Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 24

மூர்கனின் காதலி CH 24

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 24 

ஓவர் கோட்டைக் கழட்டி சோபாவுல வீசுன விஷ்வா, “அவங்களுக்கு எம்புட்டு பவர் இருக்குன்னு என்கிட்டக் காட்டத்தானே இப்புடி கும்பலா கிளம்பி என் இடத்துக்கே பயமில்லாம வந்துருக்காங்க..!! அப்போ நான் யாருன்னு நான் ப்ரூவ் பண்ண வேண்டாமா..?? இன்னைக்கு யாரு வெயிட்னு பாத்துடலாம்..!!”ன்னு சொல்லிட்டு சோம்பல் முறிச்சான். 

“ஐயோ இவர் இந்த ரோபோட் வோய்ஸ்ல சும்மா பேசினாலே எனக்குப் பயமா இருக்கே..!! என்ன பண்ணப் போறாரோ..!!”ன்னு நெனச்ச மேகா, “சார் உங்களப் பத்தி அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. அதான் இப்புடி கிளம்பி வந்துருக்காங்க. அதனால ஏதோ தெரியாம வந்துட்டாங்கன்னு நெனச்சு மன்னிச்சு விட்டுடுங்களேன்..!!”ன்னு கெஞ்சினா.‌

“அப்படியெல்லாம் விட முடியாது.”ங்கிற விஷ்வா, அவனோட தளபதிகள் மூணு பேரு கூடயும், கோட்டையைக் காக்க போருக்குப் புறப்பட்ட அரசனா கெத்தா நடந்து வெளில போனான். கிட்டத்தட்ட 250 க்கும் மேல மதுரைக்காரங்க கையில அருவாளோட வந்து மெயின் கேட் வெளில நின்னு, தங்களை உள்ளே விடச் சொல்லிப் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க‌. அதுல சில பேரு கேட் மேல ஏறவும் ஆரம்பிச்சிருந்தாங்க. மொத்தத்துல அந்த எடத்துல அஞ்சே நிமிசத்துல ஒரு பெரிய கலவரம் ஆரம்பிச்சிருக்க, அவங்க கூச்சல் நாலா பக்கமும் எதிரொலிச்சது.

பெரிய பிசினஸ்மேன் விஷ்வா வீட்டு வாசல்ல இப்புடி ஒரு விஷயம் நடக்கிறது கண்டிப்பா சாதாரண விஷயம் இல்லங்கிறதுனால, உடனே அந்தச் செய்தி காட்டுத்தீயாப் பரவி அதுவும் ட்ரெண்டாச்சு. உடனே ஒரு பக்கம் மீடியாக்காரங்களும், இன்னொரு பக்கம் விஷ்வாவோட பாதுகாப்புக்காக போலீஸும் அவனோட பங்களாவை நோக்கிப் படையெடுத்தாங்க.

“டேய் விஷ்வா..!! வெளில வாடா. எங்க வீட்டுப் புள்ளைய அனுப்பி வை. மேகா வெளில வா..!!”ன்னு தொடர்ந்து அவங்க வெளில இருந்து, கூச்சல் போட்டுக்கிட்டே இருந்தாங்க‌. அதனால மேகா பயந்து மெயின் கேட்ட நோக்கிப் போகப் போறப்ப, அவ கையைப் பிடிச்சுத் தடுத்த விஷ்வா, “Just வெயிட் அண்ட் வாட்ச்..!! நான் சொல்லாம நீ முன்னாடி போகக் கூடாது. வாயத் திறந்து யார்கிட்டயும் பேசவும் கூடாது. Got it..??”ன்னு அதட்டலா கேட்டான். 

அப்போ ‌மேகா ஏதோ சொல்ல வர, அவன் மேல இருந்த பயத்துல அவ வாயில இருந்து காத்து கூட வெளில வரல.

“போய் சேரை எடுத்துட்டு வாங்கடா..!!”ன்னு விஷ்வா சத்தமா சொல்ல, உள்ளே ஓடிப் போயி கையில ஒரு சேரோட வந்தான் அரவிந்த். என்ட்ரன்ஸ்ல இருந்த அந்த சேர்ல ஸ்டைலா கால் மேல கால் போட்டு உக்காந்த விஷ்வா, மேகாவப் பார்க்க, அவ என்னமோ அவன் வளர்க்கிற செல்லப் பூனைக் குட்டி மாதிரி, அவன் பார்வைக்கு அடங்கிப் போயி அவன் பக்கத்துல நின்னுக்கிட்டா.‌

“இப்ப மெயின் கேட்ட ஓபன் பண்ணுங்க.”ன்னு விஷ்வா சொல்ல, ப்ளூடூத் மூலமா செக்யூரிட்டி டீம்ல இருந்த தன்னோட ஆட்களுக்கு அந்த இன்ஃபர்மேஷனைப் பாஸ் பண்ணான் செக்யூரிட்டி டீம் ஹெட் ரகுநாத். 

அதனால பத்தடிக்கு மேல பெருசா இருந்த அந்த பிரம்மாண்ட ஆட்டோமேட்டிக் கேட் கொஞ்சம் கொஞ்சமாத் திறக்க ஆரம்பிச்சது. அது அசைய ஆரம்பிச்சவுடனே அதுல ஏறிக்கிட்டு இருந்தவங்க எல்லாரும் முதல்ல பயந்து கொஞ்சம் பின்னால போக, கேட் ஓபன் ஆனவுடனே கையில அருவாளோட “டேய்.. நாங்க எவனையும் விட மாட்டோம்டா. எங்க வீட்டுப் பொண்ண ஏமாத்தி உங்கக் கூட வெச்சுக்கலாம்ன்னு பாக்குறீங்களா…?? நாங்க ஒருத்தனையும் விட மாட்டோம்.”ன்னு ஆவேசமா எல்லாரும் கத்திக்கிட்டு ஆட்டு மந்தை மாதிரி உள்ள ஓடுனாங்க.‌ ‌

அப்புடி 200 க்கும் மேல உள்ளவங்க தொடர்ந்து ஆஆஆஊஊஊஊன்னு வெறித்தனமா ஏதோ ஒண்ணைக் கத்திக்கிட்டு திபுதிபுன்னு உள்ளே நுழைஞ்சதுனால, அந்த எடமே அதிர ஆரம்பிச்சது.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured