அத்தியாயம் 65
முதலில் ரிஷியை சென்று எழுப்ப வேண்டும் என நினைத்த தாத்தா அவனது ரூமிற்கு சென்று கதவை தட்டினார். அந்த சமயம் கதவு தானாக தெரிந்து கொள்ள, “இவன் என்ன ரூம் கதவை திறந்து போட்டுட்டு தூங்குறான்! இவ்வளவு வயசாகியும் இவனுக்கு இன்னும் பொறுப்பே வரல. இவனுக்கு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும். அப்ப தான் இவன் சரிப்பட்டு வருவான்.” என்று யோசித்தவாறு உள்ளே சென்ற தாத்தா ரிஷியின் பெயரை சொல்லி அவனை அழைத்தபடி அந்த ரூம் முழுவதும் அவனை தேடினார்.
எங்கேயும் அவன் இல்லாததால் அவனது நம்பருக்கு கால் செய்தார் தாத்தா. கீர்த்தனாவின் ரூமில் தூங்கிக் கொண்டிருந்த ரிஷி மொபைல் ரிங் ஆகும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு தன் கண்களை திறந்தான். கீர்த்தனா அவளது மொத்த உடலையும் அவன் மீது போட்டுக் கொண்டு தனது கால்களைக் கூட அவன் மீது போட்டு அவனை அசைவ விடாமல் லாக் செய்து படுத்திருந்தாள்.
அவளது நீண்ட கூந்தல் அவன் முகத்தில் விழுந்து கிடந்தது. அதை ஒதுக்கிய ரிஷி கீர்த்தனாவை தொந்தரவு செய்யாது அவளை தன்னை விட்டு கொஞ்சம் விலக்கி படுக்க வைத்து விட்டு அவசரமாக எழுந்து அமர்ந்து தனது ஃபோனை தேடி எடுத்துப் பார்த்தான்.
ஸ்கிரீனில் தெரிந்த தாத்தாவின் பெயரைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஈயாடவில்லை. அவனால் வீழ்ச்சாரின் உதவி இல்லாமல் எழுந்து நடக்க முடியாது என்பதால் பாவம் தாத்தாவிடம் இருந்து தப்பிப்பதற்காக இங்கே இருந்து எழுந்து கூட எங்கேயும் அவனால் ஓடி சென்று ஒளிந்து கொள்ள முடியவில்லை. “அச்சச்சோ தாத்தா திரும்பத் திரும்ப கால் பண்ணிட்டே இருக்காரே! நான் எங்க இருக்கேன்னு கேப்பாரு. இப்ப நான் என்ன சொல்றது?” என்று யோசித்த ரிஷி ரிங் ஆகி கொண்டு இருந்த தனது மொபைல் ஃபோனை இறுக்கமாக கையில் பிடித்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
அவன் யோசித்து முடிப்பதற்குள் ரிஷி ஒருவேளை கீர்த்தனாவை சந்திக்க சென்றிருப்பானோ என்ற எண்ணத்தில் அவளது ரூம் பக்கம் வந்த தாத்தா கதவை திறந்தார். அவர் உள்ளே வருவதற்கும், சரியாக ரிஷி பெட்டில் இருந்து கொஞ்சம் போராட்டத்திற்கு பிறகு அவனுடைய வீழ்ச்சாரில் சென்று அமர்வதற்கும் சரியாக இருந்தது.
அதை பார்த்தவுடன் நேற்று இரவு அவன் இவளுடன் தான் உறங்கி இருக்கிறான் என்று புரிந்து கொண்ட தாத்தா தன் இருப்பை அவனுக்கு உணர்த்துவதற்காக லொக் லொக் என்று சத்தமாக இரும்பினார். “நான் தாத்தாவோட காலை அட்டென்ட் பண்ணவே இல்லையே… அதுக்குள்ள என்ன தாத்தா இரும்புர மாதிரி சத்தம் கேக்குது? ஒருவேளை நம்ம அவர பத்தியே யோசிச்சிட்டு இருக்குறதுனால அவர் வாய்ஸ் கேக்கற மாதிரி இருக்கா?” என்று தனக்கு தானே பேசிய படி திரும்பிப் பார்த்த ரிஷி தாத்தாவை அந்த அறையில் பார்த்தவுடன் ஷாக் ஆனான்.
“தா.. தாத்தா…!!” என்று ரிஷியின் பயத்தில் பேச்சு வராமல் தந்தியடிக்க, “ஆமா உன்ன தூக்கி வளர்த்த அதே தாத்தா தாண்டா.. எத்தனை தடவை கால் பண்றேன் எடுக்க மாட்டியா நீ? இன்னும் கொஞ்ச நேரத்துல நல்ல நேரம் வரப்போகுது.
நம்ம கீர்த்தனா வீட்டுக்கு போறோம்னு சொன்னனே.. அது கூடவா ஞாபகம் இல்ல உனக்கு? சீக்கிரம் உன் ரூமுக்கு போ. நான் உன்னோட டிரஸை எல்லாம் திலீப் கிட்ட எடுத்து கொடுத்துட்டேன்.
நிரஞ்சனாவ அனுப்பி இந்த பொன்னையும் எழுப்பி விட்டு கிளம்ப சொல்றேன். இன்னைக்கு நமக்கு ரொம்ப முக்கியமான நாள். கிளம்பறதுக்கு மட்டும் யாராவது லேட் பண்ணீங்க எனக்கு கெட்ட கோபம் வந்துரும். நான் நினைச்ச மாதிரி இன்னிக்கு எல்லாமே சரியா நடக்கணும். புரிஞ்சுதா?” என்று சொன்னார் தாத்தா.
“நல்லவேளை.. எல்லாமே தெரிஞ்சு இருந்தும் டைரக்டா தாத்தா எதுவும் கேட்கல.. அதுவரைக்கும் சந்தோஷம்.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட ரிஷி “இதோ போறன் தாத்தா! கண்டிப்பா என்னால லேட் ஆகாது. நீங்க இப்படி போயிட்டு அப்படி வர்றதுக்குள்ள நான் ரெடி ஆகி வந்துருவேன்.” என்ற ரிஷி அவனது வீல்சாரை இயக்கிக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.
தாத்தா சென்று சொன்னதால் நிரஞ்சனா கீர்த்தனாவின் ரூமிற்கு சென்று அவளை தயார் படுத்த தொடங்கினாள். அங்கே ரிஷியும் ஒரு பக்கம் தனக்கும் கீர்த்தனாவிற்கும் தாத்தா நினைப்பதைப் போல நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என யோசித்து சந்தோஷமாக இருந்தாலும் அதேசமயம் கீர்த்தனாவின் வீட்டில் என்ன சொல்வார்களோ என நினைத்து இன்னொரு பக்கம் உள்ளுக்குள் கொஞ்சம் பயத்துடன் இருந்தான்.
என்ன தான் லண்டனில் படித்திருந்தாலும், பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்ததால் பிருந்தா தேவி பார்ப்பதற்கு மிகவும் நன்னடத்தை உள்ள அடக்கமான பெண்ணாக ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு அவளது நீண்ட கூந்தலை கிளிப் போட்டுவிட்டு இருந்தாள். அவளது தோள்களில் ஒரு சிலிங் பேக் தொங்கிக் கொண்டு இருக்க, தனது பெரிய சைஸ் ட்ராலி பேக்கை இழுத்தபடி ஏர்போர்ட்டில் இருந்து யாரிடமோ ஃபோனில் பேசியபடி வெளியில் வந்தாள் பிருந்தா.
தங்களிடம் இருப்பதிலேயே விலை உயர்ந்த எந்த கார் ஒன்றை தேர்ந்தெடுத்து கையில் பெரிய பூங்கொத்துடன் அங்கே சென்று அவள் முன்னே ஸ்டைலாக கருப்பு நிற கோட் சூட்டில் டிப் டாப்பாக சென்று இறங்கினான் தீரஜ்.
அவன் பூங்கொத்தை அவள் முன்னே நீட்டியபடி “ஹலோ ப்யூட்டிஃபுல்! Welcome to India! It’s my pleasure to meet you.” என்று அவன் சொல்ல, மரியாதை நிமித்தமாக அவனை பார்த்து மென்னகை ஒன்றை சிந்திய பிருந்தா அந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு “ஓ ஹாய்.. யூ ஆர் மிஸ்டர் தீரஜ் ரைட்.. இப்ப தான் டாடி எனக்கு கால் பண்ணி நீங்க என்னை ரிசீவ் பண்ண வரிங்கன்னு சொன்னாரு. பரவால்ல சொன்ன டைம்க்கு கரெக்டா வந்துட்டீங்க.
பேசிக்காவே நான் ரொம்ப பர்ஃபெக்க்ஷன் பாக்குற ஆளு. என்ன மாதிரியே இருக்கிறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங்களயே நீங்க என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க மிஸ்டர் தீரஜ்.” என்றாள்.
அவளது பதிலில் திருப்தியாக தனது அனைத்து பற்களும் தெரியும்படி அவளை பார்த்து இழித்து வைத்த தீரஜ் “என்ன டா இது ஃபாரின்ல படிச்சிட்டு வந்தவள கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும். பெருசா யோசிக்கணும்னு நினைச்சா.. இவ என்ன ஜஸ்ட் ஒரு பொக்கேவுக்கே இவ்ளோ ரியாக்சன் கொடுக்கிறா.. இதுக்கா நான் அவ்ளோ யோசிச்சேன்..
எது எப்படியோ பாக்குறதுக்கு ஆள் நல்லா சிம்ல ஆப்பிள் மாதிரி கும்முனு இருக்கா.. அது போதும். மம்மி சொன்ன மாதிரி நம்ம ஃபேமிலிக்கு ஏத்த பொண்ணு இவ தான். இந்த மாதிரி பொண்ண தான் பொண்டாட்டியா வச்சுக்க முடியும்.” என்று நினைத்தவன்,
இத்தனை வருடங்களில் பல பெண்களின் பின்னால் சுற்றிய அனுபவம் அவனுக்கு இருப்பதால் அதை வைத்து இனிக்க இனிக்க அவளிடம் பேசி அவளை தனது காரில் ஏற்றிக் கொண்டு அவளது வீட்டை நோக்கி பயணித்தான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)