் கொண்டிருந்தான்.
“எப்படித் தான் இவர் என்ன நடந்தாலும் அடுத்த செகண்ட்டே கொஞ்சம் கூட distractஏ ஆகாம இருக்கிறாரோ தெரியல..!!” என்று நினைத்த மேகா, அவளது கூந்தலில் சொருவப்பட்டிருந்த நீண்ட hair accessoriesகளை கழட்ட முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்று அவள் முடியோடு சிக்கிக் கொண்டிருந்தது. அதனால் எரிச்சல் அடைந்தவள், “ஆஆஆ.. முதல்ல இத கலட்டங்க ப்ளீஸ்… இந்த Hairstyleக்கு hair extension வச்சு என்னென்ன பண்ணாங்கன்னே தெரியல..!! தலையெல்லாம் ஒரே பாரமா இருக்கு.” என்றாள்.
அதனால் அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதை விட்டுவிட்டு அவளது accessoriesகளை அகற்ற அவளுக்கு உதவ தொடங்கினான் அவன். நெற்றி, காது, மூக்கு, கழுத்து, இடுப்பில் கிடந்த hip chain என்று ஒவ்வொன்றாக அவன் கழட்ட; அவ்வப்போது ஏற்பட்ட அவனது சிறு தீண்டல்களால் அவளது இதயமும் கழண்டு வெளியே வந்து விழுந்து விடுவதைப் போல படபடவென துடித்துக் கொண்டிருந்தது. இறுதியாக அவள் அணிந்திருந்த skirtஐயும் அதற்குள்ளே இருந்த பல லேயர்கள் கொண்ட Cancan Petticoat Underskirt என அனைத்தையும் ரிமுவ் செய்த விஷ்வா அந்த வெயிட்டான ஆடைக்குள் இருந்து அவளை அப்படியே அலேக்காக தூக்கி வெளியில் நிற்க வைத்தான்.
இப்போது மேகா வெறும் blouse மற்றும் knee length pant உடன் நின்று கொண்டு இருந்தாள். அவளை இழுத்துக் கொண்டு போய் dressing table முன்னே அமர வைத்த விஷ்வா அவளது hair styleஐ கலைத்துவிட்டு makeup removerஐ வைத்து அவளுக்கு போடப்பட்ட மேக்கப்பை tissue paper வைத்து துடைத்து எடுத்தான்.
பொம்மை போல அவனுக்கு தன் முகத்தை காட்டிக் கொண்டு அசையாமல் அமர்ந்திருந்த மேகா “இதெல்லாம்க்கூட உங்களுக்கு தெரியுமா..??” என்று ஆச்சரியமாக கேட்க, “உனக்காக தெரிஞ்சுக்கிட்டேன்.” என்று கேஷுவலாக சொன்ன விஷ்வா “ஓகே நீ போய் குளிச்சிட்டு வா. நான் அதுக்குள்ள யாரையாவது வர சொல்லி இதையெல்லாம் எடுத்துட்டு போக சொல்றேன். Jewelsஐ safety lockerல வைக்கணும்.” என்றான்.
சரி என்று குளிப்பதற்காக சென்ற மேகா செல்லும் அவசரத்தில் போட்டுக்கொள்ள ஆடைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் சென்றதால் வேறு வழியில்லாமல் அங்கே இருந்த bathrobeஐ அணிந்து கொண்டு வெளியே வந்தாள். அந்த வெள்ளை நிற உடை அவள் முட்டிக்கு மேல் இருந்தது. தலைக்கு குளித்திருந்த மேகா ஒரு துண்டை வைத்து ஸ்டைலாக தலையில் சுற்றிக்கொண்டு ஈரம் சொட்ட சொட்ட நடந்து வந்தாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)