அத்தியாயம் 69
கீர்த்தனாவிற்கு அவளது சொந்த குடும்பத்தையே அடையாளம் தெரியவில்லை. அதனால் அவர்களை கண்டே அவள் பயத்தில் அழுது நடுங்க, மீண்டும் மீண்டும் தான் சொல்வதைக் கேட்காமல் அவள் ரிஷி இடம் செல்ல வேண்டும் என்று சொல்லி ஏதோ சின்ன குழந்தை போல அடம் பிடித்து கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்தான் பாஸ்கர்.
அவளது சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் வந்த கோபத்தில் அவன் தனது ஒரு கையால் கீர்த்தனாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மற்றொரு கையை அவளை அடிப்பதற்கு ஓங்கியவாறு “stop it Keerthana!” என்று கத்தினான்.
எனக்கு எதிரில் நிற்பவன் அவளது சொந்த அண்ணனாக இருந்தாலும் கூட, அவளை அடிக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைத்த ரிஷி வந்த கோபத்தில் அவனது குரலின் வீரியத்தை தாண்டி சிங்கத்தின் கர்ச்சனைக்கு இணையாக “you stop it!” என்று கத்தினாள்.
அவர்களது சிறிய வீட்டில் ரிஷியின் சத்தம் இடி என முழுங்க, அவளை அடிக்க கை ஓங்கிய பாஸ்கர் ஷாக் ஆகி அப்படியே காற்றில் தன் கையை நிறுத்தினான். அந்த கேப்பில் அவன் கீர்த்தனாவை பிடித்திருந்த பிடியும் கொஞ்சம் தளர, அந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு அவன் கையை உதறித் தள்ளிய கீர்த்தனா பயத்தில் ஓடிச் சென்று மீண்டும் ரிஷியை கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
அவளது முதுகில் தட்டிக் கொடுத்து “ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல பயப்படாத அம்மு. நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது. நீ யாரப்பாத்தும் பயப்பட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை.” என்று மென்மையான குரலில் அவளிடம் சொன்ன ரிஷி சிவந்த கண்களுடன் பாஸ்கரை எரித்துவிடும் பார்வை பார்த்து “நீங்க எல்லாரும் அவ ஃபேமிலி மெம்பெர்ஸா இருக்கலாம். இப்ப அவ என்ன கண்டிஷன்ல இருக்கான்னு புரிஞ்சுக்காம அவளை ஹர்ட் பண்ண ட்ரை பண்ணீங்கன்னா, நீங்க யாரு என்னனெல்லாம் பார்க்க மாட்டேன்.
இன்னொரு தடவை இவளை அடிக்கிறதுக்காக உங்கள்ல யாரோட விரல் நுனி இவ மேல பட்டா கூட, அந்த கையையே இல்லாம பண்ணிடுவேன்.” என்று ஆத்திரத்தில் சீரினான்.
நடக்கும் அனைத்தையும் பயந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருந்த பாஸ்கரின் மனைவி “எனக்கு தெரிஞ்சு கீர்த்தனா அவ கூட வேலை பாக்குற சீனியர் டாக்டர் ஜோஸ்வாவை தானே லவ் பண்ணிட்டு இருந்தா.. திடீர்னு எல்லாரும் அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்னு சொல்லிட்டு இருந்தா..
எல்லாருக்கும் பாஸ்போர்ட் விசா ரெடி பண்றதுக்குள்ள அவ எங்கேயோ காணாம போயிட்டா. இப்ப இவன் யாருன்னே தெரியல. பாக்குறதுக்கு பயங்கரமா இருக்கான். இவன் கூட திரும்பி வந்து இருக்கா.. இவர் தலையில அடிபட்டு இருக்கு. இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.” என்று நினைத்தாள்.
இப்போது அவளது குடும்பத்தினரை பார்த்த பிறகும் ரிஷி தான் முக்கியம் என்று கீர்த்தனா உறுதியாக இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட தாத்தா, “என்ன இருந்தாலும் ரிஷி நாளைக்கு இந்த வீட்டுக்கு மருமகனா வரப்போறான். அவன் மேல இவங்களுக்கு கோபமோ வெறுப்போ வராம பாத்துக்கணும்.” என்று நினைத்து,
“அவங்க வீட்டு பொண்ணு மேல அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ரிஷி. அவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு இன்னும் தெரியாது. அதனால தான் இப்படி ரியாக்ட் பண்றாங்க. அதுக்காக அவங்க மேல கோபப்பட்டு நீ இப்படி எல்லாம் பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. ஒழுங்கா எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேளு.” என்று ரிஷியை பார்த்து கண்டிப்புடன் சொன்னார்.
அவரும் தன் பங்கிற்கு “கோச்சுக்காதீங்க தம்பி. என் பேரன் நீங்க கீர்த்தனா பாப்பாவ அடிக்கப்போனதுனால தான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுட்டான். கொஞ்ச நாளா இருந்தாலும் கூட அவங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு பாசமா பழகிட்டாங்க. அந்த உரிமைல தான் அவன் அப்படி பேசிட்டான்.” என்றார் தாத்தா.
அவ்வளவு பெரிய மனிதன் இறங்கி வந்து பேசும்போது என்ன சொல்வது என்று தெரியாமல் தனக்குள் இருந்த மொத்த ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு அனைவரையும் முறைத்து பார்த்தபடி பாஸ்கர் நின்று கொண்டிருக்க, ரிஷியிடம் வந்த கீர்த்தனா கொஞ்சம் அழுவதை நிறுத்தி இருந்ததால் தானும் நிதானம் அடைந்து இருந்த ரிசி “சாரி! தாத்தா சொன்ன மாதிரி நான் அவசரப்பட்டு இருக்க கூடாது. பட் நீங்களும் இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன். அவளை யார் கஷ்டப்படுத்தினாலும் என்னால அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.” என்று பொறுமையாக சொன்னான்.
இதுவரை நடந்த அனைத்து விஷயங்களையும் யோசித்துப் பார்த்துக் கொண்ட இந்த அமுதா தன் மகளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று மட்டும் புரிந்து கொண்டதால் ரிசியின் அருகில் சென்று கீர்த்தனாவின் தோள்களில் கை வைத்து “ஆமாடி கீர்த்தனா.. என்னம்மா ஆச்சு உனக்கு? தலையில காயம் எப்படி வந்துச்சு? நீ கானா போனதில இருந்து உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு யோசிச்சு பயந்து போய் நாங்க எல்லாம் உசுர கையில புடிச்சுகிட்டு இருந்தோம்.
இத்தனை நாள் கழிச்சு நீ இப்ப தான் திரும்பி வந்திருக்க. அதுவும் இந்த நிலைமையில.. உன் கூட வந்திருக்கிறவங்க யாருமா?” என்று பொறுமையாக கேட்டாள்.
ஏனோ அமுதாவை பார்க்கும்போது மட்டும் தனது மனம் கொஞ்சம் ஆறுதல் அடைவதைப் போல உணர்ந்த கீர்த்தனா அப்போதும் ரிசியை விட்டு விலகவே கூடாது என்ற எண்ணத்தில் அவனது சட்டையை தனது இரு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு “இது என் டிம்பிள்! எனக்கு இவன ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ்.. இவன் கிட்ட இருந்து தனியா என்ன கூட்டிட்டு போய்டாதீங்க. நான் வர மாட்டேன். அப்புறம் மறுபடியும் அழுவேன். என்னால என் டிம்பிள் இல்லாம இருக்க முடியாது.” என்று ஒருவித பயத்துடனே சொன்னால் கீர்த்தனா.
அவள் தலையில் அடிபட்டு இருப்பதால் அதை வைத்து அவளுக்கு மண்டையில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது போல என நினைத்த சுரேந்தர் இவளிடம் இனிமேல் பேசி எந்த பயனும் இல்லை. அவளுடன் வந்தவர்களிடம் முதலில் தன் மகளுக்கு என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து, “என் பொண்ணுக்கு என்ன ஆச்சு சார்? பெத்த அம்மா அப்பா கிட்டையே யாரோ ஒருத்தர் கிட்ட பேசுற மாதிரி பேசுறா.. இவ என் பொண்ணு தான். ஆனா இவ பேசுறத பாத்தா அப்படி தெரியல.
பெத்தவங்க முன்னாடி இப்படி எல்லாம் எங்க கீர்த்தனா நடந்துக்கிற ஆளே இல்ல. என்னதான் நடந்துச்சுன்னு யாராவது முதல்ல தெளிவா சொல்லுங்க சார். எங்க பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சாலே பயமா இருக்கு.” என்று உடைந்த குரலில் கேட்டார்.
உடனே ரிஷி தன் தாத்தாவை பார்க்க, “கீர்த்தனா காணாம போனதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு, அவ எப்படி என் கிட்ட வந்தான்னு நானே உங்களுக்கு தெளிவா சொல்றேன் சார். உங்க பொண்ணு நல்லா தான் இருக்கா அவள நெனச்சு பயப்படாதீங்க. கீர்த்தனாவை நாங்க எங்க வீட்டு பொண்ணா மட்டும் இல்லாம மகாராணியா பார்க்கிறோம். என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் நாங்க அவளை பாதுகாப்போம்.” என்று மறைமுகமாக அவள் மீது தங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று முதலிலேயே தெரிவித்துவிட்ட தாத்தா ரிஷி தன்னிடம் சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்களிடம் சொல்லி விட்டார்.
ரிஷி ஏற்கனவே தனது கம்பெனியின் போர்ட் மெம்பர்ஸ்களிடம் கீர்த்தனாவை தான் திருமணம் செய்து கொள்வதாக சொன்னதையும், இப்போது அவன் கீர்த்தனாவை காதலிப்பதையும் கூட தாத்தா அவர்களிடம் தெரிவிக்க மறக்கவில்லை. முன்பில் இருந்தே அனைத்தையும் தெளிவாக பேசிக்கொள்ள வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.
முதலில் குழப்பத்தில் என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் இப்போது அனைத்தும் தெரிந்த பின்பு, எத்தனை கஷ்டங்களை தாண்டி அவள் வந்திருக்கிறாள்.. அவளை போய் எவனையோ காதலித்து ஓடிப் போய் விட்டாள் என்றெல்லாம் நினைத்து ஒரு நொடியில் தவறாக நினைத்து விட்டோமே என நினைத்து வருத்தப்பட்ட பாஸ்கர் கீர்த்தனாவின் அருகில் சென்று தரையில் மண்டியிட்டு “சாரிமா! அண்ணா தெரியாம கோபப்பட்டுட்டேன்.” என்று கண் கலங்க சொன்னான்.
ரிஷியின் கைகளில் மட்டும் கீர்த்தனா கிடைக்கவில்லை என்றால், இன்று அவள் வேசியாக மாறி எத்தனை ஆண்களின் காம பசியை தீர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இருப்பாளோ என நினைக்கும் போதே அங்கிருந்தவர்களின் இதயம் சுக்குனூறாக உடைந்தது.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)