Home FREE NOVELSமூர்கனின் காதலி ‌CH 91

மூர்கனின் காதலி ‌CH 91

by Thenaruvi Tamil Novels
90 views

அத்தியாயம் 91

“உனக்காக இன்னைக்கு இங்க ஒரு பார்ட்டி வைக்கலாமா..?”ன்னு விஷ்வா மேகாகிட்ட கேட்க, “Yeah… Why not..?”ன்னு ரொம்ப உற்சாகமா கேட்டா அவ. அதனால லேசா சிரிச்ச விஷ்வா, “ஓகே, நீ admin office-க்கு போ. உன்னோட appointment letter-ஐ அவங்க தருவாங்க. அப்புறம் இந்த ஆபீஸ்ல உன்னோட position என்னன்னு அவங்க உனக்கு explain பண்ணுவாங்க”ன்னு சொன்னாரு.

“Okay, Thank you”ன்னு சொல்லிட்டு மேகா வெளில வந்தா.
“HR-ஐ போய் பார்க்கச் சொல்லாம, டைரக்டா Chairman office Admin-ஐ போய் பார்க்க சொல்றாரு.. அப்போ எனக்கு ஏதோ high level posting தான் கொடுக்கப் போறாரு போல.. நான் இத்தனை நாளா நினைச்ச மாதிரி, கடைசியா விஷ்வானால எனக்கு என்னோட skills-ஐ ப்ரூவ் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருச்சு”ன்னு நினைச்சுக்கிட்டே சிரிச்ச மூஞ்சியோட வெளில போனா.

அவ அங்கே போய் அட்மினை பார்க்குறதுக்குள்ள விஷ்வா அவனுக்கு கால் பண்ணி, மேகாவோட வேலை பத்தியும் அவளுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பத்தியும் instructions கொடுத்தான். பிசினஸ், ஆபீஸ்னு வந்துட்டா விஷ்வா எல்லாத்துலயும் பர்ஃபெக்ட்டா இருப்பான். அதனால இங்க அவன் மேகாவிற்கு ஸ்பெஷலா எந்த சலுகையும் கொடுக்கல. அவளோட திறமையை செக் பண்ணி, அதுக்கு ஏத்த சரியான வேலையை தான் கொடுத்தான்.
அப்புறம் மகேஷுக்கு கால் பண்ணி அவனோட ரூமுக்கு வரச் சொன்ன விஷ்வா, “நான் மேகாவை Senior Software Engineer-ஆ அப்பாயிண்ட் பண்ண சொல்லி இருக்கேன். சோ, ஹரியை நீ ஃபாலோ பண்ணிக்கோ. அப்புறம் உங்க அக்கா யாரையோ லவ் பண்றாங்கன்னு சொன்னாங்கல்ல.. அவர் பேர் என்ன..? ம்ம்ம்.. சேரன்..! அவரைப் பத்தி விசாரிச்சு நாளைக்குள்ள எனக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணு. நாம அவரைப் பத்தி வெளில விசாரிக்கிறோம்னு யாருக்கும் தெரியக்கூடாது, ஓகேவா..?” அப்படின்னு சொன்னான்.

“ஓகே பாஸ், பண்ணிடலாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சௌபர்ணிகா அக்கா உங்களை பார்க்குறதுக்கு ரோட் சைடுல நின்னு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களே..! அப்போ அவங்களை பார்க்கக்கூட மாட்டேன்னு சொன்னீங்க.. இன்னைக்கு அவங்க தம்பியா பொறுப்பா அவங்களோட பாய்ஃப்ரெண்ட் பத்தி எல்லாம் விசாரிக்கிறீங்க..! சூப்பர் பாஸ்.. உங்களை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. எல்லாம் மேகாவோட மேஜிக். இன்னும் இந்த ஆபீஸ்ல அந்த பொண்ணு என்னென்ன மேஜிக் பண்ண போறாளோ தெரியல..!” என்றான் மகேஷ்.

“அவ அந்த அளவுக்கு பெரிய மாயக்காரி எல்லாம் இல்லடா. அவ ஒரு சரியான பைத்தியக்காரி. அவளைப் பத்தி எனக்குத்தான் தெரியும். இன்னைக்கு ஈவினிங் சின்னதா அவளுக்கு ஒரு வெல்கம் பார்ட்டி அரேஞ்ச் பண்ணு. அதுக்காக இன்னைக்கு மார்னிங் பண்ண மாதிரி பார்ட்டில இஷ்டத்துக்கு எல்லாரும் ஆடிட்டு இருக்கக் கூடாது. It should be a typical office party. Got it..?”ன்னு விஷ்வா கேட்க, “ஓகே பாஸ்”ன்னு சொல்லிட்டு மகேஷ் கிளம்பிட்டான்.

மேகாவை Senior Software Engineer-ஆ உடனே அப்பாயிண்ட் பண்ணி, அவளுக்கென ஒரு தனி ரூம் ஒதுக்கி கொடுத்த ஹரி, “Welcome to MV Tech. And Have a Good day Mam..!”ன்னு சொல்ல, “Thanks Sir”ன்னு சொல்லிட்டு மேகா அப்பாயிண்ட்மென்ட் லெட்டரோட அவ கேபினுக்கு போனா. தன்னோட ரொம்ப நாள் கனவு நனவான சந்தோஷத்துல, அந்த சுழல் நாற்காலியில உட்கார்ந்து ஒரு சின்ன குழந்தை மாதிரி சுத்தி சுத்தி விளையாடி சந்தோஷப்பட்டா.

அப்போ அவளோட ஃபோன் ரிங் ஆச்சு. எடுத்துப் பார்த்தா மீரா. “ஓய் மேகா.. என்ன பண்ணிட்டு இருக்க நீ? நானும் நீயா கால் பண்ணி என்ன நடந்துச்சுன்னு சொல்லுவேன்னு பார்த்தா, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? அன்னைக்கு தான் நீ ப்ரோபோஸ் பண்ண போகும்போது உன்னை எவனோ கடத்திட்டான். மறுபடியும் நீ விஷ்வா சார்கிட்ட ப்ரோபோஸ் பண்ணியா இல்லையா..?”ன்னு கேட்டா மீரா.

அன்னைக்கு நடந்ததை நினைச்சுப் பார்த்த மேகா, “இல்லடி. அவருக்கு இன்னும் பொண்ணுங்க மேல இருக்குற அந்த கெட்ட அபிப்ராயம் மாறல. இப்பதான் நாங்க ரெண்டு பேரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்ல இருந்து ஃபிரண்ட் ஜோனுக்கு வந்திருக்கோம். இப்போ போய் நான் லவ்வை சொன்னாலும், அவர் இதெல்லாம் வேணாம்னு தான் சொல்லுவாரு. தெரிஞ்சே போய் அவர்கிட்ட சொல்லி அசிங்கப்பட சொல்றியா..?”ன்னு சோகமா கேட்டா.

“சரி அதுக்குன்னு எத்தனை நாள்தான் இப்படியே இருப்ப? நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருந்து அதுவே பழகிடுச்சுன்னா அப்புறம் கஷ்டம்டி. உங்களுக்கு கல்யாணமே ஆனதுக்கு அப்புறம் லவ் சொல்ல இவ்ளோ கஷ்டப்படணுமா?”ன்னு சலிப்பா கேட்டா மீரா.

“உனக்கே அப்படி இருந்தா எனக்கு எப்படி இருக்கும்? அதுக்குன்னு நான் உடனே ஃபீல் பண்ணிட்டு மூலையில உட்கார்ந்து அழுதுட்டு இருக்க முடியுமா? இப்போதைக்கு அவர் என்கூட இருக்காரு. நான் அவர் கூட ஆபீஸ் வந்திருக்கேன். இங்க என்னை சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியரா அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க. என்னோட சேலரி பேக்கேஜ் என்ன தெரியுமா? வருஷத்துக்கு 24 லட்சம்! உனக்கு ஞாபகம் இருக்கா? நாம ஸ்கூல் படிக்கும்போது இந்த மாதிரி பெரிய சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு போய் லட்சக்கணக்குல சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டோமே..! இன்னைக்கு என் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைச்சிருக்கு, அதுவும் என் புருஷனோட ஆபீஸ்ல..!
எனக்கு வேற என்ன வேணும்? I’m so happy now. தேவையில்லாம மத்ததை பத்தி யோசிச்சு இப்போ இருக்குற சந்தோஷத்தை கெடுத்துக்க விரும்பல. அப்புறம் என்ன நடக்கும்னு அப்புறம் பாத்துக்கலாம்” அப்படின்னா மேகா.

“அதுவும் கரெக்ட் தான். இந்த ஜாப் உன்னோட கரியர் குரோத்துக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும். ஃபியூச்சர்ல உனக்கு ஏதாவது தேவைப்பட்டா விஷ்வா உனக்கு சப்போர்ட் பண்ணுவாரு”ன்னு மீரா சொல்ல, “நிச்சயமா பண்ணுவாரு. நான் அவரை ஃபோர்ஸ் பண்ணித்தான் ஆபீஸ்க்கு வந்தேன். வரும்போது பெரிய நம்பிக்கை இல்ல. ஆனா அவர் என்னை ஒழுங்கா அனலைஸ் பண்ணி உடனே அப்பாயிண்ட் பண்ணிட்டாரு. நிஜமாவே விஷ்வா எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன் மீரா. எனக்காக இன்னைக்கு ஈவினிங் ஒரு வெல்கம் பார்ட்டி கூட அரேஞ்ச் பண்ணிருக்காரு தெரியுமா? இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை”ன்னு உற்சாகமா சொன்னா மேகா.

தன்னோட வாழ்க்கையை நினைச்சு ஒரு நிமிஷம் வருத்தப்பட்ட மீரா, “ஆமா மேகா, நீ ரொம்ப லக்கி. அதான் சொல்றேன் விஷ்வாவை மிஸ் பண்ணிடாத..!” அப்படின்னா. சரின்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு, “ஓகே டி, வந்த முதல் நாளே வேலை செய்யாம இருந்தா நல்லா இருக்காது. ஐடி பத்தி அட்மின்கிட்ட கேட்டுட்டு வரேன், பை”ன்னு காலை கட் பண்ணிட்டா மேகா.

“நான் மட்டும் கொஞ்சம் அவசரப்படாம தெளிவா யோசிச்சிருந்தா இன்னைக்கு என் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்”ன்னு நினைச்ச மீரா, தன் வயித்துல இருக்குற குழந்தையை தொட்டுப் பார்த்துட்டு ஆதித்யாவுக்கு கால் பண்ணா. வழக்கம் போல அவன் எடுக்கல. “விஷ்வா சார் மேல இருக்குற பயத்துலயும் பஞ்சாயத்துக்காரங்க பயத்துலயும் மதுரையில இருந்து என்னை சென்னைக்கு கூட்டிட்டு வந்து அவனோட வீட்ல தங்க வச்சான்.

அதுக்கப்புறம் நான் எப்படி இருக்கேன்னு ஒரு தடவை கூட வந்து பார்க்கல.
அவனுக்கு என் மேலயும் அக்கறை இல்லை, இந்த குழந்தை மேலயும் அக்கறை இல்லை. நான் கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறான். இதுவரைக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை வெளில சொல்லவே இல்லை. இவனை இப்படியே விட்டா சரிப்படாது. அட்லீஸ்ட் குழந்தையாவது இவனை மாத்தணும்”ன்னு யோசிச்சவ, உடனே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில போட்டு, “I Love you my dear Husband”ன்னு கேப்ஷன் போட்டு அவனோட அக்கவுண்ட்டை டேக் பண்ணிட்டா.

அந்த போஸ்ட் நோட்டிபிகேஷனை பார்த்ததும் கோவமா கால் பண்ண ஆதித்யா, “ஏய் யாரை கேட்டுடி இப்படி எல்லாம் போஸ்ட் போடுற? மத்தவங்க பார்க்குறதுக்குள்ள மரியாதையா டெலீட் பண்ணு”ன்னு மிரட்டுனான்.
“பண்ண முடியாதுன்னு சொன்னா என்னடா பண்ணுவ? நீ என் புருஷன் தானே? நமக்கு மேரேஜ் ஆயிடுச்சு. நீயா சொல்லுவேன்னு பார்த்தேன், ஆனா நீ சொல்ற மாதிரி தெரியல. அதான் நான் சொல்லிட்டேன். மத்தவங்க பேசி நீ கேவலப்படுறதுக்குள்ள சீக்கிரம் நமக்கு ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணு. முதல்ல ஒழுங்கா வீட்டுக்கு வா”ன்னு கோவமா சொல்லிட்டு காலை கட் பண்ணா மீரா.

சாயங்காலம் விஷ்வா ஆபீஸ்ல மேகாவோட வெல்கம் பார்ட்டி ஆரம்பிச்சது. எல்லாரும் ஆட்டம் பாட்டம்னு ஜாலியா இருந்தாங்க. அப்போ எல்லாரும் சேர்ந்து, “பாஸ், நீங்களும் மேகா மேடமும் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடுங்க பாஸ்.. ப்ளீஸ்..!”ன்னு கத்துனாங்க.

“என்னது டான்ஸா? அதுவும் இவரா? இவரைப் பத்தி தெரிஞ்சும் எப்படி மனசாட்சியே இல்லாம டான்ஸ் ஆட சொல்றாங்க?”ன்னு நினைச்ச மேகா, விஷ்வாவை நக்கலா பார்த்து சிரிச்சா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured