Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 57

போதையடி நீ எனக்கு CH 57

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 57 

ரிஷி “கீர்த்தனா” என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்ட நிரஞ்சனா “ஓ.. இந்த பொண்ணு பேரு கீர்த்தனாவா? நைஸ் நேம் சார். இனிமே நம்ம எல்லாரும் இவளை கீர்த்தனான்னே நாம கூப்பிடுவோம்.” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டு அங்கே தாத்தா இருப்பதை கவனித்தவுடன் பதட்டமடைந்து “சாரி சார்! இந்த பொண்ண பார்த்த பர்ஸ்ட் டேல இருந்தே இவங்கள என் தங்கச்சின்னு சொல்லி எனக்கு பழகிருச்சு. அதான் சட்டுன்னு மேடம்னு கூப்பிட வரல. இனிமே நான் இதை கரெக்ட் பண்ணிக்கிறேன்.” என்று தாத்தாவை பார்த்து அவசரமாகச் சொன்னாள். 

“அட பரவாயில்ல மா.. இதுக்கு எல்லாம் எதுக்கு சாரி கேக்குற? இவளை கண்டு பிடிச்சதுல இருந்தே சொந்த தங்கச்சியா நினைச்சு நீ தான் இவளை கூட இருந்து பத்திரமா பாத்துக்கிட்டேன்னு ரிஷி சொன்னான். அதைக் கேட்கவே எனக்கு சந்தோசமா இருந்துச்சு. 

அவ உன்னை மனசார வாய் நிறைய அக்கான்னு கூப்பிடுறா. உனக்கும் அவ மேல பாசம் இருக்கு. இதே மாதிரி கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சியா பழகினா எங்களுக்கும் சந்தோசம் தான். எங்க குடும்பத்துல இருக்கிறவங்களை எங்களுக்கு நிறைய துரோகம் பண்ணி இருக்காங்க. 

ஆனா நீயும் திலீபும் நான் இங்க இல்லாத சமயத்துல கூட என் பேரனுக்கு பக்க பலமா இருந்திருக்கீங்க. திலீப் மட்டும் இல்லேன்னா ரிஷி இப்ப என்ன ஆயிருப்பன்னு என்னால யோசிச்சுக்கூட பாக்க முடியல.  உங்க ரெண்டு பேரையும் இந்த குடும்பத்துல ஒருத்தங்களா அதான் நான் பார்க்கிறேன்.” என்று பெருந்தன்மையுடன் தாத்தா சொல்ல, நிரஞ்சனா திலீப் இருவரும் ஆனந்த கண்ணீருடன் தங்கள் மீது இந்த குடும்பத்தினர் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களே என நினைத்து தாத்தாவையும் ரிஷியையும் பார்த்து அந்த உண்மையான அன்பிற்கும் மரியாதைக்கும் நன்றி சொன்னார்கள். 

திடீரென்று புதிதாக யாரோ ஒரு கீர்த்தனாவை பற்றி இங்கே இவர்கள் அனைவரும் மாறி மாறி பேசிக் கொண்டு இருப்பதால் “கீர்த்தனாவா? அது யாரு? அவங்க இங்க வர போறாங்களா?” என்று நித்திலா கேட்க, “நீ தான் டி கீர்த்தனா. உன்னை பத்தி தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. உனக்கு தான் எதுவுமே ஞாபகம் இல்லைன்னு நீ சொல்லிட்டு இருந்தியே.. 

உன்னோட பேர் என்னன்னு கூட நீ மறந்துட்ட. அதான் எனக்கு புடிச்ச மாதிரி இத்தனை நாளா உன்னை நான் அம்முன்னு கூப்பிட்டு இருந்தேன். இப்ப உன்னோட ரியல் நேம் என்னன்னு கண்டுபிடிச்சாச்சு. இனிமே எல்லாரும் உன்ன கீர்த்தனான்னு தான் கூப்பிடுவாங்க.” என்றான் ரிஷி. 

“என் பேரு கீர்த்தனாவா?” என்று தனக்குத் தானே யோசித்த கீர்த்தனாவுக்கு அவளை அன்பாக ஒரு சிலர் கீர்த்து என்று அழைத்ததெல்லாம் அஸ்ரினி போல காதில் கேட்பதை போல இருந்தது. அப்படி வந்த அரைகுறையான ஞாபகங்களுக்குள்  கீர்த்தனா உழன்று கொண்டு இருக்க, “கீர்த்துன்னு கூப்பிட்டா இன்னும் கியூட்டா இருக்கும் சார். ஆமா.. இவளை பத்தி நீங்க இப்ப வரைக்கும் எதுவுமே என் கிட்ட சொல்லலையே! நான் திலீப் கிட்ட கேட்டாலும் நீங்க பர்மிஷன் கொடுக்காம என் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாரு.

இப்பயாவது நீங்க இந்த பொண்ண பத்தி முழுசா எல்லாத்தையும் சொல்லுங்களேன் சார்! எனக்கு தெரிஞ்சுகிறதுக்கு கியூரியஸா இருக்கு.” என்று ரிஷியிடம் கேட்டாள் நிரஞ்சனா. 

“ஓய் நீ சும்மா இரு. யார் கிட்ட எப்ப எதை சொல்லணும்னு அவருக்கு தெரியும்.” என்று சொல்லி திலீப் நிரஞ்சனாவை அதட்ட,  “இப்ப எதுக்கு நீ அவங்களை திட்டுறா? அவங்களோட தங்கச்சியை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு எல்லா உரிமையும் அவங்களுக்கு இருக்கு..” என்று சொல்லிவிட்டு நிரஞ்சனாவை பார்த்த ரிஷி “மேடம் யார் தெரியுமா சிஸ்டர்..?? Famous cardiac surgeon. இவ டாக்டரா இருப்பானு நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. 

ஆனா டாக்டரா இருந்தவ இப்ப இப்படி பேஷண்டா இருக்கிறாளேன்னு நினைச்சா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதான் நம்ம எல்லாரும் சேர்ந்து இவளோட ஃபேமிலி மெம்பர்ஸ்சை மீட் பண்ண போறோமே! அப்ப அவங்கள பத்தி உங்களுக்கே தானா தெரிஞ்சிரும். அவங்க நார்மல் மிடில் கிளாஸ் பேமிலி தான். 

ஆன இவ சரியான படிப்ஸ். First class-ல பாஸ் பண்ணி மெரிட்லயே ஸ்காலர்ஷிப் வாங்கி மேடம் நிறைய படிச்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்னு பிளான் எல்லாம் பண்ணி இருக்காங்க. ஆனா பாவம் அதுக்குள்ள அவளுக்கு இப்படி ஆயிடுச்சு.” என்றான். 

அவளது இந்த நிலைமையை கண்டு ரிஷி வருத்தப்படுகிறான் என உணர்ந்த நிரஞ்சனா “கவலை படாதீங்க சார். எல்லாமே ஒரு காரண காரியத்தோட தான் நடக்குதுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. ஒருவேளை நம்ம கீர்த்தனாவுக்கு அப்படி ஆகாம இருந்திருந்தா, அவ உங்க லைஃப்ல வர்றதுக்கான வாய்ப்பே இருந்திருக்காதே! எல்லாமே கடவுளோட பிளான் தான்‌. நீங்க ரெண்டு பேரும் தான் சேரனும்னு விதி இருந்திருக்கு.” என்று சொல்ல, “எனக்காகவே பிறந்தவ நீ தானா! இத்தனை நாளா எங்க டி இருந்த? நீ மட்டும் முன்னாடியே என் லைஃப்ல வந்து இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருந்து இருப்பேன்.” என்று நினைத்து ஆசையுடன் கீர்த்தனாவை பார்த்துக் கொண்டு இருந்தான் ரிஷி. 

தனது அம்மாவுடன் சேர்ந்து குஷியை என்ன செய்வது என்று தீவிரமாக திட்டம் போட்டுக் கொண்டு இருந்த தீரஜ் திடீரென்று அவனுக்கு ஒரு கால் வந்ததால் அதைக் கண்டு பதட்டம் அடைந்து “அம்மா.. எனக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் வொர்க் இருக்கு. நீங்க நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க. 

குஷி எப்ப கிளம்பி இங்க வரான்னு தெரிஞ்சா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. நான் போயிட்டு ஈவினிங் வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு தனியாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured