Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 41

மூர்கனின் காதலி CH 41

by Thenaruvi Tamil Novels
163 views

அத்தியாயம் 41

அந்தப் பொண்ணு “பேபேபேபே..!!!”ன்னு சத்தமா கத்த, “ஆஆஆ..!!”ன்னு அலறுன அரவிந்த் கால் வழுக்கி பால்கனி வழியா கீழே விழப் போனான்.

அதனால தானும் பயந்து “அச்சச்சோ..‌‌ விழுந்துடாதீங்க..!!” ன்னா அவ வேகமா போய் அவன் கைகளைப் புடிச்சு இழுக்க, அவன் அவ மேல மோதி நின்னாரு.

அவங்க ரெண்டு பேரோட உடம்புகளும் உரசிக்கிச்சு, அவங்க இதயம் வேகமா துடிச்சுக்கிட்டு இருந்துச்சு. அவருக்குப் பக்கத்துல நின்னுட்டு இருந்த அவளால அத நல்லா உணர முடிஞ்சுச்சு.

அதனால அவ “நீங்கதான் கீழ விழவே இல்லையே… அப்பறம் ஏன் இன்னும் பயப்படுறீங்க…?? Relax..!!”ங்கிற மாதிரி அவர நேரா நிறுத்திட்டு அவரவிட்டு சட்டுன்னு விலகி நின்னா.

அவளோட இனிமையான குரல கேட்ட அப்பறம்தான் பயம் விலகி அவள ஒழுங்கா பாத்த அரவிந்த் “நீங்க பொண்ணா..??”ன்னு கேட்க, தன் இடுப்புல கை வச்சுக்கிட்டு அவர முறைச்சுப் பாத்தவ, “ஏன் என்ன பாத்தா.. உங்களுக்குப் பொண்ணு மாதிரியே தெரியலையோ..??”ன்னு தன் ஒத்தப் புருவத்த தூக்கிக் கேட்டா.

“இல்லீங்க… உங்கள பாத்தவுடனே நான் விழுந்துட்டேன். ஜல் ஜல்லுனு கொலுசு சத்தமெல்லாம் கேட்டுச்சுல.. நீங்க வந்து என்ன பயமுறுத்துற மாதிரி சத்தமா கத்தவும் ‌ நான் உங்கள மோகினிப் பிசாசுன்னு நெனச்சுகிட்டேன். கிராமத்துல மோகினிப் பிசாசு நிறைய சுத்தும். அது ரொம்ப அழகா இருக்கும். ஆம்பளைங்க யாரையாவது பாத்தா விடவே விடாதுன்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க. அதான் லைட்டா பயந்துட்டேன்..!!”ன்னு சொன்ன அரவிந்த் ‌ஈஈஈஈன்னு அவளப் பாத்து பல்லைக் காட்டினான்.

அவன் சொன்னதக் கேட்டு நம்பவே முடியாம சத்தமா சிரிச்ச ‌அந்தப் பொண்ணு தன் சிரிப்ப அடக்க முடியாம ‌“இந்தக் காலத்துல போய்.. உங்க பாட்டி சொன்ன கதையெல்லாமா நம்பீட்டு இருக்கீங்க..?? நீங்க பாடிகார்ட் தானே.. அப்போ கெத்தா தைரியமா இருக்கணும்ல..?? யாராவது உங்கள பேய் வருதுன்னு சொல்லி பயமுறுத்துனாலே புரொடக்ஷன் கொடுக்கப் போற இடத்துல தலை தெரிக்க ஓடிப்போயிடுவீங்க போல..!!”ன்னு கிண்டலா கேட்டா. 

“ஐயகோ.. அசிங்கம்.. அவமானம்‌. வெட்கம்‌.‌. துக்கம்… இருந்தாலும் ஒரு அழகான பொண்ணுகிட்ட ‌ பேசுறதுக்கு chance கிடைக்குதுன்னா, it’s ok. எவ்ளோ அவமானம் வந்தாலும், அத அப்பளம் மாதிரி நொறுக்கித் தள்ளிட்டு போயிட்டே இருப்பான் இந்த அரவிந்த்.”ன்னு நெனச்சவன், “ஐயோ பாத்துக்கோங்க..!!”ன்னு கொழப்பான குரல்ல சொன்னான்.

அவன் சொல்றது புரியாம “பாத்துக்கணுமா..?? என்னத்த பாத்துக்கறது..??”ன்னு அவ கேட்க, “இல்லீங்க.. நீங்க சத்தமா சிரிச்சீங்கல்ல..‌‌ அது அப்படியே காதுக்குள்ள தேனா பாய்ஞ்சுச்சு.. பட் சிரிச்சு சிரிச்சு உங்க வாய்க்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன பண்றது..?? அதான் பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொன்னேன்.”ன்னான் அரவிந்த்.

உடனே உதட்ட சுளிச்ச அந்தப் பொண்ணு “ஐயையோ ரொம்பத்தான் அக்கறை வழியுது.. தொடச்சுக்கோங்க…!!” ன்னா அவ.

“சரிங்க.. சரிங்க..!! உங்க நேம் என்னன்னு சொல்லலையே..!!”ன்னு அரவிந்த் அவள்கிட்ட கேட்க, “I am வெண்ணிலா. நீங்க..??”ன்னு கேட்டா அவ.

“வெண்ணிலா.. நைஸ் நேம். I am அரவிந்த்.”ன்னவன் handshake பண்றதுக்காக அவ முன்னாடி தன் கைய நீட்ட, தானும் லேசா வெட்கத்தோட வெண்ணிலா அவன் கையோட தன் கைய கோர்க்கப்போற நேரம்  “நிலா..!!”ன்னு அவளப் பாத்த சந்தோஷத்துல சத்தமா அவள கூப்பிட்டா மேகா. அவளப் பாத்த சந்தோஷத்துல தானும் அரவிந்த கண்டுக்காத நிலா வேகமா “அத்தை..!!”ங்கிற மாதிரி ஓடிப்போய் மேகாவ கட்டிப் புடிச்சுகிட்டா.

“நானே அங்க நம்ம வீட்டுக்கு வரலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட..!!”ன்னு மேகா சொல்ல, அவள்கிட்ட இருந்து பிரிஞ்ச நிலா “எனக்கு உங்களையும், மாமாவையும் பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதான் ஓடி வந்துட்டேன். மாமா எங்க..?? அவர் ரொம்ப அழகா இருக்காருன்னு அம்மா சொன்னாங்க.”ங்கிறவ, தன் கண்களாலேயே விஷ்வாவைத் தேடுனா.

தியான மண்டபத்துல இருந்து ‌ லாஸ்ட்டா ‌ வெளிய வந்த ‌ விஷ்வாவைக் கண்டு புடிச்ச நிலா ‌“டிவியில நான் பாத்ததவிட மாமா நேர்ல ரொம்ப அழகா இருக்காரு அக்கா..!!”ன்னு உற்சாகமான குரல்ல சொல்லிட்டு ‌சிட்டா விஷ்வாவை நோக்கிப் பறந்தா. “ஐயையோ நிலா சூரியன் கிட்ட போகுதே..‌‌ அவர் கண்ணாலயே எரிச்சுக் கொன்னுடுவாரே..!!”ன்னு நெனச்சு பதறுன அரவிந்த் “எம்மா நிலா நில்லுமா..!!”ன்னு கத்திக்கிட்டு அவங்கள நோக்கி ஓடினான்.

அவங்கள கண்டுக்காம விஷ்வாவோட முன்னாடி போய் நின்ன நிலா, “ஹாய் மாமா..!! எப்படி இருக்கீங்க…?? மேகா எனக்கு அத்தை முறை வேணும். இருந்தாலும் என்ன அவங்க அக்கான்னு கூப்பிடச் சொல்லுவாங்க. எது எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு மாமா தான்.”‌னு சிரிச்ச முகமா சொல்ல, அவ தன் பக்கத்துல வந்து நிக்கிறதே விஷ்வாவுக்குப் பிடிக்கல.

இருந்தாலும் மேகாவுக்காக கஷ்டப்பட்டு தன்ன கட்டுப்படுத்திக்கிட்டவன், “சாரி எனக்குப் பொண்ணுங்ககிட்ட பேசப் பிடிக்காது..!!”ன்னு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured