அத்தியாயம் 59
எப்படியாவது தனுவின் வாயை மூடினால் போதும் என நினைத்து தீரஜ் ஏதேதோ சொல்லி அவளை சமாளித்து கொண்டு இருந்தான். ஆனால் அவனை விட அவள் பெரிய வில்லி என பாவம் இன்னும் அவனுக்கு தெரியவில்லை.
ஒருவித விஷம புன்னகையுடன் தீரஜை பார்த்த தனு ஹஸ்கி வாய்ஸில் “நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது பேபி. உனக்கு நானும் சப்போர்டிவா இருக்கணும்னு தான் நினைக்கிறேன். பட் நீதான் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்குற.
இந்த மாதிரி நடக்கும்போது தான் எனக்கு என் ரிஷி டார்லிங்கோட ஞாபகம் வருது. அவனுக்கு எவ்ளோ வேலை இருந்தாலும், அப்ராடுக்கு போனா கூட அவன் என் கிட்ட பேசாம இருக்கவே மாட்டான். நான் ஒரே ஒரு கால் பண்ணா போதும். அவன நான் பாக்கணும்னு சொல்லி கிளம்பி வானு சொன்னா கூட எனக்காக உடனே கிளம்பி வந்துடுவான்.
என் பின்னாடி அப்படி crazy-யா சுத்திட்டு இருந்த ரிஷியை உனக்காக தானே பேபி நீ சொன்னதுனால வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு உன் பின்னாடி வந்தேன்! நீ இப்படி என்னை கஷ்டப்படுத்தலாமா? நான் உனக்காக என்னென்ன பண்ணி இருக்கேன்னு நீ நினைச்சு பார்க்கணும் இல்ல?
இப்ப எல்லாம் திடீர் திடீர்னு என்னென்னமோ நடக்குது. யார நம்பறது யாரை நம்ப கூடாதுன்னு தெரிய மாட்டேங்குது. நம்மளும் எத்தனை நாள் தான் இப்படி சீக்ரெட்டாவை லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறது? எனக்கு இந்த மாடலிங் இண்டஸ்ட்ரில ஒர்க் பண்ணி ரொம்ப போர் அடிச்சிருச்சு.
சோ இதுக்கப்புறமா மேரேஜ் பண்ணிட்டு செட்டில் ஆகலாம்னு நான் டிசைட் பண்ணிட்டேன். என் மம்மி டாடி கிட்ட கூட நான் உன்ன பத்தி சொல்லிட்டேன். வீல் சேர்ல உக்காந்துட்டு இருக்குற அந்த useless ரிஷிய விட நீ பெஸ்ட் சாய்ஸ்ன்னு அவங்க என்ன அப்ரிஷியேட் பண்ணாங்க தெரியுமா?
Really wanted to meet you soon. எப்போ நமக்கு மேரேஜ் ஆகும்னு அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீ நாளைக்கு வந்து அவங்கள மீட் பண்ணி நம்ப மேரேஜ் பத்தி பேசுறியா பேபி? இல்ல நாங்க உங்க வீட்டுக்கு வந்து ஆனந்த் அங்கிள் கிட்ட பேசணும்னு நீ சொன்னா கூட ஓகே தான். நாங்க எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கோம்.” என்றபடி தனது விரல்களால் அவன் உடலோடு உறவாடிக் கொண்டிருந்தாள்.
எப்போதும் அவளது விரல்கள் செய்யும் மாயாஜாலத்தில் தன்னை மறந்து அவளிடம் சரணடையும் தீரஜ் இப்போது அதை பொருட்படுத்தாமல் கூர்மையாக அவள் பேசியதை தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனை பொறுத்தவரை தனு போன்ற ஒருத்தி ரிஷிக்கு துணையாக அவனுடன் இருக்கக் கூடாது.
அதனால் தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆன பிறகு ஏதேதோ ஆசை வார்த்தைகள் சொல்லி அவளை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டான். அவளும் ரிஷியை விட, இவனுடன் தான் இருப்பது தான் சரியாக இருக்கும் என நினைத்து அவனை பிரேக் அப் செய்துவிட்டு இவனோடு வந்து ஒட்டிக் கொண்டாள்.
தனது வேலை முடிந்தவுடன் தனுவை எதையாவது சொல்லி கழட்டிவிட வேண்டும் என திராஜ் பல நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறான். இருப்பினும் தம்பிக்கே துரோகம் செய்த தீரஜ் தன்னை எல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்வான் என அவளுக்கா தெரியாது? அதனால் அவனை விடாமல் சிவி படத்தில் வரும் பேய் போல அவனது கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்தாள் தனு.
அவன் அமைதியாக இருந்ததால் அவனது இதழ்களை தனது விரல்களால் வருடியபடி “என்ன பேபி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ சைலன்டா இருக்க?” என்று அவள் கேட்க,
உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் “அது வந்து.. அப்பா கிட்ட என்ன சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் நம்மள பத்தி நான் அவர் கிட்ட எதுவுமே பேசல. ஆல்ரெடி ஆபீஸ்ல பிராப்ளம் போயிட்டு இருக்குன்னு சொன்னேன்ல.. இந்த டைம்ல அவர் கிட்ட இதை போய் பேசினா நல்லா இருக்குமான்னு தெரியல.
நீ அவருக்கு தெரியாத யாரோ ஒரு புது பொண்ணா இருந்தா கூட பரவால்ல. நீயும் ரிஷியும் ரிலேஷன்ஷிப்ல இருந்தது பிசினஸ் சர்க்கில்ல இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது, நீயும் அவனும் பிரேக்கப் பண்ணதுக்கு அப்புறமா நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு எல்லாருக்கும் தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையுமே பாக்குறவங்க தப்பா பேச மாட்டாங்களா?
வேணும்னே நீ ரிஷியை ஏமாத்திட்டு என்னை கரெக்ட் பண்ணிட்டேனு என்ன விட அதிகமா உன்ன தான் கேவலமா பேசுவாங்க. எனக்கு அதை நினைச்சா தான் கவலையா இருக்கு பேபி. என்னோட ஃபியூச்சர் வைஃபை மத்தவங்க அப்படி பேசறதை என்னால எப்படி அலோ பண்ண முடியும்?
இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. அதுக்குள்ள எல்லாரும் நடந்ததை மறந்துடுவாங்க. அப்போ நம்ம டைரக்ட்டா மேரேஜே பண்ணிக்கிட்டாலும் யாரும் எதுவும் சொல்ல முடியாதுல.. அதான் பாக்குறேன்.” என்று ஏதோ வாய்க்கு வந்ததை சொன்னான் தீரஜ்.
தாத்தாவின் வீட்டில் ரிஷியின் திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, தலையில் அடிபட்டு இருக்கும் கீர்த்தனாவை வெளியில் அழைத்து செல்ல முடியாது என்பதால் அவளுக்கு தேவையான பொருட்களை அவளை தேர்ந்தெடுக்கட்டும் என நினைத்த ரிஷி ஷாப்பிங் மாலையை தங்களது வீட்டிற்கு வரவழைத்து இருந்தான்.
தாத்தா கீர்த்தனாவின் பெற்றோர்கள் அவளை பார்க்கும் போது அவள் இந்த வீட்டின் மகாராணியாக தான் இருக்க வேண்டும் என்று சொன்னதை நினைவில் வைத்து அவளுக்காக விதவிதமாக தங்க, வைர வைடூரிய ஆபரணங்களை கணக்கே இல்லாமல் வாங்கி குவித்தான் ரிஷி.
அவளிடமும் அனைத்தையும் அடுக்கி வைத்துக் கொண்டு அவன் “இதுல உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு சொல்லு அம்மு!” என்று கேட்க, பல கற்கள் வைத்து கண்களுக்கு பளிச்சென்று இருக்கும் ஒரு வைர நெக்லஸை கை காட்டிய கீர்த்தனா அதன் விலை பல கோடிகள் என தெரியாமல் அப்பாவியாக “இது நல்லா ஜிகுஜிகுன்னு இருக்கு. அதை நான் கேட்டா எனக்கு தருவாங்களா?” என்று ஆசையாக கேட்டாள்.
“ஏன் தராம? இங்க இருக்கிற எல்லாத்தையுமே நீ வேணும்னு சொன்னா கூட நான் உனக்கு வாங்கி தருவேன். நீ உனக்கு எது புடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோங்க.” என்று பெருந்தன்மையுடன் சொன்ன ரிஷி சேல்ஸ்மேன் இடம் அவள் கேட்ட ஆபரணத்தை எடுத்துக் கொடுக்க சொன்னான்.
ஆசையாக அதை வாங்கி தன் கழுத்தில் போட்டு எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்த கீர்த்தனா “இது நல்லா இருக்கு. ஆனா இது குத்துதே பிம்பிள்! இந்த மாதிரி ஏதாவது கழுத்துல போட்டா அது குத்துமா? ஏன் இது குத்துது?” என்று கேட்டபடி அவசரமாக அதை தனது கழுத்தில் இருந்து கழட்டினாள்.
“அச்சோ.. பாத்து பொறுமையா கழட்டுமா.. அதுல இருக்கிற எல்லாமே ரேர் டைமண்ட். ஒன்னு ரெண்டு மிஸ் ஆயிடுச்சுன்னா கூட அதுக்காக நம்ம நிறைய பே பண்ற மாதிரி இருக்கும்.” என்று ஒரு அக்காவிற்கே ஆன கண்டிப்புடன் நிரஞ்சனா சொல்ல, “டைமன்டா? அது எப்படி இருக்கும்?” என்று ஆரம்பித்தாள் கீர்த்தனா.
இவளுக்கு சொல்லி புரிய வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனை நாள் தந்தாலும் போதாது என நினைத்து சிரித்த ரிஷி “விடுங்க சிஸ்டர்; அவளுக்கு என்ன புடிச்சிருக்கோ அதை எடுத்துக்கட்டும். லாஸ் ஆகுறது எல்லாம் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம்.” என்றான்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️