அத்தியாயம் 9
அதனால் உடனே அவளை விட்டு விலகினான். இதுவரை அவன் செய்து கொண்டு இருந்த வேலையால் அவன் உடல் சூடாகி அவனுக்கு வேகமாக மூச்சு வாங்கியது.
அவன் கண்கள் அவளை பார்க்க, செதுக்கி வைத்த சிற்பம் போல அவன் முன்னே எந்த அப்பளுக்கும் இல்லாமல் கிடக்கும் அவளை பார்க்கும் போது ஆண்மகன் அவனுடைய காம தாபத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவன் மனம் அவளிடம் தன்னை இழக்க தயாராக இல்லை என்றாலும் கூட அவன் உடல் அவளுக்காக ஏங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தான் அவன்.
“இல்ல, இதுக்கு மேல ஒரு நிமிஷம் இங்க இருந்தா கூட நான் மனசு மாறிடுவேன்.” என்று நினைத்த ரிஷி அவளை விட்டு விலகி எழுந்து அமர்ந்தான்.
தன்னை நொடிக்கு நொடி சுண்டி இழுக்கும் அவளை திரும்பி பார்க்கவே கூடாது என்று தனக்குள் அவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான்.
ஆனால் அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி விரும்பி அவன் தலை அவளை கண்டது.
கடமையை கண்ணாக அவன் கண்கள் அவள் அங்க வளைவுகளை ஸ்கேன் செய்ய தொடங்கியது.
அவளுடைய சைஸ் என்னவென்று அதனுடைய தன்னையும் மீறி அவன் மூளை யோசிக்க தொடங்கி விட,
அவளை இன்னும் கூர்மையாக பார்த்த அவன் கண்கள் இது இவ்வளவு இருக்கும் என்று கணக்கு போடவே தொடங்கிவிட்டது.
ஒரு சிறிய பெண்ணை பார்த்து அவன் இந்த அளவிற்கு தடுமாறுவான் என்று அவனால் நம்பவே முடியவில்லை. இது அவனுக்கு புதிது. மிகவும் புதிது.
அவளை இந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கும் அந்த பெண் யார்? தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் துடித்தது அவன் மனம்.
உடனே என நினைத்தானோ தெரியவில்லை தன்னுடைய மொபைல் ஃபோனை எடுத்து அவளை ஒரு ஃபோட்டோ பிடித்தான்.
அவளுடைய மொத்த உருவத்தையும் தன் கண்களில் நிரப்பி கொள்வதைப் போல அவளை ஒரு ஆழமான பார்வை பார்த்தான்.
அவன் அணிந்திருந்த கோட்டை கழட்டி மயக்கத்தில் இருந்த அவளுக்கு அணிவித்தான்.
கிட்டத்தட்ட அவளுடைய சிறிய உடலை முட்டி வரை அந்த கோட் மூடிய பிறகு தான் தடுமாற்றங்கள் இன்றி அவனால் அவள் முகத்தை பார்க்கவே முடிந்தது.
இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தால் கண்டிப்பாக தான் மொத்தமாக இவளுக்காக விழுந்து விடுவோம் என்று அவனுக்கு தெரிந்தது.
அதை அவன் செய்ய விரும்பாததால் உடனே வெளியில் இருந்த திலீபிற்க்கு கால் செய்து அவனை உள்ளே வர சொன்னான்.
இவ்வளவு சீக்கிரமாக ரிஷி தன்னை உள்ளே வரச்சொல்லி அழைத்ததால் ஏதோ பிரச்சனை என்று நினைத்த திலீப் அரக்க பறக்க உள்ளே ஓடி வந்து,
“என்ன ஆச்சு பாஸ் எனி ப்ராப்ளம்?” என்று கேட்க,
மயக்கத்தில் கிடந்தவளை ஒரு பார்வை பார்த்த ரிஷி “இவ தான் பிராப்ளம்.
எனக்கு இவளை சுத்தமா பார்க்கவே பிடிக்கல.
இவளை இங்க யார் கூட்டிட்டு வந்தாங்களோ அவங்க கூடயே அனுப்பி வச்சிரு.
முதல்ல என்னை இங்க இருந்து கூட்டிட்டு போ எனக்கு இந்த ரூமோட அட்மாஸ்பியரே சுத்தமா பிடிக்கல.” என்று வழக்கம்போல தன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு சொன்னான்.
“திடீர்னு இவர் ஏன் இப்படி சொல்றாரு? அந்த பொண்ணுக்கு என்ன அவ அழகா தானே இருக்கா!
இவ்வளவு நேரம் ஆனதுக்கப்புறம் நான் போய் இன்னொரு பொண்ணு எங்க தேட முடியும்?
இவ்வளவு நடந்தும் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம இவர் என்ன இப்படி பேசுறாரோ தெரியல.” என்று நினைத்த திலீப்,
“பாஸ் நீங்க ரொம்ப அவசரப்படுகிறீர்கள் என்று எனக்கு தோணுது உங்களுக்கு இந்த பொண்ணை புடிக்கலைன்னா கூட பரவால்ல.
அட்லீஸ்ட் விடிகிற வரைக்கும் சும்மா இவ உங்க கூட இருக்கட்டுமே!
எப்படியும் இவ மயக்கத்துல இருக்கா சோ இவளால உங்களுக்கு எந்த பிராப்ளமும் இருக்காது.
ப்ளீஸ் பாஸ் நான் சொல்றதை கன்சிடர் பண்ணி பாருங்க.” என்றான்.
ஒருவேளை விடியும் வரை ரிஷி அவளுடன் இருந்தால், அவளுடைய அழகு அவன் மனதை மாற்ற வாய்ப்பு இருக்கிறது என்பது அவன் எண்ணம்.
அந்த மாற்றம் வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததால் தானே அவன் உடனே கிளம்ப வேண்டும் என்கிறான்!
தன் நிலைமையை புரிந்து கொள்ளாமல் இவன் வேறு பேசிப் பேசி தன்னை வெறுப்பேற்றுகிறான் என்று நினைத்து கடுப்பான ரிஷி,
“நான் தான் உன்னோட பாஸ் திலீப். நீ என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு நான் தான் டிசைட் பண்ணனும்.
நீ எனக்கு ரூல்ஸ் போடாத, நான் சொல்றத மட்டும் செய்.” என்று கோபமாக கட்டளையிடும் தோரணையில் சொன்னான்.
இதற்கு மேல் அவன் மனதை கடவுளால் கூட மாற்ற முடியாது என்னவோ அவருடையதலையெழுத்து படி நடக்கட்டும் என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட திலீப்
“கரெக்ட் தான் பாஸ், நான் உங்களுக்கு ஜஸ்ட் அசிஸ்டன்ட் தான்.
நீங்க சொல்றத கேக்குறது தான் என் வேலை.
நீங்க இங்க இருந்து போகணும்னு சொன்னா, பரவால்ல நம்ம கிளம்பலாம்.
நீங்க என் கூட வாங்க உங்களை நான் வேற ஒரு ரூம்ல கொண்டு போய் விட்டுட்டு வந்து இந்த பொண்ண அனுப்பி வைக்கிற வேலையை பார்க்கிறேன்.” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட்டு ரிஷியை தூக்கி வீல்சேரில் அமர வைத்து வேறு ஒரு ரூமிற்கு அவனை அழைத்துச் சென்று அங்கே படுக்க வைத்தான்.
பின் திரும்பி வந்து திலீப் அந்த பெண்ணை அனுப்புவதற்கான வேலைகளை பார்க்க தொடங்கி விட,
இப்போது அதே வீட்டில் வேறு ஒரு ரூமில் தனியாக படுத்து இருந்த ரிஷி அந்த பெண்ணைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பெண்ணை இப்போதே அனுப்பி வைக்க வேண்டும் என்று அவன் தான் கட்டளையிட்டான்.
ஆனால் அவள் தன்னை விட்டு எங்கேயோ தூரமாக செல்கிறாள். இனி தன்னால் அவளை மீண்டும் பார்க்க முடியுமா? என்று அவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டு இருந்த நிலையில்,
அவளை இங்கே இருந்து அழைத்து சென்று விடுவார்கள். இன்று அவளை தனக்கு விருந்தாக்க துணிந்த அந்த மோசமானவர்களின் கூட்டம்,
நாளை வேறு எவனோ ஒருவனின் காம பசிக்கு அவளை இறையாக்கி விடுவார்கள் என நினைக்கவே அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
அதனால் மீண்டும் மீண்டும் “அவ உனக்கு யாரு ரிஷி யாரோ ஒரு ஸ்டேஞ்சர்.
அவள பத்தி நீ எதுக்கு இந்த அளவுக்கு யோசிச்சு கவலைப்படுற? இது உனக்கு தேவை இல்லாத வேலை.
உனக்கு தலைக்கு மேல இருக்கிற ப்ராப்ளமை எப்படி சால்வ் பண்றதுன்னு மட்டும் யோசி.
அவள பத்தி யோசிக்காத அவ உனக்கு வேண்டாம்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)