அத்தியாயம் 92
“ஓஹோ, நீ பெரிய டான்சர்னு எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதுன்னு என்ன நக்கலா பாத்து சிரிக்கிறியா..? அது என்ன அப்படி எனக்கு வராத டான்ஸ்னு நானும் இன்னைக்கு ஆடிப் பாத்துடுறேன்” அப்படின்னு நினைச்ச விஷ்வா, தன் ஒரு கையை அவ முன்னாடி நீட்டி “Let’s go”ன்னான். “இவர் நிஜமாவே நம்மள டான்ஸ் ஆடக் கூப்பிடுறாரா..?”ன்னு நம்ப முடியாம மேகா அவனைப் பார்க்க, “கம்ஆன் பாஸ் கம்ஆன் பாஸ்..!!”னு எல்லாரும் கோரஸா கத்தி அவங்களை என்கரேஜ் பண்ணாங்க.
தானாவே மேகாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு ஸ்டேஜுக்குப் போன விஷ்வா, பேக்ரவுண்ட்ல “மேகமோ அவள்… மாய பூ திரள்…” பாட்டு சத்தமா ஸ்பீக்கர்ல ஒலிக்க, அவளோட சேர்ந்து ஸ்லோவா Salsa டான்ஸ் ஆடினான். அதைப் பார்த்து அதிர்ந்து போன மேகா, அந்த ஒரு நிமிஷத்துல அவ கத்துக்கிட்ட மொத்த டான்ஸையுமே மறந்துட்டா. விஷ்வா தான் அவளை இழுத்துப் பிடிச்சு பேலன்ஸ் பண்ணி ஆட வச்சான்.
அதைப் பார்த்த எல்லாரும், “எப்பா… நம்ம பாஸ் இவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறாரு! மேகா மேடமுக்கு தான் டான்ஸே வரல போல. இருந்தாலும் சார் சூப்பரா மேனேஜ் பண்றாரு”ன்னு நினைச்சாங்க.
நடக்குறதை நம்ப முடியாம மேகா ஏதோ மேகத்துல மிதக்குற மாதிரி இருந்தா. பாட்டு முடிஞ்சதும் எல்லாரும் கைதட்டி விசிலடிச்சாங்க. அந்த சத்தத்தைக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்த மேகா, “உண்மையைச் சொல்லுங்க… உங்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா? அப்புறம் ஏன் நான் அன்னைக்குக் கேட்டப்போ அமைதியா இருந்தீங்க?”ன்னு கேட்டா.
“எனக்கு டான்ஸ்லாம் ஆடத் தெரியாதுடி. ஆனா விஜய் நல்லா ஆடுவான். அவன் மத்த பொண்ணுங்க கூட இந்த மாதிரி டான்ஸ் ஆடுறதை நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். அதை வச்சு எனக்கு வர்ற மாதிரி பண்ணேன். இதுதான் டான்ஸா? ஈஸியா தான் இருக்கு”ன்னு விஷ்வா கூலா சொல்ல, “அடப்பாவி… மத்தவங்க ஆடுறதை பார்த்தே இவ்ளோ நல்லா ஆடுறன்னா, நீ முறையா பிராக்டிஸ் பண்ணா இன்னும் சூப்பரா ஆடுவியே! நிஜமாவே நீ ஆல்ரவுண்டர் தான்யா”ன்னு மேகா மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டா. பார்ட்டி முடிஞ்சதும் ரெண்டு பேரும் கிளம்பி வீட்டுக்கு போனாங்க.
விஷ்வா ரூம்ல லேப்டாப் வச்சு வேலை பார்த்துட்டு இருக்க, “வீட்டுக்கு வந்தும் வேலை பாக்கணுமா? எடுத்து வைங்க விஷ்வா. எவ்ளோ நேரம் தான் மானிட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பீங்க! இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா சீக்கிரம் கண்ணு போயிடும்”னு சொல்லிட்டு மேகா அவன் பக்கத்துல பெட்ல உட்கார்ந்தா
“அவ்ளோதான் முடிச்சுட்டேன், இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. அதுசரி, நான் உன்கிட்ட ஒரு வேலை சொன்னேனே, அது என்னாச்சு?”ன்னு விஷ்வா கேட்க, “என்கிட்டயா? என்ன சொன்னீங்க?”ன்னு குழப்பமா கேட்டா.
“அதுசரி, உன் கிட்ட போய் கேட்டேன் பாரு… என்ன சொல்லணும். இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்ற!”ன்னு விஷ்வா சலிச்சுக்க, “நீங்க எதுவுமே தெளிவா சொல்லாம இப்ப எதுக்கு என்னைத் திட்டுறீங்க? முதல்ல என்ன வேலை சொன்னீங்கன்னு சொல்லுங்க”ன்னு கேட்டா மேகா.
“நம்ம மேரேஜ் ரிசப்ஷனுக்கு உன்ன லொகேஷன் சூஸ் பண்ண சொன்னேனே, பண்ணியா?”ன்னு விஷ்வா லேப்டாப்பை ஷட் டவுன் பண்ணிட்டு கேட்க, “அதுவா, நான் அதெல்லாம் எப்பவோ யோசிச்சுட்டேன். இன்னைக்கு ஆபீஸ்ல பிஸியா இருந்ததுல உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்”ன்னா மேகா.
