Home போதையடி நீ எனக்குபோதையடி‌ நீ எனக்கு CH 50

போதையடி‌ நீ எனக்கு CH 50

by Thenaruvi Tamil Novels
172 views

அத்தியாயம் 50 ‌

எப்படியோ ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து தாத்தாவுடன் சேர்ந்து மீட்டிங்கை முடித்தான் ரிஷி. அவனுக்கு எதிராக தாங்கள் போட்டு வைத்திருந்த அனைத்து திட்டமும் இப்படி ஒரு சில நிமிடங்களில் தவிடு பொடியாகிவிட்டதே ‌ என்று நினைத்து ஆனந்த குமாரும் அவரது குடும்பத்தினரும் ஆத்திரம் பொங்க ரிஷியை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்கள். 

மீட்டிங்கிற்க்கு வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வெளியில் செல்ல, திலீப்க்கு கால் செய்த ரிஷி நித்திலாவை உள்ளே அழைத்து வரச் சொன்னான். அதனால் அவன் தன் மனைவி நிரஞ்சனா மற்றும் நித்திலாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். 

இப்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த மீட்டிங் ஹாலில் இருந்தார்கள். “இந்த பொண்ணு புதுசா எங்க இருந்து வந்தா? நீ தனுவை தானே லவ் பண்ணிட்டு இருந்த.. அவ உன்ன விட்டு போயிட்ட அதனால நீ சோகமா இருக்கேன்னு நாங்க எல்லாரும் நினைச்சுட்டு இருந்தா.. திடீர்னு இவ தான் என் கேர்ள் ஃப்ரெண்ட்ன்னு நீ எங்கேயோ இருந்து ஒருத்தியை கூட்டிட்டு வந்தா எப்படி அந்த பொண்ண நாங்க ஏத்துக்க முடியும்? 

நேத்து கூட நான் உனக்கு கால் பண்ணனே ரிஷி.. இவளைப் பத்தி ஏன் என் கிட்ட எதுவுமே நீ சொல்லல? இவ பேக்ரவுண்ட் என்னன்னு எதைப்பத்தியும் சொல்லாம நீ பாட்டுக்கு எல்லாரும் முன்னாடியும் இவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அனௌன்ஸ் பண்ற! மத்தவங்க முன்னாடி பேசினா நல்லா இருக்காதுன்னு தான் நானும் உங்க அம்மாவும் இவ்வளவு நேரம் சைலன்ட்டா இருந்தோம். இப்பயாவது எங்க கிட்ட நீ இவளை பத்தி சொல்லித் தான் ஆகணும்.” என்று ஆனந்தகுமார் தனது குரலை உயர்த்தி கேட்டார். 

அவர் பேச பேச ரிஷிக்கு கோபம் வந்தது. இருப்பினும் இது மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் தன் அம்மா இறந்த காலத்தில் இருந்து அவன் பழகி இருந்ததால், தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு “என் அம்மா செத்துப் போய் ரொம்ப வருஷம் ஆச்சு. கண்டவங்களை எல்லாம் என் அம்மானு மென்ஷன் பண்ண வேண்டாம். என் லைஃப்ல நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்றத நான் தான் டிசைட் பண்ணுவேன். 

என் கேர்ள் ஃபிரண்டோட பேக்ரவுண்டை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க? அவ உங்க வீட்ல இருக்க போறதும் இல்ல. உங்க மருமகளா வாழப் போறதும் இல்ல. எனக்கு பொண்டாட்டியா வரப்போறவங்களை பத்தி எனக்கு தெரிஞ்சா போதும்.” என்றான். 

இப்படி எல்லாம் ரிஷி பேசும்போது எழுந்து சென்று அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும் போல ஆனந்தகுமாருக்கும், ரேகாவிற்கும் இருந்தாலும் கூட, அவனது குடும்பத்தினர் தயவில் தான் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் உள்ளதையும் தொலைத்து விடக் கூடாது என நினைத்து அடக்கி வாசித்தனர். 

“எதுக்காக ரிஷி வாய தொறந்தாலே இப்படி வண்மத்தை கொட்ற மாதிரி பேசுற? உங்க அம்மா இறந்து போனதுக்கப்புறமா தாய் பாசம் கிடைக்காம நீயும், என் பொண்ணு குஷியும் கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நான் ரேக்காவை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். 

ஆனா இத்தனை வருஷம் ஆகியும் நீ அவளை உங்க அம்மாவா ஏத்துக்கவே மாட்டேங்குற. சரி பரவால்ல விடு, அவ உனக்கு அம்மாவா இல்லாம இருக்கலாம். ஆனா நான் தானே உன் அப்பா.. எனக்கு உன் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு உரிமை இருக்குல்ல! என் கிட்ட கூட ஏன் முகம் கொடுத்து பேச மாட்டேங்கற? அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்ட ரிஷி?” என்று ஆனந்தகுமார் கண்களில் கண்ணீருடன் நல்லவனை போல கேட்க, 

“இத்தனை வருஷம் ஆனதுக்கு அப்புறமா கொஞ்சமாவது இந்த ஆளும்,  அவனோட ரெண்டாவது பொண்டாட்டியும் திருந்தி  இருப்பாங்கன்னு நான் நினைச்சேன். ஆனா முன்னாடி இருந்ததைவிட இவங்க எல்லாம் இன்னும் ரொம்ப மோசமா  மாறிட்டாங்க  . நடிக்கிறதுக்கு தனியா கிளாஸ் போய் கத்துகிட்டு வந்து ஸ்டேஜே இல்லாம நல்லா perform பண்றாங்க.” என்று நினைத்த தாத்தா ஆனந்தகுமாரையும் அவனது குடும்பத்தினரையும் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார். 

இவர்கள் இப்படி மாறி மாறி பேசிக்‌ கொள்வதை பார்த்து பார்த்து சலித்து போன நித்திலா  ரிஷியின் அருகில் சென்று அவனது கோட்டை பிடித்து இழுத்தாள். என்ன என்பதைப் போல அவன் அவளை திரும்பி பார்க்க, தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவளது கைகளையும் கால்களையும் சுட்டிக் காட்டிய நித்திலா “போதும் டா என்ன விட்டுரு.. இதுக்கு மேல இங்க நிக்க வச்சு என்ன டார்ச்சர் பண்ணீங்கன்னா நான் அழுதுருவேன்.” என்பதைப் போல சைகை செய்து சொன்னாள். 

அவள் சொன்னது ரிஷிக்கு புரிந்ததோ இல்லையோ, தாத்தாவிற்கு நன்றாக புரிந்தது. உடனே “பாவம் உடம்பு சரியில்லாத பெண்ணை ரொம்ப நேரம் இங்க இருக்க வச்சு கஷ்டப்படுத்த வேண்டாம். அவளுக்கு கஷ்டமா இருக்குன்னா கூட, அதை அவளால சொல்ல முடியாது. 

இங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சு. இதுக்கப்புறம் தேவை இல்லாம இங்க உக்காந்து எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணணும்? நீ வா ரிஷி நம்ம வீட்டுக்கு போகலாம். உங்க அம்மா பொறந்து வந்த வீட்டுல அவ இல்லாம இருக்க முடியாம தான் நான் இத்தனை வருஷமா காசி இராமேஸ்வரம்ன்னு சுத்திட்டு இருந்தேன்.

இப்ப என் பேரன், பேத்தி, பேரனோட பொண்டாட்டி வரைக்கும் வந்தாச்சு. இதுக்கு அப்புறமா நீங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றதை பார்த்து தான் நான் நிம்மதியா வாழப் போறேன்.” என்று சொல்ல, 

“நம்ம பரம்பரை வீட்டுக்கு நான் போய் ரொம்ப வருஷம் ஆகுது தாத்தா. என் கெஸ்ட் ஹவுஸில தான் நான் ஸ்டே பண்ணி இருக்கேன். நித்திலா கூட அங்க தங்குறதுல  எனக்கும் சந்தோஷம் தான். அம்மாவோட ஆசிர்வாதம் அவளுக்கு கிடைச்சதுன்னா, கண்டிப்பா அவளுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்ற ரிஷி அங்கே இருந்த தன் அப்பாவின் குடும்பத்தை கண்டு கொள்ளாமல் அவனுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு தாத்தாவுடன் பரம்பரை வீட்டிற்கு கிளம்பினான். 

அவர்கள் செல்வதை ஆத்திரம் பொங்க பார்த்துக் கொண்டு இருந்த தீரஜ் “என்ன மா.. ஒரே நாள்ல எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.. இதுல குஷியையும் கூட்டிட்டு வந்து அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்க போறேன்னு சொல்றான் இவன்.. 

பேசாம அவ அமெரிக்காவுல இருந்து வரும்போது அவளை வர்ற வழியிலயே எங்கயாவது வெச்சு போட்டு தள்ளிடலாமா?” என்று தனது அம்மாவின் காதுகளில் கிசுகிசுத்தான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured