அத்தியாயம் 108
நிச்சயமாக, நீங்கள் கொடுத்த கதையில் வரும் ‘விக்ரம்’ என்ற பெயரை ‘விஷ்வா’ என்று மாற்றியுள்ளேன். திருத்தப்பட்ட பகுதி இதோ:
அனைவரும் ஆபிஸுற்க்கு சென்றுவிட, விஷ்வா நேற்று எடுத்த photoகளில் சிலவற்றை தேர்வு செய்து அதை மகேஷிடம் கொடுத்து உடனே தங்களது productsக்கான advertisement bannerல் அதை பயன்படுத்த சொன்னான். அதை செய்துவிட்டு அவனது கேபினுக்குச் மீண்டும் சென்ற மகேஷ் “Sir Ad director shooting location எங்கன்னு கேக்குறாரு. வெளிய மழை வர்ற மாதிரி இருக்கு. So indoor shootingஆ இருந்தா betterஆ இருக்கும்னு அவர் feel பண்றாரு.” என்றான்.
“அதுக்குன்னு என்ன வீட்டுக்குள்ளையா shooting பண்ண முடியும்..??” என்று கேட்ட விஷ்வா சில நொடிகள் யோசித்துவிட்டு, “நேத்து top floorல தானே photoshoot பண்ணோம்.. அதே மாதிரி அங்கயே இதயும் shoot பண்ணிக்கலாம். Adக்கு நடுவுல நடுவுல நம்ம mobile phone assemble பண்றத video எடுத்து அதோட Add பண்ணிக்க சொல்லு. எப்படியும் நம்ம productஐ பத்தித்தானே நம்ப பேச போறோம்.. சோ நம்ம இடத்திலேயே shooting பண்ணிக்கலாம்.” என்று விஷ்வா சொல்ல,
“நீங்க மேகா கூட சேர்ந்து என்ன பண்ணாலும் பார்க்க நல்லா இருக்கும் பாஸ். மத்தவங்கள மாதிரி இல்லாம நம்ம கொஞ்சம் எல்லாத்தையும் differentஆ பண்ணலாம். இது workout ஆகும். நான் போய் directorகிட்ட lighting arrangementsஐ சீக்கிரம் ரெடி பண்ண சொல்றேன்.” என்ற மகேஷ் விஷ்வாவின் கேபினை விட்டு வெளியேறினான்.
அப்போது அவன் phoneற்கு அவனது friend கார்த்திக்கிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதை திறந்து பார்த்து ஷாக்கான மகேஷ், அதே இடத்தில் கண்கள் கலங்க அப்படியே நின்று விட்டான். அவன் கண்கள் பார்த்ததை அவனால் நம்பவே முடியவில்லை. அதற்குள் அது உண்மைதான் என்று உறுதி செய்யும்படியாக அவனுக்கு கால் செய்த கார்த்திக், தனக்கு தெரிந்த உண்மைகளை அவனிடம் சொன்னான்.
கனத்த இதயத்துடன் அனைத்தையும் கேட்ட மகேஷ் அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த அழைப்பை துண்டித்துவிட்டு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றி முற்றி பார்த்தவன், நேராக restroomமிற்க்கு சென்று கதவை அடித்து சாத்திவிட்டு தன் முகத்தை மூடிக்கொண்டு சுவரில் சாய்ந்து கதறி அழுதான். இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று இப்போதும் அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
சில நிமிடங்களுக்கு பின் மேல் தளத்தில் Ad shooting start ஆகிவிட, இப்போதும் formal wearல் இருந்த மேகாவும் விஷ்வாவும் கையில் Phoneஐ வைத்துக்கொண்டு டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை போல dialogue பேசி நடித்தார்கள்.
“சார் உங்க faceல expressionsஏ இல்ல. Atleast dialogues சொல்லும்போதாவது கொஞ்சம் expressiveஆ பண்ணுங்க.” என்று director சொன்னதால், பல takeக்கள் வாங்கி நடித்தான் விஷ்வா.
“இவர்தான் robot ஆச்சே இவருக்கு எப்படி expressions வரும்..??” என்று நினைத்து சிரித்துக்கொண்டாள் மேகா. தொடர்ந்து இரவு வரை shooting, பிறகு editing என அனைவரும் பிஸியாகவே இருந்தார்கள்.
இன்று ஆபீஸில் முக்கியமான நாள் என்பதால் வேறு வழி இல்லாமல் பல்லை கடித்துக் கொண்டு தனது வேலைகளை செய்து முடித்தான் மகேஷ். இரவு 10 மணிக்கு மேல் அனைவரும் வீட்டுக்கு சென்றார்கள். மகேஷ் சாப்பிடாமலேயே அவன் ரூமிற்கு சென்று விட்டான்.
காலையில் இருந்து அவனிடம் தெரிந்த மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா நேராக அவன் ரூமிற்கு சென்று “உனக்கு என்னடா பிரச்சனை..?? ஏன் இப்படி எதையோ பறிக்குடுத்த மாதிரி சுத்திட்டு இருக்க..??” என்று கேட்க, இவ்வளவு நேரம் இந்த கேள்வியை தன்னிடம் யாராவது கேட்க மாட்டார்களா? தன் மன பாரத்தை அவர்களிடம் இறக்கி வைக்க முடியாதா? என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்த மகேஷ் வேகமாக சென்று விஷ்வாவை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதான்.
“இதுவரைக்கும் இவன் எதுக்கும் இப்படி அழுது நான் பார்த்ததே இல்லையே..!! இப்ப எதுக்கு குழந்தை மாதிரி இப்படி தேம்பி தேம்பி அழுகிறான்..??” என்று நினைத்த குழம்பிய விஷ்வா, “டேய் எருமை.. இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க..?? Atleast எதுக்கு அழுகறேன்னு சொல்லிட்டாவது அழுது தொலைடா.” என்றான்.
“பாபாபாஸ்ஸ்ஸ்ஸ்..!!” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு சினுங்கிய மகேஷ், “அவ போய்ட்டா பாஸ்… அவ என்னை விட்டுட்டு போயிட்டா பாஸ்… அவ ஏன் என்ன விட்டுட்டு போனா..??” என்று கேட்டுவிட்டு மீண்டும் கதறி அழுதான்.
“எவடா உன்ன விட்டுட்டு போனா..?? எனக்கு ஒன்னும் புரியல. என்ன நடந்துச்சுன்னு Clearஆ சொல்லு.” விஷ்வா கேட்க,
“என் ஹர்ஷினி பாஸ்.. அவ என்ன விட்டுட்டு போயிட்டா. இங்க பாருங்க.. இன்னிக்கி அவளுக்கும் வேற ஒருத்தனுக்கும் marriageஏ ஆயிடுச்சு. ஆனா இது எதுவுமே தெரியாம நான் பைத்தியக்காரன் மாதிரி ஆபீஸ்ல இருந்துருக்கேன். அவளை கல்யாணம் பண்ண பரதேசியோட friend என் friendஓட friendஆம். அவன் ஹர்ஷினியோட marriage photoஐ எனக்கு அனுப்பி அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு என்கிட்டயே சொல்றான் பாஸ்.
அப்பக்கூட நான் அதை நம்பாம உடனே அவளுக்கு கால் பண்ணேன். அவ என்ன block பண்ணி வச்சிருக்கா பாஸ். நேத்து நைட்டு வரைக்கும்க்கூட எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட நார்மலா பேசிட்டு இருந்தா அவ. இன்னைக்கு காலைல எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா. அவ இப்படி பண்ணிட்டான்னு என்னால இன்னும் நம்பவே முடியல பாஸ். அவ friend ஒருத்தி number என்கிட்ட இருந்துச்சு. நான் அவளுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா, ஹர்ஷினிக்கு கல்யாணம் ஆயிடுச்சு.
இனிமே அவளுக்கு கால் பண்ணி disturb பண்ணாதீங்க broன்னு casualஆ சொல்லிட்டு அவ callஐ cut பண்ணிட்டா. அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? அப்படியே செத்துடலாம்னு தோணுச்சு பாஸ்.” என்றுவிட்டு தனது mobile phoneல் இருந்த photoவை அவனிடம் காட்டிவிட்டு தரையில் அமர்ந்து கதறி அழுதான் மகேஷ்.
அந்த photoஐ பார்த்த விஷ்வா, “இவ மூஞ்சிய நல்லா பாரு.. அவன் தாலி கட்டும்போது எவ்ளோ சந்தோஷமா பல்லை காட்டிட்டு இருக்கா..!! இவ எல்லாம் ஒரு ஆளுன்னு இவளுக்காக நீ சாவியாடா..?? இன்னொரு தடவை உன் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்துச்சுனு வையேன்.. நானே உன்னை அடிச்சே கொன்றுவேன்.” என்ற விஷ்வா வந்த கோபத்தில் அவனை எட்டி உதைக்க தன் காலை தூக்கியவன், பின் மனசு வராததால் தன் காலை தரையில் வைத்தான்.
“இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்.. எல்லாரும் சரியான ஏமாற்றுக்காரங்க. உங்களுக்கு என் தங்கச்சி மேகா கிடைச்ச மாதிரி எல்லாருக்கும் நல்ல பொண்ணு கிடைச்சிருமா.?? அந்த ஹர்ஷினி சரியான சாக்கடை பஸ். அவளுக்காக நான் எதுக்கு சாகணும்..??
ஏற்கனவே விஜய் சார் உங்களவிட்டு போனதுனால நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்கன்னு டெய்லி உங்க கூட இருந்து பார்த்தும், அதே தப்பை நான் எப்படி பண்ணுவேன்..?? நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் பாஸ். எனக்கு நீங்க இருக்கீங்கள்ல.. அது போதும். வேற எவளும் தேவையில்ல. I love you boss.” என்ற மகேஷ் விஷ்வாவின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.
“எப்பயும் தெளிவா இருப்பானே இவன்.. இன்னைக்கு என்ன emotionalஆகி குடிக்காமயே இப்படி உளறிட்டு இருக்கான்..!! எல்லாம் இந்த பொண்ணுங்களால வந்தது.
எவனாவது நல்லா இருந்தாலே ஒருத்திக்கும் புடிக்க மாட்டேங்குது. இவளுங்களுக்கு எல்லாம் ஏதாவது பண்ணி உடனே இப்படி ஆம்பளைங்கள அழுக வச்சு மூலையில உட்கார வச்சுடனும். அட்லீஸ்ட் விஜய் மாதிரி இவனும் யோசிச்சு முட்டாள் தனமா எதுவும் பண்ணாம இருந்தானே அதுவரைக்கும் சந்தோஷம்..” என்று நினைத்த விஷ்வா, “சரக்கு அடிக்கலாமாடா..??” என்று கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்த மகேஷ் தன் கண்ணீரை துடைத்துவிட்டு “ம்ம்ம்.. எனக்கு உங்க collectionல நீங்க வச்சிக்கிற foreign சரக்குதான் வேணும். குடுப்பீங்களா..?? ப்ளீஸ் பாஸ்..!!” பாவமாக கேட்டான் மகேஷ்.
“சரி தந்து தொலையுறேன் வாடா.” என்ற விஷ்வா அவன் தோள்களில் கை போட்டு அவனை அழைத்துக்கொண்டு terraceல் உள்ள mini bar setupக்கு சென்றான்.
விஷ்வாவின் costlyயான foreign சரக்கு பாட்டில்களை குடித்து தீர்க்க வேண்டும் என்ற மகேஷின் நீண்ட நாள் ஆசை இன்றுதான் நிறைவேறியது. மகேசை தேடிக்கொண்டு மாடிக்கு சென்ற தயாளனும், அரவிந்தும் கூட அந்த ஜோதியில் ஐக்கியமாணவர்கள்.
போதையில் தொடர்ந்து மகேஷ் “டேய் தாயா.. அரவிந்து.. அவ என்னவிட்டு போயிட்டா டா மச்சான்… என் ஹர்ஷினி டார்லிங் என்ன விட்டுட்டு வேற ஒருத்தன்க்கூட போயிட்டா டா. அவங்களுக்கு கல்யாணமே ஆயிடுச்சு. இந்நேரம் அவளுக்கும் அவனுக்கும் first night நடந்துட்டு இருக்கும். இதுவரைக்கும் நான் பாத்துட்டு இருந்த showஐ இன்னைக்கு அவன் fullஆ பாக்கப் போறான்..!!” என்று சொல்லிவிட்டு அழுதான்.
“பின்ன பாக்காம இருப்பானா..?? அவன்தான் இப்ப theatre owner ஆயிட்டானே டா..!!” என்ற தயாளன் தன் கையில் இருந்த பாட்டிலில் மீதம் இருந்த மதுவை தன் வாய்க்குள் ஊற்றி தீர்த்தான்.
“டேய் மச்சான்.. மகி.. நீ இப்பவே வாடா.. அவன் எவன்னு கண்டுபிடிச்சு நம்ம ஹெவியா அவனுக்கு ஒரு சம்பவம் பண்ணி விட்டுறலாம். அப்புறம் lifelong எப்பயும் அவனால சம்பவமே பண்ண முடியாது. அந்த ஹர்ஷினி அவ புருஷனை நினைச்சு நினைச்சு அழுது சாவட்டும்.” என்று போதையில் உளறினான் அரவிந்த்.
“டேய் போட்டும் விடுடா.. நான் வேண்டாம்னு நினைச்சு தானே அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா அவ.. போகட்டும். என்ன இருந்தாலும் நான் லவ் பொண்ணுடா அவ.. எங்கயோ எப்படியோ நல்லா இருந்துட்டு போகட்டும். ஆனா அவ என்ன அழ வச்சுட்டு போயிட்டா மச்சான். அட்லீஸ்ட் அவளுக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டாவது போயிருக்கலாம்ல..!!” என்று போதையில் மகேஷ் சொல்ல, “போடா டேய்.. அப்படியே அவ marriage invitationஐ கொடுத்திருந்தா இவன் போய் gift குடுத்து congratulations சொல்லிட்டு photoக்கு pose குடுத்துட்டு வருவான். டேய் நல்லவனே.. நீ இப்படியே இரு உறுப்பட்டுருவ…!!” என்றான் விஷ்வா.
இப்படியே தொடர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, இடையிடையில் “என் தங்கச்சி மாதிரி எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க.” என்று சொல்லி போதையில் மேகாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான் மகேஷ்.
அதை கேட்ட விஷ்வாவிற்கு “ஆமா, என் பொண்டாட்டி மாதிரி யாராலயும் இருக்க முடியாது.” என்று தோன்ற, அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்ததால் தள்ளாடியபடி படியில் இறங்கி தனது ரூமிற்கு சென்றான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)