Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 65

மூர்கனின் காதலி CH 65

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 65

ஆதித்யா கிட்ட இருந்து வந்த மெசேஜ்-களைப் பாத்துட்டு அழுதுக்கிட்டு இருந்த மேகாவுக்கு திடீர்னு, “oh my God ஃபோன கோவத்துல தூக்கிப் போட்டு உடைச்சிட்டேனே…!! அவன் கால் பண்ணச் சொன்னானே..!! நான் கால் பண்ணலைன்னு அவன் டென்ஷனாகி அதுல இருக்குற Blur-ஐ ரிமூவ் பண்ணிட்டு மறுபடியும் post பண்ணிட்டா.. எல்லாருக்கும் அசிங்கமாப் போயிடுமே..!!” ன்னு தோண, தன் கண்ணீரத் துடைச்சிட்டு பதறியடிச்சு எழுந்து நின்னா.

அவளுக்கு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் புரியல. “முதல்ல அவன்கிட்ட பேசிப் பார்க்கலாம்..!!” ன்னு நினைச்ச மேகா, உடைஞ்ச தன் செல்போன்ல இருந்து சிம்-ம மட்டும் கழட்டி எடுத்துக்கிட்டு தன் ரூம் கதவத் திறந்து வெளிய போனா. இப்ப விஷ்வா தன்னோட ஓரளவுக்கு set ஆகிட்டதால, அவனோடவே சௌபர்ணிகா அரண்மனையில தங்கிட்டதால, நல்ல வேலையா மேகா அவ கிட்ட சிக்கல.

நேரா வெண்ணிலாவோட ரூம்க்குப் போய் கதவத் தட்டினா மேகா. நாளைக்கு காலேஜ் போக வேண்டியது இருந்ததால, நேரமாவே தூங்கிருந்த வெண்ணிலா, அரைத் தூக்கத்துல வந்து கதவத் திறந்து, “என்ன அத்தை நீங்க இன்னும் தூங்கலையா??” ன்னு கொட்டாவி விட்டபடி கேட்க, “என் ஃபோன் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. ஒரு important கால் பண்ணணும். உன் ஃபோனக் கொஞ்சம் குடுக்குறியா…? என் சிம் கார்டைப் போட்டு பேசிட்டுத் தரேன்” ன்னா மேகா.

“இந்த நேரத்துல யார்ட்ட நீங்க கால் பண்ணிப் பேசப் போறீங்க??” ன்னு கேட்ட வெண்ணிலா, பின்னாடி தானே ஏதோ புரிஞ்சிகிட்டவளப் போல, அவளப் பாத்து கிண்டலாச் சிரிச்சவள், “ஓஹோ மாமா கூட விடிய விடிய ஃபோன் காலா..?? என்ஜாய் என்ஜாய்..!!” ன்னு சொல்லிட்டுத் தன்னோட மொபைல் ஃபோனை unlock செஞ்சு அவள்கிட்ட கொடுத்தா. அவள்கிட்ட ஃபோனை வாங்கின மேகா, வேகமாப் போய் தன்னோட ரூம்க்குள்ளப் புகுந்துகிட்டு ‍door-ஐ லாக் பண்ணிட்டா.
அவ பதட்டமா இருக்கிறதக் கவனிச்ச வெண்ணிலா, “என்னாச்சு இவங்க ஏன் ஒரு மாதிரி இருக்காங்க..? ஒருவேளை மாமா கூட ஏதாவது சண்டை போட்டுருப்பாங்க போல..!! நாளைக்கு நேர்ல ரெண்டு பேரும் மீட் பண்ணிப் பேசினா, எப்படியும் அவங்களே சமாதானம் ஆயிடுவாங்க” ன்னு நினைச்சுத் தூங்கப் போயிட்டா. தன்னோட சிம் கார்ட வெண்ணிலாவோட ஃபோன்லப் போட்ட மேகா, அந்தப் பதட்டத்துலயும் அவ மண்டைக்குள்ள ஸ்டோர் ஆகி இருந்த ஆதித்யாவோட நம்பரை வேக வேகமாப் போட்டு அவனுக்குக் கால் பண்ணினா.

“I’m in love with the shape of you..!!”ங்கற பாட்டு caller tune-ல ஒலிக்குது. இதுக்கு முன்னாடி வரைக்கும் அவளுக்குப் பிடிச்சமான அந்தப் பாட்ட இப்ப கேட்க அவளுக்கு வெறுப்பா இருந்துச்சு. கிட்டத்தட்ட கால் கட் ஆகப் போற சமயம், அத attend பண்ண ஆதித்யா, ஏதோ பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சத்தமா ஹிஹிஹி-ன்னு இழிச்சான். அதக் கேட்கக் கேட்க மேகாவுக்குப் பத்திக்கிட்டு வர,

“சிரிக்காத..!!” ன்னு தன் பற்களைக் கடிச்சுகிட்டுச் சொன்னா. “ஏண்டி..!! நான் சிரிச்சா உனக்கு அப்படியே எரியுதா…? உன் ஆள வச்சு என்ன எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தின நீ.. நான் அப்படி ஒரு மோசமான நிலைமையில இருந்ததப் பாத்து நீயும் அவனும் சேர்ந்து சந்தோஷமாச் சிரிச்சிருப்பீங்கள்ல.. இது என்னோட டைம். இப்ப நீங்க எல்லாரும் கதர்றதப் பாத்து நான் சிரிக்கப் போறேன். நல்லா சத்தமாச் சிரிப்பேன்டி.” ன்ன ஆதித்யா, மறுபடியும் இடியெனச் சிரிச்சான்.

“ப்ளீஸ் ஆதி என்ன விட்டுரு.” ன்னு கண்ணீரோட மேகா கெஞ்ச, “அந்த விஷ்வா கிட்ட நானும் இப்படித்தானேடி கெஞ்சினேன்.. அவன் என்ன விட்டானாடி..? அதான் அவன் ஆளுங்கள விட்டு அடிச்சு என் கையையும் காலையும் உடைச்சு fracture பண்ணிட்டீங்கள்ல.. அதோடவாவது அவன் விட்டானா..? என் ஆபீஸ் வாசல்லயே என்ன பிச்சைக்காரன் மாதிரி தூக்கிப் போட்டுட்டுப் போய் என்ன அவன் அசிங்கப்படுத்துனான்ல.. பதிலுக்கு நான் அவன அசிங்கப்படுத்த வேண்டாமா??” ன்னு அவன் தன்னோட அடி தொண்டையில இருந்து கத்தினான்.

“அதுக்காக இப்படித்தான் பண்ணனுமா..? இப்படி நீ கொஞ்சம் கொஞ்சமா என்ன சாவடிக்கிறதுக்கு, மொத்தமா என்ன கொன்னுப் போட்டுடலாம்டா.” ன்னு சொல்லிட்டு மேகா அழ, “கரெக்ட். எனக்கும் அதான் வேணும். எனக்குக் கிடைக்காத நீ வேற எவனுக்கும் கிடைக்கக் கூடாது. நீ செத்துரு. இப்ப உன் முன்னாடி ரெண்டு options இருக்கு மேகா. No. 1: இந்த problem எதையும் உன்னால handle பண்ண முடியலைன்னா, ‘எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க’ன்னு எழுதி வச்சிட்டு, தூக்கு மாட்டித் தொங்கி செத்துரு. இல்லன்னா, No. 2: நடந்த உண்மை எல்லாத்தையும் ஒரு வீடியோவா record பண்ணி மீடியாவுக்கு அனுப்பி,

‘விஷ்வா உன்ன force பண்ணி marriage பண்ணிக்க சொல்றான்னு’ வாக்குமூலம் குடு. இல்ல இது எதுக்கும் நீ சரிப்பட்டு வரமாட்டேன்னா, no problem. நீ அப்போ பண்ண மாதிரி இப்பவும் போய் நடந்தத எல்லாம் அந்த விஷ்வா கிட்ட சொல்லு. Blur பண்ணாத photos and videos எல்லாத்தையும் நான் உனக்கு சென்ட் பண்றேன். அதையும் போய் அவன்கிட்ட காட்டு. அதப் பாத்த உடனே அன்னைக்கு நைட் நமக்குள்ள என்னென்ன நடந்திருக்கும்ன்னு அவனுக்கே புரிஞ்சிடும். அப்பறம் நீ அழுதுக்கிட்டுப் போய் பத்தினி வேஷம் போட்டு அவன் முன்னாடி சீன் போட முடியாது. நீ என்ன வேணாலும் பண்ணுடி. நான் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கேன்.” ன்னு திமிராச் சொன்னான் ஆதித்யா.

இதுக்கு மேல இவன்கிட்டப் பேசிப் பிரயோஜனம் இல்லன்னு நினைச்ச மேகா, அந்தக் கால கட் பண்ணிட்டா. மேகா கூட மெசேஜ் பண்ணி வெகு நேரமாப் பேசிக்கிட்டு இருந்த விஷ்வா, அவள்கிட்ட இருந்து reply வராததால, “என்ன இவ அதுக்குள்ளத் தூங்கிட்டாளா..? நான் தூங்காம முழிச்சிட்டு இருக்கும்போது, இவளுக்கு என்ன தூக்கம் வேண்டி கெடக்குது??” ன்னு நினைச்சு அவளுக்குக் கால் பண்ணினான். ஆதித்யா கிட்ட பேசிட்டு, மேகா தன்னோட சிம்-ம வெண்ணிலாவோட ஃபோன்ல இருந்து எடுத்துட்டு, அவ ஃபோனை அவள்கிட்டயே கொண்டுப் போய்க் கொடுத்துட்டு வந்ததால, விஷ்வாவுக்கு மேகாவோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்-ல இருக்கிறதா வந்துச்சு.

அதனால அவனுக்கு “ஏதோ சரி இல்ல” ன்னு தோண, எழுந்து அமர்ந்து தன் ரூம விட்டு வெளிய போய் ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தவன், “பேசாம அவ வீட்டுக்கே போய் என்ன பண்றான்னு பாத்துட்டு வந்துடலாமா..? யாராவது பாத்துட்டா, என்ன ஏதுன்னு கேப்பாங்களே.. என்ன சொல்லி சமாளிக்கறது??”ன்னு யோசிச்சான்.

இங்கே தன்னோட ரூம்ல அழுது அழுது சோர்ந்து போயிருந்த மேகா, “இந்த நாசமாப் போன ஆதித்யா என்ன விஷ்வா கூட சேர்ந்து சந்தோஷமா வாழவே விடமாட்டான். நான் இப்படி ஒரு தப்பானவன லவ் பண்ணினதுக்கு நான் இதையெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும். இதனால விஷ்வாவும், என் family-ல இருக்கிறவங்களும் affect ஆகக் கூடாது. என்னால எல்லாரும் கஷ்டப்பட்ட வரைக்கும் போதும். ஆதித்யா சொன்ன மாதிரி நான் சாகிறதைத் தவிர வேற வழி இல்ல. I am sorry Vishva. Sorry அண்ணா.” ன்னு நினைச்சுத் தன் கண்ணீரத் துடைச்சுகிட்டு, கிச்சனுக்குப் போய் ஒரு கத்தியை எடுத்துக்கிட்டுத் தன்னோட ரூம்க்கு வந்தா.

“இந்த நேரத்துல நம்ம ரூம்க்கு யார் வரப்போறா??” ங்கற தைரியத்துல, டோரை லாக் பண்ணாம வந்திருந்த மேகா, கட்டில்ல உக்காந்து தன்னோட left hand-அ முன்னாடி நீட்டி, right hand-ல கத்தியை வச்சுகிட்டு பயத்துல நடுங்கிக்கிட்டு இருந்தா. உண்மையில அவளுக்குச் சாகுற எண்ணம் இல்ல. மாறா, விஷ்வா கூடச் சேர்ந்து சந்தோஷமா வாழணும்னு ஆசைப்பட்டா.

அதனால, தன் கை நரம்பைக் கட் பண்றதுக்காகக் கத்தியைக் கொண்டுப் போறதும், பின் இழுக்கறதுமா… நடுங்கின கைகளோட ஆசைகளுக்கும், ஏமாற்றத்துக்கும், பயத்துக்கும் நடுவுல வாழப் போராடிக்கிட்டு இருந்தா.

“இப்படியே நீ பயந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது மேகா. நீ ஒரு தப்பான ஆள choose பண்ணினதுக்கு நீ இதையெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும். இதுல இருந்து உன்னால தப்பிச்சு ஓட முடியாது. நீ செத்துப் போயிட்டா, வீட்ல இருக்கிறவங்க கூட, ‘நீ இப்படிப் பண்ணிட்டேன்னு’ உன் மேல கோபப்பட்டு அப்படியே கொஞ்ச நாள்ல உன்ன மறந்துருவாங்க. அதான் உனக்கு அடுத்து வெண்ணிலா இருக்காளே.. அவளுக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சு, சந்தோஷப்பட்டு மனசத் தேத்திக்குவாங்க. ஆனா விஷ்வா தான் பாவம். நீ எப்பவும் அவர் கூட இருப்பேன்னு அவர் நம்பிக்கிட்டு இருக்காரு.” ன்னு அவள்கிட்ட அவ மனசாட்சி சொல்ல,

“அவர ஏமாத்திட்டு நான் போகப் போறத நினைச்சாதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.” ன்னு நினைச்சு கதறி அழுத மேகா, கடைசியாத் தானும் விஷ்வாவும் சேர்ந்து எடுத்த selfie photo-வ ஒரு முறை பாத்துட்டு, அந்தக் காட்சிகளை அப்படியே தன்னோட விழித்திரையில நிரப்பி வச்சுகிட்டு, தன் கண்ணை மூடினவள், தன் கை நரம்ப அறுத்துக்கிட்டுச் சாகத் தயாரானா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured