அத்தியாயம் 106
நிச்சயமாக, நீங்கள் கொடுத்த கதையில் வரும் விக்ரம் என்ற பெயரை விஷ்வா என மாற்றி அமைத்துள்ளேன். அதன் திருத்தப்பட்ட வடிவம் இதோ:
இன்று முதல் நாள் என்பதால் மேகாவிற்கும் சௌபர்ணிகாவிற்கும் jogging முடிந்தவுடன் workouts மட்டும் செய்ய சொல்லி training sessionஐ நாளையில் இருந்து ஸ்டார்ட் செய்யலாம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் இவருடனும் சேர்ந்து மற்றவர்களும் அதையெல்லாம் செய்து முடித்துவிட்டு வந்து tiredஆக stone benchல் அமர்ந்தார்கள்.
“பாஸ்.. அவங்க ரெண்டு பேரும் தானே இதையெல்லாம் புதுசா கத்துக்கிறாங்க..!! நாங்க எல்லாம் பல வருஷமா training centreல training எடுத்துட்டுதானே இங்க வந்தோம்.. அப்புறம் எங்களையும் எல்லாத்தையும் பண்ண சொல்லி ஏன் டார்ச்சர் பண்றீங்க..??” என்று தயாளன் கேட்க, “ஆல்ரெடி பல வருஷமா training எடுத்த உனக்கே இது டார்ச்சரா தெரியுது. இவங்க ரெண்டு பேரும் இப்பதானே புதுசா பண்றாங்க..!! சோ அவங்களுக்கு company கொடுக்க ஆள் வேண்டாமா..?? அதுக்குத்தான். நீங்க ஒழுங்கா perform பண்ணலன்னா மறுபடியும் உங்கள training centreக்கே pack up பண்ணி அனுப்பிடுவேன். Be careful” என்றான் விஷ்வா.
அதனால் அவன் வாயை மூடிக்கொள்ள, அனு லேசாக அவனைப் பார்த்து சிரித்தாள்.
அதை கவனித்த தயாளன், “இவ சிரிச்சா ரொம்ப அழகா இருக்கால்ல…” என்று தன்னை அறியாமல் யோசித்தவன், “டேய்.. கொஞ்சம் அடக்கிவாசி டா. உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. உன் தேவதை திவ்யா இருக்கும்போது.. உனக்கு எதுக்கு அனுப்பமா..?? அல்பமா அலையாத.” என்று அவன் மனசாட்சியே அவனை காரி துப்பியதால் தன் பார்வையை அவளிடம் இருந்து விளக்கிக் கொண்டான்.
நடக்கும் அனைத்தையும் தனது கூர்மையான கண்களால் கவனித்தபடி அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான் சேரன்.
அப்போது நேரம் காலை 7:00 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்.
புதிதாக அந்த வீட்டிற்கு வந்த பெண்களுக்கு தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான் மகேஷ். Liftல் இருந்து இறங்கி தன் இடுப்பை பிடித்துக்கொண்டு நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தாள் மேகா. அதை பார்க்க காமெடியாக இருக்க லேசாக சிரித்த விஷ்வா, “ரொம்ப வலிக்குதா..??” என்று கேட்க, அவனை திரும்பிப் பார்த்து முறைத்த மேகா “இல்ல ரொம்ப ஜாலியா இருக்கு.” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அவர்களது ரூமிற்குள் நுழைந்தாள்.
“பல வருஷமா physical activityஏ பண்ணாம இருந்துட்டு திடீர்னு bodyஐ stress பண்ணா இப்படித்தான் வலிக்கும். One weekஆன தானா சரியாயிடும். போய் hot waterல குளி. Betterஆ இருக்கும்.” என்று விஷ்வா சொல்ல, “அதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை.” என்ற மேகா குளிப்பதற்காக சென்று விட்டாள். ஒன்பது மணிக்கு மேல் breakfast சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் கிளம்பி officeக்கு சென்றுவிட்டார்கள்.
மீட்டிங் ஹாலில் விஷ்வா மேகா என அனைவரும் அமர்ந்திருக்க; “Pre booking sales எல்லாம் start பண்ணியாச்சு. Ad shooting இன்னும் ஆரம்பிக்கலையா..?? atleast advertisement bannerல use பண்றதுக்காவது photos வேணுமே..!!” என்று மேகா கேட்க, “ஒரு famous Bollywood celebrity கிட்ட கேட்டுட்டு இருக்கோம். அவங்க ரொம்ப busy scheduleல work பண்ணிட்டு இருக்காங்க. அவங்க dates கிடைக்கல. நான் இன்னைக்கு காலையிலக்கூட அவங்க மேனேஜர் கிட்ட பேசினேன்.” என்றான் மகேஷ்.
“நானே உன்கிட்ட இத பத்தி கேட்கலாம்னு இருந்தேன். சும்மா அவங்க பிஸியா இருக்காங்கன்னு சொல்லிட்டே இருந்தா என்ன அர்த்தம்..?? அந்த பொண்ணு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் free ஆவேன்னு சொன்னா அதுவரைக்கும் நம்ம wait பண்ணிட்டு இருக்க முடியுமா..?? யாரு இப்போ availableஆ இருக்காங்களோ அவங்கள வச்சு பண்ணுங்க. எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல Ad ready ஆகணும். நாளைக்கே bannerல போட photos வேணும்.” என்று விஷ்வா strictஆக சொல்ல, “பாஸ் இப்ப அம்பானி வீட்ல கல்யாணம் நடக்கிறதுனால எல்லாரும் அங்க போயிட்டு வர்றதுல பிஸியா இருக்காங்க. யாரைக் கேட்டாலும் dates இல்லைன்னு தான் சொல்றாங்க. நான் என்ன பண்றது..??” என்று கேட்டான் மகேஷ்.
“அப்புறம் எதுக்கு அவங்ககிட்ட போய் கேட்டுகிட்டு..?? நமக்கு நம்ம product தான் celebrity. Peoples brand ambassadorஐ இல்ல, நம்ம brandஐ தான் celebrate பண்ணனும். சோ யாராச்சும் New faceஆ try பண்ணலாமே.. இந்தியாவுல modelsக்கா பஞ்சம்..?? buyers எப்படியும் adsஐ விட product quality and priceஐ தான் பெருசா நினைப்பாங்க.” என்று மேகா சொல்ல, “அதுவும் கரெக்ட் தான். இதெல்லாம் சும்மா formalityக்கு பண்றது தானே..!! எனக்கு என் products மேல நம்பிக்கை இருக்கு.” என்று நினைத்த விஷ்வா, “Up coming modelsல 4,5 பேர shortlist பண்ணி அவங்க profileஐ எனக்கு ஷேர் பண்ணு. இன்னைக்கே நம்ம company brand ambassador யாருன்னு final பண்ணிட்டு நாளைக்கு photoshoot வச்சுக்கலாம்.” என்று மகேஷிடம் சொன்னான் விஷ்வா.
அப்போது admin office head ஹரி, “பாஸ் உங்க couple interview இன்னும் 2 daysல telecast ஆகப் போகுதுன்னு மகேஷ் சொன்னாரு. சோ இந்த டைம்ல நம்ம எதுக்கு New facesஐ வெளியே போய் தேடிக்கிட்டு..?? லலிதா ஜுவல்லரி ஓனர் மாதிரி நம்ம productsஐ நீங்களும் மேகா மேடமும் சேர்ந்து promote பண்ணுங்களேன்.. பாக்குறவங்களுக்கு இன்னும் ஈசியா connect ஆகும். இது Just என்னோட suggestion தான். இத பத்தி பேசும்போது தோனிச்சு சோ சொல்லிட்டேன்.” என்று சொல்ல, “அது சரியா வருமா..??” என்று யோசித்துக் கொண்டிருந்தான் விஷ்வா. “பாஸ்.. இது நல்ல ஐடியா பாஸ். Without any delay differentஆ நம்ம officeலயே இன்னைக்கே photoshoot start பண்ணிடலாம்.” என்று மகேஷ் உற்சாகமான குரலில் சொல்ல, “உனக்கு ஓகேவா..??” என்று கேட்பதைப் போல மேகாவை பார்த்தான் விஷ்வா.
“எனக்கு இந்த மாதிரி நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா வீட்ல விட மாட்டாங்களேன்னு அதையெல்லாம் அப்படியே விட்டுட்டேன். இப்போ தானா ஒரு நல்ல opportunity கிடைச்சிருக்கு. இது நம்ம Product. சோ நம்மலே promote பண்றதுல என்ன தப்பு இருக்கு..??” என்று மேகா கேட்க, “Okay. After lunch photoshoot start பண்ணிடலாம். costumes and மத்த arrangements எல்லாத்தையும் சீக்கிரம் பண்ணுங்க. நான் பிளான் பண்ண டைம்ல எல்லாமே நடக்கணும்.” என்றான் விஷ்வா.
Creative team head உடன் சேர்ந்து அதற்கான வேலைகளை எல்லாம் பார்க்க தொடங்கினான் மகேஷ். திட்டமிட்டதைப் போலவே அனைத்தும் தயாராகிவிட, விஷ்வாவின் officeலேயே photoshoot நடந்தது. விஷ்வா வழக்கம்போல கோட் சூட்டில் இருக்க, மேகாவும் அவனைப் போலவே blazers அணிந்திருந்தாள்.
அதற்கேற்ப அவளுக்கு மேக்கப் போடப்பட்டிருக்க, இருவரும் கருப்பு நிற ஆடையில் கையில் மொபைல் ஃபோனுடன் நிற்கும்போது உண்மையான couple modelsஐ போலவே அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தார்கள்.
Photographer சொன்னபடி எல்லாம் கேட்டு மேகா அழகாக போஸ் கொடுத்தாள்.
ஆனால் “சார் கரெக்ட்டா கேமராவ பாருங்க சார். லைட்டா smile பண்ணுங்க சார். ஃபோன்ல லவ்வர் கிட்ட ஜாலியா பேசுற மாதிரி அப்படியே ஒரு போஸ் குடுங்க. சார் மொபைல்ல இருக்கிற லோகோ கரெக்டா தெரியல. ஃபோன சரியா புடிங்க.” என்றெல்லாம் தன் தொண்டை தண்ணீர் வற்றும் அளவிற்கு பேசி பேசி ஒரு வழியாக விஷ்வாவை வைத்து photos எடுத்தார். அன்றைய நாள் அப்படியே முடிந்துவிட, விஷ்வாவும் மேகாவும் நைட் லேட்டாக வீட்டிற்கு சென்றார்கள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து சோர்வாக கட்டிலில் விழுந்த மேகா “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன். நீங்க முடியாதுன்னு சொல்லக்கூடாது.” என்று இழுத்தாள். “நீ முதல்ல என்னன்னு சொல்லு. என்னால முடியுமா முடியாதான்னு அப்புறம் சொல்றேன்.” என்ற விஷ்வா அவள் அருகில் சென்று படுத்தான்.
அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்ட மேகா “இப்பவே பாருங்க.. மணி 12ஆக போகுது. எனக்கு ரொம்ப tiredஆ இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க சீக்கிரமா அஞ்சு மணிக்கு எந்திரிக்க சொன்னா, என்னால எப்படி முடியும்..?? நான் பாவம் தானே..!! இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எனக்கு லீவு குடுக்கிறீர்களா..?? Photoக்கு pose குடுக்கிறேன்னு நின்னு நின்னு கால் எல்லாம் வலிக்குது வலிக்குது.
இன்னைக்கு நான் ஒழுங்கா தூங்கலனா நாளைக்கு கண்ணுக்கு கீழ dark circles வந்துரும். அப்புறம் Adல நான் நல்லா இருக்க மாட்டேன்.” என்றுவிட்டு பாவமாக அவனை பார்த்தாள்.
இன்று அவனுக்கே தொடர்ந்து ஓடியாடி வேலை செய்து கொண்டே இருந்ததில் tired ஆகத்தான் இருந்தது.
அதனால், “சரி தூங்கு. நீயா எந்திருக்கிற வரைக்கும் உன்னை யாரும் disturb பண்ண மாட்டாங்க.” என்றான் விஷ்வா. அதனால் மகிழ்ந்த மேகா, “Wow.. Thank you so much.” என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் பச்சாக் என்று முத்தம் கொடுத்தாள்.
இது தான் அவளாக அவனுக்கு கொடுத்த முதல் முத்தம். அதனால் விஷ்வா வெட்கத்துடன் அவளை பார்க்க, அதை உணர்ந்து கூச்சத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் அவள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)