விஷ்வா ஆர்வமா, “மேடம் எங்க போலாம்னு இருக்கீங்க?”ன்னு கேட்க, “மாலத்தீவ்ஸ் (Maldives). நான் ஆல்ரெடி முத்து அண்ணாகிட்ட சொல்லி எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் பாஸ்போர்ட் அப்ளை பண்ணச் சொல்லிட்டேன். இந்தியாவுல இருந்து அங்க போக விசா தேவையில்லை. பாஸ்போர்ட் ரெடி ஆகிட்டா கிளம்பிடலாம். ஆனா வெரிஃபிகேஷன் முடிஞ்சு பாஸ்போர்ட் கிடைக்க லேட்டாகும்னு அண்ணா சொன்னாரு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல”ன்னா.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உன் ஃபேமிலி டீடைல்ஸை மட்டும் மகேஷுக்கு அனுப்பச் சொல்லு”ன்னு விஷ்வா சொன்னான். “ம்ம்ம்… எனக்கு ஒரு ஆசை”ன்னு மேகா இழுக்க, “பார்றா… அப்படி என்னடி ஆசை உனக்கு?”ன்னு அவன் கேட்டான்.
“மாலத்தீவ்ஸ்க்கு பிளைட்ல போனா சீக்கிரம் போயிடலாம். ஆனா மெதுவா எல்லாரோடையும் டிராவல் பண்ணி, நிறைய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு 7, 8 நாள் குரூஸ் ஷிப்ல போலாமா? எல்லாருக்கும் இது ஒரு டிஃபரண்ட் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். இது அவங்களோட லைஃப்டைம் ட்ரிப், அதான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன்”ன்னா மேகா.
“ஆல்ரெடி ஒரு மாசமா நான் சரியா ஆபீஸ் பக்கமே போகல. இதுல அங்க போய் சேரவே இவ்ளோ நாள் ஆச்சுன்னா, அப்புறம் ஃபங்ஷன் முடிச்சுட்டு எப்ப வர்றது? பாஸ்போர்ட்லாம் ஒரு மேட்டரே இல்ல, நான் சீக்கிரம் அரேஞ்ச் பண்ணிடுவேன். நம்ம பிரைவேட் ஜெட்லயே போயிட்டு வந்துடலாம். அப்பயும் உனக்கு ஷிப்ல தான் போகணும்னா, நான் புக் பண்ணித் தரேன், நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. என்னால வர முடியாது, எனக்கு வேலை இருக்கு”ன்னு விஷ்வா விடாப்பிடியா சொல்லிட்டான்.
“சரி வேண்டாம்னா விடுங்க. நீங்க லொகேஷன் தானே கேட்டீங்க, நான் சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம், நீங்க என்னமோ பண்ணுங்க”ன்னு மேகா முகத்தை தூக்கி வச்சுட்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கிட்டா.
“கோவிச்சுக்கிறன்னா கோவிச்சுக்கோ போ. நீ என்ன சொன்னாலும் அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது”ன்னு நினைச்ச விஷ்வாவும் கோபத்துல அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கிட்டான்.
கொஞ்ச நேரம் அப்படியே போச்சு. ஆனா ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு தூங்கிப் பழக்கமானதுனால தூக்கமே வரல. ஒரு கட்டத்துக்கு மேல மேகா வேற வழி இல்லாம விஷ்வாவை கட்டிப்பிடிச்சுக்கிட்டே படுத்தா. அதுக்கப்புறம் தான் ரெண்டு பேருக்கும் தூக்கம் வந்துச்சு.
சில நாளுக்கு அப்புறம், விஷ்வா சொன்ன மாதிரியே அவனோட பிரைவேட் ஜெட்ல எல்லாரும் மேரேஜ் ரிசப்ஷனுக்காக மாலத்தீவ்ஸ் போனாங்க.
இன்னும் ரெண்டு நாள்ல ஃபங்ஷன், அதனால முன்னாடியே வந்ததை வச்சு எல்லாரையும் வெளிய சுத்திக் காட்ட விஷ்வா கூட்டிட்டுப் போனான்.
மேகாவோட ஃபேமிலி கூட விஷ்வாவோட சொந்தக்காரங்க சிலரும் வந்திருந்தாங்க. முதல் முறை வெளிநாடு வந்த மதுரைக்காரங்க அந்த அழகைப் பார்த்து வியந்து போனாங்க. அவங்க போன வேன் Seventh-day Adventist Church முன்னாடி போய் நின்னுச்சு.
“இது என்ன இடம், பாக்கவே வித்தியாசமா இருக்கு? ஊர் சுத்திப் பாக்கலாம்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க!”ன்னு காளீஸ்வரன் கேட்க, அந்த இடத்தை போட்டோ எடுத்து உடனே கூகுள் லென்ஸ்ல தேடின வெண்ணிலா, “அப்பா இது சர்ச்”ன்னா.
“எனது சர்ச்சா?”ன்னு புரியாம அவர் கேட்க, “ஐயோ அது ஸர்ச் இல்லப்பா, சர்ச் (Church)… கிறிஸ்டியன்ஸ் சாமி கும்பிடுற இடம்”ன்னா நிலா. “ஓ அப்படியா… அவங்க கோயிலுக்கு நம்மளை எதுக்கு தம்பி கூட்டிட்டு வந்திருக்காரு? இந்த நாட்டுல நம்ம கும்பிடுற மாதிரி முருகன் கோயில், சிவன் கோயில்லாம் இருக்காதா?”ன்னு காளீஸ்வரன் கேட்க, “இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு, அதான் வந்திருக்கோம். எல்லாரும் கீழ இறங்குங்க”ன்னான் விஷ்வா.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)