அத்தியாயம் 124
அந்த மர்ம கிராமத்தில் உள்ள பழைய schoolன் office roomல் இருந்த விஷ்வாவும் மேகாவும் நெருப்பை பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது கலங்கிய கண்களுடன் “யார் அந்த பொண்ணுன்னு இப்பயாவது நீ சொல்லுவியா மாட்டியா விஷ்வா..??” என்று அவள் கேட்க, அவளைப் பாவமாக பார்த்தான் விஷ்வா.
பீறிட்டு வந்த அழுகையை தன் உதட்டை கடித்து கட்டுப்படுத்திய மேகா, “இப்பக்கூட அமைதியா இருந்து என்னை சாகடிப்பியா விஷ்வா..?? உனக்கு என்ன புடிச்சிருக்கா இல்லையா, உனக்கு என் மேல லவ் இருக்கா இல்லையான்னு யோசிச்சு யோசிச்சு நான் confusionலயே இருந்து பைத்தியக்காரி ஆகணுமா உனக்கு..?? அவ்ளோதான் இனி உனக்கும் எனக்கும் நடுவுல ஒன்னும் இல்லன்னு நான் முடிவு பண்ணதுக்கு அப்புறம், இப்ப வந்து நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..!! இதையெல்லாம் எப்படி எடுத்துக்கிறதுன்னே எனக்கு புரியல. எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடா..!!” என்று நா தழுதழுக்க, உடைந்த குரலில் கேட்டவள், தன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.
அவளை அப்படி பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. அவள் அருகில் சென்று அமர்ந்த விஷ்வா, அவள் முகத்தில் இருந்த கைகளை எடுத்துவிட்டு அவள் கண்களை பார்த்து; “உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையாடி..??” என்று கேட்க,
“அன்னைக்கு நடந்ததை நான் என் கண்ணால பார்த்தேன் விஷ்வா. நான் மட்டும் வந்து உன்னை அப்போ stop பண்ணலைனா, உங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருக்கும். அது உண்மைதானே.. உன்னால இல்லைன்னு சொல்லிட முடியுமா..?? சரி, எங்கயோ ஏதோ தப்பு நடந்து இருக்குன்னே வச்சுக்கலாம். அத பத்தி நீ எனக்கு ஏதாவது explanation or clarification குடுத்தியா..?? அவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு… நான் உன் மேல கோச்சிக்கிட்டு ஹோட்டல் ரூமில இருந்து தனியா கிளம்பி போயிருக்கேன். என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம எனக்கு என்னனு நீ பாட்டுக்கு கிளம்பி இந்தியா போயிட்ட. இப்படி இத்தனையும் பண்ணிட்டு, எப்படி உன்னால எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கான்னு கேட்க முடியுது..??” என்று கண்ணீரை துடைத்துவிட்டு கோபமாக கேட்டாள் மேகா.
“Sorry” விஷ்வா உடைந்த குரலில் சொல்ல, “உன் Sorry எனக்கு தேவையில்லை விஷ்வா. உன் lifeல நான் யாருன்னு எனக்கு தெரியணும். நான் உன் Wife. என் husband எனக்கு மட்டும் தான்னு நான் யோசிக்கிறதுல என்ன தப்பு இருக்கு…??” என்று கேட்டாள் அவள். “உன் மேல தப்பில்ல மேகா. At the same time, என் மேலயும் தப்பில்லை. Situation அப்படி இருந்துச்சு.” என்று விஷ்வா ஏதோ சொல்ல வர, “நான் குடிக்க கூடாதுன்னு சொல்லியும், குடிச்சிட்டு போதையில கண்டவக்கூட இருந்துட்டு; இப்போ situation மேல பழி போட்டு தப்பிக்க பாக்குறியா நீ..??” என்று நினைத்த மேகா, “எப்படி இருந்துச்சு…??” என்று தன் புருவங்களை உயர்த்தி எரிச்சலுடன் கேட்டாள்.
“First Let me explain மேகா.. அப்பயும் இப்படித்தான் பண்ண.. என் மேல இருக்கிற கோவத்துல நான் பேச வரும்போது எல்லாம் என்ன எதுவும் பேச விட மாட்டேங்குற.. அப்புறம் நான் பேசல பேசலன்னு சொல்ற..!!” என்று விஷ்வா சலிப்பாக சொல்ல, “ஓ ஓகே ஓகே சொல்லு சொல்லு.. you continue.” என்றாள் அவள்.
அவர்கள் இருவரும் சென்ற parachute காணாமல் போனதால், அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த மகேஷ் “டேய் சீக்கிரம் bossம்.. மேகாவும் இருக்கிற locationஐ எப்படியாவது track பண்ணி தொலைங்கடா. மழை வேற ரொம்ப வெளுத்து வாங்கிட்டு இருக்கு. Flood வர chance இருக்குன்னு weather reportல சொல்லிட்டு இருக்கானுங்க. இந்த நேரத்துல அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, காப்பாத்தறது ரொம்ப கஷ்டமாயிடும். ஏதாவது பண்ணி அவங்கள reach பண்ணுங்க.” என்று walkie-talkieல் தனது ஆட்களிடம் கத்திக்கொண்டு இருந்தான்.
அவனைத் தேடிக்கொண்டு அங்கே தயாளனும் அரவிந்தும் ஓடிச் சென்றார்கள். “என்னடா பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..?? மேகாவோட Pendantல GPS இருக்குன்னு பாஸ் சொல்லி இருக்காருல.. last time மேகா மண்டபத்துல இருந்து கானா போகும்போது அத வச்சு தானே அவங்களை கண்டுபிடிச்சோம்.. அதுல இருந்து சிக்னல் வருதான்னு பார்த்து தொலைங்க.” என்று மகேஷ் அவர்களிடமும் கத்த, “டேய் அதெல்லாம் எப்பயோ பார்த்தாச்சுடா. விஷ்வா சார் ஏதோ சும்மா அதை gift பண்ணதா நினைச்சு மேகா அத போடுறதுல போடல. location check பண்ணா, அவங்க வீட்டு location தான் காட்டுது. இப்ப என்ன பண்றது..??” என்று கேட்டான் தயாளன்.
“Shit.. இப்ப அத வச்சும் அவங்கள கண்டுபிடிக்க முடியாதா..?? ஏற்கனவே நம்ம bossக்கு enemies அதிகம். இப்ப இவங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி situationல miss ஆகிட்டாங்கன்னு தெரிஞ்சா அவனுங்களுக்கு நல்ல chanceஆ போயிடும். சீக்கிரம் ஏதாவது பண்ணுங்கடா.” கோபமாக மகேஷ் சொல்ல, “டேய்.. நீ tension ஆகாம தெளிவா யோசி. அப்பத்தான் ஏதாவது ஐடியா கிடைக்கும். நம்ம பாஸ் survival training நிறைய எடுத்து இருக்காரு. So எனக்கு தெரிஞ்சு அவங்க எப்படியும் safeஆ land ஆகியிருப்பாங்க. இப்ப அவங்க இருக்கிற locationஐ மட்டும்தான் நம்ம கண்டுபிடிக்கணும்.” அரவிந்த் சொல்ல,
“ஆமா. எப்படியும் அவங்க parachuteல ரொம்ப தூரம் பறந்து போயிருக்க மாட்டாங்க. So lastஆ அவங்க missஆன locationல இருந்து kilometres radiusல நாம அவங்கள சல்லடை போட்டு சலிச்சு search பண்ணா கண்டிப்பா விடியறதுக்குள்ள அவங்களை கண்டுபிடிச்சிடலாம். நான் என்னோட teamஐ கூட்டிட்டு northside போறேன். நீங்க ரெண்டு பேரும் இன்னும் 3 team ready ரெடி பண்ணி அவங்கள வேற வேற பக்கம் அனுப்பி விடுங்க. நான் உடனே கிளம்புறேன்.” என்ற தயாளன் வேகமாக தனது ஆட்களுடன் விஷ்வாவைத் தேடி கிளம்பினான்.
பெருமூச்சு விட்ட விஷ்வா, “நான் அன்னைக்கு ஹோட்டல்ல ஒரு important meeting இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பினேன்ல.. நான் morningல இருந்து evening வரை meetingல தான்டி இருந்தேன். நான் ரொம்ப நாள் கழிச்சு Switzerland வந்திருக்கிறதுனால party arrange பண்ணி இருக்கிறதா என் clients சொன்னாங்க. சோ நானும் வேற வழி இல்லாம party hallக்கு போனேன்.
அப்பயும் உனக்கு பிடிக்காதுன்னு நான் குடிக்கவே இல்ல. எந்த பரதேசி நாயோ வேணும்னே நான் குடிச்ச soft drinksல ஏதோ ஒரு seductive drugஐ mix பண்ணி கொடுத்துட்டான். எனக்கு அது அப்ப தெரியல. நீ எனக்காக surprise plan பண்ணி இருந்ததுனால மகேஷ் என்கிட்ட ரெஸ்ட் எடுங்க அப்படி இப்படின்னு சொல்லி மேல போக சொன்னான். சரி இங்க இருந்தா குடிக்கச் சொல்லி torture பண்ணுவாங்களேன்னு நானும் என் ரூமுக்கு போனேன்.
அங்க போன உடனே.. அங்க இருந்த decorations, room spray smell, அவனுங்க எனக்கு கொடுத்த drugன்னு எல்லாமே சேர்ந்து என்னை ரொம்ப ஒரு மாதிரி seduce பண்ணி விட்டுருச்சுடி. என்ன பண்ணி என்னை control பண்றதுன்னே தெரியல. So குளிக்க போலாம்னு நினைச்சேன். அப்பத்தான் அந்த பொண்ணு ரூமுக்குள்ள வந்தா. Already cakeல I love you husbandன்னு வேற எழுதி இருந்துச்சா.. நான் இருந்த போதையில எனக்கு அவளை பார்க்கும்போது உன்ன பாக்குற மாதிரிதான் இருந்துச்சு. எல்லாம் cleverஆன plan தான். நீதான் அவளை பாத்தியே… Almost அவ உன்னோட height, weightல தான் இருந்தா.
இருந்த மூடுல நீதான் வந்திருக்கேனு நெனச்சு நான் அவக்கூட போய்.. ச்சீ.. இப்ப நினைச்சாலும் எனக்கு அப்படியே என் உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. நீ வந்து அங்க நின்னு பேச start பண்ணதுக்கு அப்புறம்தான் எனக்கு போதை பாதி இறங்குன மாதிரி இருந்துச்சு. நீ போனதுக்கப்புறம் நானும் உன் பின்னாடியே வெளியே போனேன். நடுவுல மயங்கி விழுந்துட்டேன். அப்புறம் மகேஷும், ரிஷியும் என்ன hospitalல admit பண்ணி இருக்காங்க. Doctor என்ன check பண்ணதுக்கு அப்புறம் தான் அந்த drug matterஏ எனக்கு தெரியும்.” என்று நடந்தவற்றை நீட்டி முழக்கி அவளிடம் சொல்ல, அவன் முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மேகாவின் நினைவலைகளில் அன்று நடந்த சம்பவங்கள் அப்படியே படமாக ஓடியது.
அன்று அவள் அவனை அழைத்தவுடன், அந்தப் பெண்ணை ஏதோ அருகருக்கத்தக்க பொருள் போல விஷ்வா தூக்கி எறிந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
“இவன் சொல்றது உண்மைதானா.. இவனுக்கு தான் பொண்ணுங்களயே பிடிக்காதே.. அப்படி இவனுக்கு பல பொண்ணுங்கக்கூட connection இருந்திருந்தா இவன் எதுக்கு என்ன போய் கல்யாணம் பண்ணனும்..??” என்று யோசித்த மேகா, “சரி.. அதெல்லாம் இருக்கட்டும். நீ morning farmhouseக்கு வந்து அப்பவே என் கிட்ட இதையெல்லாம் சொல்லி இருக்கலாம்ல்ல.. எதுக்கு திடீர்னு கிளம்பி என்ன தனியா விட்டுட்டு இந்தியாவுக்கு போன…??” என்று வெகு நாட்களாக தன் மனதில் உருத்தி கொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள்.
அவ்வளவு நேரம் நார்மலாக இருந்த விஷ்வாவின் முகம் அவள் அந்த கேள்வியை கேட்டவுடன் சட்டென மாறிவிட்டது. நடந்ததை அவளிடம் சொல்ல அவனுக்கு தயக்கமாக இருந்தது. “என்ன முழிக்கிற..?? நீதான் எந்த தப்பும் பண்ணலையே.. அப்புறம் எதுக்கு உடனே இந்தியாவுக்கு ஓடிப்போன..?? எனக்கு இன்னிக்கு எல்லாமே தெரிஞ்சாகணும் விஷ்வா.” என்று மேகா மீண்டும் சந்தேகமாக கேட்க, “ஒருத்திய கொல்றதுக்காக..!!” என்ற விஷ்வா எங்கே அவள் தன்னைத் தவறாக நினைத்து ஒதுக்கி விடுவாளோ என்ற பயத்தில் தலை குனிந்தான். அவனை ஷாக்காகி பார்த்தாள் மேகா.
தொடரும்..