அத்தியாயம் 44
ஆனந்தகுமாரின் இரண்டாவது மனைவியான ரேகா ஒருவேளை வந்திருக்கும் புதியவளுக்கும் ரிஷிக்கும் நடுவில் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக இவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப வேண்டும் என்று தன் மகன் தீரஜுடன் சேர்ந்து திட்டம் போடுகிறாள்.
குழந்தை தருணை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்த நித்திலா ரிஷி அணிந்திருந்த கோட்டை தனது இரண்டு விரல்களால் பிடித்து மெதுவாக இழுத்தாள். முதலில் ரிஷி அதை கவனிக்காததால் “என்னை பேச கூடாதுன்னு சொல்லிட்டு என்ன இந்த டிம்பிள் நான் கூப்பிட்டா கூட என்னை திரும்பி பார்க்க மாட்டேன்கிறான்!
இப்ப நான் ஆக்டிங் பண்ணிட்டு இருக்கனே.. வாய தொறந்து பேசாம எப்படி இவனை கூப்பிடுறது?” என்று நினைத்த நித்திலா இரண்டு மூன்று முறை அவனது கோட்டை பிடித்து இழுத்தவுடன் தான் என்ன என்பதைப் போல அவளை திரும்பிப் பார்த்தான் ரிஷி.
“எனக்கு கால் வலிக்குது டிம்பிள். இப்ப நான் என்ன பண்றது?” என்று கேட்பதை போல நித்திலா தனது இரண்டு கால்களையும் தொட்டு காண்பித்து தனக்கு கண்ணீர் வருவதைப் போல சைகை செய்தாள். அவள் என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்று புரியாததால் திருதிருவென்று விழித்த ரிஷி “என்னாச்சு அம்மு? கண்ணு எரியுதா உனக்கு? திடீர்னு ஏன் அப்படி ஆகுது? கொஞ்சமா தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்டபடி அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதற்கு வேண்டாம் என்று தலையாட்டிய நித்திலா மீண்டும் தனது கால்களை தொட்டு காட்டி கண்களில் இருந்து கண்ணீர் வருவதைப் போல ஆக்ஷன் செய்தாள். அவள் அதையே இரண்டு மூன்று முறை செய்து காட்ட, நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் “என்ன நடக்குது இங்க? மீட்டிங் நடக்கப்போற சமயத்துல ரிஷி சார் என்ன இந்த பொண்ணு கூட dumb charades விளையாடிட்டு இருக்காரு..
ஏதாவது வேணும்னா அவளை வாயத் திறந்து கேட்க வேண்டியது தானே? நம்மளை கூப்பிட்டு உட்கார வைத்து அசிங்கப்படுத்தற மாதிரி இவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க.” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதை கவனித்த ரிஷி மெல்லிய குரலில் நித்திலாவின் காதுகளில் “ஓய் என்ன வேணும் உனக்கு? எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. சைலன்டா இருக்க மாட்டியா நீ?” என்று கேட்க, விட்டால் நிஜமாகவே அழுது விடுவேன் என்ற நிலையில் இருந்த நித்திலா கண்கள் சிவக்க மீண்டும் அதே ஆப்ஷனை செய்து காட்டினாள்.
இப்போதும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் ரிஷி முழித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் சென்ற நிரஞ்சனா “சார் எனக்கு என்னமோ அவ கால் வலிக்குதுன்னு சொல்றான்னு தோணுது. இருங்க நான் அவ கிட்ட இருந்து தருணை வாங்கிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தன் குழந்தையை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.
அப்போதும் நித்திலா மீண்டும் ரிசீயை பார்த்து அதே ஆக்ஷனில் செய்து காட்ட, “ஒருவேளை நிரஞ்சனா சொல்ற மாதிரி இவளுக்கு கால் வலிக்குதோ!
அதை தான் நான் பேச கூடாதுன்னு சொன்னதுனால இப்படி ஆக்சன் பண்ணி காட்டுறாளா இவ?” என்று நினைத்து “உனக்கு கால் வலிக்குதா அம்மு?” என்று அவளை பார்த்து கேட்டான்.
“சப்பா.. ஒரு வழியா இவனுக்கு புரிஞ்சிருச்சு.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட நித்திலா ஆமா ஆமா என்று சொல்வதைப்போல மேலும் கீழும் தலையை ஆட்டினாள். அந்த மீட்டிங்கிற்க்கு வர வேண்டிய அனைவரும் ஓரளவிற்கு வந்திருந்ததால் அங்கே இருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தது.
அதனால் வீல்சேரில் அமர்ந்து இருந்த ரிஷி நித்திலாவை இழுத்து தனது மடியில் அமர வைத்துக் கொண்டான். அதை அவனது குடும்பத்தினர்கள் உட்பட அங்கிருந்து அனைவரும் ஆச்சரியம் நிறைந்த கண்களோடு பார்த்தார்கள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)