அத்தியாயம் 32
அவளுக்கு மெசேஜ் வந்த நம்பரை அவனோட ஃபோனுக்கு அனுப்புன விஷ்வா, “இனிமே இது உன் பிராப்ளம் இல்ல. என்னோட பிராப்ளம். I will take care of it. நீ Relaxedஆ இரு.” அப்டீன்னு சொல்லிட்டு, அவனோட ஃபோன்ல இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பிட்டு இருந்தான்.
அப்போ “நான் உங்க கிட்ட இத பத்தி சொல்லிட்டேன்னு அவன் கோவத்துல அந்த வீடியோவை லீக் பண்ணிட்டா என்ன பண்றது..?? அந்த மெசேஜ்லையே யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு தெளிவா போட்டு இருந்துச்சு. நீங்க என்ன ஸ்ட்ரெஸ் பண்ணிக் கேட்டதுனால தான் நான் சொல்லிட்டேன்.” அப்டீன்னு மேகா கேக்க, “நீ என்கிட்ட இதை பத்தி சொன்னா, நான் ஈசியா இதை ஹேண்டில் பண்ணிடுவேன்னு அவனுக்கு தெரியும். அதான் யார்கிட்டயும் சொல்லாதன்னு அவன் உன்ன லாக் பண்ணி இருக்கான். நீ விடு நான் பாத்துக்கிறேன். முதல்ல உன் ஃபோன்ல இருக்கற அந்த வீடியோவை டெலீட் பண்ணு. வேற யாராவது பாத்துடப் போறாங்க.” அப்டீன்னு சொல்லிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான்.
“இந்த நைட் டைம்ல ஆதித்யாவ என்ன பண்ணப் போறாரு இவரு..?? பெருசா எதுவும் பண்ண மாதிரியும் தெரியலையே..!! வெயிட் பண்ணிப் பார்ப்போம். நேத்து வரைக்கும் இவரப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. இன்னைக்கு முழுசா தெரியுமானு தெரியல. ஆனா அவர் trust meன்னு சொன்னவுடனே, இவர முழுசா நம்பணும்னு தோணுது.” அப்டீன்னு நெனச்ச மேகா விஷ்வாவையே கண்ணெடுக்காம பாத்துக்கிட்டு இருந்தா.
ஒரு சொகுசு பார்ன் பிரைவேட் ரூம்ல..
ஏதோ அவன் மேகாவ வெச்சு விஷ்வாவ லாக் பண்ணிட்டதா நெனச்சு அதிக மிதப்புல இருந்த ஆதித்யா, அத celebrate பண்றதுக்காக அவனோட குடும்பத்துக்கு சொந்தமான பார்ல உள்ள பிரைவேட் ரூம்ல கையில Vodka பாட்டிலோட இருந்தவன், வெறும் சின்ன shortஸ் மட்டும் போட்டு இருந்தான். அவன் அவனோட முதுக காட்டிக்கிட்டு நின்னபடி அவனோட பேக்க வலப்பக்கமா இடப்பக்கமா ஆட்டி ஷின்-சான் மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். அவனோட ரெண்டு பக்கமும் கவர்ச்சியான டூ பீஸ் டிரஸ் போட்டிருந்த சில பொண்ணுங்க அவனைப் போலவே அவங்களும் அவங்களோட ஒல்லியான உடம்ப அப்படியும் இப்படியுமாவளைச்சு நெளிச்சு ஆடி அவன் கண்ணுக்கு விருந்தாகிக்கிட்டு இருந்தாங்க.
அப்போ ரெண்டு பொண்ணுங்க அவன் கிட்ட போனாங்க. அதுல ஒருத்தியைத் தன் பக்கம் இழுத்து அவளோட இடுப்ப பிடிச்சு ஆட்டுன ஆதித்யா “Wow.. what a perfect shape..!!” அப்டீன்னு போதை ஏறுன குரல்ல சொல்ல, “Come on baby.. let’s have some fun baby..!!” அப்டீன்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னா அவ.
அங்கே ஓடிக்கிட்டு இருந்த சத்தமான மியூசிக்கையும் தாண்டி அவனுக்கு அவ தன்னை கூப்பிடுறது தெளிவா கேக்க, “இப்பவே ஸ்டார்ட் பண்ணனுமா..?? நமக்கு விடிய விடிய டைம் இருக்கே பேபி..!!” அப்டீன்ன ஆதித்யா, அவ உதட்ட கிள்ளி முத்தம் வச்சான்.
அவன் பின்னாடி நின்னுட்டு இருந்த இன்னொருத்தி, அவனை அப்படியே கட்டிப் புடிச்சு தன் காலை தூக்கி அவன் மேல கொக்கி மாதிரி போட்டு லாக் பண்ணினவ, “சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணி லேட்டா முடிக்கணும். அதுலதான் கிக் இருக்கு பேபி. உனக்குத் தெரியாதா..??” அப்டீன்னு கேட்டுட்டு அவன் கழுத்தோரம் தன் உதட்டால கோலம் போட ஆரம்பிச்சா. அவள் போட்ட கோலத்துல கிறங்கிப் போன ஆதித்யா, உடனே அவளைக் கசக்கி அலங்கோலமாக்கனும்ன்ற ஆசையில, அவங்க ரெண்டு பேரோட தோள்ளயும் கை போட்டு அவங்கள அழைச்சிட்டுப் போய் அவங்க கூட சேர்ந்து தொப்பென்னு போய் சோஃபால விழுந்தான்.
அவங்க மூணு பேரும் சேர்ந்து அவங்களோட லீலைகளை ஆரம்பிக்க இருந்த நேரம், அங்கே வேகமா கருப்பு கலர் யூனிபார்ம் போட்டிருந்த சில பேரு அத்துமீறி உள்ள நுழைஞ்சாங்க. ஒருத்திய வாகா தன் மடியில உக்கார வச்சு உணர்ச்சி பொங்க ஆதித்யா அவளோட உதடுகள்ல முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்க, அவன் முடியப் புடிச்சு கொத்தாக அவனை அந்தப் பொண்ணு கிட்டருந்து பிரிச்சு இழுத்த ஒருத்தன் “உனக்கு உம்மா கேக்குதா உம்மா..??” அப்டீன்னு அவன் வாயிலேயே மூணு நாலு வாட்டி பலமா குத்தினான்.
அதனால அவன் முகத்துல தக்காளி சட்னி வந்துட, வலி தாங்க முடியாம அழுதுகிட்டே “டேய் யாருடா நீங்க?? எதுக்கு என் இடத்திலேயே வந்து என்ன அடிக்கிறீங்க..?? உங்களுக்கு வேணும்னா ஓசில எவ்வளவு வேணாலும் குடிங்க. இதோ இங்க இருக்கறவளுங்க எவள வேணாலும் கூட்டிட்டுப் போங்க. மொத்தமா வேணாலும் இழுத்துட்டுப் போங்க. ஆனா என்ன மட்டும் விட்ருங்கடா வலிக்குது..!!” அப்டீன்னா.
ஏற்கனவே அந்த மொத்த பாரையும் அடிச்சு நொறுக்கியிருந்த அந்த பாடிகார்டுகள் “நாங்க யாருன்னு எங்க பாஸ் சொல்லுவாரு..!!” அப்டீன்னு சொல்லி அவனை அவனோட சொந்த பார்ல இருந்தே வெறும் shorts ஓட தரதரன்னு இழுத்துட்டு வெளியில போய் அவங்க கார்ல ஏத்திக்கிட்டு வேகமா போயிட்டாங்க.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)