அத்தியாயம் 29
முத்து, மேகா கிட்ட, “உனக்கு இந்த மேரேஜ்ல உண்மையிலேயே விருப்பம் இருக்கா?”ன்னு அக்கறையா கேட்டான். உடனே அவனோட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம மேகா தவிச்சுப் போயி அமைதியாவே நின்னா.
அவ மண்டைக்குள்ள எக்கச்சக்க விஷயங்கள் ஓடிக்கிட்டு இருந்ததால, அவளால ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியல.
“இங்க பாரு மேகா, உனக்கு விஷ்வாவை பிடிச்சிருந்தாலும், இப்போ இந்த கல்யாணம் பண்ணிக்கலாமா, வேணாமான்னு கன்பியூஷன்ல இருந்தா, இப்போதைக்கு பண்ணிக்காத. அவர்கிட்ட கொஞ்சம் டைம் கேளு. அதுக்குள்ள அண்ணாவையும் சமாதானப் படுத்திடலாம்”ன்னு முத்து சொன்னான்.
“சும்மா பேசிட்டு இருக்காம ஓகேன்னு சொல்லிடலாமா?”ன்னு யோசிச்ச மேகாவுக்கு, விஷ்வா மனசு சரியில்லாம (mentally disturbed) ஆ இருந்தப்போ எப்படி இருந்தான், அவங்க பாட்டிகிட்ட செஞ்ச சத்தியம் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அதனால, உறுதியா, “இல்ல அண்ணா. நாங்களும் விஷ்வாவும் லவ் பண்றோம். அப்புறம் எப்போ கல்யாணம் பண்ணா என்ன? எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க சேர்ந்து இருந்தா ரொம்ப சந்தோஷமா இருப்போம். என்ன நம்புங்க அண்ணா. நீங்க தான் பெரிய அண்ணா கிட்ட பேசி, அவரை கன்வின்ஸ் பண்ணனும்”ன்னு சொன்னா.
“நீ இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்லும்போது… இதுக்கு மேல நான் என்ன சொல்றது? உனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்குன்னா, இனிமே உங்களை சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு”ன்னு முத்து சொல்ல, “தேங்க்ஸ் அண்ணா”ன்னு மேகா போய் அவனை கட்டிப் பிடிச்சுக்கிட்டா.
அவ முகத்துல ஒருவித பயம் தெரிஞ்சது. அப்புறம் ரெண்டு பேரும் கீழ இறங்கி வர, “அண்ணனும் தங்கச்சியும் பேசி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”ன்னு கேட்டான் விஷ்வா.
“அவ தெளிவா உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டா. இதுக்கு மேல நாங்க சொல்ல என்ன இருக்கு சார்? எங்க மேகாவுக்கு உங்களை அந்த அளவுக்கு பிடிச்சிருக்கு.
அவளுக்கு அண்ணனா, அவ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை நாங்க அமைச்சுக் கொடுக்குறதுதான் எங்க கடமை”ன்னு சொன்ன முத்து, “என்ன அண்ணா… நான் சொல்றது கரெக்ட் தானே! நம்ம மேகாவோட சந்தோஷத்துக்காக என்னென்னவோ செஞ்சிருக்கோம். லாஸ்ட்டா இதையும் செஞ்சிடலாமே!”ன்னு காளீஸ்வரனைப் பார்த்து கேட்டான்.
“அதான் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களே… அப்புறம் எதுக்கு பேருக்கு என்கிட்ட கருத்து கேக்குறீங்க! உங்க இஷ்டத்துக்கு என்னமோ பண்ணித் தொலைங்க. அவளை பெத்த புள்ள மாதிரி நான் தூக்கி வளர்த்துட்டேன்.
அவ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது. இதுதான் அவ சந்தோஷம்ன்னா, சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும். நான் அதை கெடுக்க விரும்பல”ன்னு தன் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு சொன்னார் காளீஸ்வரன்.
“உங்க அண்ணன் ஓகே சொல்றதைக் கூட இப்படித்தான் சொல்லுவாரா?”ன்னு விஷ்வா மேகாகிட்ட கேட்க, “ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு மத்தவங்க மேல இருக்கிற பாசத்தை ஒவ்வொரு விதமா வெளிப்படுத்துவாங்க. எங்க அண்ணன் இப்படித் தான்.
அன்பைக் கூட கோபமாத் தான் காட்டுவாரு”ன்னு சொன்னா அவள்.
“ஓஹோ, அது சரி. உன் குடும்பத்துல எல்லாரும் ஒவ்வொரு டிசைன்ல இருக்காங்க. ஒரு டெரர் பீஸ், ஒரு டம்மி பீஸ், பாதி முட்டாள் பீஸ். இவங்களை எல்லாம் ஹேண்டில் பண்ணி நான் எப்படி இந்த மேரேஜை நடத்துவேன்னு தெரியல!”ன்னு விஷ்வா கிண்டலா சொல்ல, “அவங்க எந்த டிசைன்ல இருந்தாலும், உங்க டிசைனை விட அது பெட்டர் தான். அட்லீஸ்ட் அவங்களையாவது புரிஞ்சுக்க முடியும். நீங்க எந்த டைம்ல எப்படி இருப்பீங்கன்னே எனக்குத் தெரிய மாட்டேங்குது”ன்னு சொன்னா மேகா.
“போடி… உன் அறிவு அவ்வளவுதான். அதுக்கு நான் என்ன பண்றது?”ன்னு கேட்டுட்டு விஷ்வா சிரிக்க, தன் முகத்தைத் திருப்பிக்கிட்டா மேகா.
அவங்க பேசிக்கிறதைக் கவனிச்சுக்கிட்டு இருந்த காளீஸ்வரன், “இவங்க ஜோடிப் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு. ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல அன்னோனியம் இருக்கு. இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா இவங்க நல்லா இருப்பாங்க. பொறந்ததுல இருந்து பழகியும் இவ எப்பயும் வெற்றி கூட இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. முன்னாடில இருந்தே இவளுக்கு அவனைப் பிடிக்கல போல! நான்தான் எதையும் கண்டுக்காம இருந்து தப்பு பண்ணிட்டேன். என்னால பாவம் இப்போ வெற்றி கஷ்டப்படுறான்”ன்னு நினைச்சு வருத்தப்பட்டார்.
அப்போ முத்துவோட ஃபோனுக்கு கால் பண்ண வசந்தி அவன்கிட்ட ஏதோ சொல்ல, “சரிங்க அண்ணி, நான் அண்ணா கிட்ட சொல்லிடறேன்”ன்னு முத்து அந்த அழைப்பைத் துண்டிச்சான்.
“என்னடா உன் மூஞ்சியே சரியில்ல? உங்க அண்ணியா ஃபோன்ல? என்னவாம் அவளுக்கு?”ன்னு காளீஸ்வரன் கேட்க, “அந்த எதிர்க்கட்சித் தலைவர் முனியாண்டி இருக்காருல்ல அண்ணே… அவர் நம்ம மேகாமேல பிராது கொடுத்து பஞ்சாயத்து கூட்டிருக்காராம். நாளைக்கு நம்ம ஊர்ல பஞ்சாயத்து நடக்கப் போகுதாம். நம்ம வரும்போது மேகாவை கூட்டிட்டு வரச் சொல்லி அண்ணி சொன்னாங்க”ன்னு சொன்னான் முத்து.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)