Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 42

மூர்கனின் காதலி CH 42

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 42

“மாமா நம்ம கிட்ட விளையாடுறாரு போல..!!”ன்னு நினைச்சிட்டு போறவனோட கையை சட்டென பிடிச்ச வெண்ணிலா, “ஏன் மாமா அப்படி சொல்றீங்க..? அப்புறம் பேசாம பழகாம எப்படி எங்க அத்தைய லவ் பண்ணீங்க??”ன்னு விளையாட்டுத் தனமா கேட்டா.

“போச்சு..!!”ன்னு நினைச்ச மேகா வேகமா நிலா பக்கத்துல போக, வந்த கோபத்துல தன் கையை வெடுக்கென அவகிட்ட இருந்து உருவின விஷ்வா, நிலாவ அடிக்கிறதுக்காக தன் கையை ஓங்கினான். அப்போ மேகா சத்தமா “விஷ்வா..!!”ன்னு கத்த, ஓங்கின கையை அப்படியே பாதியில நிறுத்தின விஷ்வா, அவளைப் பார்க்கப் பிடிக்காம தன் தலையப் பிடிச்சிக்கிட்டு வேகமா அவனோட ரூமுக்கு போயிட்டான்.

நடந்தத நம்ப முடியாம பேய் அறைஞ்ச மாதிரி நின்னுக்கிட்டிருந்தா வெண்ணிலா.

“நான் போய் பாஸுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்குறேன்..!!”ன்ன மகேஷ், விஷ்வாவோட ரூம் கதவ திறந்துக்கிட்டு பதட்டத்தோட உள்ள போனான்.

“உன்ன யாருடி அவர்கிட்ட போய் பேச சொன்னா..? நான் வேணாம்னு சொல்றதுக்குள்ள அவர் கைய வேற போய் புடிக்கிற..? லூசா நீ..? யார் கிட்ட விளையாடுறதுன்னு அறிவு வேண்டாமா??”ன்னு மேகா கோபமா கேட்க,

“மறைக்காம உண்மைய மட்டும் சொல்லுங்க அக்கா! நியூஸ்ல வந்ததெல்லாம் பொய் இல்லதானே? நீங்களும் அவரும் லவ் பண்றீங்கன்னு, என் மேல பிராமிஸ் பண்ணி சொல்லுங்க பார்ப்போம்!”ன்னு கலங்கின கண்ணோட கேட்ட வெண்ணிலா, மேகாவோட கைய எடுத்து தன் தலை மேல வெச்சா.

தன்னை மகளாட்டம் வளர்த்த அண்ணனோட செல்ல மகளோட தலையில அடிச்சி அவளால எப்படி சத்தியம் செய்ய முடியும்..? அதனால, “அட கடவுளே.. இப்ப நான் என்ன செய்யுறது..?”ன்னு நினைச்ச மேகாவோட கண்ணு கலங்கிட, அவ கை நடுங்குச்சு.

அத வெச்சே, “நான் நினைச்சது கரெக்ட் தான். இவங்க அவர லவ் பண்ணல. அப்புறம் எதுக்கு மீடியாக்காரங்ககிட்ட அப்படி பொய் சொல்லணும்..? இதுல ஏதோ இருக்கு..!!”ன்னு நினைச்ச வெண்ணிலா, “ஒழுங்கா நீங்களே உண்மைய சொல்லிருங்க அத்தை.. இல்லன்னா நான் நடந்தத நேரா போய் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது இருக்கும்”ன்னு மேகாவோட கைய தன் மேல இருந்து எடுத்துவிட்டு அவள மிரட்டினா.

நிலாவ எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம அப்பவும் மேகா அமைதியாவே இருந்ததால, “ஏங்க.. பார்க்க சின்ன பொண்ணா இருக்கீங்க..!! பெரியவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்..? அதுக்குன்னு அவங்ககிட்ட நீங்க இப்படி எல்லாம் பேசலாமா??”ன்னு அரவிந்த் அவளுக்காக பேச,

“இது எங்க குடும்ப விஷயம். எங்கயோ இருந்து வந்த நீங்க இதுல தலையிட தேவையில்லை”ன்னு தன் விரலை நீட்டி அவன எச்சரிச்ச வெண்ணிலா, தான் காளீஸ்வரனோட பொண்ணுன்னு தப்பாம நிரூபிச்சா.

மேகாவோட ரெண்டு பக்கமும் நின்னுக்கிட்டிருந்த அரவிந்தும் தயாளனும், “தயவு செஞ்சு உண்மைய சொல்லிடாதமா..!! அப்புறம் அங்க ஒரு பஞ்சாயத்து ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இங்க ஒரு பஞ்சாயத்தாயிடும்”ன்னு தன் கண்ணாலயே மேகா கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க, பெருமூச்சு விட்ட மேகா, விஷ்வாவோட ரூம ஒரு தடவ பார்த்துட்டு நிலாவ பார்த்தா.

“என்ன நடந்துச்சுன்னு சீக்கிரம் சொல்லுங்க. ஏதாவது சொல்லி நீங்க என்ன ஏமாத்தலாம்னு பார்த்தா, நிஜமாவே அப்பாகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்”ன்னு முதல்ல இருந்து ஆரம்பிச்சா வெண்ணிலா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured