Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 33

மூர்கனின் காதலி CH 33

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 33

மேகாவோட கிராமத்தப் பாத்து அவகூட அவனது கார்ல போய்ட்டிருந்தான் விஷ்வா. ஜன்னல் ஓரமா வெளில வேடிக்கை பாத்துட்டிருந்த மேகா, “எனக்கு பயமா இருக்கு விஷ்வா”ன்னு சொல்ல, அவள ஓரக்கண்ணால பாத்து முறைச்ச விஷ்வா, “நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லியும், நீ பயமா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஏன் நீ என்ன நம்பலையா?”ன்னு கொஞ்சம் கோபமாவே கேட்டான்.

“அது அப்டில்ல சார்… இது ரொம்பப் பெரிய விஷயம். எதாவது தப்பா நடந்துருச்சுன்னா, ஆதித்யா மாதிரி ஒருத்தன நான் லவ் பண்ணதுனால எல்லாரும் அசிங்கப்படுவாங்க. அதுக்கப்புறம் நான்…”ன்னு சொல்ல வந்தவ, அவன்கிட்ட அந்த வார்த்தைகள சொல்ல வேண்டாம்னு நெனச்சு, “செத்துப் போறத தவிர வேற வழியில்ல”ன்னு தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டா. 

பாதியில நிறுத்தி இருந்தாலும் அவ சொல்ல வந்தது முழுசா அவனுக்குப் புரிய, “நான் இருக்கேன். நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படுற மாதிரி உனக்கு எதாவது நடந்துச்சுன்னா, அன்னைக்கு இந்த விஷ்வா செத்துட்டான்னு அர்த்தம்”னு உறுதியா சொன்னான்.

அவனோட அந்த வார்த்தைகள் டைரக்ட்டா அவளோட மனச தொட்டுச்சு. “Babyமா I love you so much…!! உனக்காக என்ன வேணும்னாலும் நான் செய்வேன். உனக்கு எதாவது வேணும்னா சொல்லு, உடனே நான் வாங்கிட்டு வந்து தந்திடுவேன். நம்ம ஆபீஸ்ல யாரையாவது உனக்குப் பிடிக்கலையா… ஒரு வார்த்தை சொல்லு. அது யாரா இருந்தாலும் ஒரே செகண்ட்ல… அவங்கள வேலைய விட்டு துரத்திடுறேன்” என்றெல்லாம் அவளை கரெக்ட் பண்றதுக்காக ஏதேதோ சொல்லி ஆதித்யா அவள்கிட்ட ரீல் சுத்திருக்கான்.

அதையெல்லாம் நெனச்சுப் பாத்த மேகாவுக்கு, “ச்சே… அந்தப் பரதேசி எப்படியெல்லாம் உருட்டிருக்கான். கொஞ்சம் பிரெய்ன யூஸ் பண்ணிருந்தாக் கூட, அவன் பண்ற தப்பையெல்லாம் முன்னாடியே கண்டுபிடிச்சு அவன்கிட்ட இருந்து ஈஸியா தப்பிச்சிருக்கலாம். இந்தப் பாழாப்போன லவ் வந்து தொலைஞ்சிருச்சுன்னா, பிரெய்ன் சொல்றத கேட்காம ஹார்ட் பேச்ச கேட்டுட்டு ஆடிட்டிருக்க தானே தோணுது!”ன்னு நெனச்சவளுக்கு, விஷ்வாவோட வார்த்தைகள்ல தெரிஞ்ச வித்தியாசமும், அவனோட உண்மை தன்மையும் புரிஞ்சுது. 

அதே சமயம், அவனோட வாழ்க்கையில முதல் முறையா ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்கிட்டு, அவளுக்காக யோசிச்சு இன்னைக்கு தான் 4 வார்த்தை ஆறுதலா பேசியிருக்கான் விஷ்வா.

விஷ்வாவோட ஃபோனுக்கு ரகுநாத் கிட்ட இருந்து கால் வந்துச்சு. கால அட்டென்ட் பண்ணி ப்ளூடூத்ல கனெக்ட் பண்ண விஷ்வா, “சொல்லுங்க…!!”ன்னு சாதாரணமாகக் கேட்க, “பாஸ், நீங்க சொன்ன மாதிரி ஆதித்யாவ தூக்கியாச்சு. அண்ட் நீங்க குடுத்த நம்பர் அவனோட அசிஸ்டன்ட் பேர்ல தான் இருந்துச்சு. அதனால அவனையும் தூக்கிட்டு வந்துட்டோம். அவங்கள என்ன பண்றது…??”ன்னு கேட்டான். “நான் அவனுங்க மொகரக்கட்டையப் பாத்து பேச வேண்டியது இருக்கு.

வீடியோ கால்ல வாங்க…!!”ன்னு சொன்ன விஷ்வா கால கட் பண்ணான்.

“இந்த டைம்ல யார்கிட்ட இவரு வீடியோ கால்ல பேசப் போறாரு…??”ன்னு நெனச்சு அவனையே ஆர்வமா மேகா பாத்துட்டிருக்க, தனக்கு வந்த வீடியோ கால அட்டென்ட் பண்ணி ஃபோனை ஸ்பீக்கர்ல போட்ட விஷ்வா காரை ஓரமா நிறுத்தினான்.

பார்ல பொண்ணுங்க கூட ஆடிக்கிட்டிருந்த ஆதித்யாவ அப்படியே குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்து அவனோட கைகளையும் கால்களையும் கட்டி நிக்க வச்சிருந்தாங்க.

“நல்லா காத்தோட்டமா ஃப்ரீயா இருக்கட்டும்…!!”ன்னு நெனச்சு, அவனோட வீட்ல வெறும் லுங்கியோட தூங்கிட்டிருந்த அவனோட அசிஸ்டன்ட் பாலாவ அப்படியே தூக்கிட்டு வந்து அவனருகில் தோல் உரிக்கப்பட்ட கோழியைப் போல தொங்க விட்டிருந்தாங்க.

அவங்க ரெண்டு பேர் பின்னாடியும் தன் கையில இருந்த பெரிய குச்சியால ‘மடார் மடார்’னு அடிச்ச குரு, “ரெண்டு பேரும் அங்க இருக்க கேமராவப் பாருங்கடா. எங்க பாஸ் உங்க மூஞ்சியப் பாக்கணுமாம்”னு சொன்னான். 

அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தங்களை விடச் சொல்லி ஓவரா வாய் பேசியதால, விஷ்வாவோட ஆட்கள் அவங்கள நல்லா வெளுத்து விட்டிருந்தாங்க.

அதனால, ஏற்கனவே அவங்களோட உடம்பு ஆங்காங்கே கன்னி சிவந்து போய் இரக்க, “டேய் யாருடா உங்க பாஸ்… அவன் எதுக்குடா எங்கள கடத்தச் சொன்னான்? அத சொல்லிட்டாவது அடிச்சு தொலைங்கடா”ன்னு பாலாவும் ஆதியும் அடி தாங்க முடியாம அழுது கதறினாங்க.

“அத நான் சொல்லவா மிஸ்டர் ஆதி…??”ன்னு விஷ்வா அவனோட கணீர்னு இருக்கிற ரோபோட் குரல்லக் கேட்க, மொபைல் ஸ்கிரீன்ல தெரிஞ்ச அவனோட முகத்த பாத்த உடனேயே என்ன நடந்திருக்கும்னு பாலாவுக்கும் ஆதித்யாவுக்கும் நல்லா புரிஞ்சுருச்சு.

“அடிப்பாவி… உன்னை அவ்ளோ தூரம் இவன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு மிரட்டியும், நீ என்ன போட்டுக் கொடுத்துட்டாயா…?? இவ்ளோ பெரிய விஷயத்த டைரக்ட்டா விஷ்வா கிட்ட சொல்ற அளவுக்கு உனக்குத் தைரியம் வந்திருச்சா…!! ச்சே… எப்படியும் நீ பயத்துல அவன்கிட்ட இதப் பத்தி சொல்ல மாட்டேங்கிற தைரியத்துல உன்னை பிளாக்மெயில் பண்ணி இப்படி வாலன்டியரா வந்து இந்தத் தடிமாடுங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே…!!”ன்னு நெனச்ச ஆதித்யா, “விஷ்வா சார் நீங்களா…!! நீங்கதான் என்ன கடத்தச் சொன்னதா…?? என்னால இத நம்பவே முடியல. உங்களுக்கும் எனக்கும் எந்தப் பகையோ, பிரச்சனையோ இல்லையே… அப்புறம் ஏன் இப்படிப் பண்றீங்க…?? உங்க ஆளுங்க நான் கொஞ்சம் சத்தமா மூச்சு விட்டாக் கூட அத ரீசனா சொல்லி என்ன அடிக்கிறானுங்க… ரொம்ப வலிக்குது சார். ப்ளீஸ் என்ன விடச் சொல்லுங்க…!!”ன்னு பாவம் போல தன் முகத்த வச்சுக்கிட்டு கெஞ்சினான்.

“ஆமா சார்… நானும் எதுவும் பண்ணல. எங்க வீட்டுக்கு வேற நான் ஒரே பையன். நானும் பாவம் தான். என்னையும் விட்றச் சொல்லுங்க சார். நானே ஒரு டம்மி பீஸு. இவங்ககிட்ட அடி வாங்குற அளவுக்கெல்லாம் எனக்கு ஸ்ட்ரென்த் இல்ல”ன்னு தன் பங்குக்கு பாலாவும் சொல்ல, அவங்க ரெண்டு பேரையும் அவனோட கூர்மையான கண்களால பாத்த விஷ்வா,

“அப்ப நீங்க எதுவும் பண்ணல… அப்பாவியான உங்க ரெண்டு பேரையும் என்னோட ஆளுங்க தெரியாம தூக்கிட்டு வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க… அப்படித்தானே…!!”ன்னு கேட்டான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured