அத்தியாயம் 54
“நான் அப்படி என்னங்க அநியாயமா கேட்டுடப் போறேன்..?? எனக்கு ஒரு பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னப் பிடிக்கணும். எங்களுக்கு இதே ஊர்ல கல்யாணம் நடக்கணும். அவள மாதிரியே க்யூட்டா எங்களுக்கு ஒரு பொண்ணு பொறக்கணும். அவ்ளோதாங்க.. என் ஆசை..!! உனக்கு ஓகேவா..??” என்று அரவிந்த் நிலாவோட கண்ணப் பார்த்து கேட்க,
“என்னது… என்ன கேட்டீங்க..??” என்று பதறிப் போய் கேட்டா நிலா. “நீங்கதானேங்க நியாயமான ஆசையா கேக்கணும்னு சொன்னீங்க..!! அதான் இந்த ஆசை நியாயமானதா? உங்களுக்கு ஓகேவான்னு கேட்டேன்.” என்று சொல்லி அரவிந்த் சமாளிக்க, “ஓ நீங்க அப்படி கேட்டீங்களா? இது நியாயமான ஆசைதான். ஆனா, இது ஓகேவா இல்லையான்னு அந்த சிவன்தான் டிசைட் பண்ணணும்.” என்றாள் அவள்.
“எனக்கு நீங்க ஓகே சொன்னா அவரே ஓகே சொன்ன மாதிரிதாங்க.” என்று மறுபடியும் அரவிந்த உருட்ட, “என்னது..??” என்று அதுக்கும் ஷாக்காகி கேட்டா நிலா. “நீங்க உள்ளூர்க்காரப் பொண்ணுல்ல.. எப்படியும் நீங்க இங்க இருக்குற சிவனுக்கு favourite-ஆ இருப்பீங்க. நீங்க ஓகே சொல்லிட்டா, அவரும் கொஞ்சம் கன்சிடர் பண்ணிப் பார்ப்பார்ல.!!” என்று அரவிந்த் இழுக்க,
“ஓகே ஓகே..!!” என்றா நிலா. தானும் “ஓகே ஓகே..!!” என்று உற்சாகமான குரலில் சொன்ன அரவிந்த் தொடர்ந்து அவளோட பேசிக்கிட்டு இருந்தான்.
விஷ்வாவின் அறையில்..
மேகா தான் வந்த காரணத்த விஷ்வாகிட்ட சொல்லிட்டா, ஏற்கனவே அவங்க பேசி வச்சுட்டு வந்த மாதிரி “பாஸ் ப்ளீஸ் பாஸ் வாங்க பாஸ், போயிட்டு வரலாம்..!!” மகேஷும், தயாளனும் விஷ்வாகிட்ட கெஞ்சினாங்க. மேகாவ ஏற இறங்கப் பார்த்தான் விஷ்வா.
அவள இப்படி traditional attire-ல இன்னைக்குத்தான் முதல்முறையா பார்க்குறான் என்பதால் அவனோட கண்ணு எக்ஸ்ட்ராவாவே அவள ஸ்கேன் பண்ணுச்சு. அவ தலைல இருந்து வந்த மல்லிகையோட மணம் அவன ஏதோ செஞ்சுச்சு.
மல்லிகைய யார் சூடிக்கிட்டாலும் அது மணக்கத்தான் போகுது. ஆனா நமக்கானவ பூச்சூடி, அழகா தயாராகி வந்து நிக்கும்போது அவ பொன்மேனியோட வாசனையோட அந்தப் பூவும் சேர்ந்து அந்த ரூம் முழுக்க அவளோட மணமா வீச, அந்த ஆறடி ஆம்பிளையோட ஹார்மோன் எல்லாம் தாறுமாறா தூண்டப்பட்டுச்சு. அதனால அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோட கவனத்தத் தன் பக்கம் திருப்புச்சு அவ காதுல டான்ஸ் ஆடிக்கிட்டிருந்த தங்க ஜிமிக்கி.
விஷ்வா தன்னப் பார்த்தபடி அமைதியாவே இருந்ததால், “ப்ளீஸ் விஷ்வா.. நாங்க இவ்வளவு தூரம் கேக்குறோம்ல.. எங்களுக்காக வாங்க. இங்க சிவன் கோயில்ல நிறைய function நடக்கும். அதையெல்லாம் அண்ணாதான் sponsor பண்ணி organise பண்ணியிருக்காரு. அங்க கோவில்ல நம்ம கல்யாணம் சம்பந்தமா ஏதோ பேசி discuss பண்ணனும்னு வேற வீட்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நீங்க வரலைன்னா நல்லா இருக்காது.” என்று கெஞ்சிக் கேட்டா மேகா.
“சரி… நான் ரெடி ஆயிட்டு வர்றேன். நீங்க முன்னாடி கோயிலுக்குப் போங்க.” என்று விஷ்வா சொல்ல, ஒரு வேகத்துல அவன் பக்கத்துல உக்காந்து அவன் கையைப் பிடிச்ச மேகா “நீங்க நிஜமாவே வர்றீங்களா..??” என்று ஆர்வமா கேட்டா.
“அதான் சொல்லிட்டேன்ல.. வர்றேன் போடி.” என்று விஷ்வா சொல்ல, “ஐயோ தேங்க் யூ சோ மச்.” என்று உற்சாகமா சொன்ன மேகா அவன் கன்னத்தக் கிள்ளி முத்தம் வச்சுட்டு கீழ ஓடிப் போயிட்டா.
அந்தக் காட்சியப் பார்த்த தயாளனுக்கு ஒரே கிளுகிளுப்பா இருக்க “சிவராத்திரி தூக்கம் போச்சு ஹோய்..!!” என்று ராகத்தோட ஒரு மாதிரிப் பாட, பெட்ல கிடந்த towel-அ பந்து மாதிரி உருட்டி அத அவன் மேல அடிச்ச விஷ்வா “ஒழுங்கா ஓடிப் போயிரு..!!” என்றான் கோபமா.
ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்..
மேகாவ மாதிரியே தானும் traditional costume-க்கு மாறி இருந்த விஷ்வா தன்னோட ஆளுங்க கூட கோயிலுக்குப் போனான். கோவிலுக்கு முன்ன ஒரு பெரிய ஸ்டேஜ் போடப்பட்டிருக்க, background-ல சிவதாண்டவம் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
மேகாதான் அந்தப் பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடிக்கிட்டு இருந்தா. அத ஆச்சரியமாப் பார்த்த விஷ்வா “இவளுக்கு டான்ஸ் ஆடவெல்லாம் தெரியுமா..??” என்று நினைச்சு ஸ்டேஜ் கிட்டப் போனான். இப்ப எல்லாமே சரியாப் போயிக்கிட்டு இருக்கு. விடியறதுக்குள்ள இன்னும் என்னென்ன நடக்குமோ..!!
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)