அத்தியாயம் 62
ஜோஸ்வா தன்னால் கண்டிப்பாக கீர்த்தனாவை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையாக பேசியதால், அவனை கடத்தி வைத்து இருந்தவன் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என நினைத்து தன் ஆட்களை அவனுடன் அனுப்பி அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து கீர்த்தனாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டான்.
கண்டிப்பாக தான் அவளை பிடித்து இவர்கள் கையில் ஒப்படைக்கவில்லை என்றால், தனது உயிர் தனக்கு சொந்தமில்லாமல் போய்விடும் என்று தெரிந்து வைத்திருந்த ஜோஸ்வா கொலை வெறியில் கீர்த்தனாவை தேடத் தொடங்கினான்.
வீட்டிற்கு வந்த தீராஜ் ஆனந்த குமாரிடம் அவர் தனக்காக பார்த்திருக்கும் பெண்ணைப் பற்றி பேசினான். “ஒருவேளை ரிஷி அவன் சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணி அவனுக்கு ஒரு வாரிசை பெத்துக்கிட்டா கூட, நீ அவன விட ஒரு பெரிய குடும்பத்துல பொண்ணு எடுத்து அதனால உனக்கு நிறைய செல்வாக்கு இருந்துச்சுன்னா அத வச்சு நம்ம மத்தவங்கள நம்ம பக்கம் கொண்டு வர்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.
நான் உனக்கு பொண்ணு பார்க்கணும்னு ட்ரை பண்ண உடனே தானாவே அவங்களே வந்து அவங்க பொண்ணு உனக்கு கொடுக்கிறேன்னு சொன்னாங்க.. இதெல்லாம் எதுக்குன்னு நீ நினைக்கிற? எல்லாம் இந்த MR corporation நம்ம கைக்குள்ள இருக்கின்றதுனால தான்.
அங்க ஆபீஸ்ல மட்டும் நம்மளோட பொசிஷன் பறி போயிடுச்சுன்னா, நமக்குன்னு ஒரு அடையாளமே இருக்காது தீரஜ் . சோ இந்த கல்யாணம் நம்ம எல்லாருக்குமே ரொம்ப முக்கியம்.. இதுல எந்த பிராப்ளமும் வரக் கூடாது. இந்த பொண்ணை கண்டிப்பா உனக்கு பிடிக்கும். லண்டன்ல போய் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு வந்திருக்கா.
அவள மாதிரி ஒரு பொண்ணு உன் கூட இருந்தா, உன்னோட ஸ்ட்ரென்த் பல மடங்கு அதிகமாகும். யாரையும் அப்புறம் உன்னை எதுவும் பண்ண முடியாது.” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணின் டீடைல்ஸ் அடங்கிய ஃபைலை அவனிடம் கொடுத்தார் ஆனந்தகுமார்.
அதில் தேவி ஜுவல்லர்ஸ் ஓனரின் மூத்த மகள் பிருந்தா தேவி என்று குறிப்பிடப்பட்டு அவளை பற்றிய அனைத்து தகவல்களும் இருந்தது. இந்த தேவி ஜுவல்லர்ஸ் பாரம்பரியமாக தங்கம் வைரம் மற்றும் இன்னும் காஸ்ட்லியான ரத்தினங்கள் போன்றவற்றை பரம்பரையாக வியாபாரம் செய்பவர்கள். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் ஆங்காங்கே அவர்களது ஜுவல்லரியின் கிளை உள்ளது.
இருப்பினும் இப்போது இந்தியாவில் டாப் கம்பெனியாக இருக்கும் எம் ஆர் கார்ப்பரேஷன்ஸுன் குடும்பத்தில் தங்கள் மகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவதால் தான் ரிஷி இப்படி இருக்கும் நிலையில் தீரஜ் ஒரு நல்ல ஆப்ஷன் என நினைத்து அவர்கள் பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்து இருப்பார்கள் என்று நினைத்த தீரஜ் “சப்பா.. செமையா இருக்காளே! பெரிய இடத்து பொண்ணு.. சோ நல்லபடியா தான் வளர்த்து இருப்பாங்க. அப்பா சொன்ன மாதிரி நமக்கு ஏத்த பொண்ணு இவ தான்.
எப்படியாவது அந்த சனியனை ஒளிச்சு கட்டிட்டு இவளை கல்யாணம் பண்ணிட்டு ராஜா மாதிரி செட்டில் ஆயிடனும். இன்னும் எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன் சொத்துல உரிமை கொண்டாடிக் கிட்டே இருக்கிறது? எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் சீக்கிரமாவே கிரியேட் பண்ணனும். அது தான் எனக்கு பர்மனன்ட்டா இருக்கும்.” என்று நினைத்தான்.
இரவு 10 மணி..
தாத்தாவின் வீட்டில் ரிஷியும், மற்றவர்களும் வழக்கம் போல் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டு முடித்தார்கள். ரிஷி கீர்த்தனாவிற்கு பிடித்த மாதிரியாக அவளது ரூமை தயார் செய்து அங்கே அவளை அழைத்து சென்று “இந்த ரூம் உனக்கு புடிச்சிருக்கா? நமக்கு மேரேஜ் ஆகுற வரைக்கும் நீ இங்க தான் ஸ்டே பண்ண போற.” என்றான்.
பெண் குழந்தைகளுக்கு பிடித்ததை போல பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு ஆங்காங்கே கார்ட்டூன் கேரக்டர்ஸ்களை பெயிண்டிங் செய்து வைத்து பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த அறையை பார்த்தவுடனேயே கீர்த்தனாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. ஆச்சரியம் நிறைந்த முகத்துடன் உள்ளே சென்ற கீர்த்தனா அங்கே இருந்த பெரிய Bunny பொம்மை ஒன்றை கையில் எடுத்து அதை கட்டிப்பிடித்துக் கொண்டு “எனக்கு இந்த ரூம் ரொம்ப புடிச்சிருக்கு டிம்பிள். அதுவும் இந்த பொம்மையை பாரு.. இது என்னோட ஹைட்டுக்கு இருக்கு. அதுவும் உன்ன மாதிரியே கியூட்டா இருக்கு. சோ இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
அவளைப் பார்த்து தானும் புன்னகைத்துக் கொண்டிருந்த ரிஷி “காலையில இருந்து கோல்ட் டைமண்ட்ன்னு எவ்வளவோ வாங்கி கொடுத்துட்டேன்.. அப்ப கூட இவ முகத்தில இவ்ளோ சந்தோஷம் இல்ல. இப்ப பாரு.. பல்லு சுளுக்கிக்கிற அளவுக்கு சிரிக்கிறா! நெஜமாவே நீ ஒரு குழந்தை தான் அம்மு. உன்ன எப்பயும் நான் பத்திரமா பாத்துப்பேன்.” என்று நினைத்தான்.
அந்த பொம்மையுடன் மெத்தென்று இருந்த பெட்டில் சென்று விழுந்த கீர்த்தனா ஆசையுடன் ரிஷியை பார்த்து “நீயும் வா டெம்பிள்.. நம்ம தூங்கலாம். உனக்கு அப்பவே தூக்கம் வருதுன்னு நீ சொன்னில! சீக்கிரம் வா, நம்ம தூங்கலாம். எனக்கும் தூக்கம் தூக்கமா வருது.” என்று ஒரு கையால் தனது கண்களை தேய்த்தவாறு மற்றொரு கையால் அவனை தன் அருகில் வந்து படுக்க சொல்லி அழைத்தாள்.
அதில் அதிர்ந்த ரிஷி “ஓய் கீர்த்து.. இது உன்னோட ரூம். இங்க நீ தான் தூங்கணும். இன்னும் உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆகல. இனிமே தான் மேரேஜ் நடக்க போகுது. அதுக்குள்ள மறந்துட்டியா நீ? என்னால நமக்கு மேரேஜ் ஆகுற வரைக்கும் உன் கூட தூங்க முடியாது.
அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. உனக்காக சும்மா சும்மா நிரஞ்சனாவையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க முடியாது. நீ சமத்து பொண்ணா இனிக்கு இங்க தூங்கு. நாளைக்கு நம்ம உங்க வீட்டுக்கு போய் உன் ஃபேமிலி மெம்பர்ஸை பார்க்கலாம்.” என்று சொல்லி அவளை சமாளிக்க பார்த்தான்.
உடனே தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அழுவதைப்போல ம்ம்ம்.. என்று சினுங்க தொடங்கிய கீர்த்தனா “எனக்கு அதெல்லாம் தெரியாது. யார் வந்தா எனக்கு என்ன? நான் உன் கூட தான் தூங்குவேன். எனக்கு உன் கூட இருக்கிறது தான் புடிச்சிருக்கு டிம்பிள். நீ ஏன் என் கூட தூங்க மாட்டேங்குற?” என்று பாவமாக கேட்க, அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான் ரிஷி.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)