Home போதையடி நீ எனக்குபோதையடி‌ நீ எனக்கு CH 47

போதையடி‌ நீ எனக்கு CH 47

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 47

தாத்தா சேர்மனாக இங்கே வருவது தன்னுடைய கடமை என்று ஆனந்த குமாரை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொல்ல, அங்கே இருந்த அனைவரும் ஏதோ பேயை பார்ப்பதை போல ஒருவித மிராட்சியுடன் அந்த வயதான சிங்கம் வீர சேதுபதியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“இந்த கிழவனை பார்த்து எல்லாம் நீங்க எதுக்கு இப்ப பயப்படுறீங்க? ஏற்கனவே ஷேர் ஹோல்டர்ஸ் பாதி பேர் நம்ம பக்கம் தான் இருக்காங்க. 

என்ன தான் ரிஷிக்கு அவன் தாத்தா சேர்மேனாக இருக்கிறதுனால அவரோட சப்போர்ட் இருந்தாலும், இங்க எல்லோரும்  கடைசியில யாருக்கு ஓட்டு அதிகமா வருதுன்றத வச்சு தான் முடிவாகும். 

நம்ம சார்பா அடுத்து எல்லாத்தையும் பாத்துக்க போறது தீரஜ் தான். அதனால இந்த சிஇஓ எலக்சன்ல நீங்க உங்களோட கேண்டிடேட்டா அவன தான் நிக்க வைக்கணும்.” என்று ரேகா ஆனந்த குமாரின் காதுகளில் ஓதிக் கொண்டு இருக்க, ரிஷியின் அருகில் அவனது தோள்களைப் பிடித்துக் கொண்டு அனைவரையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண்ணை நோக்கி சென்றது தாத்தா சேதுபதியின் கண்கள்.

உடனே தாத்தாவின் assistant பூபதிராஜா அவரது காதுகளில் “நம்ம வர்றதுக்கு ‌ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரிஷி தம்பி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறதா எல்லார் முன்னாடியும் சொல்லி இருக்காரு. 

ஆனா யாருக்கும் அந்த பொண்ண பத்தி எதுவும் தெரியல. அந்த பொண்ணுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஆக்சிடென்ட் நடந்துச்சாம். அதுல அந்த பொண்ணால வாய் பேச முடியாம போயிடுச்சுன்னு ரிஷி தம்பி சொன்னதா நம்ம ஆளுங்க சொன்னாங்க சார்.” என்று கிசுகிசுத்தார். 

தனது அனுபவம் பொருந்திய கண்களால் நித்திலாவை ஸ்கேன் செய்து பார்த்த சேதுபதி “எனக்கு என்னமோ இந்த பொண்ண பாத்தா தப்பானவளா இருக்க மாட்டானு தோணுது. 

இவளோட அப்பாவித்தனம், இவளுக்கு இருக்கிற பிரச்சனை.. இது எல்லாம் தான் இவள ரிஷிக்கு பிடிக்க காரணமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். 

நான் வேணான்னு சொல்லியும் என் பேரன் போயும் போயும் அந்த மாடல் தனு பின்னாடி சுத்திட்டு இருந்தான். இப்ப அவ ஏமாத்திட்டு போனதுக்கு அப்புறம் தான் உண்மையான காதல் எப்படி இருக்கும்னு ரிஷிக்கு புரிஞ்சுருக்கும் போல இருக்கு. 

அதான் அவன் இந்த பொண்ண தேர்ந்தெடுத்து இருக்கான். இந்த தடவை இவனோட செலக்சன் சரியா இருக்கும்னு எனக்கும் நம்பிக்கை இருக்கு. 

ஆனா ரிஷி விஷயத்துல இந்த தடவை என்னால ஒரு பர்சன்ட் கூட ரிஸ்க் எடுக்க முடியாது. இவ யாரு என்னன்னு நான் முதல்ல தெரிஞ்சுக்கணும்.” என்று நினைத்து, தனது ஆள்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டி “இங்க வா பொண்ணே!” என்றார். 

அவரது கை தன்னைத் தான் சுட்டிக்காட்டுகிறதா? இல்லை தன் அருகில் நிற்கும் வேறு யாரையாவது அவர் அழைக்கிறாரா என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்த நித்திலா குனிந்து தன்னையும் சுற்றி முற்றி மற்றவர்களையும் பார்த்து என்னவோ திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல திருத்திருவென்று விழித்துக் கொண்டிருந்தாள். 

தாத்தாவையே கவனித்துக் கொண்டிருந்த ரிஷி “தாத்தா பாக்குற விதத்திலேயே அவருக்கு நம்ம அம்முவை  புடிச்சிருக்குன்னு நல்லா தெரியுது. இனிமே எந்த பிரச்சனையும் இல்ல எல்லாத்தையும் அவரே பாத்துக்குவாரு.” என்று நினைத்து சந்தோஷப்பட்டவன், நித்திலாவின் கையை பிடித்து “அதான் தாத்தா கூப்பிடறாரு இல்ல… அவர் உன்ன எதுவும் பண்ண மாட்டாரு. நம்ம தாத்தா தான்.. பயப்படாம போ அம்மு.” என்று மென்மையான குரலில் சொன்னான். 

அவனையும் தாத்தாவையும் ஒரு செகண்ட் மாறி மாறி பார்த்த நித்திலா சரி என்று தலையாட்டிவிட்டு வீர சேதுபதியின் அருகில் சென்றாள். “இன்னும் ஆக்சிடென்ட் ஆன ஷாக்ல இருந்து அவ வெளிய வரல தாத்தா. அதான் ஒரு மாதிரி பாக்குறதுக்கு பயந்த மாதிரியே இருக்கா.” என்று ஒரு bit-டை போட்டான் ரிஷி. 

தாத்தாவை நோக்கி நடுங்கிய கால்களுடன் மெல்ல நடந்து சென்ற நித்திலா இதற்கு முன் ரிஷி அவர் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதை அவள் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளும் அதே போலவே செய்தாள். 

அவளது அந்த ஒரு செயலில் பெருமளவில் இம்ப்ரஸ் ஆன தாத்தா நித்திலாவின் தலையில் கை வைத்து “நல்லா இரு நல்லா இரு. உனக்கு சீக்கிரம் உடம்பு சரி ஆகி எல்லா நலமும் வளமும் பெற்று நீ தீர்க்க சுமங்கலியா வாழனும்.” என்று தாத்தா ஆசிர்வாதம் செய்ய, அங்கிருந்த அனைவரும் என்னவோ அவர் ரிஷி மற்றும் நித்திலாவின் திருமணத்திற்கு இதன் மூலம் அவர் சம்மதம் தெரிவிப்பதாக சொல்கிறாரா? என்ற ரீதியில் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured