அத்தியாயம் 94
கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் முடிஞ்சதும் மேகாவோட இதழ்கள்ல முத்தம் கொடுத்த விஷ்வா, “இது தான் லவ்வா..??” அப்படின்னு யோசிச்சுட்டு இருக்க, “கல்யாணம்னு சொல்லிட்டு என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..??” அப்படின்னு காளீஸ்வரன் மனசுக்குள்ள கோபமா அவங்களை பார்த்துட்டு இருந்தார்.
தன் அண்ணன் கோபத்துல கையை முறுக்கிட்டு சண்டைக்கு ரெடி ஆகுறதை கவனிச்ச முத்து, சட்டென அவர் கையை பிடிச்சு, “அண்ணா, இந்த நாட்டுல நடக்குற கல்யாணத்துல இதெல்லாம் சகஜம் தான்ணா. இப்படி கல்யாணமானவங்க ரெண்டு பேரும் முத்தம் குடுத்துக்கிட்டா தான் அந்த கல்யாணமே முழுமை அடைஞ்சதா அர்த்தம். இங்க என்ன சின்ன பிள்ளைங்களா இருக்காங்க? நம்ம மாப்பிள்ளை தானே, விடுங்க!” என்றான்.
“ஏலேய்.. இப்படி சொல்லி சொல்லியே நம்ம குடும்ப கௌரவம், கட்டுப்பாடு எல்லாத்தையும் ஏற்கனவே நீங்க காத்துல பறக்க விட்டுட்டீங்க… இப்ப சொந்தகாரங்களை கூட்டிக்கிட்டு வெளி நாட்டுக்கு வந்தும் இதுங்களால மானம் போகுது. எது பண்ணாலும் ஊரு கண்ணுல உறுத்துற மாதிரி தான் பண்ணுவாங்களா..?? எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான்ல..!!” அப்படின்னு காளீஸ்வரன் அப்பவும் கோபமாவே சொல்ல, “அண்ணா, நீங்களே எல்லாரையும் நல்லா பாருங்க. உங்களைத் தவிர மத்த யாரும் இதுக்காக கோபப்படல. இவங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, சந்தோஷமா இருக்காங்க. நமக்கு அது கிடைக்கலையேன்னு நினைச்சு எல்லார் முகத்துலயும் வருத்தமும், எதிர்பார்ப்பும் தான் தெரியுது” என்றான் முத்து.
அதனால காளீஸ்வரன் எல்லாரையும் சுத்தி முத்தி பார்க்க, வெண்ணிலா… ஏன் வசந்தி உட்பட எல்லாரும் சிரிச்ச முகமா அந்த காட்சியை பார்த்துட்டு, தங்களுக்குள்ள விஷ்வாவையும் மேகாவையும் கிண்டல் பண்ணி பேசிட்டு இருந்தாங்களே தவிர, யாரும் அதை தப்பா நினைக்கல. அதை கவனிச்ச காளீஸ்வரன், “இதுக்கு தான் கலி முத்திருச்சுன்னு சொல்றாங்க. என்னத்த சொல்றது..!! என்னமோ பண்ணித் தொலையுங்க..!!” அப்படின்னு புலம்பிக்கிட்டே தலையில அடிச்சுட்டு போய் ஓரமா உட்கார்ந்துக்கிட்டார்.
விஷ்வாவோட முகத்தையே கண்ணெடுக்காம பார்த்த மேகா, அவன் கையை பிடிச்சுக்கிட்டு அவன் காதோரம், “இதோட நமக்கு ரெண்டு மாசத்துல மூணு தடவை கல்யாணம் ஆயிடுச்சு. So, நெக்ஸ்ட் இயர் நம்ம மேரேஜ் அனிவர்சரி செலிப்ரேட் பண்ணும்போது, த்ரீ டைம்ஸ் பண்ணுவோமா..??” அப்படின்னு ஆர்வமா கேட்க, “ஓ.. அதெல்லாம் செலிப்ரேட் பண்ணனுமா..?? எனக்கு அந்த ஐடியாவே இல்லையே” என்றான் விஷ்வா.
எரிச்சலான மேகா, அவன் இடுப்புல நல்லா கிள்ளி வச்சுட்டு, “ஏன், என்னை மேரேஜ் பண்ணதுக்காக நீங்க ரொம்ப ஃபீல் பண்றீங்களோ..?? அனிவர்சரி கூட செலிப்ரேட் பண்ண மாட்டீங்களா..??” அப்படின்னு கேட்க, “கல்யாணம் ஆனதுக்கப்புறம் இப்படி எல்லாம் புருஷனை கொடுமைப்படுத்தினா எவனுக்குடா அனிவர்சரி எல்லாம் கொண்டாடணும்னு தோணும்..??” அப்படின்னு பாவமா கேட்டான் அவன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்பவே சொல்லிட்டேன். நம்ம கிராண்டா நம்ம மூணு மேரேஜ் அனிவர்சரியையும் அடுத்தடுத்து எல்லா வருஷமும் செலிப்ரேட் பண்றோம். அப்புறம் இன்னும் கொஞ்ச நாள்ல நெக்ஸ்ட் நீங்களும் நானும் மட்டும் ஹனிமூன் ட்ரிப் எங்காவது வேற ஒரு கன்ட்ரிக்கு போலாம். ஒழுங்கா இப்பவே அது எந்த பிளேஸ்னு சூஸ் பண்ணி வீசா ப்ராசஸ் எல்லாம் ஸ்டார்ட் பண்ணிடுங்க” அப்படின்னு கட்டளையிடுற மாதிரி மேகா சொல்ல, “அடிப்பாவி.. இன்னும் நாம இங்கிருந்தே கிளம்பல. அதுக்குள்ள இன்னொரு ட்ரிப்புக்கு பிளான் போடுறியா நீ..?? ஹனிமூன் கூட பரவால்லடி. அது என்ன மூணு தடவை மேரேஜ் அனிவர்சரி செலிப்ரேஷன்..?? இதெல்லாம் நீ முன்னாடியே சொல்லிருந்தன்னா, இன்னைக்கு இப்படி எல்லாம் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பண்ணிருப்பேன்” என்றான் அவன்.
“என்ன இதுக்கே இப்படி சலிச்சுக்கிறீங்க..?? உங்க நெட் வொர்த் என்னன்னு எனக்கு தெரியும். நம்ம ஹனிமூனுக்கு செலவு பண்றதுனால ஒன்னும் நீங்க ஏழை ஆயிட மாட்டீங்க. அப்படியே நீங்க ஏழை ஆனாலும், நமக்கு நம்ம ஊர் இருக்கு. அங்க தோட்டம் துறவுன்னு எல்லாமே இருக்கு. அங்க போய் விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்” அப்படின்னு மேகா சொல்ல, “உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேச முடியுமாடி..??” அப்படின்னு நினைச்ச விஷ்வா, “உன்னை வச்சு எப்படி சமாளிக்க போறேன்னு நினைச்சாலே பயமா இருக்குடி!” என்றான்.
சேரனோட அவங்க பக்கத்துல போன சௌபர்ணிகா, “Congratulations both of you” அப்படின்னு சொல்லி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து கட்டி அணைச்சு வாழ்த்து சொன்னா. அதனால வெண்ணிலாவும் வேகமா அங்க போய் அவங்களுக்கு வாழ்த்து சொல்ல, சௌபர்ணிகா சேரனோட இருக்குறதை பார்த்த முத்து, “இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கும் கல்யாணம் ஆயிடும்ல…!!” அப்படின்னு நினைச்சு சோகமா போய், வெளியில தன் முகத்தை சாதாரணமாக வச்சுக்கிட்டு விஷ்வா – மேகாவுக்கு விஷ் பண்ணிட்டு வந்தான்.
அப்புறம் மேகா, விஷ்வாவோட அந்த காஸ்டியூம்ல போட்டோஷூட் பண்ணனும்னு சொன்னதால, எல்லாரும் அங்கிருந்து கிளம்பி பக்கத்துல இருக்குற பீச்சுக்கு போய் கடலோரமா நின்னு நிறைய போட்டோஸ் எடுத்தாங்க. அங்கிருந்த நீல வானம், நீலக்கடல், சுத்தி இருந்த மரங்கள்னு எல்லாம் அந்த இடத்தையே ரொம்ப அழகா மாத்திக் குடுத்துச்சு.
புதுசா கல்யாணமானவங்களுக்கே இருக்குற சந்தோஷத்தோட அந்த போட்டோஷூட்டை மேகாவும், விஷ்வாவும் என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க.
மத்த எல்லாரோடையும் சேர்ந்து நிலா செல்பி எடுக்க ஆசைப்பட்டு எல்லாரையும் கூப்பிட்டு கடற்கரையில நிக்க வச்சா.
மத்த எல்லாரும் சந்தோஷமா கேமராவை பார்த்து சிரிக்க, காளீஸ்வரன் மட்டும் முகத்தை ‘உர்’னு வச்சுக்கிட்டு வேற எங்கேயோ பார்த்துட்டு இருந்தார். அப்போ வெயில் சுள்ளுன்னு அடிச்சதால பெரியவங்க எல்லாரும் வேன்ல போய் உட்கார்ந்துட்டாங்க.
“இங்க நாம மட்டும் தனியா நின்னு அழகா ஒரு போட்டோ எடுத்து லொகேஷன் மென்ஷன் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டா சூப்பரா இருக்குமே..!!” அப்படின்னு நினைச்ச வெண்ணிலா, “இப்ப யாரைக் கூப்பிட்டு போட்டோ எடுக்க சொல்றது..??” அப்படின்னு யோசிச்சு சுத்தி முத்தி பார்த்தா.
அவளை கவனிச்சுட்டு இருந்த அரவிந்த், “யாரைத் தேடிட்டு இருக்கீங்க மேடம்..??” அப்படின்னு கேட்க, “உங்களைத்தான். எனக்கு ஒரு போட்டோ எடுத்து குடுக்குறீங்களா ப்ளீஸ்..??” அப்படின்னு அவன்கிட்ட கேட்டா.
“அதான் போட்டோகிராபர் எல்லாரையும் வச்சு குரூப் போட்டோ எடுத்தாரே! உங்களுக்கு சோலோ பிக் வேணும்னா சொல்லுங்க, நான் அவரை கூப்பிட்டு எடுக்க சொல்றேன். அவர் இந்த கன்ட்ரிலயே ஃபேமஸ் போட்டோகிராபர். அவரோட ஃபுல் டீமும் இங்க வந்திருக்காங்க” அப்படின்னு அரவிந்த் சொல்ல, “அவங்க எடுக்க சொன்னா நல்லா தான் எடுத்து குடுப்பாங்க.
ஆனா அதை அவங்க எடுத்து டெவலப் பண்ணி பிரிண்ட் இல்லனா சாஃப்ட் காப்பி எப்போ ரெடி பண்ணி குடுப்பாங்களோ தெரியல. எனக்கு இப்ப சும்மா ஸ்டேட்டஸ் போட போட்டோ வேணும். நீங்க எடுத்து குடுப்பீங்களா மாட்டீங்களா..?? முடியாதுன்னா சொல்லிடுங்க, நான் போய் வேற யார்கிட்டயாவது கேக்குறேன்” அப்படின்னு கோபமா சொன்னா வெண்ணிலா.
“ஏங்க கோச்சுக்கிறீங்க..?? நான் எடுத்து தர மாட்டேன்னு எப்ப சொன்னேன்..?? என் போன்ல எடுக்கவா…?? ஆப்பிள் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன். பிக்சர் குவாலிட்டி நல்லா இருக்கும்” அப்படின்னு அரவிந்த் கேட்க, “ஆப்பிள் ஐபோனா… நம்ம டப்பா போன்ல எடுக்குறதுக்கு பதிலா இதுல எடுத்தா சூப்பரா இருக்குமே..!!” அப்படின்னு நினைச்ச நிலா, “ஓகே நீங்க எடுங்க. நான் அப்புறமா உங்களுக்கு என் நம்பர் கொடுக்கிறேன், எனக்கு வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுங்க” என்றாள்.
“Wow.. single shot two mangoes!” அப்படின்னு நினைச்சு குஷியான அரவிந்த், போனை எடுத்து அவளை போட்டோ எடுக்க ரெடி ஆனான்.
ஒரு லாங் கவுன் போட்டிருந்த வெண்ணிலா, அவளோட நீண்ட கூந்தலை போனிக்டெய்ல் போட்டு கட்டி வச்சிருந்தா. இப்போ அவ ஹேர் பேண்டை கழட்டி கையில் மாட்டிட்டு, கடலை பார்த்து நின்னவ அப்படியே திரும்பி அரவிந்தை பார்த்தா. அவ செஞ்ச ஒவ்வொரு செயலையும் போட்டோவா எடுத்திருந்தா கூட அத்தனையும் அழகா இருந்திருக்கும்னு நினைச்ச அரவிந்த், ஏற்கனவே அவ தலைமுடியில கை வச்ச உடனே வீடியோவா எடுக்க ஆரம்பிச்சுட்டான். அப்புறம் அவ போஸ் குடுக்க ஆரம்பிச்சதும் விதவிதமா போட்டோ எடுத்தான்.
அதேபோல அங்க வந்திருந்த அந்த ஃபேமஸ் போட்டோகிராபர் டீம், விஷ்வாவையும் மேகாவையும் விதவிதமா, “இப்படி திரும்பி நில்லுங்க சார். நீங்க மேடமை தூக்குங்க. தூரத்துல இருந்து ஓடி வந்து திரும்பி பாக்குற மாதிரி பாருங்க. ரெண்டு பேரும் குளோசப்ல நின்னு அப்படியே ஒருத்தரையொருத்தர் பாருங்க” அப்படின்னு இங்கிலீஷ்ல சொல்லி போட்டோஸ், வீடியோஸ்னு எடுத்து தள்ளுனாங்க.
அடிக்கிற வெயில்ல ஒரு கட்டத்துக்கு மேல போஸ் குடுத்து குடுத்து டயர்ட் ஆன விஷ்வா, “ஏய் போதும்டி. அவனும் விட மாட்டேங்குறான், நீயும் விட மாட்டேங்குற. எத்தனை ஆங்கிள்ல எடுத்துத் தொலையிவீங்க..?? அடிக்கிற வெயில்ல மண்டை காயுது” அப்படின்னு சலிப்பா சொல்ல, இன்னும் நிறைய போட்டோஸ் எடுக்கணும்னு ஆர்வமா இருந்த மேகா, “இன்னும் கொஞ்சம் எடுக்கலாம் விஷ்வா. மறுபடியும் இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் அமையவா போகுது..??” அப்படின்னு கேட்டா.
“மவளே.. என் ஸ்கின் மட்டும் டேன் ஆச்சுன்னா உன்னைக் கொன்னுடுவேன்டி” அப்படின்னு அவன் சொல்ல, “பரவால்ல, ஆனா ஆகிட்டுப் போகுது. நீங்க என்னைவிட ரொம்ப கலரா இருக்கீங்க. So 2, 3 ஷேட் கூட நீங்க டேன் ஆகலாம். ஒன்னும் தப்பில்ல. அப்பத்தான் பையனைவிட இந்த பொண்ணு கொஞ்சம் கலர் கம்மின்னு யாரும் நம்மளைப் பார்த்து சொல்ல மாட்டாங்க. நாம பெர்பெக்ட் மேட்ச்சா இருப்போம்” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்ச மேகா, அவன் கழுத்துல தன் கைகளை மாலையா போட்டுக்கிட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி போஸ் குடுத்தா. அவ அவனைவிட உயரம் கம்மியா இருந்ததால அந்த போட்டோ ரொம்ப அழகா வந்துச்சு.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)