அத்தியாயம் 28
என்ன தான் இருந்தாலும், வெற்றி அவளோட அத்தை பையன் தானே..!! அதனால பதறிப்போன மேகா, விஷ்வா காலை கெட்டியா பிடிச்சிக்கிட்டு “ப்ளீஸ் விஷ்வா… அவனை விட்டுடுங்க. எனக்கும் அவனுக்கும் தான் கல்யாணம்னு எங்க வீட்ல எப்பவோ முடிவு பண்ணிட்டாங்க. நான் தான் புத்தி கெட்டுப்போய் தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன். அதுக்கு இவன் என்ன செய்வான்? இனிமே எனக்கும் அவனுக்கும் ஒன்னும் இல்லைன்னு சொன்னா, அதை உடனே அவனால ஏத்துக்க முடியாதுல்ல… ப்ளீஸ் விஷ்வா, எனக்காக அவனை விட்டுடுங்க…”ன்னு கெஞ்சினா.
“உனக்கும் எனக்கும்தான் கல்யாணம் நடக்கப்போகுதுன்னு நல்லா தெரிஞ்சும், என் வீட்டுக்கே வந்து என் கண்ணு முன்னாடியே இவன் உன் கழுத்துல தாலிய கட்டப் பார்ப்பான்… நான் இவனை எதுவும் பண்ணக் கூடாதா? இவனை கொன்னு போட்டாதான் என் கோபம் அடங்கும். என்ன விடுடி.”ன்னு கோபமா சொன்ன விஷ்வா, திரும்பவும் வெற்றியைக் கொல்லணும்னு நெனச்சு துப்பாக்கிய அவன் நெத்தில வெச்சு அழுத்தினான்.
அப்ப விஷ்வாவப் பார்த்து லேசா சிரிச்ச வெற்றி, “எப்பவுமே மேகா, அவளுக்கு என்ன புடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை சார். நானும் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு இருக்காளோன்னு நெனச்சு அதப் பெருசா எடுத்துக்கல. ஆனா இப்பதான் தெரியுது… அவளுக்கு எப்பவுமே என்னைப் பிடிச்சதே இல்லைன்னு. நான் தாலிய கட்டப் போனப்போ, ஐயோ வேணாம் மாமா, கட்டாதேன்னு அவ பின்னாடி ஓடினாளே… அப்பவே என் உசுரு என்னவிட்டு போயிடுச்சு. இதுக்கு மேல நீங்க என்ன சுட்டா என்ன, சுடாட்டி என்ன…!!”ன்னு உடைஞ்ச குரல்ல சொன்னவன், “விடு மேகா, அவர் என்னைக் கொல்லட்டும். நீ இல்லாம வாழ்றத விட நான் செத்துப் போறதே நல்லது.”ன்னாரு.
“வாய மூடு… இப்படியெல்லாம் பேசாத மாமா.”ன்னு மேகா, விஷ்வாவோட காலை இருக்கமா புடிச்சிக்கிட்டு “ப்ளீஸ் விஷ்வா… இவன் என்னால சாக வேணாம். அதை என்னால தாங்க முடியாது. இவனை எதுவும் பண்ணிடாதீங்க.”ன்னு கண்ணீரோட கெஞ்சினா.
“விட்ருங்க பாஸ்…”ன்னு மத்தவங்களும் சொல்ல, “இதுக்கு மேல நீ மேகாவப் பத்தி யோசிக்கக் கூடாது. அவ இருக்கிற பக்கம் உன்னைப் பார்த்தேன்… உன்னைக் கொன்னுட்டுதான், நீ எதுக்கு அங்க வந்தேன்னு விசாரிப்பேன்.”ன்னு சொல்லி, வெற்றியை எச்சரிச்ச விஷ்வா, அவனுக்கு உயிர் பிச்சை போட்டான்.
நடக்குறது எல்லாம் வேணாம் வெறுப்பாய் பார்த்துக்கிட்டிருந்த காளீஸ்வரன், “அப்போ எங்களால உன்னை எதிர்க்க முடியாது.
அப்படித்தானே…!!”ன்னு கேட்க, திரும்பவும் சோஃபால போய் கால் மேல கால் போட்டு உக்காந்த விஷ்வா, “கனவுலக் கூட முடியாது.”ன்னு சொல்லிட்டு, திரும்பவும் துப்பாக்கிய இடுப்புல சொருகினான்.
“அவ்வளவு தான். என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சு பார்த்துட்டேன். இதுக்கு மேல என் மனசுலயும் உடம்புலயும் போராட சக்தி இல்லை.”ன்னு நெனச்ச காளீஸ்வரன், தன்னோட தோல்விய ஒத்துக்கிட்ட மாதிரி அமைதியா போய் சோஃபால உக்காந்துட்டார்.
“நீங்க குடும்பமா எல்லாரும் பேசிக்கிட்டிருக்கும்போது, இங்க நான் எதுக்கு நடுவுல கரடி மாதிரி…? நான் கிளம்புறேன்.”ன்னு எல்லாரையும் பொதுவாப் பார்த்துச் சொன்ன வெற்றி, போறதுக்கு முன்னாடி மேகாவப் பார்த்து “நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும்மா.”ன்னு கண்ணீரோட சொல்லிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளிய போனான்.
“சார், என்னதான் மேகா அந்த பிரஸ் மீட்ல எல்லாத்தையும் கிளியரா சொல்லியிருந்தாலும், என் தங்கச்சிகிட்ட நான் பர்சனலா கொஞ்சம் பேசணும்னு நெனக்கிறேன். With your permission, நான் என் தங்கச்சிகிட்ட கொஞ்சம் தனியா பேசிக்கலாமா…??”ன்னு பொறுமையா கேட்டான் முத்து.
“உங்க தங்கச்சிகிட்ட நீங்க பேசுறதுக்கு… என் பெர்மிஷன் உங்களுக்குத் தேவையில்லை. அவ என்னோட லவ்வர். வேலைக்காரி இல்ல.”ன்னு விஷ்வா சொல்ல, கீழ உக்காந்திருந்த மேகா எழுந்து நின்னு “என்னோட ரூம்ல போய் பேசலாம் வாங்க.”ன்னு முத்துவை கூட்டிட்டு அவளோட ரூமுக்குள்ள போனா.
மேகா அவளோட ரூம் கதவை லாக் பண்ணிட்டு, “சொல்லுங்க அண்ணா.”ன்னு சொல்ல, “உண்மையை மட்டும் சொல்லு. நீ ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கிட்டியா…? நான் நம்ம வீட்ல இருக்கிற மத்தவங்கள மாதிரி இல்லைன்னு உனக்கே நல்லா தெரியும். எனக்கு நீ நல்லா இருக்கணும் அவ்வளவு தான். உன்னோட வாழ்க்கையில நீ எடுக்குற முடிவுதான் இப்போ ஃபைனல். உனக்கு என்னோட உதவி தேவையா இருந்தா சொல்லு. எதா இருந்தாலும் செய்றேன். மொத்தத்துல உனக்கு விஷ்வாவப் புடிச்சிருக்கா…? இந்த கல்யாணத்துல நிஜமாவே உனக்கு விருப்பம் இருக்கா…??”ன்னு கேட்டான் முத்து.
தொடரும்..
(நீங்கள் என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)