அத்தியாயம் 58
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவரது ரூமிற்கு சென்றார்கள். தாத்தாவைக் காண சென்ற ரிஷி “நீங்க இப்பவே கீர்த்துவோட பேரன்ட்ஸை மீட் பண்ணி பேச போறீங்களா தாத்தா?” என்று கேட்க, “ஆமா பின்ன பேச வேண்டாமா? இன்னும் எவ்வளவு நாளை கடத்துறது? சபாபதி கிட்ட ஒரு நல்ல நாளா பார்க்க சொல்லி இருக்கேன். நம்ம வீட்ல ரொம்ப வருஷம் கழிச்சு முதல் முதல்ல இப்ப தான் ஒரு நல்ல காரியம் நடக்கப்போகுது.
அதனால எந்த தப்பும் வந்துடாம எல்லாத்தையும் பொறுமையா பார்த்து பண்ணனும்னு நினைக்கிறேன். இருந்தாலும் நமக்கு ரொம்ப டைம் இல்ல ரிஷி. நீ நம்ம போர்ட் மெம்பர்ஸ் கிட்ட ஒரு வருஷம் டைம் கேட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா? இந்த ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீ கல்யாணம் ஆகி குழந்தையோட செட்டில் ஆகி இருக்கணும்.” என்றார் தாத்தா.
“அது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு தாத்தா. நீங்க என்ன தான் என் கிட்ட தைரியமா பேசினாலும், அம்மு வீட்டில என்ன சொல்லுவாங்களோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு. எதுக்கும் ஒரு பத்து நாள் டைம் எடுத்து நல்லா யோசிச்சுட்டு அப்புறமா அவங்கள பார்த்து நம்ம பேசிக்கலாமா?” என்று ரிஷி தயக்கத்துடன் கேட்க,
ஆறுதலாக ரிஷியின் தோள்களில் தட்டிய தாத்தா “பத்து நாள் கழிச்சு பேசினாலும், பத்து மாசம் கழிச்சு பேசினாலும் என்ன வித்தியாசம் இருக்கப்போகுது ரிஷி? நம்ம அவங்க கிட்ட பேசி தானே ஆகணும்! உன்னோட பயம் எனக்கு புரியுது. ஏற்கனவே நீ லவ் பண்ண பொண்ணை இழந்துட்டு நிற்கிற… இப்ப இந்த பொண்ணு மேல ஆசைப்பட்டு அதுவும் நடக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு உனக்கு பயம் வரது நார்மல் தான்.
இந்த விஷயத்துல நீ உன் தாத்தா மேல நம்பிக்கை வச்சு தான் ஆகணும். யார் கிட்ட எதை எப்படி பேசணும்னு எனக்கு தெரியும். கீர்த்தனாவோட ஃபேமிலி கிட்ட பேசி அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என் பொறுப்புன்னு நான் உன் கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன். சும்மா இத பத்தி யோசிச்சு டென்ஷன் ஆகறதுக்கு பதிலா உன்னோட ஃப்யூச்சர் வைஃப்க்கு உங்க மேரேஜ்க்கு ஸ்பெஷலா என்னென்ன வாங்குறதுன்னு யோசி என்றார் .
உங்கள இனிமே தனியா விட கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதனால கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் அந்த பெண்ணும் இங்க தான் இருக்கணும். அதனால உங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் சபாபதி கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணிக்கோ. அந்த பொண்ணோட குடும்பத்தில இருக்கிறவங்க இங்க வந்து பார்க்கும்போது இந்த வீட்டோட மகாராணியே அவ தான்னு அவங்களுக்கு தெரியணும்.“ என்று பாசிட்டிவாக பேசினார்.
இவ்வளவு தூரம் வந்த பிறகு இனி பின்னோக்கி செல்ல முடியாது. அதனால் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்த ரிஷி “ஓகே தாத்தா, அம்முவிற்கு என்னென்ன பிடிக்குமோ அது எல்லாத்தையும் நானே பர்சனலா பார்த்து அரேஞ்ச் பண்றேன். பட் எனக்கு ஒரு டவுட்.” என்று தயக்கத்துடன் சொன்னான்.
“நான் இவ்வளவு சொல்லியும் உனக்கு இன்னும் டவுட் வருதா? சரி என்னன்னு கேளு.” எங்க தாத்தா சொல்ல, “அது இல்ல தாத்தா.. நேத்து மீட்டிங்ல எல்லார் முன்னாடியும் அவ பேரு நித்திலா. அவளால வாய் பேச முடியாதுன்னு நான் சொல்லிட்டேன்.
இப்ப அவ ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் கூப்பிட்டு நம்ம மேரேஜ் பண்ணலாம் அவளோட ஒரிஜினல் ஐடென்டிட்டி எல்லாருக்கும் என்னன்னு தெரிஞ்சுறாதா? அப்புறம் நான் பொய் சொன்னதா நினைப்பாங்களே! அவங்க எல்லாரும் சேர்ந்து ஒரே முடிவா எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்ததே பெரிய விஷயம்.
இதுல நான் பொய் சொன்னதை ரீசனா வச்சு என் மேல நம்பிக்கை இல்லன்னு பேசி எனக்கு கொடுத்த ஒரு வருஷ டைமை கேன்சல் பண்ணிட்டாங்கன்னா என்ன பண்றது?” என்று கொஞ்சம் சோகமாகவே கேட்டான் ரிஷி.
“அட இது எல்லாம் ஒரு விஷயமா? என்ன ரிஷி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாத்துக்கும் பயப்பட ஆரம்பிச்சுட்ட நீ? எந்த மாதிரியான சுச்சுவேஷனையும் ஒரு பிசினஸ்மேனுக்கு சமாளிக்க தெரியணும்.
இப்ப என்ன.. அந்த பொண்ணோட அபிஷியல் நேம் கீர்த்தனா.. ஆனா வீட்ல சும்மா நித்திலான்னு கூப்பிடுவோம்ன்னு சொல்லிக்கலாம். ஆக்சிடென்ட் ஆனதுல தானே அந்த பொண்ணுக்கு இப்படி ஆச்சுன்னு சொன்ன.. யாராவது ஒரு ஃபாரின் டாக்டரை வர வச்சு சீன் போட்டு அவர் குடுத்த ட்ரீட்மெண்ட்ல அந்த பொண்ணுக்கு சரியாயிடுச்சுன்னு சொல்லலாம்.
இல்லைனா அந்த பொண்ணோட கண்டிஷன் இப்படி இருக்கறதுனால அவளுக்கு பேச்சு வராதுன்னு நம்ம மத்தவங்க கிட்ட பொய் சொல்லி வச்சிருக்கறத அவளோட ஃபேமிலி கிட்டையே சொல்லி அவங்கள சமாளிச்சா முடிஞ்சு போச்சு! இது எல்லாம் ஒரு விஷயமா? போய் இந்த டைமை என்ஜாய் பண்ணு. கல்யாண பொண்ணு பின்னாடி சுத்தறத விட்டுட்டு எதையாவது கேட்டு தாத்தா தாத்தான்னு என் பின்னாடியே சுத்திட்டு இருக்காத.” என்று சொல்லி ரிஷியை தனது அறையில் இருந்து அனுப்பி வைத்து விட்டார் தாத்தா.
ஒரு ஏழு நட்சத்திர ரெஸ்டாரண்டில் தனக்காக ஏற்கனவே புக் செய்யப்பட்டு இருந்த பிரைவேட் ரூமிற்கு சென்று சேர்ந்தான் தீரஜ். அவனை கண்டவுடன் ஆசையாக எழுந்து அவன் அருகில் சென்ற தனு அவனை இறுக்கமாக கட்டி அணைத்து “ஹாய் பேபி ஹொவ் ஆர் யூ! நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? எதுக்கு என்ன அவாய்ட் பண்ற நீ?” என்று குழைவான குரலில் கேட்டாள்.
“ஏற்கனவே ரிஷி என்னை ஒரு பக்கம் ஷிஃப்ட் போட்டு சாவடிக்கிறான். இப்ப இந்த சனியனை எப்படி தலைமுழுகிறது என்று தெரியவில்லையே!” என நினைத்து சலித்துக் கொண்ட தீரஜ் வெளியில் தனுவை பார்த்து அழகாக புன்னகைத்து “நான் எதுக்காக உன்னை அவாய்ட் பண்ண போறேன் பேபி? நானும் தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்.
பட் உனக்கே தெரியும் இல்ல இப்ப ஆபீஸ்ல சுச்சுவேஷன் சரியில்ல. சாப்பிடுறதுக்கு தூங்குறதுக்கு கூட டைம் இல்லாம நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். இதுல எந்த கேப்ல நான் உன் கிட்ட பேசுறது நீயே சொல்லு?” என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல அவளிடம் கேட்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிபியில் ஃபாலோ செய்யுங்கள். மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் பேஸ்புக் குரூப்பில் இணையுங்கள்)