Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 79

மூர்கனின் காதலி CH 79

by Thenaruvi Tamil Novels

“நான் போட்டோ எடுக்க போறேன்”னு சொல்லிட்டு மேகா வேகமா போட்டோகிராபர் கிட்ட ஓடுனா. அதைப் பார்த்துட்டு, “இவ ஒரு சரியான இம்சை..!!” அப்படின்னு புலம்பிக்கிட்டே விஷ்வா அவ பின்னாடியே போனான். அவங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் போட்டோகிராபர் சந்தோஷமாகி, “வாங்க சார்.. வாங்க மேடம்… உங்களுக்கும் போட்டோ எடுக்கணுமா..??” அப்படின்னு கேட்டாரு.

“ஆமாண்ணா, எங்க ரெண்டு பேரையும் அழகா போட்டோ எடுத்து கொடுங்க”ன்னு சொன்ன மேகா, விஷ்வாவோட கையை பிடிச்சுக்கிட்டு அவனோட தோள்ல சாஞ்சுக்கிட்டா.
விஷ்வா அவளை முறைச்சுக்கிட்டே நிக்க, “மேடம், இதெல்லாம் ரொம்ப பழைய போஸ். நீங்க அப்படியே சார் கண்ணைப் பார்க்குற மாதிரி நில்லுங்க. ரெண்டு பேரோட ஐ-கான்டாக்ட் கரெக்டா இருந்தா போட்டோ சூப்பரா வரும்”ன்னாரு போட்டோகிராபர்.

“அப்படியா.. அப்ப ஒரு நிமிஷம் இருங்க..!!” அப்படின்னு சொன்ன மேகா, விஷ்வா கூட கைகோர்த்து அவனோட கண்ணைப் பார்த்து நின்னவ, எக்கி அவனோட தலையை கொஞ்சம் கீழ இழுத்து ஏதோ செட் ப்ராப்பர்ட்டி மாதிரி அவனை குனிய வச்சா. “மூவ் பண்ணாம அப்படியே இருங்க. கரெக்டா என் கண்ணையே பாருங்க. போட்டோ ஒழுங்கா வரலைனா அப்புறம் நான் டென்ஷன் ஆயிடுவேன். கரெக்டா வர்ற வரைக்கும் போட்டோ எடுத்துட்டே தான் இருக்கணும்”னு அவனை மிரட்டுனா.

இவங்களப் பார்த்து சிரிச்ச போட்டோகிராபர், ‘இவங்கள பத்தி நியூஸ்ல என்னென்னமோ வருது, ஆனா இப்படி ஒண்ணா பார்க்க கியூட் கப்பிள்ஸா அழகா இருக்காங்களே’ன்னு நினைச்சுக்கிட்டே அவரே சில போட்டோக்களை எடுக்க ஆரம்பிச்சாரு. இவ பொது இடத்துல வச்சு அதிகாரம் பண்றதால கடுப்பான விஷ்வா, அவ இடுப்புல கை வச்சு அப்படியே தன் பக்கம் இழுத்தான்.

“என்னடி குட்டச்சி.. உனக்கு என் மேல பயம் போயிடுச்சா..??” அப்படின்னு அவளுக்கு மட்டும் கேக்குற மாதிரி மெதுவா சொன்னான்.
“அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்லைங்க. நீங்க எவ்வளவு பெரிய டெரர் பீஸ்-ஸு.. உங்கள பார்த்து யாராவது பயப்படாம இருப்பாங்களா?? என்ன கண்ட நேரத்துல காமெடி பண்ணிட்டு இருக்கீங்க..!!” அப்படின்னு கேட்ட மேகா, ஒரு கையை அவன் நெஞ்சு மேலயும் இன்னொரு கையை இடுப்புலயும் வச்சுக்கிட்டு அவனை ஒட்டி நின்னு கண்ணைப் பார்த்தா.

“அண்ணா இந்த போஸ் ஓகேவா??” அப்படின்னு கேட்க, “டபுள் ஓகேமா.. பெர்ஃபெக்ட்..!!”னு சொல்லி போட்டோகிராபர் போட்டோ எடுக்க ஆரம்பிச்சாரு.
அவளோட அந்த நெருக்கத்துல விஷ்வா தடுமாறிட்டான், ஒரு நிமிஷம் அவ கண்ணுல தொலைஞ்சே போயிட்டான்னு தான் சொல்லணும். மேக்கப் எதுவுமே இல்லாத அவளோட கண்ணு காந்தம் மாதிரி அவனை இழுக்க, விஷ்வா இமைக்க மறந்து அவளையே பார்த்துட்டு இருந்தான். அவங்களுக்குள்ள இருக்குற அந்த கெமிஸ்ட்ரியை பார்த்துட்டு ஒரு ரொமாண்டிக் ஷாட்க்காக போட்டோகிராபர் வெயிட் பண்ணிட்டு இருக்க, “ஆஆஅஅச்ச்ச்ச்..!!”னு சத்தமா மேகா இரும்புனா.

அவளுக்கு பயங்கரமா சளி பிடிச்சிருந்ததால, தும்முனதும் அவ மூக்குல இருந்து சளி வந்துருச்சு. ‘அடச்சீ.. சரியான சொத்தைப்பல் குயின்டா இவ.. கரெக்டான டைம்ல எதையாவது பண்ணி கெடுத்துருவா லூசு கிறுக்கி’னு நினைச்சுக்கிட்டே விஷ்வா அவளை விட்டு விலகுனான். உடனே தன் பேண்ட் பாக்கெட்ல இருந்த கர்ச்சீப் எடுத்து அவ மூக்கை தொடைச்சு விட்டுட்டு, அந்த கர்ச்சீப்பை குப்பைத் தொட்டியில போட்டான். அங்க இருந்த எல்லாரும் அவங்களையே ஆச்சரியமா பார்க்க, போட்டோகிராபரும் சிரிச்சுட்டு இருந்தாரு.
விஷ்வாவைப் பார்த்து ‘ஈஈஈ’ன்னு இளிச்சு சமாளிச்ச மேகா, ‘ஐயையோ, ஒரே வெக்கமா இருக்கே.. இதெல்லாம் நேச்சுரலா நடக்குறதுதானே, நான் என்ன பண்ண முடியும்’னு நினைச்சுக்கிட்டு, “சாரி..!! எனக்கு தண்ணி மாத்தி மாத்தி குடிச்சா சேராது. ஊர்ல இருந்துட்டு திடீர்னு சென்னை வந்ததால இங்க தண்ணி ஒத்துக்கல.. மழை வேற பெய்றதால கோல்டு வந்துருச்சு”ன்னா.

“தண்ணி சேரலைன்னு தெரியுதுல, அப்புறம் எதுக்கு அதை குடிச்சு தொலையுற? மினரல் வாட்டர் இருக்குல்ல??”னு விஷ்வா கேட்க, “இந்த தண்ணி குடிச்சா சும்மா கோல்டு தான் வரும், ஆனா மினரல் வாட்டர் குடிச்சா எனக்கு ஃபீவர் வந்துரும். அப்புறம் நீங்க தான் என்னை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடணும்”னு சொல்லி சிரிச்சா மேகா.

‘யாருடி நீ.. சரியான அரிய வகை உயிரினமா இருக்க’ன்னு விஷ்வா அவளைப் பார்க்க, “ஆமா, நீங்க என்ன பொண்ணுங்க மாதிரி கர்ச்சீப் எல்லாம் வச்சிருக்கீங்க??”னு மேகா கிண்டலா கேட்டா.

“ஏன், கர்ச்சீப் எல்லாம் பொண்ணுங்க மட்டும் தான் யூஸ் பண்ணனும்னு என்ன பேட்டன்ட் ரைட்ஸா வாங்கி வச்சிருக்கீங்க??”னு விஷ்வா கோபமா கேட்டான். அவனை சமாளிக்க, “அண்ணா போட்டோ ரெடியா??”ன்னு கேட்டுக்கிட்டே மேகா போட்டோகிராபர் பக்கம் திருப்புனா. அவங்க பேசிட்டு இருந்த கேப்ல போட்டோகிராபர் போட்டோவை பிரிண்ட் போட்டு டெக்கரேஷன் பண்ற மாதிரி குட்டி குட்டியா அவகிட்ட கொடுத்தாரு.
அதை வாங்கிப் பார்த்து சந்தோஷப்பட்ட மேகா,

“வாவ்.. சூப்பரா கியூட்டா இருக்கு.. தேங்க்ஸ் அண்ணா..!!”னு சொல்லிட்டு காசு கொடுத்துட்டு விஷ்வா கூட கிளம்புனா. கொஞ்ச நேரத்துல எல்லாரும் வேன்ல வந்து ஏறிட்டாங்க. “அடுத்து நாம எங்க போகப்போறோம்??”னு வெண்ணிலா ஆர்வமா கேட்டா.

“வடபழனி முருகன் கோவிலுக்கு போலாம். சென்னை வந்தா அங்க போகணும்னு நினைச்சேன், இப்பதான் டைம் கிடைச்சிருக்கு. டிரைவர் தம்பி, வண்டியை நேரா முருகன் கோவிலுக்கு விடுப்பா..!!”னு காளீஸ்வரன் சொன்னதும், புது இடங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்ட மத்த எல்லார் முகமும் சுருங்கிடுச்சு.

சலிப்பா விஷ்வா கூட உட்கார்ந்திருந்த மேகா மொபைல் எடுத்துப் பார்த்தா. சோசியல் மீடியாவுல “Celebrity Couple விஷ்வா & மேகா லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்”னு டைட்டில் போட்டு சில போட்டோஸ் வந்திருந்தது. விஷ்வாவுக்கு சோசியல் மீடியா அக்கவுண்ட் இல்லைங்கிறதால மேகாவை டேக் பண்ணி போஸ்ட் போட்டிருந்தாங்க.
அதுல விஷ்வா மேகாவுக்கு மூக்கு சிந்தி விடுற மாதிரி ஒரு போட்டோவும் இருந்தது. அதை பார்த்துட்டு மேகா முகம் சுளிச்சு,

“அடப்பாவிகளா.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா?? யாருக்கும் பிரைவசியே கொடுக்க மாட்டீங்களா?? அவர் சொன்னதை விட நீங்க ரொம்ப ஸ்பீடா எல்லாத்தையும் போஸ்ட் போட்டு டிரெண்ட் ஆக்குறீங்களேடா..!!”ன்னு வாய்விட்டே புலம்புனா.

அதைக் கவனிச்ச விஷ்வா, “அதுக்குள்ள வந்துருச்சா?? இங்க குடு, நான் எக்ஸ்பெக்ட் பண்ண போட்டோ இருக்கான்னு பார்க்குறேன்”னு சொல்லிட்டு அவ போனை வாங்கிப் பார்த்துட்டு சத்தமா சிரிச்சான்.

“சிரிக்காதீங்க, வாயை மூடுங்க விஷ்வா”ன்னு சொல்லிட்டு அவனோட தோள்ல சரமாரியா அடிச்ச மேகா, “உண்மையைச் சொல்லிடுங்க, இது நீங்க பார்த்த வேலை தானே?? நியூஸ்ல போட்டோ வரும்னு நீங்க சொல்லும்போதே நான் சுதாரிச்சிருக்கணும். நீங்களே அந்த போட்டோகிராபர் கிட்ட காசு கொடுத்து இதைப் போட சொன்னீங்களா??”னு கோபமா கேட்டா.

“ஏய் லூசு, சும்மா இருடி.. இதெல்லாம் பண்றதுக்கு ஊருக்குள்ள நிறைய பேர் இருக்காங்க.. காசு கொடுத்து இதைப் போடச் சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் உன்ன மாதிரி லூசு கிடையாது”னு நக்கலா சிரிச்சான்.

கோபத்துல மேகா முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு திரும்பி உட்கார்ந்துக்கிட்டா. அப்புறம் வடபழனி முருகன் கோவிலுக்கு போயிட்டு, வர்ற வழியில கண்ணுல பட்ட இடத்தையெல்லாம் சுத்திப் பார்த்துட்டு நைட் 10 மணிக்கு மேல விஷ்வா வீட்டுக்கு வந்தாங்க. டயர்டுல சாப்பாடே வேணாம்னு படுத்து தூங்குன மேகாவுக்கு காய்ச்சல் அடிக்கிறதை வெண்ணிலா கண்டுபிடிச்சா.

வேகமா விஷ்வா ரூமுக்கு போய், “மாமா, அத்தைக்கு பயங்கர காய்ச்சல் அடிக்குது, சீக்கிரம் டாக்டரை வரச் சொல்லுங்க..!!”ன்னா.
சோர்வா சோபாவுல படுத்திருந்த விஷ்வா எழுந்து உட்கார்ந்து, “எனக்கும் லைட்டா ஃபீவர் இருக்கு.. அந்த குட்டச்சி தான் என்கிட்ட வந்து ‘லொக்கு லொக்கு’ன்னு இரும்பி எனக்கும் காய்ச்சலை ஒட்டிவிட்டு பழி வாங்கிட்டா.. சதிகாரி..!!”னு சொல்லிட்டு வாயை மூடிக்கிட்டு இரும்புனான். அவனைப் பார்த்து சிரிச்ச வெண்ணிலா, “மழைக்காலத்துல ஃபீவர் வர்றது நார்மல் தான் மாமா. நீங்க டாக்டருக்கு கால் பண்ணுங்க, நான் போய் அத்தையை எழுப்பி சாப்பிட வைக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்க..!!”னு சொல்லிட்டு போனா.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured