Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 100

மூர்கனின் காதலி CH 100

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 100

மீராவிடம் கோபப்பட்டு சண்டை போட்டு அவளை அடிக்கப்போன ஆதித்யாவை தடுக்கிறார் அவனது அப்பா மரகதமணி. “இந்த சண்டையில நீங்க interfere ஆகாதீங்க daddy. இவளை பத்தி உங்களுக்கு தெரியாது.” ஆதித்யா சொல்ல, “இவள பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டு என்ன டா பண்ண போறேன்..?? எனக்கு அதெல்லாம் தேவையில்லை. இப்போ அவ pregnantஆ இருக்கா. அவ வயித்துல வளர்றது இந்த குடும்பத்தோட வாரிசு. அவளுக்கும் உனக்கும் நடுவுல எந்த பிரச்சனை இருந்தாலும் அவ pregnantஆ இருக்கிற இந்த டைம்ல நீ இப்படி behave பண்றத பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.
உன் வயசுல நானும் உன்ன மாதிரி இருந்தவன் தான்டா. நான் இல்லைன்னு சொல்லல. ஆனா எப்பயாவது நான் உங்க அம்மாவ இப்படி treat பண்ணி நீ பார்த்துருக்கியா..?? அப்படி இருந்தும், நான் பண்ணது பிடிக்காம உங்க அம்மா இப்ப வரைக்கும் என்க்கூட பேசாம எங்கேயோ போய் தனியா இருக்கா. உடம்பு தேடுதுன்னு ‌எத்தனை பொம்பளைங்களை வேணாலும் வச்சுக்கலாம் ஆதித்யா.‌ ஆனா பொண்டாட்டி ஒருத்தி மட்டும்தான். அவதான் permanent. சோ பார்த்து இருந்துக்கோ.” என்று ஒரு விசித்திரமான adviceஐ அவனுக்கு வழங்கினார் மரகதமணி.

“Stop it daddy. எங்க அம்மா கூட எல்லாம் இவளை ‌Compare பண்ணாதீங்க. She is a strong business lady. இவ ஏதோ ஒரு பிச்சைக்கார குடும்பத்தில பிறந்தவ. இவளும் எங்க அம்மாவும் உங்களுக்கு ஒண்ணா..??” என்று ஆதித்யா மீராவை இளக்காரமாக பார்த்து கேட்க, “யாரா இருந்தா என்ன…?? இப்போ அவ உன் ‌wife. So you have to take care of her.” என்று மரகதமணி உறுதியாக சொன்னதால் எரிச்சலடைந்த ஆதித்யா தன் வீட்டைவிட்டு வெளியேறினான்.

“உனக்கு இந்த வீட்ல ஒழுங்கா வாழணும்னு எண்ணம் இருந்துச்சுன்னா இனிமே அவன question பண்ணிட்டு இருக்காத.‌ இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடு. அதான் உனக்கும் பிறக்க போற குழந்தைக்கும் நல்லது.” என்று சொல்லிவிட்டு மரகதமணியும் அவரது அறைக்கு சென்றுவிட, தனியாக ஹாலில் நின்று அழுது கொண்டு இருந்தாள் மீரா.

விஷ்வாவின் வீட்டில் இன்று Sunday என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். காலையில் லேட்டாக எழுந்த மேகா ரெடியாகி ‌கீழே செல்ல, சேரனுடன் அமர்ந்து டைனிங் ஹாலில் breakfast சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் சௌபர்ணிகா. மேகாவும் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள, “அவன் இன்னும் தூங்கிட்டு இருக்கானா..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா.

“இல்லக்கா அவர் எப்பவோ எந்திரிச்சிட்டாரு. ரொம்ப நேரமா யார் கூடையோ seriousஆ phoneல பேசிட்டு இருக்காரு.‌” என்று மேகா சொல்ல, “அப்படியா..?? நீங்க தூங்கிட்டு இருப்பீங்கன்னு நினைச்சுத்தான் உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நான் கால் பண்ணி சாப்பிட கூப்பிடாம இருந்தேன். இரு அவனை வர சொல்றேன்.” என்ற சௌபர்ணிகா விஷ்வாவிற்கு கால் செய்தாள். Line busy என்று வந்தது.

“அவன் இன்னும் பேசிட்டு தான் இருக்கான்.‌ சரி ஏதாவது important callஆ இருக்கும். நீ சாப்பிடு.” என்ற சௌபர்ணிகா மேகாவிற்கு உணவை பரிமாறி கொண்டிருக்க, ஃபோனில் பேசியபடி படிகளில் இறங்கி கீழே வந்தான் விஷ்வா. அவன் மேகாவிடம் ஏற்கனவே சொல்லி இருந்ததைப் போல MV Tech launch செய்யவிருக்கும் new smartphones சம்பந்தமான updates தொடர்பான instructionsகளை தனது teamல் உள்ளவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் ஃபோனில் பேசியவாறு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்ததால் அவனுக்கும் சௌபர்ணிகா உணவை பரிமாறினாள்.

“இன்னைக்கு Sundayல any special plans..?? நீயும் அவனும் எங்காவது வெளிய போறீங்களா..??” என்று சௌபர்ணிகா கேட்க, “plans எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா. லஞ்ச்-ஐ நல்லா ஃபுல் கட்டு கட்டிட்டு படுத்து தூங்க வேண்டியது தான்.” என்று சலிப்புடன் சொன்னாள் மேகா.

“என்னடி இப்படி சொல்ற..?? நானும் பார்க்கிறேன், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது வெளியனு போனா ஒன்னு பாட்டிய பாக்க ஹாஸ்பிடலுக்கு போறீங்க. இல்லனா ஆபீஸ்க்கு போறீங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க இப்படியா இருப்பாங்க..?? Jollyஆ ரெண்டு பேரும் theatre, shopping mall, beachன்னு எங்கயாவது போயிட்டு வர வேண்டியதுதானே..!!” சௌபர்ணிகா சொல்ல, “அட போங்க அக்கா. இவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு.” என்று விஷ்வாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னாள் மேகா.

“உனக்கு தான் அவன கட்டிவச்சாச்சுல்ல.. இனிமே நீதான் அவனை கரெக்ட் பண்ணனும். எல்லாத்தையும் நாங்களேவா பண்ணித் தர முடியும்..??” சௌபர்ணிகா சொல்ல, தொடர்ந்து அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த சேரன் விஷ்வா ஃபோனில் அவனது office staffs உடன் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான்.

விஷ்வா பேசி முடித்தவுடன் “புதுசா OTTல இன்னைக்கு ஒரு மூவி ரிலீஸ் ஆகியிருக்கு. தனியா எங்க போய் பார்க்கறதுன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். கரெக்டா நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்க. மேல இருக்கிற mini theatreஐ நான் சும்மா போய் பாத்துட்டு வந்ததோட சரி. அதுல இப்ப வரைக்கும் ஒரு படம் கூட பாக்கல. இன்னிக்கு எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கலாம்.‌” என்று சௌபர்ணிகா உற்சாகமான குரலில் சொல்ல, “பார்க்கலாம் அக்கா. நானும் இந்த வீட்ட சுத்தி பார்க்கும்போது அங்க போனது. இங்க ஹால்ல பேருக்கு தான் இவ்வளவு பெரிய டிவி இருக்கு. இப்போலாம் எனக்கு அத பார்க்க்கூட டைம் இல்ல. இன்னைக்காவது எல்லாரும் சேர்ந்து familyஆ time spend பண்ணலாம்.” என்றாள் மேகா‌.

“அய்யய்யோ டேய் என்னடா இவங்க அங்க போகணும்னு சொல்றாங்க..??” என்று அரவிந்த் மகேஷின் காதுகளில் கிசுகிசுக்க, “ஏன் போனா என்ன..?? இது அவங்க வீடுடா. அவங்க எங்க வேணாலும் போவாங்க.” என்றான் மகேஷ். “டேய் இடியட்.. நான் சொல்றது உனக்கு புரியலையா…?? உனக்கு என்ன.. எல்லாமே phoneலயே இருக்கு. நம்ம பசங்க எல்லாம் டெய்லியும் ஒரே ஆம்பள பசங்க மூஞ்சியா பார்த்து வறண்ட பாலை நிலமா காஞ்சிப்போய் கிடக்குறானுங்கடா. அதுலதான் நல்ல midnight மசாலாவா பார்த்து வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கானுங்க. கடைசியா அவனுங்க எந்த படத்தை பாத்துட்டு pause பண்ணி வச்சிருக்கானுங்களோ தெரியல. இவங்க பாட்டுக்கு போய் play பண்ணி தரமான bit ஏதாவது வந்துச்சுன்னா ‌பாஸ் கடுப்பாகி எல்லாரையும் அடிச்சு வெளுத்துரு. அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியாதா உனக்கு..??” என பயந்த குரலில் கேட்டான் அரவிந்த்.
“ஐயோ ஆமா நான் அதை மறந்துட்டேன். ஏண்டா இப்படி எல்லாம் பண்ணி தொலையுறீங்க..?? போ சீக்கிரம் போய் அத check பண்ணித்தொலை. அதுக்குள்ள இவங்க கிட்ட ஏதாவது பேசி நான் இவங்க மேல வராம பாத்துக்குறேன்.” என்று மகேஷ் சொன்னதால், வேகமாக liftல் ஏரி மேலே சென்று அங்கே அனைத்தையும் சரி செய்தான் அரவிந்த்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் மேலே உள்ள மினி தியேட்டருக்கு சென்று ‌ முன் வரிசையில் உள்ள seatகளில்‌ அமர்ந்தார்கள்.

Theatreல்‌ இருப்பதைப் போல அவர்களின் முன்னே இருந்த பெரிய screenஐ‌ பார்த்த மேகா “இங்க நல்ல horror movieஆ பார்த்தா சுத்தி ஸ்பீக்கர் இருக்கிறதுனால sound effect செமையா இருக்கும்.” என்று உற்சாகமாக செல்ல, “Wow.. நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல wavelength இருக்கு போ. நானும் இதைத்தான் சொல்லலாம்னு நெனச்சேன். என்கிட்ட ஒரு terrificஆன பேய் படம் இருக்கு. நான் download பண்ணி வச்சிருக்கேன்.” என்ற சௌபர்ணிகா தனது pen driveஐ மகேஷிடம் கொடுத்து அந்த படத்தை போடச் சொன்னாள்.

மகேஷ் அதை போட்டு படத்தை பிளே செய்ய, அனைவரும் ஆர்வமாக ஸ்கிரீனை பார்த்தார்கள். அது ஒரு தரமான Hollywood horror movie. அதன் ஒவ்வொரு சீனிலும் பேயை எவ்வளவு கொடூரமாக காட்ட முடியுமோ அவ்வளவு கொடூரமாக காட்டி இருந்தார்கள்.

அதனால் ஒருவித பயத்துடனே அனைவரும் படத்தை பார்த்துக் கொண்டிருக்க, முதன்முதலாக பேய் படத்தை பார்க்கும் சிறு குழந்தை போல பயந்து நடுங்கி‌ கொண்டிருந்த விஷ்வா “டேய் என்னடா சும்மா சும்மா பேயவே காட்டுறீங்க..?? பேய் படம்னா பேய மட்டும் தான் காட்டுவீங்களா…?? ஐயோ இது வேற திடீர் திடீர்னு வந்து கேமராவுல close upல மூஞ்சிய காட்டிட்டு போகுதே..!! அத பாத்தா நெஜமாவே நம்ம பக்கத்துல வர்ற மாதிரியே இருக்கே..” என்றெல்லாம் நினைத்து பயந்தவன், தன் அருகில் இருந்த மேகாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.‌

அவனுக்கு பயம் அதிகரிக்கும் போதெல்லாம் அவள் கையில் தன் அழுத்தத்தைக் கூட்டினான். அதனால் எரிச்சல் அடைந்த மேகா “இப்ப என்ன பிரச்சனை இவனுக்கு..??” என்று நினைத்து அவனை திரும்பி பார்த்தாள். அங்கே ‌ஏசி ஓடியும் பயத்தில் விஷ்வாவிற்கு வியர்த்து வடிந்து கொண்டிருந்தது.‌ அவனை அப்படி பார்த்தவுடன் அவளுக்கு சிரிப்புதான் வந்தது. அதனால் விடுக்கென அவனிடமிருந்து தன் கையை உருவியவள், அவன் கையை தானே பிடித்துக் கொண்டு “நீங்க என் கைய பிடிக்கிறது தப்பில்ல. கைய அழுத்தி உடைக்கிற அளவுக்கு புடிக்க கூடாது. நான் பாவம்.” என்றாள்.

பின் அப்போதும் அவன் பயத்துடனே இருப்பதை கவனித்த மேகா அதை போக்குவதற்காக வேண்டுமென்றே “அங்க பாருங்களேன்.. அந்த பேய்க்கு எவ்ளோ அழகா மேக்கப் போட்டு இருக்காங்க..!! இதெல்லாம் எப்படி பண்ணுவாங்க..?? வாயில இருந்து ரத்தம் வர மாதிரி பண்றதுக்கு  ஏதாவது artificial blood இருக்குமோ..?? அங்க பாருங்களேன் இது நல்லா மூஞ்சில பவுடர் அடிக்க தெரியாம அடிச்சிட்டு வந்த குழந்தை மாதிரி காமெடியா இருக்கு.” என்று ஒவ்வொரு  sceneற்கும் ஒவ்வொரு விதமாக சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக விஷ்வாவின் பேய் பயம் காணாமல் போனது.

அவன் நார்மல் ஆனவுடன் சகஜமாக படத்தை பார்க்க தொடங்கிய மேகா ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள். அதனால் அவள் சரியாக படத்தை கவனிக்காமல் எதையோ யோசித்தவரே அமர்ந்திருந்தாள். அவளை கவனித்த விஷ்வா “என்னாச்சு இவளுக்கு..?? திடீர்னு ஏன் ஒரு மாதிரி இருக்கா..??” என்று நினைத்தவன் அதைப்பற்றி அவளிடம் கேட்க, “Nothing.” என்று சொல்லி சமாளித்தாள் மேகா. இருப்பினும் அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தான் தோன்றியது.

தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured