Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 105

மூர்கனின் காதலி CH 105

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 105

மேகாவின் முன்னே ஒரு கவரை வைத்த விஷ்வா, “இதுல இருக்கிறத இப்ப நீ போட்டுட்டு வரலனா, நானே உனக்கு அதைப் போட்டு உன்ன இழுத்துட்டு போவேன்.” என்று சொல்லிவிட்டு சோபாவில் சென்று அமர, பயத்தில் சட்டென எழுந்து அமர்ந்தாள் மேகா.

அவள் திருத்துருவென விழித்ததால், “இப்படி நீ அந்த முட்ட கண்ண வச்சு உருட்டி உருட்டி என்னை பாக்குறதுலையே 30 seconds போயிடுச்சு.” என்று விஷ்வா அசால்டாக சொல்ல, கட்டிலில் கிடைத்த கவரை வேகமாக எடுத்துக்கொண்டு விழுந்துவாரி changing roomஐ நோக்கி ஓடினாள் அவள்.

“Idiot.. சரியான METAL mandayan.. மூளை கெட்ட பையன். பொண்ணுங்ககிட்ட எப்படி behave பண்றதுன்னே தெரியாதா இவனுக்கு..??” என்று தன் மனதிற்குள் மனதார அவனைத் திட்டி தீர்த்த மேகா அந்த கவருக்குள் இருந்த tracksuitஐ எடுத்து அணிந்து கொண்டு வெளியில் சென்று தன் நீண்ட கூந்தலை ponytailல் போட்டவாறு, “இப்போ என்ன எதுக்கு இதை போட சொன்னீங்க..??” என்று கேட்க, அவள் தன் கூந்தலை முடியும் அழகை ஒரு நொடி ரசித்துப் பார்த்த விஷ்வா “டேய் அவள அப்படியெல்லாம் பாக்காதடா சும்மா இரு.” என்று அவன் மனசாட்சி சொன்னதால் சுதாரித்துக் கொண்டு “கீழ வா உனக்கே தெரியும்.” என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல, ஓட்டமும் நடையுமாக அவனை பின் தொடர்ந்து கீழே சென்றாள் மேகா.

மேகாவுடன் garden areaவிற்க்கு சென்றான் விஷ்வா.‌ அங்கே ஏற்கனவே மகேஷ், தயாளன், அரவிந்த், சௌபர்ணிகா.. ஏன் சேரன் கூட tracksuitல் ஆஜராகி இருந்தான். கடுப்பில் வந்த மேகாவிற்கு அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “யப்பா.. நல்லவேளை நான் மட்டும் இவர்கிட்ட தனியா மாட்டிக்கிட்டனோன்னு நினைச்சு பயந்துட்டேன்.

இவங்களும் சேர்ந்து தான் சிக்கிருக்காங்க.” என்று குளுகுளுவென இருந்தது. ஆனால் அங்கே புதிதாக நான்கு இளம் பெண்கள் black colour tracksuitல் நின்று கொண்டு இருப்பதை கவனித்துவிட்டு “இவங்க யாரு புதுசா இருக்காங்க..??” என்று நினைத்து குழம்பியவள், விஷ்வாவிடம் கேட்டாள்.
“இவங்கதான் இனிமே உனக்கும், அக்காவுக்கும் personal bodyguards.

என்க்கூட எப்பயும் தயாவும், அரவிந்தும் இருக்கிற மாதிரி இவங்கள்ல ரெண்டு பேர் உங்கக்கூட இருப்பாங்க. உங்களோட safetyக்காக நான் இவங்கள hire பண்ணி இருக்கேன்.” என்று விஷ்வா சொல்ல,

கொட்டாவி விட்டபடி “டேய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையாடா..?? உனக்கு வேணும்னா உன் பொண்டாட்டிக்கு மட்டும் bodyguards வச்சுக்க வேண்டியதுதானே..!! எனக்கு எதுக்கு இதெல்லாம்..?? நான் உன்னோட அக்கான்னே இன்னும் நிறைய பேத்துக்கு தெரியாது. தூங்குற நேரத்துல எழுப்பி கூட்டிட்டு வந்து குளிரில நிக்க வச்சு ‌ஏன்டா இம்சை பண்ற..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா.

“ஆமா எனக்கும் bodyguards எல்லாம் வேண்டாம்.‌ என் கூட யாராவது சும்மா bodyguardsன்னு ஓட்டிகிட்டே திரிஞ்சா எனக்கு பிடிக்காது. I love my privacy.” என்று தன் பங்கிற்கு உடனே மேகா சொல்ல, “உங்களோட safetyல என்னால compromise பண்ண முடியாது. நான் உங்க கிட்ட இத requestஆ சொல்லல. It’s my order. mind it. நீங்க இவங்களுக்கு தெரியாம எதுவும் பண்ண கூடாது. எங்கயும் போகக் கூடாது. 24/7 உங்க கூடயே இருந்து இவங்க உங்களை monitor‌ பண்ணிட்டே இருப்பாங்க.‌ என்னதான் நம்ம கூட எப்பவும் Guards இருந்தாலும், sometimes we have to take care of ourselves.

So உங்களுக்கு self defence practice from today இனிமே டெய்லியும் இந்த டைம்ல இங்க நடக்கும். இத சீரியஸா எடுத்துக்கிட்டு நீங்க ஒழுங்கா perform பண்ணலைனா உங்களுக்கு punishment இருக்கு. Is everything clear?” என்று தன் குரலை உயர்த்தி கேட்டான் விஷ்வா.

அவனது கணீர் குரலில் உண்மையிலேயே பயந்து போன சௌபர்ணிகாவும், மேகாவும் கோரசாக உடனே “Yes Sir” என்றார்கள்.

இப்போதே அவர்களுக்கு வேர்த்து கொட்ட தொடங்கி இருந்தது. அதனால் உள்ளுக்குள் சிரித்த விஷ்வா, “உடனே இதுக்கெல்லாம் adapt ஆகிறது உங்களுக்கு hardஆ தான் இருக்கும். பட் நான் இத உங்க நல்லதுக்காக தான் பண்றேன். இத புரிஞ்சுகிட்டு நீங்க எல்லாத்தையும் சீக்கிரமா கத்துக்கிட்டா நல்லா இருக்கும்.” என்று நினைத்தான்.

பின் விஷ்வா அந்த 4 female bodyguardsஐயும் ஒரு பார்வை பார்க்க, முன்னே வந்து நின்ற அவர்கள் நால்வரும் மேகாவையும் சௌபர்ணிகாவையும் பார்த்து லேசாக புன்னகைத்தார்கள். அவர்கள் பார்க்க சாதாரண பெண்களைப் போல இல்லாமல் அவர்களது கை கால்கள் எல்லாம் முறுக்கேறி இருக்க, “இவளுங்க எல்லாம் நல்லா வெறித்தனமா workout பண்ணுவாளுங்க போலயேக்கா..!!” என்று மேகா சௌபர்ணிகாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.‌ “ஆமா, நம்மளையும் அதெல்லாம் பண்ண சொல்லிட்டா என்னடி பண்றது..?? என்னை எல்லாம் வேகமா ஓட சொன்னா கூட என்னால ஓட முடியாது.

நான் ஒரு டம்மி பீசுன்னு உன் புருஷனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது..??” என்று பயந்த குரலில் சொன்னாள் சௌபர்ணிகா.

“அப்ப நான் மட்டும் என்ன வீராங்கனையா..?? ஏன் அக்கா நீங்க வேற..!!” என்று சலிப்புடன் மேகா அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அந்த நான்கு பெண்களின் முதலாவதாக இருந்தவள், “Hello Everyone, I’m சாரா.” என்று சொல்ல, அவளைத் தொடர்ந்து மற்ற மூவரும் “I’m அனுப்பமா, I’m மகதி, I’m பிரியா.” என்றார்கள்.

“ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.” என்று சலிப்பாக மேகா சொல்ல, “ஏய் சும்மா இருடி. உனக்கு இன்னும் விஷ்வாவை பத்தி முழுசா தெரியல. நம்ம இவங்ககிட்ட நல்ல மாதிரி behave பண்ணலனா அவன் நமக்கு punishment குடுப்பான்.” என்றாள் சௌபர்ணிகா. “ஐயோ இது வேறையா..!!” என்று நினைத்த மேகா உடனே அவர்களைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக “Hello.. Nice to meet you.” என்றாள். “Nice to meet you mam..!!” என்று அவர்களும் கோரசாக சொன்னார்கள்.
“என்ன மேம்னு கூப்பிடாதீங்க. Please call me Megha.” என்று அவள் சொல்ல, அவர்கள் நால்வரும் திரும்பி விஷ்வாவைப் பார்த்தார்கள்.

“அவங்க உங்களுக்கு obedientஆ இல்லைனா மட்டும் நீங்க எனக்கு report பண்ணா போதும். மத்தபடி They’re your boss. அவங்க சொல்றத நீங்க கேளுங்க.” என்று அவர்களிடம் சொன்ன விஷ்வா மேகாவை பார்த்து, “இவங்கள்ல இருந்து நீ ரெண்டு பேர choose பண்ணு.” என்றான்.‌

அதனால் அவர்கள் நால்வரையும் உற்றுப் பார்த்த மேகா, சாராவையும், அனுப்பமாவையும் தேர்ந்தெடுத்ததால் மற்ற இருவரும் சௌபர்ணிகாவின் அருகே சென்று நின்றார்கள்.
“இன்னைக்கே நீங்க training start பண்ணிடுங்க.” என்ற விஷ்வா jogging செய்ய தொடங்கிவிட, “நீங்களும் மூணு ரவுண்டு ஓடுங்க மேடம். Beginningல warm up பண்ணா நல்லா இருக்கும்.” என்ற சாரா தானும் ஓட தயாராகி விட, வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து மேகாவும் சௌபரணிகாவும் ஓடினார்கள். அவர்களை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்த தயாளன், “டேய்.. அந்த சாரா செமையா இருக்காள்ல…?? நம்ம பாஸ் எதை செலக்ட் பண்ணாலும் தரமா தாண்டா செலக்ட் பண்றாரு.” என்று சொல்ல, “டேய் அந்த பொண்ணு wrestling champion. Olympicsல இந்தியாவ represent பண்ணி நிறைய தடவை participate பண்ணி இருக்கா.” என்றான் மகேஷ்.

அவன் சொன்ன பிறகு தான் அவளை உற்றுப் பார்த்த தயாளன், “அட ஆமா.. அந்த பொண்ணு சாரா வின்சென்ட்.. அவளா இவ..??” என்று ஷாக்காகி கேட்க,

“ஆமாமா அவதான். என் கிட்ட female bodyguards suggestion list நேத்து ஈவினிங் தான் பாஸ் கேட்டாரு. இன்னைக்கு early morningஏ இவங்கள final பண்ணி இங்க வர வச்சுருக்காரு. மத்த மூணு பேரும் கூட famous trained professional fighters. இங்க வந்து ‌work பண்ண பாஸ் அவங்களுக்கு எவ்ளோ payment குடுத்துருப்பாரு..‌ இவர் எவ்ளோ தரேன்னு சொல்லிருந்தாலும் இவ்ளோ சீக்கிரம் இவங்க எல்லாம் இங்க வந்து ஆஜராகி இருக்காங்கண்ணா, அவரோட influence எந்த அளவுக்கு இருக்கும்னு யோசிச்சு பாருங்க.” என்று பெருமையாக சொன்னான் மகேஷ்.

“அதெல்லாம் தெரிஞ்சது தானேடா.. எது எப்படி இருந்தாலும் சாராவும், அனுவும் செம figure-uh. இனிமே அவங்க தான் என் Sight.” என்று தயாளன் சொல்ல, “டேய் உனக்கு தான் ஆள் இருக்குல்ல.. அப்புறம் என்ன..?? அவங்க என் Sight.” என்று வேகமாக சொன்னான் அரவிந்த்.

“ஏன் உனக்கு மட்டும் ஆள் இல்லையா..?? நீ நிலா நிலான்னு பகல்லையே சுத்துறதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சியா??” தயாளன் கேட்க, “நான்தான் அவ பின்னாடி சுத்திட்டு இருக்கேன். அவ எனக்கு என்ன ஓகே சொல்லிட்டாளா..?? அவ எனக்கு எஸ் சொல்லி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சா தான், நான் officially committed. அதுவரைக்கும் Single தான். சோ நான் எவளை வேணாலும் sight அடிப்பேன்.” என்றான் அரவிந்த்.

“டேய் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வாங்கடா. நீங்க பேசுறது மட்டும் அவளுங்களுக்கு கேட்டுச்சுன்னா அப்புறம் எல்லாரும் சேர்ந்துக்கிட்டு பறந்து பறந்து அடிச்சு நம்மள பொளந்து கட்டிருவாளுங்க. இந்த மாதிரி விஷயத்துல நம்ம பாஸ் கூட நம்மளை காப்பாத்த வர மாட்டாரு.” என்று மகேஷ் சொன்னதால், அனைவரும் வாயை மூடி கொண்டார்கள்.

“ஐயோ முடியல சாமி. சும்மா ஓடுறதுக்கே இப்படி மூச்சு வாங்குதே..!! என்ன போய் இந்த மனுஷன் training எல்லாம் எடுக்க சொல்றாரே.. முழுசா நான் அதெல்லாம் பண்ணி முடிக்கறதுக்குள்ள மொத்தமா முடிஞ்சு மேல போயிடுவேன் போல..!!” என்று புலம்பியபடி மேகா ஓடுகிறேன் என்ற பெயரில் தள்ளாடியபடி குடிகாரனை போல நடந்து கொண்டிருக்க, “நீ mind voiceன்னு நினைச்சுட்டு சத்தமா பேசிட்டு இருக்கடி. அவங்களுக்கு கேட்டுற போகுது வாய மூடு. அப்புறம் போய் விஷ்வா கிட்ட போட்டு கொடுத்துடுவாங்க.” என்று சௌபர்ணிகா சொன்னதால் கப்சிப் என்று தன் வாயை மூடி கொண்டாள் மேகா.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured