Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 34

மூர்கனின் காதலி CH 34

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 34 

“இவன் கேக்குற மாடுலேஷனே சரியில்லையே..!! என்ன ஆனாலும் சரி.. நம்ம வாயால எதையும் ஒத்துக்கக் கூடாது.” அப்படின்னு நினைச்ச ஆதித்யா வேகமா, “எஸ் சார். நாங்க ரெண்டு பேருமே innocents தான். எங்களை பிடிக்காதவங்க யாரோ வேணும்னே ஏதோ பழி போட்டு எங்களை உங்ககிட்ட மாட்டி விட்டுருக்காங்க. அதுக்கு நாங்க என்ன சார் பண்றது..??” அப்படின்னு கேட்டான். 

“ஓஹோ அப்படியா. ‌‌ ஓகே ஓகே..!!” அப்படின்னு நக்கலா சொன்ன விஷ்வா சட்டென தன்னோட facial expressions-களை கொடூரமா மாத்தி, “நீங்க அடிச்சதெல்லாம் இவனுங்களுக்குப் பத்தல போல. அதான் இன்னும் பண்ண தப்ப ஒத்துக்காம என்கிட்டயே டிராமா பண்ணிட்டு இருக்கானுங்க. இவனுங்க நடிக்கிறதைப் பார்க்குறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல. போய் பெருசா ரெண்டு அண்டால நல்லா கொதிக்கிற தண்ணியைக் கொண்டு வந்து இவங்க ரெண்டு பேரையும் உள்ள முக்கி முக்கி எடுங்க. இவனுங்க ஒன்னு உண்மையைச் சொல்லட்டும் இல்லைன்னா வெந்து சாகட்டும்.” அப்படின்னு கொடூரமா சொன்னான்.

அவன் அப்படி தன்னோட வெங்கலக் குரல்ல அவங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறதை அவனருகில் இருந்து கேட்டுக் கிட்டிருந்த மேகாவையே பயப்பட வச்சது. அதனால அவ மிரட்சியோட விஷ்வாவைப் பார்க்க, “என்ன இவன் உன்னோட எக்ஸ் லவ்வர்னு அப்படியே இவன் மேல பாசம் பொங்குதோ உனக்கு..??” அப்படின்னு சட்டென அவளைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான் அவன்.

வேகமா தன் தலையை இல்லைன்னு இடவலமா ஆட்டுன மேகா, “இவன் மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வாழவே தகுதி இல்ல. இவன் செத்தா நான் ஏன்‌ சார் ஃபீல் பண்ணப் போறேன்..?? எனக்காக இவனைக் கொன்னு அந்த கொலைப் பழியை நீங்க ஏன் உங்க தலையில போட்டுக்கணும்..?? அதான் யோசிக்கிறேன்..!!” அப்படின்னு தயக்கத்தோட சொன்னா.

அவ ஏதோ ஜோக் சொன்னதைப் போல சத்தமா சிரிச்ச விஷ்வா, “என்னப் பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலடி. என் கூடப் பிரச்சனை பண்ண லோக்கல் ரௌடில இருந்து பெரிய பெரிய மாஃபியா வரைக்கும் எத்தனை பேரை நான் அசால்ட்டா போட்டுத் தள்ளியிருக்கேன் தெரியுமா..?? இவனெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல..!!” அப்படின்னு அவன் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே‌‌ அவனோட ஆட்கள் அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பெரிய அண்டாவாக் கொண்டு வந்து அவங்க முன்னாடி வச்சு, அதுல தண்ணி நிரப்பி, மினி ஹேண்டி வாட்டர் ஹீட்டர்ரை தண்ணிக்குள்ள போட்டு, அதோட வயர பிளக்கில் சொருகி ‌ சுவிட்ச் போட்டுட்டாங்க.

“என்ன டா.. அவன் சொன்னவுடனே இவனுங்க எல்லாத்தையும் கொண்டு வந்துட்டானுங்க..!! இவன் எப்ப சொல்லுவான்னு ரெடியாவே வச்சிருந்தானுங்க போல..!!” அப்படின்னு பயந்த குரல்ல ஆதித்யா சொல்ல, “நான்தான் இந்த இடமே சரியில்ல பார்க்கவே பயங்கரமா இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருக்கேனே சார்..!! இப்போ விஷ்வா சார் சொன்னதை நீங்க கேக்கலையா..?? இவங்க பலபேரைக் கொன்னுருக்காங்களாம்..!! அப்படி அவங்க எல்லாரையும் டார்ச்சர் பண்ணிக் கொல்ற இடம் இதுதான்னு நினைக்கிறேன். அப்போ நம்பளையும் சிக்கன் மாதிரி இதுக்குள்ள முக்கி முக்கியே வேக வச்சுக் கொன்னுருவாங்களா சார்..?? வெந்துப்போன கரிய அப்புறம் என்ன பண்ணுவாங்க..!! ஒருவேளை நாய்க்குப் போட்டுருவாங்களோ..!!” அப்படின்னு உளறிக்கிட்டு இருந்தான் பாலா.

“ஏன்.. உன்னோட பாடி பார்ட்ஸை dog திங்குறதுல உனக்கு ஏதாவது பிராப்ளமா..?? நான் வேணா வெட்டிப் பீஸ் பீஸா போட்டு சிக்கன் மாதிரி சமைச்சுப் பார்சல் பண்ணி உன் ஃபேமிலிக்கு அனுப்பி வைக்கச் சொல்லவா..??” அப்படின்னு கோபமா ஆதித்யா கேட்க, “ஏன் சார் எல்லாமே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தானே பண்ணோம்.. இப்போ என்ன மட்டும் சாகச் சொல்றீங்க..!!” அப்படின்னு கேட்டான் பாலா.

“டேய் இடியட்..‌ இப்படி லூசுத் தனமா எதையாவது பேசிட்டு இருக்காம.. நம்ம தப்பிக்கிறதுக்கு ஏதாவது ஐடியா பண்ணுடா.” அப்படின்னு ஆதி பதற்றத்தோட சொல்ல, “அவர் தான் தெளிவா சொன்னாருல்ல.. நீங்க உண்மையச் சொன்னா விட்டுடறேன்னு.. பேசாம உண்மையச் சொல்லிட்டுத் தப்பிச்சு ஓடிப் போயிடலாம் சார். தப்பிக்கிறதுக்கு வேற வழி எல்லாம் ஒன்னும் இல்ல.” அப்படின்னு சொன்னான் பாலா. ஆதித்யா கொல்லப்படுவானா?

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured