Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 63

போதையடி நீ எனக்கு CH 63

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 63

“நீ என் கூட தூங்குனா தான் நானும் தூங்குவேன். ப்ளீஸ் டிம்பிள்.. வாயேன் எனக்கு தூக்கம் வருது. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம். இங்க வேற எனக்கு ரொம்ப குளுருது. நான் உன்ன டைட்டாக hug பண்ணிட்டு தூங்குனா தான் எனக்கு தூக்கம் வரும்.

இல்லைனா அந்த நர்ஸ் வந்து எனக்கு ஊசி போடுறேன் டேப்லெட் குடுக்கிறேன்னு டார்ச்சர் பண்ணிக் கிட்டே இருப்பாங்க‌. அவங்க வர்றதுக்குள்ள சீக்கிரம் வா நம்ம தூங்கிடலாம்.” என்று கீர்த்தனா அடம்பிடிக்க,

“என்ன கட்டிப்பிடிச்சிட்டு நீ நிம்மதியா தூங்குவ டி. நான் தூங்க வேண்டாமா? உன் கூட எப்படி என்னால இப்படி இருக்க முடியும்?” என்று நினைத்து தயங்கிய ரிஷி தொடர்ந்து ஏதோ ஏதோ சொல்லி அவளை சமாதானப்படுத்த பார்த்தான்.

தாத்தாவிடம் சொல்லி விடுவேன் என்று சொல்லிக் கூட மிரட்டி பார்த்தான். ஆனாலும் பிடிவாதமாக இருந்த கீர்த்தனா “நீ ஏன் இப்படி பண்ற? தாத்தா தான் நீயும் நானும் எப்பயும் ஒண்ணாவே இருக்கணும்னு சொன்னாரு இல்ல.. அப்ப நீ என் கூட தானே இருக்கணும்..

இரு நானே போய் தாத்தாவை கூட்டிட்டு வரேன். அவர் கிட்ட நானே உன்ன சொல்லி வைக்கிறேன். நீ என அழ வக்கிறேன்னு சொல்றேன். அப்ப தான் தாத்தா உன்ன நல்லா திட்டுவாரு.” என்று சொல்லிவிட்டு எழுந்து அவசரமாக கதவை நோக்கி நடந்தாள்.

“அச்சச்சோ இத போய் அவ தாத்தா கிட்ட சொன்னா  மானம் போயிடும். இன்னைக்கு ஒரு நாள் எப்படியாவது ஓடிடலாம்.” என்று நினைத்த ரிஷி செல்லும் அவளை தடுத்து பிடித்து உள்ளே இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தடுமாறி அவன் மீது விழுந்தாள் கீர்த்தனா.

வீல்சேரில் அமர்ந்து இருந்ததால் அப்படியே அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்ட ரிஷி அந்த அறையின் டோரை லாக் செய்துவிட்டு “உன்னை நான் குட் கேர்ளா இருக்கணும்னு சொல்லி இருக்கேன் இல்ல.. பட் நீ என்ன வர வர பிடிவாதக்காரியா மாறிக்கிட்டு இருக்க? எல்லாத்துக்கும் நீ அடம் பிடிக்கிற அம்மு..

இப்படி எல்லாம் பண்ணலாமா? யாராவது நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல ஸ்டே பண்ணி இருக்கிறத பாத்தா என்ன நினைப்பாங்க? உன்னோட எனக்கு ஒரே இம்சையா இருக்கு டி.” என்றபடி தனது வீல்சேரை பெட்டை நோக்கி இயக்கிக் கொண்டு சென்றான்.

அவன் பேசியதை வைத்து தன்னை அவன் கோபத்தில் திட்டுகிறான் என புரிந்து கொண்ட கீர்த்தனா உடனே தன் கண்களை கசக்கியபடி அழ தொடங்கி விட்டாள். அதில் ஒரே நொடியில் அவளது கன்னங்கள் சிவந்து போக, அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தோள்களில் முகம் புதைத்து தொடர்ந்து அழுத கீர்த்தனா “நீ என் மேல கோபப்பட மாட்டேன்‌. என்ன திட்ட மாட்டேன், அடிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லிட்டு இப்ப ஏன் என்னை திட்டுற? உனக்கு என் மேல பாசம் இல்லையா? நான் உன்னை என் கூட தானே இருக்க சொன்னேன்.. உனக்கு அது பிடிக்கலையா?” என்று கேட்டுவிட்டு பாவமாக அவன் முகத்தை பார்த்தாள்.

அவ்வளவு நேரம் அவள் தன்னை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்ற விரக்தியில் பேசிக் கொண்டு இருந்த ரிஷி இப்போது தன்னால் அவள் அழுவதால் வருத்தப்பட்டு அவள் கண்ணீரை துடைத்தபடி, “அச்சோ இதுக்கெல்லாம் எதுக்கு டி அழுகிற? இது திட்டுறதா உனக்கு? என்ன நீ சும்மா ஏதாவது பேசினாலே உடனே திட்டுறேன்னு சொல்ற!

எனக்கு உன் மேல கோபமே வராது அம்மு.‌ நான் சும்மா உன் கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ ஏதாவது மிஸ்டேக் பண்ணா அத சொன்னா தானே உனக்கு தெரியும்.. நான் அதைத்‌ தான் உன் கிட்ட சொல்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன். உன்ன திட்டல ஓகேவா?” என்று மென்மையான குரலில் கேட்டான்.‌

உடனே தனது மூக்கை சிந்தியபடி அவனைப் பார்த்த கீர்த்தனா “அப்ப நீ என்ன நெஜமாவே திட்டலையா?” என்று உறுதி செய்து கொள்வதற்காக கேட்க, “இல்ல அம்மு.. நான் எதுக்கு உன்ன திட்ட போறேன்?” என்று ரிஷி அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்ட கீர்த்தனா “இனிமே நீ இப்படி எல்லாம் என் கிட்ட பேசாத. எனக்கு அது திட்ற மாதிரி தான் இருக்கு.‌ எனக்கு அது கஷ்டமா இருக்கு. ரொம்ப சோகம் சோகமா இருக்கு.” என்றாள்.

அவளது அந்த அன்லிமிடெட் அன்பிலும், திடீர் நெருக்கத்திலும் தடுமாறிக் கொண்டிருந்த ரிஷி பேச்சின்றி தவித்தான். முதலில் எப்படியாவது இவளை சமாதானப்படுத்தி தூங்க வைத்தால் போதும் என்று இருந்தது அவனுக்கு. அதனால் அப்படியே கட்டிலின் அருகில் சென்று அவளை தூக்கி அதில் படுக்க வைத்த ரிஷி அவனும் மெல்ல நகர்ந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.

அவன் ஒரு ஓரமாக சென்று படுத்துக்‌ கொண்டு, அவர்கள் இருவருக்கும் நடுவில் பெரிய பொம்மை ஒன்றை வைத்தான். அவனையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனா அந்த பொம்மையை தூக்கி கடாசி விட்டு அவன் அருகில் சென்று அவனை கட்டிப்பிடித்தபடி படுத்துக் கொண்டு “எனக்கு குளிருது. பெட்ஷீட் போட்டு விடு.” என்று கேட்டாள்.

அங்கே சகலமும் மறந்த நிலையில் இருந்த ரிஷி இதயம் படபடக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளது அன்பு தொல்லையை சமாளிக்க பாவம் அவனது ஆறடி உடல் திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. அதனால் அவனுக்கு லேசாக வியர்த்து கொட்ட, அவன் வியர்வையை தனது மென்மையான விரல்களால் துடைத்த கீர்த்தனா “இங்க எனக்கு ரொம்ப குளுருது. ஆனா உனக்கு மட்டும் ஏன் வேர்க்குது?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured