Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 61

போதையடி நீ எனக்கு CH 61

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 61

ஜோஸ்வாவை அடித்து வெளுத்து வாங்கி கீர்த்தனாவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ரௌடிகள். “டேய் அறிவுக் கெட்ட முண்டங்களா.. அவளை தேடி கண்டுபிடிக்க துப்பில்லாம எதுக்கு டா என்ன போட்டு அடிச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க இப்படியே என்னை மிதி மிதின்னு மிதிச்சிட்டு உட்கார்ந்து இருங்க..

இந்த கேப்ல அவ எங்கயாவது போய் யாராவது பெரிய கையா பார்த்து உங்களுக்கு எதிரான எவிடன்ஸ் எல்லாத்தையும் கொடுக்கப் போறா.. அப்ப தான் நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்கு தெரியும். நீங்க இப்படி என்னை புடிச்சு வச்சு டார்ச்சர் பண்றதுக்கு பதிலா ஒரு வாரம் என்ன வெளிய விட்டா,  அவ எங்க இருக்கான்னு நானே கண்டுபிடிச்சிடுவேன். எங்க போய் மறஞ்சி இருந்தாலும் கண்டிப்பா அவ என்ன காண்டாக்ட் பண்றதுக்கு ட்ரை பண்ணவா.

நான் சொன்னா கேட்டு தொலைங்க டா.. உங்க பாஸுக்கு கால் பண்ணி குடுங்க நான் பேசுறேன். அந்த அழுக்காவது மூளை இருக்கான்னு பாக்கலாம். நானே அவளை எப்படியாவது கண்டுப்பிடிக்கும்னு தான் பாக்கிறேன்.

உங்க கூட சேர்ந்து நானும் தானே அந்த வேலையை எல்லாம் செஞ்சிருக்கேன்.. நீங்க மாட்டுன நானும் தானே மாட்டுவேன்… அப்புறம் எப்படி நான் அவளை காப்பாத்தனும்னு நினைப்பேன்? இன்னும் எத்தனை நாளைக்கு டா இப்படியே லூசுத் தனமா யோசிப்பீங்க?” என்று சலம்பினான் ஜோஸ்வா.

உடனே கோபப்பட்டு இருவர் ஆளுக்கு ஒரு கடப்பாறையை கையில் எடுத்துக் கொண்டு அவனை தாக்குவதற்காக செல்ல, அவர்களுக்கு லீடர் போல இருந்த ஒருவன் அவர்களை தடுத்து நிறுத்தி ஒருவனிடம் இருந்து கடப்பாரையை வாங்கி அதை ஜோஸ்வாவின் கழுத்தில் வைத்து அழுத்தியவாறு “டேய் டாக்டரு.. உனக்கு வாயில கொழுப்பு அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்.

அதான் எதிரில் இருக்கிறது உனக்கு எமன்னு தெரிஞ்சிருந்தும் எங்க கிட்டயே கொஞ்சம் கூட யோசிக்காம எகத்தாளமா பேசிட்டு இருக்க நீ! இருந்தாலும் ஒரு விதத்துல நீ சொல்றதும் சரியா தான் தெரியுது.

அதனால தான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்னு நினைக்கிறேன். நான் போய் அண்ணன் கிட்ட பேசிட்டு வரேன். அவர் உன் கிட்ட பேசுறேன்னு சொன்னான்னா, நான் ஃபோன கொடுக்கிறேன். 

அவரைப் பேசி சமாளிச்சு உன் பிளான அவரை ஒத்துக்கவைக்கிறது எல்லாம் உன் சாமர்த்தியம். அதுவரைக்கும் வாய மூடிக்கிட்டு இரு. இங்க இருக்கிறவனுங்க எல்லாம் காட்டுமிராண்டி பயலுங்க. தேவை இல்லாம இவனுங்க கிட்ட வாயை விட்டு அநியாயமா போய் சேர்ந்துடாத!” என்று அவனை மிரட்டி விட்டு சென்றான்.

தனு தன்னை திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி எவ்வளவு கெஞ்சினாலும் அவளை ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டு இருந்தான் தீரஜ். “அட போ டார்லிங்! உன்னை சீக்கிரம் மேரேஜ் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகலாம்னு நான் எவ்ளோ ட்ரீம்ஸ்சோட இங்க வந்து தெரியுமா? நீ என்ன சிம்பிளா அதையும் இதையும் சொல்லி இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம்ங்கிற? அப்ப எப்ப தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது? You promised me right.. and I trust you.

ரிஷிய விட்டு வந்த உடனே நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன.. நானும் ரஷியும் பிரேக்கப் பண்ணி இப்போ எவ்ளோ நாள் ஆகுது.. இங்க இருக்கிற யாருமே எந்த வேலையும் பாக்க மாட்டாங்களா என்ன.. அவங்க எல்லாரும் இதுக்கு முன்னாடி நானும் ரஷியும் லவ் பண்ணிக்கிட்டு இருந்ததை பத்தி தான் பேசிகிட்டே இருக்க போறாங்களா?

அப்படியே அவங்க பேசினாலும் பேசிட்டு போகட்டும். அதை எல்லாம் பார்த்தா எப்படி நம்ம ஹேப்பியா வாழ்றது பேபி? எனக்கு நீ ரொம்ப இம்போர்ட்டண்ட்.  நான் உன் கூட சேர்ந்து ஹாப்பியா வாழனும்னு ஆசைப்படுறேன். சோ எனக்கு மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு எல்லாம் எந்த கவலையும் இல்லை.” என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள் தனு.

“உனக்கு என்ன டி பிரச்சனை?    இப்ப நீ தான் எனக்கு பெரிய பிரச்சனையா வந்து நிக்கிற. உன்னை எப்படி ஒளிச்சு கட்றதுன்னு தெரியாம தான் நான் தவிச்சுக்கிட்டு இருக்கிறேன்.” என்று நினைத்த தீரஜ் அவளிடம் எதுவும் பேசாமல் யோசனையில் மூழ்கி அமைதியாக இருக்க,

அந்நேரம் அவனுக்கு கால் செய்த அவன் அம்மா ரேகா “டேய் ரிஷி அந்த ஊமைய கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எல்லாரும் முன்னாடியும் சொன்னதுனால உங்க அப்பா உனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு.

உனக்கு பெரிய ஜுவல்லரி பிசினஸ் பண்றவங்களோட பொண்ண பார்த்திருக்கிறாராம். அவங்க குடும்பத்தை பத்தி உன் கிட்ட பேசணும்னு அப்பா உன்ன வீட்டுக்கு வர சொல்றாரு டா.

ரிஷி இந்த மாதிரி ஒரு ஈத்திர குடும்பத்தில பொண்ணு எடுக்கும்போது, நீ ஒரு பெரிய ஃபேமிலில பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணா, மத்த போர்ட் மெம்பர்ஸ் முன்னாடி உன்னோட மதிப்பு மரியாதை அதிகமாகும்ன்னு அவர் நினைக்கிறாரு.

நீ அந்த மேனாமினுக்கி தனுவை தான் பார்க்க போயிருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். அவள மாதிரி ஆளுங்களை எல்லாம் வெச்சுக்கலாமே தவிர கல்யாணம் பண்ணி பொண்டாட்டியா கூட வச்சுக்க முடியாது. அந்த சனியனை அங்கயே எதையாவது சொல்லி தலைமுழுக்கிட்டு சீக்கிரமா வீடு வந்து சேரு.

உனக்கு உங்க அப்பா பார்த்து வச்சிருக்கிற பொண்ணை நான் ஃபோட்டோல பார்த்தேன். அவ ஆளு நல்லா அழகா இருக்கா. என்ன நான் சொல்றது புரியுதுல்ல?” என்று கேட்க,

“ம்ம்.. புரியுது புரியுதுமா. நீங்க என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் கேட்பேன். இப்ப என்ன.. அப்பா மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்காரு. நான் உடனே அங்க கிளம்பி வரணும் அதானே.. ஓகே, நீங்க வைங்க நான் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” என்று தனுவின் முன்னே சீன் போட்ட திராஜ் முக்கியமான வேலையாக தன் அம்மா தன்னை வர சொல்வதாக சொல்லி அவளை அங்கேயே கழட்டி விட்டுட்டு கிளம்பி சென்றான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured