Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 64

மூர்கனின் காதலி CH 64

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 64

விஷ்வா, மேகாவுக்காக செலக்ட் பண்ணி வச்சிருந்த டிரஸ்ஸை அவ கிட்ட காட்ட, “நான் என்ன சொன்னாலும் எப்படியும் உங்க இஷ்டப்படிதான் எல்லாமே நடக்கும்ல… அப்படியே நடக்கட்டும்”னு சொல்லிட்டு அவ மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டா.

“இப்ப என்னடி, இந்த டிரஸ் உனக்குப் பிடிக்கலையா?”னு விஷ்வா கேட்க, “நல்லாத்தான் இருக்கு. நான் எப்ப நல்லா இல்லைன்னு சொன்னேன்?”னு கேட்டுட்டுச் சிரிச்சா மேகா.
விளையாட்டா அவள் பின்னாடி அடிச்ச விஷ்வா, “இதையே ஃபைனல் பண்ணிடவா?”னு கேட்க, “பண்ணுங்க… பண்ணுங்க. ஆனா எனக்கு இது இல்லாம இன்னொரு சில்க் சாரி வேணும். என்னதான் லெஹெங்காலாம் போட்டாலும் சாரி மாதிரி வராதுல்ல?”னு மேகா கேட்டதால, சரின்னு சொன்ன விஷ்வா, அவளுக்காகத் தங்க ஜரிகைகள் கொண்ட பிரீமியம் குவாலிட்டி சில்க் சாரி டிசைன்களை வாங்கி, அவளுக்குப் பொருத்தமானதை செலக்ட் பண்ணான்.

இப்படியே காலையில ஆரம்பிச்சு ஈவ்னிங் வரை கல்யாண ஷாப்பிங் ஆன்லைன்லயே நடந்ததால, எல்லாரும் ஃபோனும் கையுமா உட்கார்ந்திருந்தாங்க. எப்பவும் நாலு கடை ஏறி இறங்கி, எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கிப் பழகுன மேகா குடும்பத்துக்கு இது ஒரு புது அனுபவமா இருந்துச்சு. மேகாவோட குடும்பத்தினர், விஷ்வா கூட வந்தவங்கன்னு எல்லாருக்குமே அவங்கவங்க விருப்பப்படி புது டிரஸ் எடுத்தாங்க.

இதுக்கிடையில யாருக்கும் தெரியாம சௌபர்ணிகாவுக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ண விஷ்வா, “நான் மேகாவுக்கு ஸ்பெஷலா ஒரு எங்கேஜ்மென்ட் ரிங் வாங்கணும். அது எப்படி இருக்கணும்னு நான் யோசிச்சு வச்சிருக்கேன். நீங்க உங்க ஃப்ரெண்ட்டுகிட்ட இதை காட்டி எனக்கு டிசைன் கஸ்டமைஸ் பண்ணித் தரீங்களா?”னு கேட்டான்.

“என்ன இவன் இதே வீட்டுக்குள்ள இருந்துகிட்டு மெசேஜ் பண்ணிப் பேசிட்டு இருக்கான்!”னு யோசிச்ச சௌபர்ணிகா, “ஓஹோ! ஃபியூச்சர் வைஃப்க்காக சர்ப்ரைஸ் பிளானிங்கா? நடக்கட்டும் நடக்கட்டும்”னு நினைச்சுச் சந்தோஷப்பட்டா.

“யா, பண்ணிக்கலாம். நானே இதைப்பத்தி உன்கிட்ட பேசலாம்னுதான் இருந்தேன். மேகாவுக்கு நிறைய ஜூவல்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. நம்ம டிஸ்கஸ் பண்ணி வாங்கிக்கலாம்”னு அவனுக்கு ரிப்ளை பண்ணா.

ராத்திரி 11:00 மணி…
மனசு முழுக்கக் கல்யாணக் கனவுகள சுமந்துக்கிட்டு இருந்த மேகா, தூக்கம் வராமப் புரண்டு படுத்துக்கிட்டு இருந்தா. அப்போ அவளுக்கு மெசேஜ் பண்ண விஷ்வா, “தூங்கிட்டியா?”னு கேட்க, “தூக்கம் வரலை. நீங்க இன்னும் தூங்கலையா?”னு ரிப்ளை அனுப்புனா அவ.

“நான் நல்லாத் தூங்கணும்னா… எனக்கு என் பில்லோ வேணும். அதான் இப்ப என் பக்கத்துல இல்லையே… சோ தூக்கம் வர மாட்டேங்குது. ஆஸ் யுஷுவல் ஸ்லீப்பிங் பில்ஸ்தான் போடணும்னு நினைக்கிறேன்”னு அவன் சொல்ல, “ஸ்லீப்பிங் பில்ஸ் எல்லாம் போட்டுப் பழகக் கூடாது விஷ்வா. உங்களுக்கு எந்த மாதிரி பில்லோ வேணும்னு சொல்லுங்க. நாளைக்கு யாரையாவது விட்டு வாங்கிட்டு வரச் சொல்றேன்”னு அக்கறையா சொன்னா மேகா.

“வேணாம் வேணாம். அது என்னோட ஃபேவரைட் பில்லோ. இந்த வொர்ல்ட்லயே அது சிங்கிள் பீஸ் மட்டும்தான் இருக்கும். அதை யாராலயும் வேற எங்கேயும் வாங்க முடியாது. அதுக்கு நான்தான் ஓனர்”னு விஷ்வா மெசேஜ் அனுப்ப, “அது என்ன அப்படி ஒரு உலகத்துல இல்லாத பில்லோ! ஒருவேளை இவர் இவருக்குப் பிடிச்ச மாதிரி கஸ்டமைஸ் பண்ணி வாங்கி இருப்பாரோ!”னு யோசிச்ச மேகா அதை அவன்கிட்ட கேட்டும்விட்டா.

அதுக்குச் சிரிக்கிற எமோஜியை அவளுக்கு ரிப்ளையா அனுப்புன விஷ்வா, “அந்தப் பில்லோ எப்படி இருக்கும் தெரியுமா?”னு கேட்க, “நீங்க சொன்னாதானே தெரியும்!”னு சொன்னா மேகா.

“அந்தப் பில்லோ என்னோட சின்னதா இருக்கும். ஜஸ்ட் 5 ஃபீட் டால். அதுக்குக் கொஞ்சம் அறிவு கம்மி. அதனால அப்பப்ப லூசுத்தனமா ஏதாவது பேசிட்டே இருக்கும். இருந்தாலும் போர் அடிக்காம இருக்க எஃப்.எம் கேட்போம்ல… அந்த மாதிரி அது பேசுறதையும் போன போகுதுன்னு கேட்டுக்கலாம். அது பார்க்கக் குட்டியா இருந்தாலும், அதோட கம்ஃபர்ட் வேற லெவல். லைட்டா புசு புசுன்னு இருக்குமா… நல்லாக் கையக் கால மேல தூக்கிப் போட்டு ஜாலியாத் தூங்கலாம்”னு விஷ்வா அனுப்புன மெசேஜைப் பார்த்தவுடன் தான், “அடப்பாவி… மெட்டல் மண்டையா! இவ்ளோ நேரமா என்னப் பத்தித்தான் பேசிட்டு இருக்கியா? உனக்கு இப்படியெல்லாம் பேசக்கூட ஃப்ளர்ட் பண்ணத் தெரியுமா? பண்ணு பண்ணு. இதுவும் நல்லாதான் இருக்கு”னு நினைச்ச மேகா, “வாவ்! சூப்பர் பில்லோல… இந்த மாதிரி பில்லோவெல்லாம் யாருக்குக் கிடைக்கும்? உங்களுக்குக் கிடைச்சிருக்குன்னு நினைச்சு நீங்க லக்கியா ஃபீல் பண்ணனும் மிஸ்டர் விஷ்வா. அதை விட்டுட்டு, எப்பப் பார்த்தாலும் அதுல குறை கண்டுபிடிச்சிட்டே இருக்காதீங்க. அப்புறம் சாமி உங்க கண்ணைக் குத்திடும்”னு சொன்னா.

அந்த மெசேஜைப் பார்த்துட்டுச் சிரிச்ச விஷ்வா, “போடி லூசு”னு தனக்குள்ள சொல்லிட்டு, “நான் இவளைத்தான் சொல்றேன்னு இந்தப் பைத்தியக்காரிக்குப் புரிஞ்சுதா இல்லையா?”னு யோசிச்சபடியே, “உங்க சாமி என்ன மாதிரி நல்லவங்க கண்ணையெல்லாம் குத்தாது. ஆனா நான் அந்த அளவுக்கு நல்லவன் இல்லை. என்கிட்ட யாராவது ஓவரா வாய் பேசினா, கண்டிப்பா நான் அவங்க கண்ணைக் குத்தி விட்டுருவேன்”னு அவளுக்கு மெசேஜ் அனுப்புனான்.

அதைப் பார்த்துட்டுச் சிரிச்ச மேகா, “ஐயா, நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?”னு கேட்க, “தெரியலையே மா!”னு சொன்னான் விஷ்வா.
விஷ்வாவோட நம்பரை “மெட்டல் மண்டையன்”னு சேவ் பண்ணி வச்சிருந்த மேகா, அவன்கூட சேட் பண்ணும்போது அந்தப் பெயரைப் பார்த்துட்டு, “நான் இவருக்குக் கரெக்டாதான் பேர் வெச்சிருக்கேன். இந்த மனுஷனுக்குள்ள எல்லா ஃபீலிங்ஸும் இருக்கு. ஆனா இன்னும் இவருக்கு அதை ப்ராப்பரா எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியலை. இந்த ரோபோட் இனிமே நம்ம ப்ராப்பர்ட்டி… சோ, இதை கொஞ்சம் தட்டிக்கொட்டி, டிங்கரிங் வொர்க் எல்லாம் பார்த்து நம்மதான் சரி பண்ணி விடணும்”னு நினைச்சுத் தனக்குள்ள சிரிச்சுக்கிட்டு இருந்தா.
அப்போ ஆதித்யாவோட நம்பரிலிருந்து அவளுக்கு ஒரு மெசேஜ் வந்ததா நோட்டிஃபிகேஷன் வந்துச்சு.

“இந்த நேரத்துல இந்தக் கிறுக்கன் எதுக்கு நமக்கு மெசேஜ் பண்றான்? அதுவும் தைரியமா அவனோட நம்பர்ல இருந்தே பண்றான்! இவனுக்கு விஷ்வா கிட்ட வாங்கினது பத்தலை போல…”னு நினைச்சு, தன் மனசுக்குள்ள அவனை வறுத்தெடுத்த மேகா, அவனோட மெசேஜை ஓப்பன் பண்ணிப் பார்த்தா.

அதுல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மாதிரி ஃபேமஸ் சோஷியல் மீடியாக்கள்ல ஷேர் பண்ணப்பட்ட சில போஸ்ட்டுகளோட லிங்க் கூட, “உன்னோட புது பாய்ஃப்ரெண்டை வச்சு மொத்தமா என்ன ஆஃப் பண்ணிடலாம்னு பார்த்தியாடி? அந்த விஷ்வா எனக்குப் பண்ணதுக்காக உங்க ரெண்டு பேரையும் நான் பழி வாங்காம விடமாட்டேன். இது உங்களுக்கு நான் கொடுக்கிற மேரேஜ் கிஃப்ட். கிஃப்ட் பிடிச்சிருந்துச்சுன்னா, எனக்குக் கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணு”ங்கிற ஆதித்யாவோட வாய்ஸ் மெசேஜும் இருந்துச்சு.

அதனால, “அச்சச்சோ! அந்த வீடியோவை சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணிட்டானா? விஷ்வா அதையெல்லாம் டெலிட் பண்ணியாச்சுன்னு சொன்னாரே!”னு நினைச்சுப் பதறுன மேகா, வேக வேகமா அதுல இருந்த முதல் லிங்கை கிளிக் பண்ணி, திக் திக் இதயத்தோட மொபைல் ஸ்க்ரீனைப் பார்த்தா.
அவ நினைச்ச மாதிரியே அதுல சில போட்டோக்களும் வீடியோக்களும் பதிவிடப்பட்டிருந்துச்சு. அதைப் பார்த்த உடனே மேகாவோட இதயம் துடிக்க மறந்து நின்னுடுச்சு.

ஆதித்யாவோட போன பிறந்தநாள் அன்னிக்கு, மேகா வேணாம்னு சொல்லியும், ஜூஸ்ல ஆல்கஹால கலந்து, அவள வற்புறுத்தி குடிக்க வச்சிருந்த ஆதித்யா, அவ கூட ஒரு தனி ரூம்ல இருந்தான். போதையில இருந்த மேகாவுக்கு முழுசா அங்க என்ன நடந்துச்சுன்னு இப்போதும் ஞாபகம் இல்லை. ஆனா, அன்னிக்கு அந்த ரூம்ல அவங்க தனியா இருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் அண்ட் வீடியோஸ் இப்போ அவங்க ஃபேஸ் ப்ளர் செய்யப்பட்டு சோஷியல் வலைத்தளங்கள்ல பரப்பப்பட்டிருந்துச்சு.

அந்த வீடியோவுல மேகா ஒரு ஸ்லீவ்லெஸ் கவுன் அணிஞ்சிருக்க, ஆதித்யா சட்டையில்லாம அவளருகில் உட்கார்ந்திருந்தான். அவன் அவள தனக்கு நெருக்கமா அணைச்சுப் பிடிச்சு வச்சு, அவ முகத்தைச் சாய்த்து உணர்ச்சி பொங்க அவளோட உதடுகள்ல முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தான்.

மத்த போட்டோக்கள்ல மேகாவும் ஆதித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டுத் தூங்குறது போல இருந்துச்சு. ஆனா, எல்லாத்துலயுமே ரெண்டு பேரோட முகமும் மறைக்கப்பட்டிருந்ததால, அது இவங்கதான் என்று யாருக்கும் தெரியலை. இருப்பினும் நல்ல மனம் கொண்ட நெட்டிசன்கள் எல்லாரும் அந்த போட்டோஸ் மற்றும் வீடியோக்களுக்குக் கீழே, “வாவ்! அந்தப் பொண்ணு செம பீஸ்! கூட இருக்கிறவன் எவன்னு தெரியலை… ஆனா கொடுத்து வச்சவன்டா! ப்ரோ, ஃபுல் வீடியோ லிங்க் கிடைக்குமா?” என்றெல்லாம் அவங்க இஷ்டத்துக்கு கமெண்ட்களைப் பறக்க விட்டிருந்தாங்க.

அதையெல்லாம் கண்ணீர் நிறைந்த கண்களோட பார்த்து மனசு உடைந்த மேகா, தன் மொபைல் ஃபோனைத் தூக்கி சுவர்ல அடிச்சு உடைச்சா. பின் தன் உடலைக் குறுக்கிக்கிட்டு தரையில உட்கார்ந்து தன் கால்களுக்கு நடுவுல முகத்தைப் புதைச்சுக்கிட்டு அழுதவ, “எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு… ஏன்… ஏன் மறுபடியும் மறுபடியும் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? இப்ப நான் என்ன பண்றது? ஷிட்… இப்ப நான் அந்த ராஸ்கலுக்குக் கால் பண்ணிப் பேசினா, அவன் என்ன விஷ்வாவைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு பிளாக்மெயில் பண்ணுவான். இதப் பத்தி விஷ்வா கிட்ட சொல்லி, அவர் என்னத் தப்பா நினைச்சுட்டா என்ன பண்றது? ஐயோ, இப்ப என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலையே…”னு புலம்பிக்கிட்டு இருந்தா.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured