Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 93

மூர்கனின் காதலி CH 93

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 93

எல்லாரையும் கூட்டிட்டு செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்கு போனான் விஷ்வா. “இங்க இவருக்கு என்ன அவ்வளவு முக்கியமான வேலை இருக்க போகுது? இவருக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே..!!” அப்படின்னு மேகா உட்பட எல்லாரும் குழம்பிப் போய் நிக்க, அவங்களை வரவேற்க வந்த பொண்ணுங்க கூட்டத்துக் கிட்ட மேகாவ ஒப்படைச்ச விஷ்வா, “இவங்க சொல்றத கேளு”ன்னு சொல்லிட்டு அவளை அனுப்பி வச்சுட்டான்.

“இங்க என்ன தம்பி நடக்குது? எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே..”ன்னு காளீஸ்வரன் கேட்க, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எல்லாருக்கும் எல்லாம் புரியும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போயிட்டு வரேன்”னு சொன்ன விஷ்வா, மகேஷை அவங்களை உள்ள கூட்டிட்டு போகச் சொல்லிட்டு, தயாளனை மட்டும் கூட கூட்டிட்டு அங்கு இருந்து கிளம்பிட்டான்.

“இந்த இடத்துல சுத்திப் பாக்குறதுக்கு அப்படி என்ன இருக்கு? எதுக்கு சம்மதம் இல்லாம எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காரு..!!” அப்படின்னு எல்லாரும் தங்களுக்குள்ள பேசிட்டு இருக்க, “ஏதாவது விஷயம் இல்லாமையா விஷ்வா இவ்வளவு தூரம் வந்திருப்பான்? அதான் வெயிட் பண்ண சொல்லிட்டு போயிருக்கானே.. வெயிட் பண்ணிப் பாக்கலாம். எனக்கு என்னமோ இங்க இன்ட்ரஸ்டிங்கா ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுது”ன்னு உற்சாகமா சொன்னா சௌபர்ணிகா.

அதனால சர்ச்ல எல்லாரும் அமைதியா வெயிட் பண்ண ஆரம்பிச்சாங்க. அந்த இடத்தைச் சுத்தி முத்தி பார்த்த வெற்றி, “பாக்க பழைய இடமா இருந்தாலும், இங்க இருக்கிற ஆர்க்கிடெக்சர் சூப்பரா இருக்கு. நம்ம ஊர் சர்ச்சுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே, அந்த சர்ச்சுக்குள்ள ஒரு வெளிநாட்டு இளவரசன் மாதிரி டிப்டாப்பா கருப்பு கலர் பிராண்டட் கோட் சூட் போட்டுக்கிட்டு, சிங்கம் டிசைன்ல தங்கம் மற்றும் வைரக் கற்கள் பதிச்ச ஒரு ப்ரூச் மாட்டிக்கிட்டு விஷ்வா உள்ள வந்தான்.

அவன் உள்ள வந்த அடுத்த நிமிஷம், அதுவரைக்கும் அமைதியா இருந்த அந்த சர்ச் டக்குன்னு ஒரு விழாக்கோலம் பூண்டுச்சு. அங்கிருந்த லைட் எல்லாம் எரிய, மியூசிக் ஆர்டிஸ்ட் எல்லாம் பல இன்ஸ்ட்ருமெண்ட்ஸை வாசிச்சுக்கிட்டே விஷ்வாவைச் சுத்தி வர, ரெட் கார்பெட்ல தன்னோட பாடிகார்ட்ஸோட கெத்தா உள்ள போனான் விஷ்வா.

அப்புறம் சர்ச்சோட ரெண்டு வாசல் வழியாவும் கூட்டமா நிறைய பேர் உள்ள வர, கொஞ்ச நேரத்துல அந்த இடமே பரபரப்பாயிடுச்சு.
அப்போ வெள்ளை கலர்ல ஏஞ்சல் டிரஸ் போட்டுக்கிட்டு, தலையில பூ வளையம் வச்சிருந்த சில வெளிநாட்டு சிறுமிங்க, கையில பூக்கூடையோட ரோஜா இதழ்களைத் தூவிக்கிட்டே ஒரு இங்கிலீஷ் பாட்டை கோரஸா பாடிட்டு வந்தாங்க.

அவங்களுக்கு நடுவுல, வெட்கத்தோட கையில இருந்த பூங்கொத்தை இருக்கிப் பிடிச்சுக்கிட்டு, ப்ளூ கலர் சின்ட்ரெல்லா டிரஸ்ல, மேகா தலையில வைரக் கற்கள் பதிச்ச குயின் எலிசபெத் யூஸ் பண்ண அதே ஒரிஜினல் கிரீடத்தை வச்சுட்டு வந்துட்டு இருந்தா.

அவ மேல பூ மழை பொழிய, அந்த நேரத்துல அவளைப் பார்த்த எல்லாருக்கும் நிஜமாவே சின்ட்ரெல்லாவை நேர்ல பாக்குற மாதிரி ஒரு ஃபீல் கிடைச்சது. எல்லாரும் ஆச்சரியமா எழுந்து நின்னு, “என்னடா நடக்குது இங்க?” அப்படின்னு யோசிச்சுக்கிட்டே அவளையும் விஷ்வாவையும் மாத்தி மாத்தி பார்த்தாங்க.

மேகா உள்ள வந்த உடனே அவ கையப் பிடிச்சு கூட்டிட்டு போன விஷ்வா, “நம்ம ரெண்டு பேரும் இன்னொரு தடவை மேரேஜ் பண்ணிக்கப் போறோம். நீ ரெடியா?”ன்னு கேட்டான். அதுக்கு வாயெல்லாம் பல்லா மேகா, “ஏ பிக் எஸ்ஸ்ஸ்..!! இவ்வளவு ஹேண்ட்சமான பிரின்ஸ் சார்மிங் ப்ரோபோஸ் பண்ணும்போது சின்ட்ரெல்லாவால எப்படி நோ சொல்ல முடியும்?”ன்னு கேட்டுட்டு கண்ணடிச்சா.

“ஏலேய்ய்.. இங்க என்னடே நடக்குது??”ன்னு காளீஸ்வரன் வேகமா கேட்க, “அவங்க ரெண்டு பேரும் கிறிஸ்டியன் முறைப்படி இங்க கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன் அண்ணே”ன்னு சொன்னான் முத்து.

“என்னது? கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணமா? நாமதான் முறைப்படி இவங்களுக்கு ரெண்டு தடவை கல்யாணம் பண்ணி வச்சுட்டோமே.. அப்புறம் எதுக்கு இப்படி வெளிநாட்டுக்கு வந்து கல்யாணம் பண்றாங்க? இதெல்லாம் தப்பு, தெய்வக் குத்தம் ஆயிடும்”னு காளீஸ்வரன் டென்ஷனா சொல்ல, “அண்ணா விடுங்கண்ணா. இப்ப எதுவும் சொல்லி அவங்க சந்தோஷத்தைக் கெடுத்துடாதீங்க. அவங்க ஏதோ ஆசைப்பட்டு பண்றாங்க, பண்ணிட்டுப் போகட்டும். நீங்கதான் நம்ம தங்கச்சியை தாரை வார்த்து விஷ்வா சாருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டீங்களே.. ஏற்கனவே அவ அவரோட பொண்டாட்டிதான். அவரு பொண்டாட்டியை அவரு எத்தனை தடவை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கென்ன? அது அவங்க விருப்பம். இதுல நாம தலையிடக் கூடாதுண்ணா”ன்னு சொன்னான் முத்து.

“ஆமாப்பா.. அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதீங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மாமா எனக்கு கால் பண்ணி அத்தைக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்கான்னு கேட்டாரு. நானும் யோசிச்சுப் பார்த்தேன். நாங்க சின்ட்ரெல்லா படம் பார்த்துட்டு இருக்கும்போது அத்தை இந்த மாதிரி டிரஸ் போட்டு சர்ச்ல ஒரு பிரின்ஸ் கூட மேரேஜ் பண்ணிக்கிட்டா சூப்பரா இருக்கும்லன்னு சொன்னாங்க. எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி நிறைய ஆசை இருக்கும். அதனால மாமா கேட்ட உடனே நான் அவர் கிட்ட இதைச் சொன்னேன்.
அவர் ஏதோ சும்மா தெரிஞ்சுக்க கேக்குறாருன்னு தான் நான் சொன்னேன். ஆனா நிஜமாவே அத்தைக்காக இங்க வந்த இடத்துல இதெல்லாம் பண்ணிருக்காரு. இந்த மாதிரி ஒய்ஃப்போட ஆசையை எல்லாம் கேட்டு கேட்டு நிறைவேத்துற ஹஸ்பண்ட் எத்தனை பேருக்கு கிடைப்பாங்க? அத்தைக்காக மாமா இவ்வளவு பண்ணும்போது நாம சந்தோஷப்படணும். நீங்க எதுக்கு கோவப்படுறீங்க?”ன்னு நிலா கேட்ட உடனே, மேகா முகத்துல இருந்த சந்தோஷத்தைப் பார்த்துட்டு அதைக் கெடுக்க மனசு இல்லாம காளீஸ்வரன் அமைதியாகிட்டாரு.

சர்ச் ஃபாதர் முன்னாடி மேகாவும் விஷ்வாவும் நின்னுட்டு இருந்தாங்க. அவளை மேலிருந்து கீழாக ஒரு தடவை பார்த்தான் விஷ்வா. நிலா சொன்னதுக்கு அப்புறம்தான் அந்தப் படத்துல வர்ற சின்ட்ரெல்லா எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்க அந்தப் படத்தையே பார்த்தான். ஆனா படத்துல வந்த சின்ட்ரெல்லாவை விட இப்போ அவனோட மேகா அவன் கண்ணுக்கு பேரழகியா தெரிஞ்சா. கழுத்துல இருந்த அந்த சிம்பிள் டைமண்ட் நெக்லஸ், குட்டி ஸ்டட், தலையில இருந்த கிரீடம்.. இது எல்லாத்தையும் விட அவனை மயக்குற அவளோட சிரிப்புன்னு மொத்தமா ஜொலிச்சுட்டு இருந்த மேகா அவனோட பிரின்சஸாவே தெரிஞ்சா.

“உன்னை டெய்லியும் தான் பாக்குறேன். ஆனா சில நேரம் உன்ன பாக்குறப்போ, உன்ன விட யாரும் அழகா இருக்க முடியாதுன்னு தோணுதுடி. என் கண்ணுக்கு நீ எப்படி தெரியுறன்னு என்னால வார்த்தையால சொல்ல முடியல. You are just flawless beauty” அப்படின்னு மனசுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டான்.

இதுவரைக்கும் வெட்கத்துல குனிஞ்சிருந்த மேகா, இப்பதான் அவனை நேரா பார்த்தா. அவளுக்குப் போட்டியா அவனும் பிரிட்டிஷ் இளவரசன் மாதிரி அழகா ரெடியாகி இருக்க, “இவரு எப்பவுமே மாடல் மாதிரி ஹேண்ட்சமா தான் இருப்பாரு. ஆனா இன்னைக்கு அழகு ஓவர்லோடடா இருக்கு. அப்படியே.. அழகா.. அழகா.. என் பேரழகான்னு இவரைச் சுத்திச் சுத்திப் பாட்டு பாடணும் போல இருக்கே! என்ன இருந்தாலும் இவரு என்ன விட கொஞ்சம் கலராதான் இருக்காருல்ல..!!” அப்படின்னு யோசிச்சுக் கிட்டே அவனைப் பார்த்தா.

அப்போ ஏஞ்சல் காஸ்ட்யூம்ல இருந்த ரெண்டு சிறுமிங்க தட்டுல மோதிரம் கொண்டு வர, ஃபாதர் அவங்க ரெண்டு பேரையும் பார்த்து “உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”ன்னு இங்கிலீஷ்ல கேட்டாரு.

“Yes Father”ன்னு ரெண்டு பேரும் சேர்ந்து சொல்ல, ஃபாதர் மோதிரத்தைக் கொடுத்தாரு. அதை வாங்கிக்கிட்ட விஷ்வா, மண்டியிட்டு மேகாவோட இடது கையைப் பிடிச்சு விரல்ல மோதிரம் மாட்டி விட்டான்.
அந்த அழகான தருணத்துல அப்படியே உறைஞ்சுப்போன மேகா, கண்ணுல கண்ணீரோட அவனையே பார்த்தா. அப்புறம் அவ கையில மோதிரம் கொடுக்கப்பட, விஷ்வா மாதிரியே தன்னோட பெரிய டிரஸ்சை கஷ்டப்பட்டு பிடிச்சுக்கிட்டு மண்டியிட்டு அவனோட விரல்ல மோதிரம் போட்டா மேகா. கல்யாணம் முடிஞ்சதும் அவளோட லாங் டிரஸ்சை சரி பண்ணி மேகாவை எழ வைச்சான் விஷ்வா.

இதையெல்லாம் அங்க இருந்த போட்டோகிராபர்ஸ் சூப்பரா படம் பிடிச்சுட்டு இருந்தாங்க.
“அடுத்து எல்லா படத்துலயும் வர்ற மாதிரி ஃபாதர் அந்த டயலாக்கைச் சொல்லுவாரா?”ன்னு தயாளன் வெயிட் பண்ணிட்டு இருக்க, “You may kiss the bride”ன்னு ஃபாதர் சொன்னாரு. அந்த வார்த்தைக்காகவே காத்துட்டு இருந்த மாதிரி, விஷ்வா மேகாவைத் தன் பக்கம் இழுத்து அவ இதழ்கள்ல ஒரு ஆழமான முத்தம் கொடுத்தான். அந்த ஒரு கிஸ் விஷ்வாவை அவனோட வாழ்க்கையைப் பத்தியே யோசிக்க வச்சுடுச்சு.

அவ மூச்சு விட திணறறதைப் பார்த்துட்டு விலகினவன், “எனக்கு ஏன் இந்த கிஸ் லைஃப் லாங் அப்படியே தொடரணும்னு தோணுது? ஏன் இவகிட்ட மட்டும் என் செல்ஃப் கண்ட்ரோல் மிஸ் ஆகுது? இவ எனக்கு மட்டும்தான். எப்பவும் இவகூட இப்படியே சந்தோஷமா வாழணும்னு தோணுதே.. ஒருவேளை இந்த ஃபீலிங்குக்கு பேர்தான் லவ்வா? அப்படின்னா.. நான் இவளை லவ் பண்றேனா?”ன்னு ஆச்சரியமா மேகாவைப் பார்த்தான்.

“என்னடா.. கல்யாணம்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??”ன்னு ஆச்சரியம் கலந்த கோபத்தோட விஷ்வாவைப் பார்த்துட்டு இருந்தாரு காளீஸ்வரன்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured